privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதொழிலார்களின் PF -க்கு வட்டி குறைப்பு ! முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி !

தொழிலார்களின் PF -க்கு வட்டி குறைப்பு ! முதலாளிகளுக்கு கடன் தள்ளுபடி !

-

ன்பார்ந்த தொழிலாளர்களே!

தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதிக்கான வட்டித் தொகையை 8.8% இருந்து 8.65%-க்கு குறைத்துள்ளது மத்திய அரசு. குறிப்பாக, 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்க செய்ததன் விளைவாகவும், ரிசர்வ் வங்கி வட்டிவிகிதத்தைக் குறைக்கும் என எதிர்ப்பாக்கப்படுவதாலும் சிறுசேமிப்புக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாலும் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வட்டியைக் குறைக்க வேண்டியதாகிவிட்டது என்று தொழிலாளர்களின் 6 லட்சத்து 32 ஆயிரம் கோடி ரூபாயைப் பாதுகாக்கும் அறங்காவலர் குழு ஏற்றுக்கொண்டதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

 

PF Poster

இந்த அறிவிப்புக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள பல்வேறு தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களின் அமைப்புகளும் தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளன. இந்த வட்டிக் குறைப்பை நாமும் கண்டிக்கிறோம். கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்தல், வட்டியைக் குறைத்தல், வட்டியையும் கடனையும் துளி கூட கட்டாத நிறுவனங்களுக்காக மறு கட்டமைப்பு செய்தல் என்ற பெயரில் வட்டியையும் கடனையும் தள்ளுபடி செய்தல் என்ற எல்லா வகை மோசடிகளையும் செய்து சுமார் 15 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. இந்த செயலுடன் தொழிலாளர்களுக்கு வழங்கி வருகின்ற PF-க்கான வட்டியைக் குறைப்பதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

சென்ற ஆண்டு தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்ட விதிகளைத் திருத்த முயற்சித்ததை பெங்களூரு தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தால் கைவிடப்பட்டது. கோரப்படாத நிதி என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களின் 2000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை அரசு பிற துறைகளுக்குப் பயன்படுத்த இருந்ததை தொழிலாளர்களிடம் எழுந்த எதிர்ப்பின் காரணமாக கைவிடப்பட்டது. அதுமட்டுமல்ல, இந்த PF பணத்தை பங்குச்சந்தையில் போட்டு கார்ப்பரேட் முதலாளிகளுக்கு மொத்தமாக திறந்துவிட முயற்சித்தது மோடி அரசு. அதுவும் நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பலையால் கைவிடப்பட்டது.

இப்படி PF பணத்தைக் கொள்ளையடித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி இறைக்க அரசு செய்த சதிச் செயல்களை, முயற்சிகளை எல்லாம் தொழிலாளர்களின் ஒற்றுமையால் முறியடிக்கப்பட்டது, இதனால் மூக்குடைப்பட்ட மோடி அரசு தனது கார்ப்பரேட் விசுவாசத்தை தக்க சமயம் பார்த்துக் காட்டியுள்ளதன் விளைவுதான் இந்த வட்டிக் குறைப்பு.

bengaluru-garment-workers-protest-7
தொழிலாளர் படையின் முற்றுகையில் பெங்களூரு மாநகரம்

இவ்வாறு வட்டியைக் குறைப்பதன் மூலம் அரசு திரட்ட இருக்கும் நிதி சுமார் 360 கோடி. இந்த அற்பத்தொகைக்கு கூட இலாயக்கற்றதாகத்தான் மத்திய அரசு இருக்கிறதா? என்ற கேள்விக்கு இந்த அரசு பதிலளிக்கப் போவதில்லை. சென்ற ஆண்டில் உபரியாக இருக்கும் தொகை சுமார் 410கோடிக்கும் மேல். இதனை வைத்தே இந்த வட்டிக் குறைப்பை செய்யாமல் வரவை ஈடு செய்யலாம் என்று தொழிலாளர்கள் வைத்த ஆலோசனையை அரசு ஒதுக்கித் தள்ளிவிட்டது.

ரிசர்வ் வங்கி வட்டியைக் குறைக்கப் போகிறது என்றும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் மதிப்பிழக்கப்பட்டதையும் PFக்கு வட்டியைக் குறைக்க காரணங்களாக சொல்வது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். மொத்தமாக ஒப்பாரி வைத்து களவாடும் சதித்தனம். இந்தப் பிரச்சனைகள் எப்படி PF தொகைக்கு நெருக்கடி ஏற்படுத்தப் போகிறது என்பதற்கெல்லாம் எந்த விளக்கமும் இல்லாமல் இருப்பதே இதற்கு சாட்சி. மொட்டையாக ஒரு பொய்யைச் சொல்லி, தனது காரியத்தைச் சாதிக்கும் நரித்தனம்தான் இதில் அடங்கியுள்ளது.

வட்டிக் குறைப்பு மட்டுமின்றி PFக்கான சம்பள வரம்பைக் குறைத்தல், இத்துறையில் பணிபுரியும் 20,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்தல், அதன் விதிகளில் உள்ள சரத்துகளை ஒவ்வொரு கூட்டத்தின் போதும் சிறுசிறு மாற்றங்களை செய்து கொண்டே வருதல் என்று ஒட்டுமொத்தமாக தத்தாரியா தலைமையில் மோடி அரசால் நயவஞ்சகமான முறையில் PF தொகை களவாடப்படுகிறது.

உலகிலேயே மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்பு என்றால் அது EPFO (தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்) தான். இதனை 17 கோடி பயனாளர்களைக் கொண்ட இவ்வளவு பெரிய நிறுவனம் உலகில் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் இதன் சொத்து மதிப்பு 8.5 லட்சம் கோடி ரூபாயைவிட அதிகம். பிரிட்டீசு ஏகாதிபத்தியத்தின் அடக்குமுறை கோலோச்சிய காலத்தில் தொழிலாளர்கள் நடத்திய மிகப்பெரும் போராட்டங்களின் விளைவாக தான் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த வரலாற்றை நாமும் ஆழமாக கற்றுக்கொள்ள வேண்டும்.

போராடிப் பெற்ற உரிமையைப் பேணிக்காகத் தெரியாத வர்க்கம் அழிவை சந்தித்துள்ளதை வரலாறு உணர்த்தியுள்ளது. PF பறிபோவதை அந்த வகையில் பார்ப்போம் !  ஒன்றிணைவோம் !

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
கிருஷ்ணகிரி-தர்மபுரி-சேலம் மாவட்டங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க