privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசென்னை பல்கலை : தினமலரின் முகத்திரையை கிழித்த மாணவர்கள் !

சென்னை பல்கலை : தினமலரின் முகத்திரையை கிழித்த மாணவர்கள் !

-

சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த 16.11.16 அன்று புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தங்களுடைய கல்லூரி வளாகத்தில் பறையிசைத்தும் , “இனிமே இப்படித்தான்”  என்று நாடகம் நடித்தும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடத்தினர். இந்த பிரச்சாரத்தை அவதூறு செய்தது தினமலர். கல்லூரியில் 30-துறைகளில் வகுப்புகள் பாதிக்கப்பட்டதாகவும், மாணவிகள் குத்தாட்டம் போட்டதாகவும் அபாண்டமாக ‘செய்தி’ வெளியிட்டது தினமலர். வளாகத்தில் இருக்கும் ஓரிரண்டு ஏ.பி.வி.பியினர் (ஆர்.எஸ்.எஸ்-ன் மாணவர் அமைப்பு) ஏற்பாட்டில் இந்த சதித்திட்டம் அரங்கேறியது.

உண்மையில் மாணவர்கள் முறையாக தகவல் சொல்லி உணவு இடைவேளையில் தங்களது பிரச்சாரத்தை செய்துள்ளனர். இந்நிகழ்வு நடந்த போது எந்த பத்திரிக்கையாளரும் கல்லூரி வளாகத்தில் இல்லை. அப்படியிருக்க ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து தவறான செய்தியை திட்டமிட்டே எழுதியது தினமலர். இதை கண்டித்து மாணவர்கள் 17-ம் தேதி தினமலர் பத்திரிக்கையை எரித்து  தங்கள் எதிர்ப்பை காட்டியிருந்தனர்.

இந்நிலையில் 10 மற்றும் 12 – ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சியை 18-ம் தேதி சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாடு செய்திருந்தது தினமலர். அந்த நிகழ்ச்சியின் போது  போராட்டத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிட்டதையும், புதிய கல்விக் கொள்கைக்கு வக்காலத்து வாங்கும் தினமலரைக் கண்டித்தும் மாணவர்கள் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர்.

உடனே பதறியடித்துக் கொண்டு வந்தது போலீசு. அனுமதி வாங்கி செய்யப்படும் நிகழ்ச்சியில் இப்படி செய்யக் கூடாது, மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான விசயம், இது அவர்களின் எதிர்காலம் என நைச்சியமாகவும், கைது செய்வேன் என மிரட்டியும் பார்த்தது போலீசு. புதிய கல்விக் கொள்கையின் படி இனி உழைக்கும் மக்களின் பிள்ளைகள் உயர்கல்வியை நினைத்தும் பார்க்க முடியாது. அந்நிலையில் இந்த மாணவர்களை அழைத்து “ஜெயித்துக் காட்டுவோம்” என்று கூட்டம் நடத்தும் தினமலர்தான் பு.க.கொள்கையை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறது. ஆக மாணவர்களின் எதிர்காலத்தை கொல்பவர்கள்தான் மாணவர்களின் எதிர்காலம் என்று போலீசு விறைப்புடன் வந்தது.

அதற்கு மாணவர்கள் “நாங்கள் விழா மண்டபத்திற்குள் சென்று துண்டறிக்கை தரவில்லை. வெளியில் உள்ள மாணவர்கள் பெற்றோர்கள் மத்தியில் தான் எங்களது கருத்தை கூறுகிறோம். மாணவர்களின் எதிர்காலத்தின் மீது உங்களை விட எங்களுக்கு அக்கறை அதிகம் உள்ளது. எனவே தான் புதிய குலக் கல்வியை கொண்டுவரத் துடிக்கும் தினமலருக்கு மாணவர்களை நல்வழிப்படுத்தும் தகுதி இல்லை” என்றனர்.

“மேலும் பறையாட்டத்தை தான் பார்பனத் திமிரோடு கொச்சை படுத்தியது தினமலர். எனவே இங்கு எங்கள் வளாகத்தில் நாங்கள் பறையிசைப்போம். இதற்காக எங்களை கைது செய்தாலும் பரவாயில்லை” என்று பறையடித்து முழக்கமிட்டனர். இதனை நூற்றுக் கணக்கான பெற்றோர்களும் மாணவர்களும் கவனித்தனர். ஆர்வத்துடன் துண்டறிக்கைகளையும் வாங்கிப் படித்தனர்.

போராட்டத்தின் போது மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் :

கண்டிக்கின்றோம்! கண்டிக்கின்றோம்!
தின மலரைக் கண்டிக்கின்றோம்!
பறையடிப்போம்! பறையடிப்போம்!
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பறையடிப்போம்!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
தினமலரின் பார்ப்பனத் திமிரை முறியடிப்போம்!
எழுதாதே! எழுதாதே!
எச்சைத் தனமாய் எழுதாதே!
மன்னிப்பு கேள்!மன்னிப்பு கேள்!
மாணவர்களிடம் மன்னிப்பு கேள்!

படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்

– வினவு செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க