privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கவிவசாயி மரணம் தேசிய அவமானம் - சீர்காழி ஆர்ப்பாட்டம்

விவசாயி மரணம் தேசிய அவமானம் – சீர்காழி ஆர்ப்பாட்டம்

-

sirkali protest jana 2016 (1)காய்ந்து கிடக்கிறது காவிரி!
கருகி அழிகிறது நட்டப் பயிர்!!
ஏங்கி சாகின்றனர் விவசாயிகள்!
தூங்கி வழிகிறது தமிழக அரசு!
துரோகம் செய்கிறது மோடி அரசு!

எனும் முழக்கத்தை முன்வைத்து நாகை மாவட்டம் சீர்காழி வட்டம் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் 26.12.2016 அன்று காலை 11 மணிக்கு வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்க்கு தலைமையேற்ற வட்டச் செயலர் தோழர் ஸ்டாலின், ”இதுவரை 36 விவசாயிகள் பயிர் கருகியதைப் பார்த்து மரணமடைந்து இருக்கிறார்கள். இதைப்பற்றி தமிக அரசு வாய் திறக்கவில்லை. ஆனால் தமிழக முதல்வர் ஓபிஎஸ் பிரதமரை பார்க்க டெல்லி சென்று தனது அரசை பாதுகாக்கவும், தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிற வருமான வரித்துறை ரெய்டை மூடி மறைத்து பேரம் பேசவும் டெல்லி சென்றார்.

தமிழகத்தில் மாரடைத்து அதிர்ச்சியில் மரணம் அடைகிற விவசாயியின் உயிரை விட ஊழல் பேரம் பேசுவது அவருக்கு முக்கியமான ஒன்று.. ஒரு விவசாயின் மரணம் என்பது தேசிய அவமானமாக கருதப்பட வெண்டும். இது மக்கள் விரோத அரசாக இருப்பதால் விவசாயத்தைப் பற்றியோ விவசாயிகளின் பாதுகாப்பு பற்றியோ கவலைப்படவில்லை..ஆகையால் டெல்டா மாவட்டங்களில் இந்த அரசு விவசாத்தை அழிக்கும் கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது. அதற்காக மீத்தேன் எடுக்க அனுமதி கொடுப்பது, ஷெல் கேஸ் எடுக்க அனுமதிப்பது, அனல்மின் நிலையம் துவங்க அனுமதிப்பது, தமிழகத்திற்க்கு தண்ணீர் விடாமல் கர்நாடகத்துடன் கூட்டு சேர்ந்து தமிழகத்திற்கு துரோகம் செய்வது போன்ற மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறது. எலலா நீர்நிலைலகளும் தூர்வாராமல் தூர் வாரியதாக கணக்கு காட்டுகிறர்கள் அதிகாரிகள்.

இந்த நிலையில் நமது உரிமைகளை பெறவேண்டும் என்றால் மக்கள் தமது உரிமைகளை நிலைநாட்டிட விவசாய அதிகார கமிட்டிகளை அமைத்துக் கொண்டு அதிகாரத்தை கையிலெடுக்க வெண்டும் என்கிறோம். அப்போதுதான் நம்முடைய அனைத்து வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க முடியும்.  எனவே.இறந்த விவசாய குடும்பத்திற்க்கு தலா 25 லட்சமும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 30 ஆயிரமும், விவசாயத்தை நம்பி வாழும் விவசாய தொழிலாளிகளுக்கு 25 ஆயிரமும் வழங்குவதோடு, கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே வடரெங்கம் என்ற இடத்தில் தடுப்பணை கட்டி நீரை தேக்க வெண்டும். இக்கோரிக்கைகளை பெரும் போராட்டத்தால் நிறைவேற்றிட விவசாயிகள் விடுதலை முன்னணியில் இணைந்து போரட உங்களை அழைக்கிறோம்.” என்று அறைகூவல் விடுத்தார்.

கொடக்காரமுலை பாசதாரர்கள் சங்கத்தைச் சேர்ந்த மனோகர் பேசும்போது, “தற்கொலை செய்யும் விவசாயிகளைப் பற்றி அரசு வாய் திறக்கவில்லை. நாதி இல்லாமல் நாங்கள் இருக்கிறோம். இறந்த விவசாயியை ரோட்டில் போட்டு போராட்டம் செய்கிறோம் அப்பகூட போலிசுதான் வருது. அரசு அதிகாரிகள் யாரும் வருவதில்லை. நட்டு வைத்த பயிர் காய்ந்து ஆடு,மாடு மேயுது. இன்சூரன்சு 4 வருடமா வரல. பணத்தை மட்டும் வருடம் வருடம் வாங்குராங்க, இன்சுரன்சு மட்டும் கொடுக்க மாட்டங்கிறங்க. இது விவசாயிகளுக்கு அரசு செய்யிற துரோகம்.

ஜெயலலிதா செத்தா பணம் கொடுக்குறாங்க ஆனா விவசாயி செத்தா கண்டுக்க மாட்டங்கிறாங்க. எங்க ஊரில் (பழையபாளையம்) ஓ.என்.ஜி.சி இருக்கு. அது தினமும் எரியும் போது  வெளியேறும் வாயு  மேகத்தை கலைத்து இந்த வருடம் சுத்தமா ஒரு சொட்டு மழைகூட இல்ல இதுக்கெல்லாம் தீர்வு வரணும்னா விவசாயிகள் ஒன்றுபடனும்.” என்று ஆதங்கத்துடன் பேசினார்.

ஓய்வு பெற்ற நீதிபதி ப.கோபாலக்ருஷணன் பேசும் போது, “நீங்க இனிமேல்  எவனுக்கும் பயந்து பேசாதிங்க. விவசாயிகளை எவனும் திரும்பி பாக்குறது இல்லை. தண்ணி விடச்சொல்லி கோர்ட்டு உத்தரவு போடுது. அதை நடைமுறைப்படுத்துவது அரசின் பொறுப்பு. அதை செயயாமல் ஏதோ பேசுரானுங்க. எனக்கும் நிலம் இருக்கு விவசாயம் செய்யிறேன் தண்ணி இல்லாம காயுது. இதுக்கல்லாம் தீர்வு என்னான்ன விவசாயிகள் ஒற்றுமையா இருப்பதுதான். அதை செய்யுங்க ஊரு ஊரா போய் விவசாயிகிட்ட பேசுங்க எல்லாத்துக்கும் தீர்வு கிடைக்கும்.” என்றார்.

மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் ரவி பேசும் போது, “எங்க ஊருக்கு பக்கத்து ஊரில் நடராஜன் என்ற விவசாயி பயிர் கருகியதை பார்த்து வயலிலேயே மரணமடைந்தர். அவருக்கு நிவாரணம் கேட்டு சாலை மறியல் செய்தோம். எந்த அரசு அதிகாரியும் வரல. போலிசு வந்து மறியல் செய்யாதிங்க, சட்டம் ஒழுங்கு கெட்டுப்போகும், கலைந்து போங்க என்று விவசாயிகளை மிரட்டுது. இததான் அரசின் லட்சணம். ஆகையால்தான் நாங்கள் சொல்லுகிறோம், இந்த அரசு தோற்றுப்போயிடுச்சு, திவாலாயிடுச்சு, மக்களுக்கு எதிர்நிலையாய் போயிடுச்சு இனிமெல் அரசு மக்களுக்கான எந்த பிரச்சனையையும் தீர்க்காது மக்களே தங்கள் அதிகாரத்தை கையிலெடுக்க வேண்டும். இந்த கோரிக்கையை அரசு நிறைவெற்றாவிடடால் மக்கள் அதிகாரமும் இணைந்து போராட்டத்தை கையிலெடுக்கும்” என்றார்.

 

 

  • படங்களைப் பெரிதாக பார்க்க அழுத்தவும்

கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் எஸ். இமயவரம்பன் பேசும்போது, “இன்றைய தமிழகம் மிகவும் பயங்கரமான சூழலில் உள்ளது. தோழர்கள் வேகப்பட்டு பேசினார்கள். அதில் தவறில்லை நாடு சுதந்திரம் அடையும்போது நமது ஒரு ரூபாய் நோட்டு அமெரிக்க ஒரு டாலருக்கு சமம் இன்றைக்கு ஒரு டாலர் 66 ரூபாய்.  இந்த பண வீக்கத்திற்க்கு யார் காரணம் விவசாயியா இல்லை, அரசியல்வாதிகளூம் அதிகாரிகளும் தான்.. மோடி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை யார் பாரட்டுகிறார்கள் தெரியமா? ஒரு லட்சம் கோடி வங்கியில் கடன் வாங்கிருக்கும் அம்பானி பாரட்டுகிறார். அதானி, ,ரஜினி போன்றவர்களெல்லாம் பாரட்டுகிறார்கள். இன்றைக்கு நடுத்தரவர்க்கம் நடுத்தெருவில் நிற்கிறது. நமது முதல்வர் ஓபிஎஸ் பிரதமரை டெல்லியில் பார்த்து ஒரு மனு கொடுத்தார். ஒரு கோரிக்கை கூட விவசாயிகள் பற்றியோ, விவசாயத்தை பற்றியோ இல்லை.

அவருக்கு இருக்கிற கவலை எல்லம் வேறு. நமது பிரதமர் கவலையெல்லாம் கார்ப்பரேட்டை எப்படி வாழவைப்பது என்பது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் 15 லட்சம் ஏக்கரில் விவசாயம் செய்த பயிர் தண்ணீரில்லாமல் கருகி இன்று ஆடு மாடு மேய்கிறது ,பயிர் கருகியதை பார்த்த அதிர்ச்சியில் இதுவரை 40 விவசாயிகள் மரணமடைந்து இருக்கிறார்கள். எனவெ இவ்வளவு துயரத்துக்கு பிறகும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதன் அடிப்படை ஒன்றுதான். அது விவசாயிகள் ஒரு வர்க்கமாக இல்லாமல் சாதியாகவும், ,மதமாகவும், அரசியல் கட்சிகளில் பிரித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது எதுவுமே விவசாயிகளுக்கு பயன் தராது. எனவே சாதி மத அரசியல் கட்சிகளிலிருந்து வெளியேறி விவசாய வர்க்கமாக ஒன்றிணையும்போதுதான் நம்முடைய பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளமுடியும்.” என்றார்.

விவசாயிகள் விடுதலை முன்னணி நாகை மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பிகாபதி, பேசும் போது, “விவசாயம் இன்று திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிட்டது. வங்கியில் கடன் வாங்கியும், கந்துவட்டிக்கு கடன் வாங்கியும், பொருட்களை அடகு வைத்தும் விவசாயம் செய்த விவசாயிகள் இன்றைக்கு பயிர் கருகியதை பார்த்து அதிர்ச்சியில் மரணமடந்து இருக்கிறார்கள். இதற்க்கு அடிப்படை காட் டங்கல் ஒப்பந்தம். விவசாயம் திட்டமிட்டு அழிக்கப்பட்டதற்க்கு காரணம் உள்ளது. அது கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளை அடிக்க கடற்கரையோரம் உள்ள நிலங்கள் இறால் பண்ணைகளாக மாற்றப்பட்டு உப்பங்கழிகளாக மாற்றப்பட்டுவிட்டது. மீத்தேன் எடுக்க அனுமதி, ஷெல் கேஸ் எடுக்க அனுமதி, அனல்மின் நிலையம் அமைக்க அனுமதி என்று ஒட்டுமொத்த காவிரி டெல்டா விவசாயத்தை அழிக்கும் நடவடிக்கையில் எடுபட்டு வருகிறது.

மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் உச்சநீதிமன்ற தீர்ப்பை அமுல்படுத்த மறுக்கிறது. இப்படி தமிழகத்திற்கு துரோகம் செய்யும் பா.ஜ.க-வை தமிழிகத்தை விட்டே விரட்ட வேண்டுமென்று இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக உங்களை கேட்டுக் கொண்டு இறந்து போன விவசாய குடும்பத்திற்க்கும், கருகிப்போன பயிர்களுக்கும், நம்பி வாழும் தொழிலாளிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கவேண்டும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி நீரை தேக்க வேண்டும், உப்பனாற்றில் உப்பு தண்ணீர் உள்ளே புகாமல் இருக்க தானியங்கி நீர் தேக்கி அமைக்க வேண்டும், சீர்காழியில் மழை இல்லாமல் போனதற்க்கு காரணமான பழையபாளயம் ONGC ஆலையை உடனடியாக மூட வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேறா விட்டால் வி வி மு மக்களை திரட்டி போராடும் என்று அறைகூவல் விடுத்தார்.

ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் பச்சபெருமாநல்லூர் நவநீதகண்ணன், மத்தலமடையான் நடராஜன், பச்சபெருமாநல்லூர் ஜெஸ்டீன் ஆகியோர் பேசினார்கள்.

  • தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, சீர்காழி வட்டம்,
    நாகை மாவட்டம்,
    தொடர்புக்கு: 97508 42979

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க