privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை - Live updates

நேரலை : மாணவர்கள் மீது அடக்குமுறை – Live updates

-

அன்பார்ந்த உழைக்கும் மக்களே

மெரினா கரையில் போராடிக் கொண்டிருந்த மாணவர்களை தமிழக போலீசார் வலுக்கட்டாயமாக கலைத்திருக்கின்றனர். இருப்பினும் போலீசாரின் ஒடுக்குமுறையை மீறி மாணவர்கள் கடலுக்குள் சென்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். மெரினா ராஜிவ் காந்தி சாலையில் 1000 போலீசார் குவிக்கப்பட்டு அந்த பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இந்நிலையை மீறி பட்டினப்பாக்கம் கடல் வழியாக மாணவகளை காக்க மக்கள் நூற்றுக்கணக்கில் சென்று கொண்டிருக்கின்றனர். எனவே இச்செய்தியை பார்க்கும் சென்னை மக்கள் எவ்வளவு நபர்களை திரட்ட முடியுமோ திரட்டிக்கொண்டு மெரினாவுக்கு விரைந்து வாருங்கள்.

தமிழகத்தின் இதர பகுதிகளிலும் இதே போன்று வன்முறையாக கலைப்பாதாக செய்திகள் வருகின்றன. கோவை, மதுரையிலும் போலிசார் இதே போன்று வன்முறையை அரங்கேற்றி மாணவர்களை கலைத்தனர். அதை மீறி அங்கேயும் மக்களும் மாணவர்களும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.  அங்கேயும் இதே போன்று திரண்டால் மாணவர் போராட்டத்தை காக்க முடியும்.

வேடிக்கை பார்க்கும் தமிழகமே வீதிக்கு விரைந்து வா!

-வினவு

இது தொடர்பாக மக்கள் அதிகாரம் வெளியிட்டுள்ள போராட்ட முழக்கம்

  • இனி இது ஜல்லிக்கட்டு மட்டுல்ல – டில்லிக்கட்டு!
  • மோடி பன்னீர் கூட்டு சதி!
  • தமிழக மக்கள் மீது மோடி அரசின் பயங்கரவாத தாக்குதல்!
  • டில்லிக்கு தமிழகம் அடிமையல்ல!
  • போராட்டத்தைத் தொடர்வோம்!

மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு. 99623 66321.

 

  1. அரசியல் சாசன சட்ட வரை முறைகளை மீறி
    மனித உரிமைகளை மீறி மாணவர்களை தாக்கும் இந்த ஆளும்
    அதிகாரவர்க்கத்தை கண்டித்து
    அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்ட ஜனவரி 26 ஐ
    துக்க நாளாக கடைபிடிப்போம் !

  2. இன்று காலையில் இருந்து போலீஸ் அராஜகம்தான் மெரீனாவிலும் காமராஜர் சாலையிலும் நடந்து வருகிறது. நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல் ஆயிரம் அல்ல, பத்தாயிரம் போலீசார் அங்கே குவிக்கப்பட்டு காலை 9 மணி அளவில் அநேகமாக எல்லா மாணவர்களையும் தடியடிநடத்தியோ, குண்டுக்கட்டாகத் தூக்கியோ அப்புறப்படுத்தினர். பெண்களை, குறிப்பாக கர்ப்பிணிகளையும் கைக்குழந்தைகளோடு உள்ளவர்
    களையும் அடித்து உதைத்தனர்.
    எவ்விதத் தலைமையும் அற்ற நிலையில் மாணவர்களுக்கு யோசிக்கவோ, அடுத்து என்ன செய்வது என்று திட்டமிடவோ கால அவகாசம் தரப்படவில்லை.

  3. கொலைகாரன் மோடி – ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டு கும்பலின் ஏவல் ஓநாய்கள் ஓ.பி.எஸ். கும்பலின் கிரிமினல் காவல் துறை.

  4. மாணவர்களின் மற்ற கோரிக்கைகளை மறைத்து விட்டு வெறும் சல்லிக்கட்டுக்கான போராட்டமாக மக்களை ஊடகங்களும் அரசும் நம்ப வைத்தன இப்ப சல்லிக்கட்டு பிரச்சனை முடிந்து விட்டது என்று கைக்கூலிகளை தூண்டி விட்டு போராட்டக்காரர்களிடையே குழப்பத்தை உண்டு பன்னி போராடத்தை பிசுபிசுக்க வைக்க முயற்ச்சி செய்யும் தமிழக அரசையும் மத்திய அரசையும் வன்மையாக கண்டிக்கிறோம்

    • “மாணவர்களின் மற்ற கோரிக்கைகளை மறைத்து விட்டு வெறும் சல்லிக்கட்டுக்கான போராட்டமாக மக்களை ஊடகங்களும் அரசும் நம்ப வைத்தன”

      இது செஞ்சட்டைக் காரர்களின் வழக்கமான டெக்னிக்.கோரிக்கைகளை மாற்றிக் கொண்டே/ஏற்றிக்கொண்டே போய் பிரச்சினையை முடிய விடாமல் பார்த்துக் கொள்வது.முடிந்தால் அவர்களது முக்கியத்தும் முடிந்து விடுமே!
      கஷ்டப் படாமல் சேர்ந்த கூட்டத்தை முழுவதுமாக எக்ஸ்பிளாய்ட் பண்ண முடியாத வருத்தம்.
      மோடிக்கும் இந்த சட்டத்திற்கும், தமிழக போலீஸுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. இருந்தால் ன்ன? வாய்ப்புக் கிடைத்தால் மோடி ஒழிக!செஞ்சட்டை வாழ்க!

  5. https://www.facebook.com/Ambedkar-Periyar-Study-Circle-IIT-Madras-294957000684609/?ref=aymt_homepage_panel
    வலிக்கல வலிக்கல கொஞ்சம் கூட வலிக்கல
    எவ்வளோ அடிப்ப? -என்ற நிலைக்கு தமிழர்கள் வந்த உடனே இப்ப தடவிகொடுக்கிறான்
    வீட்டுக்கு போகணுமாம்
    சொல்கிறார் லாரன்ஸ் அப்புறம் ஆர் ஜெ பாலாஜி வருகிறார் ரஜினி வருகிறார் இன்னும் யார் யார் எல்லாமோ வருகிறார்கள் அடிச்சுட்டு தடவிகொடுக்க.
    வீட்டுக்கு போகணுமாம்.
    நமது ஆரம்ப கோரிக்கையே நிறைவேறவில்லை ஜல்லிக்கட்டு தடையை நிரந்திரமாக நீக்க வேண்டும்
    இப்போ அமைதியான போராட்டத்தை கலைக்க யார் தடி அடி நடத்த சொன்னது மோடியா ஓபிஎசா தெரிஞ்சாவனும் ஏன் பார் போற்றும் போராட்டத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்த போராட்டத்தில் ஏன் தடியடி நடத்த சொன்னீர்கள் என்பதை விளக்க வேண்டும்.
    அடுத்து மாணவர்கள் போலீஸ் ஸ்டேஷனை எரித்தார்கள் என்பதை கண்டு பிடிக்க விசாரணை கமிஷன் வைக்க வேண்டும்.
    மெரீனாவுக்கு வரலாம்னு பார்த்தா எம் ஆர் டி எஸ் ரயில் ஓடவில்லை யார் ரயிலை நிறுத்த உத்தரவிட்டார்கள் தெரிஞ்சவனும் அவர் மெரீனாவுக்கு வந்து விளக்கம் சொல்லணும்.
    தமிழர்களே இப்படி ஒரு டிமாண்ட் வைப்போம்.
    பிரச்னை தீரும் வரையில் வீடு போயி சேரக்கூடாது.
    சாதாரண மக்கள் கம்பளைண்ட் கொடுக்க போன எந்த போலீஸ் காரன் மதிச்சு பேசறான்
    என்ன நடந்தாலும் நாம பின்வாங்க கூடாதுனு நாங்க நினைச்சதுனால தான் apsc தடை நீக்கம் செய்யப்பட்டது அதற்கு பத்து நாள் ஆனது. அந்த பத்து நாளில் எங்கள் படிப்பு ஒன்னும் குடிமுழுகி போயி விடல. ஆனால் அந்த பத்து நாள் எங்கள் வாழ்க்கையின் முக்கியமான பத்து நாள் ஆனது. நாங்கள் கற்று கொண்டது நிறைய. நம்முடைய இந்த பத்து நாளும் நமக்கு துரோகிகளை அடையாளம் காட்டும். தலைவர்களையும் அடையாளம் காட்டும்.
    #உடல்_மண்ணுக்கு_உயிர்_தமிழுக்கு
    #கட்டுண்டோம்_காத்திருப்போம்
    #savejallikattu
    #against_police_atrocity

  6. தமிழ்நாட்டின் காவல்துறை தில்லியின் ஏவலில்.தமிழ்நாடு பஜகவின் பிடியில்.தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மோடியின் காலை நக்கி கிடக்கிறது.வங்ககடலை மறைத்து தமிழால் மக்கள் பேரலை எந்த தலைமையும் ஒருங்கினைப்பும் இன்றி உருவானால் காவிகளுக்கு பொறுக்குமா?தேசப்பற்றையே அரசியல் முகமூடியாய் அணிந்து கொண்டு ஊளையிடும் நரிக்கூட்டத்திற்க்கு அதுவும் தமிழன் தற்காலிகமாவது ஜாதி மறந்து மதம் மறந்து இனமாய் ஒன்றினைந்தால் எப்படி இருக்கும் நரிகளுக்கு?வெள்ளமும் புயலும் ஒன்றினைத்த தமிழனை ஜல்லிகட்டும் ஒன்றினைப்பதா?ஒட்டுமொத்த தேசமும் த்ன் கையில் ஒன்றுக்கும் ஆகாத அரசாங்கம் தமிழ்நாட்டில்…விட்டுவிடாதே வாய்ப்பை என்று காட்டுதர்பார் நடத்தி இருக்கிறது காவி கூட்டம்.விலை போன எச்சைகளுக்கு கால்ம் பதில் சொல்லும்.

    • முதலமைச்சராக ஒரு மிக்சர் திண்ணியும், தலைமைச் செயலராக ஒரு பார்ப்பன தானே இருக்கிறாள். பின்னர் என்ன எதிர்பார்க்க முடியும்.

  7. ஜந்து நாள் கடைபிடித்த கண்ணியத்தை மாணவர்கள் கடைசி நாள் அன்று கடைபிடிக்கவில்லை… மத்திய சர்க்கார் சட்ட வரைவு என்பது ஒரிரு நாளில் நடக்கும் விஷயம் கிடையாது, இது மாணவர்களுக்கு புரியவில்லை… கடைசி நாளில் போலீஸ் செய்தது சரி தான்… கோயம்பேட்டில் இருந்து அசோக்பில்லர் வரை சுமார் இரண்டு மணி நேரம் போராட்டகாரர்கள் செய்த அட்டுழூயமும், கேவலமும் சகிக்கவில்லை… மக்கள் யாரும் இப்பொழுது மாணவர்களை ஆதரிக்கவில்லை. இது தெரிந்துதான் போலீசும், அரசும் நடவேடிக்கை எடுத்தது… முடிக்க தெரியாத எதையும் ஆரம்பம் செய்யக்கூடாது… மாணவர்கள் செய்த தவறு இது தான்.

    • மிஸ்ட்டர்ர்ர்…இந்தியன் உங்களின் தத்துவ முத்தை ஒரு பதாகையில் எழுதி உங்கள் சகாக்களோடு மெரினா கடற்கரையில் வந்து நில்லுங்கள்.பார்க்கும் தமிழன் உங்களை உச்சிமுகர்ந்து கொண்டாடுவான்.கமிஷனரே வெட் கப்பட்டு வெருண்டோடுவார்.

    • இத்தனை ஆதாரங்கள் இருந்த பிறகும் காவல் துறை செய்தது சரி என்றால் எப்படி .

  8. அய்யா இந்தியன் போலீஸ் வாகனங்களை கொழுத்தி பொருள்களை உடைத்ததற்க்கு வீடியோ ஆதரம் இருக்கு போலிஸ் அராஜகத்தை மக்கள் நன்றாக அறிந்துள்ளார்கள்

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க