privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !

-

மதுரவாயலில் மக்கள் அதிகாரம் நடத்தும் மஞ்சு விரட்டு !

 

PP Poster

pp Manjuvitattu

தமிழ் இனத்தை தமிழ் நாட்டை நசுக்க நினைக்கும் பி.ஜெ.பி.க்கு பாடம் புகட்ட, தன்மானமுள்ள மாணவர்கள் – இளைஞர்கள் என அனைவரும் இந்த அழைப்பை ஏற்று மதுரவாயலுக்கு வாருங்கள் !

இடம் : மதுரவாயல்,
நாள் : 17.01.2017.
நேரம் : மாலை 5:00 மணி.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம். 91768 01653.

_______________

விழுப்புரத்தில் மஞ்சு விரட்டு !

 

v

தமிழ் இனத்தை தமிழ்நாட்டை நசுக்க நினைக்கும் பி.ஜே.பி- RSS கும்பலுக்கு பாடம் புகட்ட, தன்மானமுள்ள மாணவர்கள், இளைஞர்கள் இந்த அழைப்பை ஏற்று விழுப்புரத்திற்கு வாருங்கள் !

இடம் : விழுப்புரம் ஆட்சியர் அலுவலகம் எதிரில்
நாள் : 17.01.2017

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம்.

_______________

காஞ்சிபுரம் பகுதியில்  16.01.2017 அன்று மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் செய்யாறு வட்டத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் உடைப்புப் போராட்டத்தை நடத்திய அழிவிடைதாங்கி, மற்றும் அருகில் உள்ள பெருமானூர், வெம்பாக்கம் ஆகிய  ஊர்மக்களும் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் இணைந்து மஞ்சு விரட்டு நிகழ்ச்சியை நடத்தினர்.

இதில் 3,000 பேர் கலந்து கொண்டனர். மேலும் சென்னை – காஞ்சிபுரம் மக்கள் அதிகாரம் தோழர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஊர் மக்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

மாலை நேரத்தில் தமிழர்களின் வீரவிளையாட்டான சிலம்பம் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகளுடன் மஞ்சு விரட்டு தொடங்கியது. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புகளின் முன்னணித் தோழர்கள், தோழர்.கணேசன், தோழர். முகுந்தன் மற்றும் பகுதித் தோழர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Kanchi manju virattu (7)

மேலும் மக்கள் அதிகாரத்தின் “ஜல்லிக்கட்டு அல்ல! இது டெல்லிக் கட்டு!” என்ற துண்டறிக்கைகள் ஆயிரக் கணக்கில் மக்களிடம் வினியோகிக்கப் பட்டது. இந்த ஊர்களிலும் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் காவல் துறை நேரில் சென்று முந்தைய நாளே மக்களை மிரட்டிப் பார்த்துள்ளது, ஆனால் மக்கள் நாங்கள் வருடா வருடம் நடத்தும் இந்த நிகழ்ச்சியை யாரும் தடுக்க முடியாது என துணிச்சலாக பதிலலித்துள்ளனர்.

மேலும் நிகழ்ச்சி நடக்கும் போது மக்களை தடுக்க வந்த போலீசிடம் 70 வயது முதியவர் ஒருவர் எங்க மாட்டை விரட்டக் கூடாது என சொல்ல நீ யார் எனக் கூறி போலீசை விரட்டிவிட்டார். மேலும் இளைஞர்கள் பலரும் “தமிழண்டா ! முடிஞ்சா தொட்டுப் பார் !” என்ற டி-சர்டுகளுடன் வலம் வந்தனர். மக்கள் அதிகாரம் தோழர்கள் காவல் துறை வந்து தடுத்தால் அதை எதிர் கொள்ள ஆயத்தமாக முன் நின்றனர். காவல் துறை தனது அதிகாரம் இங்கு பலிக்காது என்பதை உணர்ந்து திரும்பி சென்றது.

இவ்வாறு காவல் துறையின் அச்சுறுத்தல்களை மீறி இரவு 8:00 மணிவரை நிகழ்ச்சிகள் நடை பெற்றது இதில் சுமார் 100-க் கணக்கான காளை மற்றும் உழவுமாடுகளுடன் உற்சாக மாக நிகழ்ச்சியை நடத்தி முடித்தனர்.

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம். 91768 01653.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க