privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் - மக்கள் அதிகாரம்

பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம்

-

நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை ?
வங்கியில் பணத்தை எடுப்போம் ! வங்கிக் கணக்கை முடிப்போம் !!
கடுகு டப்பா சேமிப்பையும் வழிப்பறி செய்யுது, மோடி அரசு !
கார்ப்பரேட் முதலாளிக்காக கொள்ளை போகுது, நமது பணம் !

அன்புடையீர் வணக்கம்,

ந்தியாவில் 86 சதவீத பணப்புழக்கமாக இருந்தரூ. 500, 1000 நோட்டுக்களை செல்லாது என்ற மோடிஅரசின்திடீர் அறிவிப்பு சுனாமியைவிட பயங்கரமான விளைவுகளை நாடு முழுவதும் ஏற்படுத்திவருகிறது. ரொக்கப்பணதட்டுப்பாட்டால் இலட்சக்கணக்கான சிறுதொழில்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. கோடிக்கணக்கான மக்களும், தொழிலாளர்களும் வேலை இழந்து வறுமையில் சாகும் நிலை ஏற்படும் என அறிஞர்கள் எச்சரிக்கிறார்கள். முதலீட்டுக்கு, அதிக வட்டி, இரட்டிப்பு பலன். ஒருமுறை பணம் கட்டினால் மாதா மாதம் பணம் வீட்டுக்கு வரும், நகை பாலிசு, இப்படி பல பல நூதன கொள்ளைகள் தொடர்கின்றன. குடும்ப பெண்கள் முதல் படித்தவர்கள் வரை பலரும் ஏமாந்துகொண்டுதான் வருகிறார்கள். இவை போன்றதுதான், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும்.

கருப்புப் பணம், கள்ளப்பணம், லஞ்ச ஊழல் ஒழிப்பு என்ற பெயரில் மிகப்பெரிய நூதனக்கொள்ளை நடக்கிறது. தொழில்கள் செய்யவோ, அவசியப் பொருட்கள் வாங்கவோ வழியின்றிகோடிக்கணக்கான மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். உழைத்து சேமித்து வங்கியில் போட்ட நமது பணத்தை எடுப்பதற்கு கட்டுப்பாடுகளும், தடைகளும் ஏற்படுத்துவது உலகில் எந்த நாட்டிலும் நிகழாத ஒன்று. மத்திய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும், ஆளும் கட்சியினரும் நாளும் அறிவித்து வரும் புதிய புதிய ஆணைகளும், விளக்கங்களும், வாக்குறுதிகளும் அறுத்த காயத்தில் மிளகாய்த்தூள் தூவியதை போல எரிச்சலைத்தான் தூண்டுகிறது. கருப்புப் பண ஆசாமிகள்தாம் பயப்பட வேண்டும் முறையாக சம்பாதித்தவர்கள் கணக்கைக் காட்டி வங்கிகளில் புதிய நோட்டுக்களாக மாற்றிக் கொள்ளலாம் என்கிறார்கள். ஆனால் வங்கிகளில், ஏ.டி.எம்.களில் பணம் இல்லையெனத் துரத்துகிறார்கள். 10, 12 மணிநேரம் கால்கடுக்க மக்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

தொழில் பாதித்த சிறு வணிகர்கள், கல்யாணம்நின்று போன பெண்கள். கட்டணம் கட்ட முடியாத மாணவர்கள், கூட்டுறவு வங்கியில் பணம்பெற முடியாத விவசாயிகள் என தினந்தோறும் பலர் சாகிறார்கள். ஆனால், மக்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை. 90 சதவீதம் பேர் அரசின் திட்டங்களை ஆதரிக்கிறார்கள் என்று ஆளுங்கட்சி, ஆட்சியைபிடிக்க தேர்தலின்போது புளுகியதைப் போலவே இப்போதும் செய்கிறது. சினிமாவுக்காக பல மணிநேரம் காத்து கிடக்கும் மக்கள், நாட்டுக்காகக் கொஞ்ச நேரம், சில நாட்கள் வங்கிகளில் சிரமப்படக் கூடாதா? எல்லையில் தேசத்துக்காக இராணுவ வீரர்கள் பனிமலையில் நிற்கவில்லையா? என்று வக்கிரமாகக் கேட்கிறார்கள். அரசாங்கம் சொல்லுவதை எல்லாம் ஆதரிப்பதுதான்புத்திசாலித்தனம், தேசபக்தி என்று பல படித்த முட்டாள்கள் நம்புகிறார்கள்.

இவை எல்லாம் எதற்காக? உண்மையில் கருப்புப் பணம், கள்ளப்பணம் இலஞ்ச ஊழலை ஒழிக்கவா? ஆட்சிக்கு வந்த 100 நாளில் 80 லட்சம் கோடி வெளிநாட்டு கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் கணக்கில் போடுகிறேன் என மோடி வாக்குறுதி அளித்தார். ஏன் செய்யவில்லை?

இந்தியாவில் யாரிடம் கருப்புப் பணம் உள்ளது என்ற விபரம் வருமானவரித்துறை, சி.பி.ஐ வருவாய் புலனாய்வுத்துறை, நிதி அமைச்சகம் ஆகிய துறைகளுக்கு நன்கு தெரியும். ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? வெளிநாடுகளில் பல லட்சம் கோடி கருப்பு பணமாக பதுக்கியவர்களின் பெயரைக் கூட மோடி சொல்ல மறுக்கிறார். பல லட்சம் கோடிகளை வாராக் கடனாக்கிய கிரிமினல் முதலாளிகளின் பெயரையும் சொல்ல மறுக்கிறார். இவரா கருப்புப் பணத்தை ஒழிக்கப் போகிறார்?

பன்னிரெண்டு லட்சம் கோடி ரூபாய் அம்பானி, அதானி போன்ற தரகு முதலாளிகளின் வராக்கடனால் வங்கிகள் திவாலாக வேண்டிய அபாயத்தை, முட்டுக்கொடுக்கவே கோடிக்கணக்கான மக்களுடைய சேமிப்புப்பணத்தை, சம்பளப்பணத்தை பலவந்தமாக வழிப்பறி செய்கிறது மோடி அரசு.

ஊரில் ஒரு குற்றம் நடந்தால் போலீசார் குற்றத்தை புலனாய்வு செய்து குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமா? அல்லது தெருவில் உள்ள மக்களையெல்லாம் ஸ்டேசனில் வைத்து அடித்துவிசாரிக்கவேண்டுமா? கருப்புப் பணமுதலைகளை பிடிக்காமல் குளத்துநீர் முழுவதையும் இறைத்த கதைதான் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற மோடி அரசின் உத்தரவு.

கார்ப்பரேட் முதலாளிகள் ஏற்றுமதி இறக்குமதி செய்யாமலேயே செய்ததாகவும், உற்பத்தியை குறைத்து காண்பித்தும் மின்னணு பரிவர்த்தனையில்தான் சுமார் 56 இலட்சம் கோடி கருப்புப் பணம் இந்த ஓராண்டில் மட்டும் உருவாகி உள்ளது. இதை ஒழிக்க என்ன நடவடிக்கை?

ஆற்று மணல், தாது மணல், கிரானைட் கொள்ளை, தனியார் கல்வி நிறுவனங்கள், ஆன்மீகத்தை பரப்பும்மடங்கள் ஆகியவற்றில் பல லட்சம் கோடிகள் கருப்புப் பணமாகவும், ஊழல் பணமாகவும் உருவானதில், தலையாரிமுதல் தலைமை செயலர் வரை, வார்டு கவுன்சிலர் முதல் முதலமைச்சர் வரை அனைவரும் பங்காளிகள். இந்நிலையில் யாரை வைத்து, யாரிடம் இருந்து கருப்புப் பணத்தை, ஊழல் பணத்தை எப்படி மீட்க போகிறது மோடி அரசு?

பெரும்பான்மை மக்களின் ரொக்கப் பொருளாதாரத்தை வங்கியின் மூலமாகத்தான் கண்டிப்பாக வரவு செலவு செய்ய வேண்டும் என மோடி உத்தரவு போடுவது அனைவருக்கும் வரிவிதிப்பை கட்டாயமாக்கவும், சில்லறை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ், வால்மார்ட், பிக் பஜார் போன்ற பெரும் வணிகத்தை கொழிக்க வைக்கவும், மேலும் வங்கியின் வருமானத்தை பெருக்கி வங்கி முதலாளிகளை வளர்க்கவும், மக்கள் பணத்தை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வழங்கி வராக்கடனாக தள்ளுபடி செய்யவுமே, மக்கள் மீதான மோடியின் இந்த அதிரடித் தாக்குதல்.

நாம் போட்ட பணத்தை எடுக்க நமக்கேன் தடை?
வங்கியில் பணத்தை எடுப்போம்!
வங்கிக் கணக்கை முடிப்போம்!
நமது சேமிப்பு பணத்தை கார்ப்பரேட்டுகள்
கொள்ளையடிக்க அனுமதியோம் !

Page-1-Full

Page-2-Full_________________

கருப்புப் பணக்காரணுக்கு கடன் தள்ளுபடி ! வரிச்சலுகை !
ஏமாந்த நமக்கேன் தண்டனை ?
மோடி அரசை தெருவில் நிறுத்தி கேள்வி கேட்போம் !

A3-copy(1)

தகவல் :
மக்கள் அதிகாரம்,தமிழ்நாடு.

    • வினவு சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வங்கிகளில் இருந்து துரித பணம் எடுப்பை மக்கள் செய்துகொண்டு தான் உள்ளார்கள். அரசின் மீதான நம்பிக்கை, இந்திய வங்கிகளின் மீதான நம்பிக்கை, மோடி இந்தியாவை சரியான முறையில் வழி நடத்துவார் என்ற பிரம்மை எல்லாம் இந்திய மக்களுக்கு மிகவும் குறைந்து கொண்டு தான் வருகின்றது. பூஜியம் அல்ல இன்பினிட்டி அளவுக்கு மக்களிடம் நம்பிக்கையை பெற்று உள்ளார் மோடி.

  1. நான் இப்போது எல்லாம் ,நவம்பர் எட்டாம் தேதிக்கு பின்னால மினிமம் பேலஸ் கூட வங்கியில் வைப்பது இல்லங்க வினவு…. மாதம் ஒரு முறை /ஒரு நாள் மட்டும் மினிமம் பேலன்சை கடைபிடிப்பேன். பின்னால் அதனையும் எடுத்துருவேன். ஆனா பேங்க் அக்கௌன்ட் உசுரோட இருக்கட்டுமே! அடுத்ததா மோடி மக்களுக்கு வைக்கப்போகும் ஆப்பு என்னவென்று அனுமானிக்க முடிகின்றது… பல விதமான வர்த்தக பரிவர்த்தனைகளை , மளிகை சாமான் வாங்குவதனை கூட வங்கி debet card மூலமாகத்தான் செய்யனும் என்று உத்தரவு போடுவாரு இந்த மோடி… அதனால வங்கி கணக்குகள் இருகட்டுங்க…

  2. ஆமாம் ஆமாம் வினவு சொன்ன மாதிரி செய்தால் திருடர்களுக்கு எல்லாம் ரொம்ப வசதியாக இருக்கும்.

    சாதாரண மக்களை தவறாக வழி நடத்துவதற்கு என்றே வினவு போன்றவர்கள் செயல்படுகிறார்கள்…

    மக்களே உங்கள் பணம் வங்கியில் இருந்தால் உங்கள் பணத்திற்கு பாதுகாப்பு
    உங்கள் பணத்திற்கு வட்டியும் கிடைக்கும்
    பணத்தை யாராவுது திருடிவிடுவார்களோ என்ற பயம் தேவையில்லை.

    • கொயந்தை மாதிரி பேசிகிட்டு இருகாரு மணி…! ஆமாம் ஆமாம் வினவு சொன்ன மாதிரி செய்யாவிடால் அம்பானி, அதானி போன்ற திருடர்களுக்கு எல்லாம் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க ரொம்ப வசதியாகத்தான் இருக்கும்.என்ன மயிருக்காக மக்கள் அவர்களின் பணத்தை வங்கியில் வைத்து இருக்கவேண்டும்.? நவம்பர் 27-ம் தேதி வரை எடுக்கப்பட்ட கணக்கின்படி ரூ.8.1 லட்சம் கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கிகளில் இருந்து ரூ.2.16 லட்சம் கோடி பணம் எடுக்கப்பட்டுள்ளது. மீதி பணத்தை எல்லாம் மோடியின் எசமானர்கள் ஆமாம் அம்பானிகளும் அதானிகளும் கடன் என்ற பெயரில் இலவட்டிகொண்டு போவதற்க்கா? இதுவரை வரா கடனே லச்சம் கோடிகளில் இருக்க இந்த கேடிகள் மீதி மக்கள் பணத்தையும் வங்கியில் இருந்து கடன் என்ற பெயரில் கொள்ளையடிக்கவா?

      • வங்கிகள் யாருக்கு கடன் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் நீங்கள் வங்கியில் போட்ட பணம் திரும்ப உங்களுக்கு வட்டியோடு கிடைக்கும்…

        • மணி…, இதனை பற்றி முன்பே விரிவாக பேசியுள்ளேன். ஆனால் உங்களிடம் இருந்து பதிலை தான் காணவில்லை.மீண்டும் கூறுகிறேன். நாட்டுடமையாக்கபட்ட வங்கிகளில் உள்ள பணம் மக்களுடையது. அந்த பணம் அதானி, அம்பானி போன்ற பெரு முதலாளிகளுக்கு லச்சம் கோடிகள் என்ற அளவில் கடனாகச்செல்கிறது. அவர்கள் திருப்பிக்கொடுகாமல் வராத கடனாக நிற்கின்றது. வாங்கிய பல லச்சம் கோடிகளை அடைக்க அவர்கள் மீண்டும் மீண்டும் கடன் வாங்குகின்றார்கள். மேலும் அந்த கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இத்தகைய நிலையில் இப்போது வங்கிகளில் தேங்கியுள்ள மக்களின் பணமும் அவர்களுக்கு கடனாக செல்லுமாயின் அது தான் கொள்ளை… மோடியின் அரசு அங்கிகரிக்கும் கொள்ளை. அம்பானிக்கும் , அதானிக்கும் விசுவாசமாக இருக்கும் பிரதமர் அதனை தான் செய்கின்றார். அத்தகைய நிலையில் மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கி மக்களுக்கு பணத்தை அச்சடித்து கொடுக்கும் போது பணத்துக்கு உரிய மதிப்பு குறையும். அதானால் மக்களின் சேமிப்பு பணம் மதிப்பிழந்து போகும். பணவீகத்துக்கு ஏற்ப மக்களின் சேமிப்பு பணத்தின் மதிப்பு உயர்ந்தால் தான் அவர்களுக்கு அதானால் பயன் உண்டு. இல்லை என்றால் அந்த பணமும் டாய்லட் பேப்பர்போன்ற பயன்பாட்டுக்கு கூட உபயோகப்படாது.

        • மணி…,உங்க பணத்தை வங்கியில் fd யில் போட்டு வைங்க மணி! யாரு வேண்டாம் என்றது? உங்களை எல்லாம் இந்திய குடிமகனாகவே சேர்த்துக்கொள்வது இல்லை. ஒரு வேலை NRI ஆக நீங்க இருக்க வாய்ப்பு உண்டு.விசயத்துக்கு வருவோம். saving அக்கௌன்ட்க்கு 4%தான் வட்டி தராங்க…. 1000 போட்டா வருடத்துக்கு 40 ரூபா வட்டி…, 10000க்கு 400 ரூபா வட்டி… 100000 க்கு 4000 ரூபா வட்டி… அதே நேரத்தில் பணவீக்கம் எத்தனைசதவீதம் என்றாவது தெரியுமா? Inflation (பணவீக்கம்) Rate in India averaged 7.48 percent from 2012 until 2016.

      • சாதாரண மக்களுக்கு அவர்கள் சிறுக சிறுக சேமிக்கும் பணத்தை திருடன் திருடி கொண்டு போனால் அதை விட பெரிய சோகம் வேறு எதுவும் கிடையாது… அந்த மக்களின் பணம் வங்கியில் இருந்தால் பாதுகாப்பாக இருப்பது மட்டும் இல்லாமல் அவர்களுக்கு வட்டியும் கிடைக்கும். மோடி மீது உங்களை போன்றவர்களுக்கு இருக்கும் வெறுப்பை காட்டா சாதாரண மக்களை தவறான வழிக்கு அழைத்து செல்ல பார்ப்பது தவறு…

        • மணி…, உங்கள் debet கார்டில் உள்ள எண்கள் தெரிந்தாலே உங்கள் பணம் இணையம் உள்ள கணினி மூலம் நவீன திருடர்களால் திருடத்தான் படுகின்றது. மேலும் ஸ்க்ம்மர் என்ற நினைவாக பட்டையை atm மெசின்களில் சொருகியும் உங்கள் debet கார்டு பட்டையின் விவரங்களை தெரிந்துக்கொண்டு அந்த கார்டுக்கு டுப்ளிகேட் கார்டு செய்தும் உங்கள் பணத்தை திருடத்தான் செய்கிறார்கள். இவ்வாறாக மக்களின் சேமிப்பு பலவகைகளில் திருடத்தான் படுகிறது. மேலும் சேமிப்பு கணக்கில் உள்ள பணம் debet கார்டுகள் மூலம் மக்களால் கையாலப்படும் போதும் , ஆன்லைன் வர்தக பரிவர்த்தனைகள் போதும் பலவாறாக திருடத்தான் படுகின்றது. அடுத்த்காக வங்கியில் உள்ள நமது பணத்துக்கு அதன் மதிப்பு குறையாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. கொடுக்கும் வட்டிக்கும் , பணவீக்கத்துக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா மணி?

        • உங்களுக்கு அறிவு இல்லை என்பதால் பதில் சொல்லமாட்டிங்க என்று தெரியும் மணி…! பதில் சொல்ல எந்த துப்பும் உங்களிடம் இல்லை என்றும் தெரியும் மணி! வினவில் வந்து பின்னுட்டம் மட்டும் போட இது ஒன்றும் உங்கள் மொக்கை திரைபட விமர்சன ப்ளாக் இல்லையே!

    • \\உங்கள் பணத்திற்கு வட்டியும் கிடைக்கும்\\
      Mr.Manikandan
      Do you know what is the interest rate in SBI Maximum 4.25%
      Inflation in India more than 10%

      • மணிகண்டன் எல்லாம் வந்து பதில் சொல்ல மாட்டாருங்க! அவருக்கு நாலு எழுதுல பின்னுட்டம் அழிக்கத்தான் தெரியும்… பதில் சொல்லுமளவுக்கு எல்லாம் பத்தாதுங்க அறிவு !

  3. பேங் அக்கவுண்ட் இல்லாத மக்கள் நட்டுப்புறங்களில் 40 கோடி பேர் இந்தியாவில் இருக்கிறார்கள்.இவர்கள் எல்லாம் எப்படி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்?பணமே இல்லாமலா?பண்ட மாற்று முறையிலா? நாட்டில் கிராமங்களில் 60% பேர் சரியான கல்வி அறிவு இல்லாதவர்கள்.இவர்கள் எப்படி டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வார்கள்? 80 கோடி பேரிடம் செல் போன் இருக்கிறது என்று காவி கல்விமான்கள் சொல்கிறார்கள்.இதில் 50 கோடி பேருக்கு செல் போனில் பேச மட்டும் தெரியும்.700,800 ரூபாய்க்கு செல் போன் கிடைக்கிறது.ஒருவரே பல போன் வைத்திருக்கிறார்கள்.10 ரூக்கு ரீ சார்ஜ் செய்கிறார்கள். இந்தியாவில் மிஸ்டு கால் ரொம்ப பேமஸ்.இவர்கள் எல்லாம் மோடி கணக்குப் படி இ வாலட்,டெபிட் கார்டு பயன்படுத்தக்கூடியவர்கள்.கற்றறிந்த இளைஞர்களுக்கு மோடி கோரிக்கை வைத்துள்ளார்.ஒவ்வொருவரும் 10 பேருக்காவது மொபைல் பேங்கிங் கற்றுக்கொடுக்க வேண்டுமாம் ஊர் சேரிகளில் போய்.குலக் கல்வி முறையைக் கொண்டுவரத் துடிக்கும் மோடிப் பரிவாரங்கள் இதைச் செய்வார்களாம்.என்ன திமிர்வாதம்!80 லட்சம் கோடி வெளி நாட்டில் தங்கியிருக்கும் கருப்புப் பணம்,8லட்சம் கோடி பேங் வாராக்கடன்,5லட்சம் கோடி வருமானவரிப் பாக்கி,பன்னாட்டு முதலாளிகளுக்கு தரப்படும் பலலட்சம் கோடி தனி சலுகை இதற்கெல்லாம் பதில் சொல்ல வக்கில்லத மோடி கேடி டிஜிட்டல் கிரிமினல் மக்களிடம் இருப்பது எல்லாம் கருப்புப் பணம் என்று கூசாமல் புளுகுகிறார்.மக்களிடம் பறிக்கப்படும் இந்தப் பணம் கார்ப்பரேட் முதலாளிகளுக்குத்தான் என்று கிரிமினல் நம்பெர் டூ ஜேட்லி துணிந்து கூறுகிறார்.முதளாளிகளுக்கு லட்சம் லட்சம் கோடியாகக் கொடுத்த கடன் கறுப்புப் பணமாக மாறி வெளி நாட்டு பேங்குகளிலிருந்து பல நாடுகளுக்கும் வெள்ளை முதலீடுகளாகப் போகிறது.இந்திய பேங்குகளில் ரொக்கப் பணம் இல்லை.தள்ளாடும் பேங்குகளை தூக்கி நிறுத்த வேண்டும்.அதற்குத்தான் இந்தப் பகற் கொள்ளை.கருப்புப் பணமாவது ஒழிப்பாவது!கள்ளப் பணமாவது கிழிப்பாவது!லஞ்ச ஊழல்,தீவிரவாதிகள் என்பதெல்லாம் சுத்த போங்காட்டம் மணிகண்டா போங்காட்டம்.மோடிக்கு செகண்டி இந்த மணி.இது போன்ற மணிகளுக்கு செகண்டி மக்கள்தான். பி ரெடி!!

    • இந்தியாவில் வீட்டில் ஒருவருக்காவுது வங்கி கணக்கு உள்ளது, காரணம் அரசு மானியங்களை இனி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சொன்ன பிறகு மக்கள் வங்கி கணக்குகளை துவங்கிவிட்டார்கள்… புதிய மாற்றங்களை எங்கள் இந்திய மக்கள் கற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறார்கள் ஆனால் உங்களை போன்ற ஆட்கள் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாமல் இந்திய மக்கள் இருளிலே இருக்க வேண்டும் என்று நினைத்து அவர்களை வங்கி கணக்கு துவைக்காதீர்கள், பழைய காலத்தில் இருப்பது போல் வீட்டிலேயே பணத்தை வைத்து கொள்ளுங்கள் என்று தவறான வழியை சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.

      ஒன்று மட்டும் நிச்சயம் எவ்வுளவு தான் உங்களை போன்றவர்கள் எங்கள் நாட்டிற்கு எதிராக செயல்பட்டாலும் அதை எல்லாம் முறியடித்து விட்டு எங்கள் நாடு முன்னேறும்… நிச்சயம் இந்தியா, சீனாவை பின் தள்ளிவிட்டு உலகின் சிறந்த வல்லரசாக இருக்கும்.

      • மணிகண்டனின் போலியான தேசபக்தி எந்த அளவுக்கு இருக்கு என்றால் அவரின் பணம் ,மக்களின் பணம் பெரு முதலாளிகளின் தொப்பையில் போய் விழுந்து செரிமானம் ஆனாலும் பரவாயில்லை…, மக்கள் அவர்களின் பணத்தை வங்கியில் போட்டே திறனும் என்ற அளவுக்கு போலியானதாக உள்ளது அவரின் தேச பக்தி. பதில் சொல்ல துப்பு இல்லாமல்அடிகடி சைனாவுக்கு ஓடுகாலியாட்டம் ஓடுறாரு மணிகண்டன். பதில் சொல்ல துப்பு இல்லாத அறிவிலி எல்லாம் எதுக்கு பின்னுட்ட பகுதிக்கு வரனும் ?

      • அரசு மானியங்களை இனி வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று சொன்னது வெறும் கண்துடைப்பு.கேஸ் மானியம் வருவதே கிடையாது.தினக் கூலி வாங்குபவர்களுக்கு வீட்டுச் செலவுக்கே பத்தவில்லை இதுல பேங்க்ல எங்க போடறது. சாதுரியப்பூனை மீன் இருக்க, புளியங்காயத் திங்கிறதாம் என்ற கதையாக உள்ளது.

        • நீங்கள் வங்கி கணக்கு அல்லது ஆதார் எண் கொடுத்து இருக்க மாட்டிங்க அதனால் மானியம் வரவில்லை…

          • என்ன மணி…! என்கின்ற மணிகண்டன்…., லூசு யாருங்க! நீங்களா அல்லது மத்திய மந்தியா? விஷயம் என்னவென்றால் :

            அரசு மானியங்கள், சலுகைகள் மற்றும் சேவைகளைப் பெறும்போது அரசு திட்டங்கள் எதற்கும் அதன் பயனாளிகளிடம் இருந்து அடையாளச் சான்றாக ஆதார் எண்ணை வழங்குமாறு கட்டாயப்படுத்துவதில்லை என்று தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்தரி மக்களவையில் நேற்று கூறியுள்ளார்.

  4. நான் முறையாக சம்பாதித்து , முறையாக வரி செலுத்திய என்னுடைய பணத்தை , எனக்கு தேவையான நேரத்தில் எனக்கு போதுமான அளவு வங்கி தரவில்லை என்றால் நான் வங்கியில் ஏன் பணம் வைத்திருக்க வேண்டும் .

  5. மணி…, 32 லட்சம் ATM கார்ட்களின் தகவல் திருடப்பட்டது… இது சென்ற அக்டோபர் கடைசி வாரத்தில் வெளிவந்த தகவல்.. இந்த லட்சணத்தில், எல்லோரும் கேஷ் லெஸ்சுக்கு மாறுங்கள், டெபிட் & கிரிடிட் கார்ட்களை உபயோகிங்கள் என்று சொல்வது எந்தவிதத்தில் பாதுகாப்பு??? பணம் திருடு போனால், யார் உத்தரவாதம்????

    • மணியை எதுக்குங்க தடை செய்யனும்? அவரு டிசண்டா தானே காமடியா வடிவேலு மாதிரி பேசிகிட்டு இருகாரு! விவாதங்ககளில் எவ்வளவு தான் அடிச்சாலும் கோபமே வராத மாதிரி நடிக்கும் இவர் கண்டிப்பாக வினவுக்கு தேவை…அவரும் இல்லை என்றால் வினவு கலையிழந்து போயிடுமே! @#$%^& என்று பேசும் இந்தியனையை வினவு தடை செய்யாத நிலையில் நம்ம மணியை எதுக்குங்க தடை செய்யனும்?

  6. வங்கியிலிருந்து இப்போதுதான் வீட்டிற்கு வந்தேன்! இன்னும் என் பென்ஷன் போஸ்டிங் ஆகவில்லை! தினமும் ஏடியெம் செல்வதுதான் என் வேலையாகிவிட்டது ! கில்லாடிகள் வாழ்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க