privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்மோடியை ஆதரிக்கும் வைகோ - கேலிச்சித்திரம்

மோடியை ஆதரிக்கும் வைகோ – கேலிச்சித்திரம்

-

மோடியை ஆதரித்து வைகோ பேச்சு !

vaiko CORRECTION_1920x1080

மக்களோட கொலவெறி தெரியாம வசனம் பேசாதீங்க வைகோ… அப்புறம் பிரிச்சி மேஞ்சிற போறாங்க !

ஓவியம் : முகிலன்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
சென்னை – 95518 69588

இணையுங்கள்:

  1. எனக்கு பிடிக்காத அரசியல் செய்பவர்களில் வைகோவும் ஒருவர், _______நல்லவேளை தமிழக மக்கள் வைகோ சீமான் போன்ற அரசியல்வாதிகளை எல்லாம் ஆதரிக்கவில்லை, ஆதரித்து இருந்தால் தமிழகமும் வன்முறை காடாக மாறியிருக்கும்.

    நேற்று வரையில் மோடியை எதிர்க்கிறேன் பேர்வழி என்று தமிழகத்திற்கு வர வேண்டிய நல்ல திட்டங்களை எல்லாம் எதிர்த்தவர் (முக்கியமாக நியூட்ரினோ ஆய்வகத்தை எதிர்த்தவர்) இன்று மோடியை ஆதரிக்கிறேன் என்று சொல்வதில் ஏதேனும் உள்நோக்கம் இருக்கும்.

    • மணி.., வரலாறு என்ன சொல்லுது என்றால் வைகோ யாரை எல்லாம் ஆதரித்தது பேசுகின்றாரோ அவர்கள் எல்லாம் எதார்த்தத்தில் ஒன்றும் இல்லாமல் போவர்கள் என்று வரலாறு கூறுகின்றது! இது ஜோசியம், ஜாதகம் அல்ல கடந்த கால உண்மை வரலாறு…. “சைக்கோ”வின் அடுத்த இலக்கு யார் என்று நீங்களே கூருகிண்றீகள்! ஆம் அவர் தான்…!

      • முன்பு வைகோ பிஜேபியை ஆதரித்த போது பிஜேபி வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியை பிடித்தது (வாஜ்பாய் பிரதமர்), பின்பு நாங்கள் தமிழகத்தில் திமுக கூட்டணியில் இருக்கிறோம் என்று சொல்லி ஆட்சி முடிவதற்கு சில நாட்கள் முன்பு வைகோ, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி அமைத்து தமிழகத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றார்கள்.

        எது எப்படி இருந்தாலும் இந்திய விரோத செயலுக்காக பிஜேபி/காங்கிரஸ் தனது கூட்டணியில் வைகோவை சேர்க்க கூடாது.

        • மணிகண்டன்…, சைகோ அவர்கள் உங்கள் வார்த்தைகளில் இந்திய விரோதி என்றால் அவருடன் போன நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருந்து ஆச்சிக்கு வந்தர் என்ன தேச பக்தரா? இந்த தேச விரோதி சைக்கோவை தான் போன தேர்தலிலும் மோடி தன்னுடன் சேர்த்துக்கொண்டார் என்ற சிறிய உண்மையை உங்களுக்கு கூற விரும்புகிறேன்.

          • ஆமாம் அப்போதும் மோடி வைகோவோடு கூட்டணி வைத்தது தவறு என்று சொன்னேன், அதனால் தான் நான் NOTAவிற்கு வாக்கு அளித்தேன்.

            • மோடி வைகோவோடு கூட்டணி வைத்தது பற்றி நான் பேசவில்லை மணிகண்டன்…. உங்கள் வார்த்தையில் கூறுவது என்றால் சைகோ என்ற தேசவிரோதியுடன் மோடி கூட்டணி வைத்தது பற்றி அல்லவா பேசுகின்றேன். தேச விரோதியுடன் கூட்டு வைப்பவர்கள் யாராக இருக்க முடியும் ? அவர்களும் தேச விரோதிகள் தானே? அப்படி என்றால் மோடி யார் ?

        • அதற்கு பின் வாஜீபாய் அவர்கள் நிரந்தரமாக ஓய்வில் உள்ளார் என்பதனையும் மறக்காதீர்கள் மணி…!

      • பொருத்தமாக சொன்னீர்கள் செந்தில். மணியின் காவிக் கும்பல் இலக்கணப்படி ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உறுப்புட்டதா சரித்திரமே கிடையாது.

    • வைகோவை போல் வினவு கூட்டமும் தேசவிரோதி கூட்டம் தானே அதனால் ஒரு தேசவிரோதியை இன்னொரு தேசவிரோதி காப்பாற்றுகிறாராம் 🙂

      • அருமையா சொன்னிங்க மணிகண்டன்…! இப்போது ஒரு தேச விரோதியை காப்பாற்ற ஒரு சைகோ-தேசதுரோகி (உங்களை கூறவில்லை மணி) ஆதரித்துக்கொண்டு புறபட்டு உள்ளார். இந்த சைக்கோவின் ஆதரவை பெறுபவரின் நிலைமை தான் என்னவோ?.

      • கர்நாடக ரெட்டி குடும்பத்து திருமணத்துக்கு ஆன 600 கோடி ரூபா பணமும் நாட்டின் வளத்தைக் கொள்ளையடித்து சேர்தது என்பதை நினைத்து வெட்கப்படாமல், ஞாயப்படுத்திப் பின்னுட்டம் போட்டவர் நீங்கள் மணிகண்டன். தேசத்தைப் பற்றி நீங்கள் பேசுவது கண்டிக்கத்தக்கது.

        • நான் சொன்னது செந்தில் கேட்ட கேள்விக்கான விளக்கம் அதனால் நான் ரெட்டி சகோதரர்களை ஆதரிக்கிறேன் என்று அர்த்தம் இல்லை. 1000 கோடியாக இருந்தாலும் Online மூலம் transfer செய்யலாம் அல்லது செக் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யலாம் (அது தான் நல்லதும் கூட)

          நேற்று தான் நான் முதல் முறையாக வங்கியில் இருந்து பணம் எடுத்தேன் (மாத மாதம் என் தந்தைக்கு 20,000 ரூபாய் குடுப்பேன் அதற்காக பணம் எடுத்தேன்), இது வரையில் என்னுடைய டெபிட் கார்ட் மூலம் தான் செலவுகளை செய்து கொண்டு இருக்கிறேன்.

          நிச்சயம் பணம் அவசியம் இல்லை, வங்கி கணக்கும் டெபிட் கார்டும் இருந்தால் போதும்.

          • மணிகண்டன் நீங்கள் மோடியை ஆதரித்துகொண்டு, ரெட்டி சகோதரர்களை ஆதரித்துகொண்டு பதில் சொல்ல எவ்வளவு கஷ்டபட வேண்டி இருக்கு பார்த்தீர்களா? ஒரு விஷயம் நீங்கள் எப்படி எல்லாம் வங்கியில் பணம் எடுத்தீர்கள் என்று யாருமே நான் உட்பட கேள்வி கேட்டகவில்லை…. பிரச்சனை என்ன வென்றால் இன்றுகூட இரண்டு கோடிகளுக்கு மேல் புதிய நோட்டு கர்நாடாகாவில் ஒருவரிடம் இருந்து கைபற்ற பட்டு உள்ளது. அவ்வளவும் புத்தம் புதிய ௨௦௦௦ ரூபாய் நோட்டுகள். வங்கியில் க்யுவில் நின்று ௨௦௦௦ வாங்கவே மக்கள் படாத பாடு படும் போது கர்நாடாகாவில் , சேலத்தில் என்று கட்டு கட்டாக ௨௦௦௦ ருபாய் நோட்டுகள் தனி மனிதர்கள் இடம் இருந்தே கைபற்றபடுவதில் உள்ள மாபெரும் ஊழலில் பிஜேபிக்கும் பிஜேபி யின் மோடி அரசுக்கும் எதுவும் தொடர்பு இல்லையா மணிகண்டன்? உடனே நான் அடுத்த தேர்தலில் நோடோவுக்கு போவேன் என்று மொக்கையாக பதில் கூறாமல் இதுக்கு பதில் கூறுங்கள் ஸ்வாமி மணிகண்டன் அவர்களே!..!

            • தனிமனிதர்களிடம் இருக்கும் ஊழல் மற்றும் ஏமாற்றும் செயல்களுக்கு மோடி தான் காரணம் என்று சொல்வதில் எந்த நியாயமும் இல்லை…

              • மணிகண்டன்….,

                இந்த ரெட்டி சகோதரர்களும், சேலத்து அருணும் பிஜேபியை சேர்ந்த வர்கள் தான். பொறுப்பில் உள்ளவர்கள்/இருந்தவர்கள் தான் என்பதனை குறிப்பிட விரும்புகின்றேன். அருண் உங்களை போன்றே தான் மோடியின் சொல்லா நோட்டு நடவடிக்கையை எதிர்பவர்கள் தேச துரோகிகள் என்று ஊளையிட்டார். அடுத்த இரண்டாம் நாளே புத்தம் புதிய ௨௦௦௦ ரூ நோட்டுகள் இருபது லச்சதுடன் பிடிபட்டு உள்ளார். வங்கியில் கால்கடுக்க நின்றாலும் அதிகம் பத்தாயிரம் தான் புதிய நோட்டுகளை தருகிறார்கள். atm ல் இன்டாயிரம் தான் கிடைகின்றது. ஆனால் இவர்களுக்கு ஏது இவ்வளவு புத்தம் புதிய பணம் இருவது லச்சமும் இரண்டு கோடிகளும்? கருப்பு பணம் மீண்டும் மீண்டும் புதிய நோட்டு வடிவில் உருவாகிக்கொண்டே உள்ளது. யாரை ஏமாற்றிக்கொண்டு உள்ளார் மோடி? மக்களை தானே?

                இந்த புத்தம் புதிய ௨௦௦௦ ருபாய் நோட்டுகள் வங்க்களில் கொடுக்கப்டாமல் ஆகாயத்தில் இருந்தா அவர்களுக்கு வந்தது? அல்லது ரிசர்வ் வங்கியில் இருந்து யாரின் சிபாரிசில் இந்த புத்தம் புதிய நோட்டுகளை கோடிகணக்கில் அவர்கள் பெற்றார்கள்?

          • மணிகண்டன்.., நீங்க நோடோவுக்கு போகும் நேரம் வந்துவிட்டது,,,, ரொக்கமற்ற சமுதாயம் சமைப்போம் என்ற பிரதமரின் அறிவுறுத்தலின் அடிப்படையில் பிரதமரின் மற்றும் மத்திய மந்திரிகளின் செயல்பாடு : மார்ச் 31, 2016 கணக்கின்படி மத்திய அமைச்சர்கள் கையில் வைத்துள்ள ரொக்கம் குறித்த விவரம் அடங்கிய பட்டியல் கிடைத்துள்ளது.

            1. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி இந்தப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். அவரிடம் ரூ.65 லட்சம் ரொக்கம் உள்ளது.

            2. மத்திய இணை அமைச்சர் ஸ்ரீபத் எசோ நாயக் (சுயேச்சை) ரூ.22 லட்சம் ரொக்கமும், மத்திய இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாகவும் வைத்திருக்க, பிரதமர் மோடி தன்னிடம் ரூ.89,700 ரொக்கம் இருப்பதாக அறிவித்ததும் கவனிக்கத்தக்கது.
            3. 15 அமைச்சர்களிடம் 2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் உள்ளது.

            4.மற்ற உயர்மட்ட அமைச்சர்களில் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் இன்னமும் தங்கள் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அளிக்கவில்லை.

            மணிகண்டன் ஊருக்கு எல்லாம் உபதேசம் செய்யும் நிதி அமைச்சரின் ரொக்கப்பணம் ரூ.65 லட்சம். ரொக்கமற்ற சமுதாயம் சமைப்போம் என்ற பிரதமர் மோடியின் ரொக்கபணம் ரூ.89,700! இதுக்குமோலும் நிங்கள் மோடியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கின்றீர்களா? அல்லது நோட்டோவுக்கு போகப்போகின்றீர்களா ?

            • எவ்வுளவு பணம் வைத்து இருக்கிறார்கள் என்பது பிரச்சனையில்லை, அந்த பணத்திற்கு சரியாக கணக்கு காட்டி வரி கட்டினார்களா என்பது தான் பிரச்சனை. நிதி அமைச்சரின் தனிப்பட்ட சொத்து மதிப்பே 100 ரூபாய்க்கு மேல், அவரிடம் 65 லட்சம் ரூபாய் ரொக்கம் இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.

              • இது உங்களின் திசை திருப்பல் நாடகம் மணி…! அவர்களின் சொத்து மதிப்பை பற்றியோ,அல்லது வரி கட்டுவதனை பற்றியோ நான் பேசவில்லை…. பணம் ரொக்கமாக தேவையில்லை , ரொக்கப்பணமில்லா பரிவர்த்தனையை நோக்கி முன்னேறவே இத நடவடிக்கை என்று கூறும் மோடியும், நிதியும்(அருண் ஜெட்லி) எதற்காக இவ்வளவு பணத்தை கையில் ரொக்கமாக வைத்து உள்ளார்கள் என்பதே என்னுடைய கேள்வி?

          • மணிகண்டன் பணம் அவசியம் தேவையில்லை என்றால் மோடியிடம் ரொக்கமாக இருக்கும் ரூ.89,700 எதற்காக? நிதி அமைச்சரிடம் இருக்கும் ரொக்கப்பணம் ரூ.65 லட்சம் எதற்காக? ( இந்த தொகைகள் பிரதமரும் , நிதி அமைச்சரும் கொடுத்த விவரங்களின் அடிப்டையில் )

            ஏன் பிரதமர் அவர்களிடம் டெபிட் கார்டும் கூட இல்லையா?

            //நிச்சயம் பணம் அவசியம் இல்லை, வங்கி கணக்கும் டெபிட் கார்டும் இருந்தால் போதும்.//

            • பணம் கையிருப்பு ன்னா பழைய தமிழ் படத்துல காமிக்கற மாறி சேட்டு பீரோவுல இருக்கும்னு நினைசீங்களா? Bankல இருந்தாலும் கையிருப்புதான்.

              • மத்திய மந்திரிகளிடம் உள்ள ரொக்கப்பணம் பற்றிய மேலும் விவரங்களுக்கு நேற்றைய தமிழ் ஹிந்து நாளிதழை இணையத்தில் பார்க்கவும்: சுருக்கமாக : “””ஒருபுறம் சாமானிய மக்கள் பணமின்றி தத்தளித்து வருகின்றனர், மறுபுறம் கிராமவாசிகளிடம் சென்று பிரதமரும், அருண் ஜேட்லியும் இ-வேலட், ஆன் லைன் வர்த்தகம், ரொக்கமற்ற சமுதாயத்தை நோக்கி முன்னேறுவோம் என்று அறைகூவல் விடும் நிலையில், அருண் ஜேட்லி உட்பட அமைச்சர்கள் கையில் பெரிய அளவில் ரொக்கமுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.”””
                -தமிழ் ஹிந்து நாளிதழ் 2/12/2016
                —————————————————————-

                மேலும் தினமணி நாளிதழில்…..
                1. ரூ.500, ரூ.1000 நடவடிக்கை குறித்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அறிக்கைகளை வெளியிட்டு வரும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் ரூ.65 லட்சத்து 29 ஆயிரத்து 400 ஆயிரம் ரொக்கமாக வைத்து பட்டியலில் முதலிடம் வகிக்கிறார்.

                2. இணை அமைச்சர் ஸ்ரீபத் யசோ நாயக் (சுயேச்சை) – ரூ.22 லட்சம்
                3. இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் ஆஹி – ரூ.10 லட்சத்துக்கு அதிகம்
                4. பிரதமர் நரேந்திர மோடி – ரூ.89,700 ஆயிரம்
                5. 23 மத்திய அமைச்சர்கள் தங்களிடம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவாக இருப்பதாகத் தெரிவித்திருந்தனர்.
                6. 15 மத்திய அமைச்சர்களிடம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
                மற்ற மத்திய அமைச்சர்களில் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பரிக்கர், நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி ஆகியோர் இன்னமும் தங்கள் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு அளிக்கவில்லை.
                மேற்கண்ட பட்டியல் விவரம் தெரிவிப்பது என்னவென்றால், ரொக்கமற்ற சமுதாயம் அமைப்போம் என்ற மோடியின் உற்சாகத்தை அமைச்சர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதையே காட்டுகிறது.

  2. மணி என்ற மணிகண்டன் உண்மையில் மானஸ்தனாக இருந்தால் , மனசாட்சி உரியவராக இருந்தால் என் கேள்விகளுக்கு பதில் செல்லியே தீரனும்! இல்லை என்றால் அவர் அயோக்கிய சிகாமணி என்று தான் அர்த்தம் ஆகின்றது.

    ஊருக்கெல்லாம் பணமில்லா பரிவர்த்தனை செய்யுங்கள் என்று உபதேசம் செய்யும் பிரதமரும், நிதி அமைச்சரும் அவர்கள் மட்டும் ரொக்கமாக இவ்வளவு பணத்தை என்னத்துக்காக கையில் வைத்து உள்ளார்கள் என்று அவர்களை ஆதரித்து பேசும் மணி என்ற மணிகண்டன் பதில் சொல்லியே தீரணும் ! (மோடியிடம் ரொக்கமாக இருக்கும் ரூ.89,700 எதற்காக? நிதி அமைச்சரிடம் இருக்கும் ரொக்கப்பணம் ரூ.65 லட்சம் )

    • உங்கள் கேள்வி நியாயம் இல்லை, மோடியிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும் ?

      ஒரு வேலை மோடி அந்த பணத்தை வங்கியில் போடுவதற்காக கூட வைத்து இருக்கலாம் என்று (யூகமாக) சொல்லலாம்…

      • மணிகண்டன்…, இப்படி மோடியை நடு வழியில் கழற்றி விட்டால் எப்படி? நல்லாவா இருக்கு? மோடியை பற்றி வரும் கட்டுரைகளில் அவர் சார்பாக இங்கு அவருக்கு ஆதரவாக பேசிக்கொண்டு இருக்கும் நபரிடம் அதாங்க மணிகண்டனிடம் தானே அதாங்க உங்களிடம் தானே இதனை கேட்க முடியும்! மேலும் பணமில்லா பரிவர்த்தனை பற்றி பேசும் மோடியிடம் இவ்வளவு பணம் ரொக்கமாக எப்படி வந்தது Mr மணிகண்டன்? இதற்கு வேறு அதனை வங்கியில் போட மோடி வைத்து இருந்தார் என்று சப்பைகட்டு கட்டுகின்றீர்கள் நீங்கள்! அந்த பணமே வங்கியில் இருந்து அவர் அவரின் சம்பளத்தில் இருந்து எடுத்ததாக தானே இருக்க முடியும்! (பிரதமருக்கு வேறு எந்த வகையிலும் வருமானம் கிடையாது என்பதனை தேர்தலின் பொது அவர் தேர்தல் அதிகாரியிடம் அவர் அளித்த அவரின் பிரமான பத்திரம் மூலம் காணலாமே!)

      • மோடி சொல்வது ஒன்று (பணமில்லா பரிவர்த்தனை பற்றி ஊருக்கு ) செய்வது அதற்கு மாறானது (அவர் கையில் 89,000 ரூவா ரொக்கம்) தானே மணிகண்டன்? உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவாரை நம்பக்கூடாது என்பதாவது உங்களுக்கு தெரியுமா மணிகண்டன் ?

        “மோடியை பத்தி என்னிடம் கேள்வி கேட்டாதிங்க” என்று நீங்க கூறும் போதே உங்களின் பரிதாப நிலைமை எனக்கு புரியுது! அப்படிபட்ட பரிதாப நிலையில் ஆமாம் மணி எப்ப நீங்க நோடோவுக்கு போவப்போரிங்க! எப்ப மோடியை முழுசா தண்ணி தெளிக்க போறிங்க மணி!? மானஸ்தானாக இருதால் எப்போதோ நோட்டோவுக்கு போயிருப்பிங்க நீங்க! ஆனா நீங்க தான் மானஸ்தன் இல்லையே மணி! என்ன செய்ய!

  3. என்ன மணிகண்டன்…, பிச்சைகாரரை மேற்கோள்காட்டி மக்களுக்கு பணமில்லா வர்த்தகம் செய்ய pos இயந்திரத்தை பயன்படுத்த அட்வைஸ் செய்யும் பிரதமர் மோடியின் கையில் ரொக்கப்பணம் ரூ 89000 க்கும் மேல்!

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க