privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமோடியின் கருப்பு பண மோசடி - தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

மோடியின் கருப்பு பண மோசடி – தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

-

கருப்புப் பண ஒழிப்பு என்ற பெயரில் மோடி கட்டவிழ்த்துவிட்டிருக்கும் மோசடியை எதிர்த்து தமிழகமெங்கும் போராட்டங்களை நடத்தி வருகிறது, மக்கள் அதிகாரம் அமைப்பு!

மதுரை

Madurai demo (2)துரையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக 11-11-16 காலை 11 மணிக்கு தெற்கு வாசல் பள்ளி வாசல் அருகில் ஆர்ப்பாட்டம்  நடத்துவது என முடிவு செய்து சுவரொட்டி ஒட்டப்பட்டது.காலை 11 மணிக்கு தெற்கு வாசல் பகுதியில் போலீஸ் பட்டாளம்,6 வேன்களைக் கொண்டுவந்து நிறுத்தி பீதியூட்டியது.கொடி,பேனர் முழக்கங்களுடன் தோழர்கள் அணிதிரண்டனர்.

காவல் உதவி ஆணையர் முத்துக்குமார் தலைமையில் போலீஸ் படை தடுத்து நிறுத்தியது.உங்களுக்கு அனுமதி இல்லை.உங்கள் அனைவரையும் கைது செய்கிறோம் என்று கூறினர்.ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி தேவை இல்லை.ஒலி பெருக்கி
வைப்பதற்குத்தான் அனுமதி தேவை. நாங்கள் ஒலி பெருக்கி வைக்கப் போவதில்லை.எனவே எங்களை ஆர்ப்பட்டம் நடத்த விடுங்கள் என்று மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் குருசாமி கூறினார்.

“மோடியின் இந்த அதிரடி அறிவிப்பால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.கருப்புப்பண ஒழிப்பு என்ற இந்த மோசடியை  நாங்கள் மக்களுக்கு விளக்கவேண்டும்.அது எங்கள் கடமை” என்று கூறினார். நீங்கள் எங்களைக் கைது செய்யக்கூடாது என்றார்.இப்போது ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க முடியாது.அனுமதி பெற்று வேறு ஒரு நாள் நடத்துங்கள் என்றார் காவல் ஆய்வாளர்.உடனே தோழர்கள் மோடியின் கருப்புப் பண மோசடியைக் கண்டித்து முழக்கமிட்டனர்.காவல் அதிகாரிகள் கைது செய்யத் தொடங்கினர்.

தோழர்கள் கைதுக்கு ஒத்துழைக்க மறுத்து தரையில் அமர்ந்து தர்ணா செய்ய முயற்சி செய்தனர். போலீஸ் பட்டாளம் பலாத்காரமாகக் கைது செய்ய எத்தனித்த போது தள்ளு முள்ளு ஏற்பட்டது.தோழர்களைக் குண்டுக்கட்டாக தூக்கி வேனில்
எறிந்தது போலீசு.போக்குவரத்து நெரிசல் மிகுந்த மார்க்கெட் பகுதி அது.இந்தக் களேபரத்தை திரளான மக்கள் பார்த்துவிட்டு மக்களை மதிக்காமல் நெருக்கடியில் தள்ளிய மோடியின் அடாவடிச் செயலைக் கண்டித்தபொதுமக்கள் மக்கள் அதிகாரம் அமைப்பைப் பாராட்டினர்.போலீசின் அராஜகத்தைக் கண்டித்தனர்.கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும் மண்டபத்தில்
அடைக்கப்பட்டனர்.

முதலில் பெயர் முகவரி கேட்டு வாங்கிய போலீசு பின்னர் தாய்,தந்தை,உடன் பிறந்தவர்கள் பெயர் கேட்டது.தனித்தனியாக புகைப்படம் எடுக்க முயற்சித்தது.முடியாது என்று மறுக்கவே மலையில் விடுவிக்காமல் சிறையில் அடைப்பதுபோல் பாவ்லா காட்டியது.இரவு 7.30 மணியளவில் நீ எது செய்தாலும் சரி.முதலில் எங்களுக்கு சாப்பாடு போடு என்று கேட்டதும் போய்ட்டு வாங்க
என்று அனுப்பி வைத்தது காவல்துறை. நகரில் ஒட்டப்பட்டிருந்த மக்கள் அதிகாரம் சுவரொட்டிகளை இரவு முழுவதும் உளவுத்துறை ஓவர் டைம் போட்டுக் கிழித்துள்ளது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
மக்கள் அதிகாரம், மதுரை.

கரூர்

மோடியின் இந்த நடவடிக்கை, உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுக்கப்பட்ட பணத்தை வெளிக் கொண்டு வராது நகைகளாகவும், சொத்துக்களாகவும் நிலங்களாகவும், பதுக்கப்பட்ட கருப்புபண முதலீடுகளை ஒன்றும் செய்யாது. இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலும் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில் தான் உள்ளது. அம்பானி, அதானி போன்ற கார்பரேட் தரகு முதலாளிகள் கருப்பு பணத்தை 500,1000 நோட்டுகளாக  வைத்திருப்பதில்லை. கார்பரேட் தரகு முதலாளிகளின் வாராக் கடன் ஏழரை லட்சம் கோடி.

PP Karur protest (2)இந்த மோசடி பேர்வழிகளின் பெயரை கூட வெளிவிடாமல் பாதுக்காக்கும் மோடியா, கருப்பு பணத்தை மீட்க போகிறார்.?கள்ளப்பணம், கருப்புபணம் குவியும் லஞ்ச ஊழல் பெருகவும் மக்களா காரணம்? கருப்பு பண முதலைகள் செய்யும் குற்றங்களுக்காக சாமானிய மக்கள் மீதான தற்போதைய பொருளாதாரத் தாக்குதலை சாமானிய மக்கள் சாப்பாடும், மருந்தும் வாங்க வழியில்லாமல் ஏன் தண்டிக்கப்பட வேண்டும்?

இதனை எதிர்க்காவிட்டால் அரசியல் பாசிச பயங்கரவாதத் தாக்குதலாக வரும் எச்சரிக்கை. அனைத்துப் பிரிவினரும் இதை களத்தில் இறங்கி போராடாமல் மோடியின் பாசிச நடவடிக்கையை முறியடிக்க முடியாது என்ற அடிப்படையில்  11-11-2016 மதியம் 12.00 மணிக்கு கரூர் பேருந்து நிலையம் அருகில் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மக்கள் அதிகாரத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் இரா.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.

தகவல் :
மக்கள் அதிகாரம், கரூர்.

தர்மபுரி

Dharmapuri (3)500, 1000 செல்லாது மோடியின் கருப்பு பண மீட்பு மோசடி, சாதாரண மக்களை நள்ளிரவில் நடுத்தெருவில் தள்ளியுள்ளது ! என்ற அடிப்படையில் தர்மபுரியில் மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல்:
மக்கள் அதிகாரம், தர்மபுரி.

திருச்சி

ம்பானி, அதானி, நத்தம், ஓ.பி.எஸ். பேங்கில் நிற்பதில்லை. ரொக்கப்பணம் மட்டுமா கருப்புப் பணம், கருப்புப் பண முதலைகளின் எந்தவகை முதலீடுகளையும் முடக்காது. சாமானியர்களின் சேமிப்பு, சம்பளத்தை வழிப்பறி செய்வதே மோடியின் திடீர்த் தாக்குதல். இந்தியாவின் 90 விழுக்காடு முதலீடுகள் பல வகைகளிலம் இரண்டு சதவீத பணக்காரர்களின் கையில்தான் உள்ளன. அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் தரகு முதலாளிகள் கருப்புப் பணத்தை 500, 1000 ரூபாய் நோட்டுகளாக வைத்திருப்பதில்லை. கார்ப்பரேட் தரகு முதலாளிகன் வாராக் கடன் ஏழரை  லட்சம் கோடி ரூபாய். இந்த மோசடிப் பேர்வழிகளின் பெயரைக் கூட வெளியிடாமல் பாதுகாக்கும் மோடியா பணத்தை மீட்கப் போகிறார் என முழக்கம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
Trichy 1

தகவல் :
மக்கள் அதிகாரம், திருச்சி

கோவை

கோவையில் மக்கள் அதிகாரம் சார்பில் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,

Covai protest (2)

தகவல் :
மக்கள் அதிகாரம், கோவை.
  1. ஒரே நாளில் ரூ.53 ஆயிரம் கோடி கருப்புப் பணம் வங்கிகளில் குவிந்தது என்று பாலிமர் தொலைக் காட்சி செய்தி சொல்கிறது.செல்லாது என்று அறிவிக்கப்பட்டு வங்கியில் டெப்பாசிட் செய்யப்பட்ட பணம் அவ்வளவும் கறுப்புப் பணமாம்.தொலைக்காட்சி நிறுவனங்கள் எப்படி மோடியின் மவுத்பீசாக செயல்படுகிறது பாருங்கள்.இந்த தொலைக்காட்சி நிறுவன முதலாளிகள் பன்னாட்டுக் கம்பெனிகளின் பித்தலாட்ட விளம்பரங்கள் மூலமாகத்தான் கோடிகளைக் குவிக்கிறார்கள்.இவர்களே கருபுப் பண முதலைகள் தாம்.இவர்கள்தான் எங்க அப்பன் குதிருக்குள்ள இல்லை என்று கூவுகிறார்கள்.மோடியின் டவுசர் கிழிந்து தொங்குகிறது.விரைவில் அம்மணமாவார் என்றுதெரிகிறது.இல்லாவிட்டால் 36 “ மார்பழகனை மக்கள்தான் நிர்வாண நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்.ஆர்.எஸ்.எஸ்.பரிவாரங்கள் கிளுகிளுப்பு அடைய வேண்டாம்.

  2. செங்கதிர்செல்வன்…

    36 இன்ச் இல்லீங்க 56 இன்ச்……கடுமையாக உடற்பயிற்சி செய்து ஏத்திய கட்டுடலை குலைக்கும் விதமாக கமெண்ட் போட்டு இருக்குறீங்க……..

Leave a Reply to செல்வம் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க