privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஓச்சேரி இந்தியன் வங்கிக்கு பணத்தை வரவழைத்த மக்கள்

ஓச்சேரி இந்தியன் வங்கிக்கு பணத்தை வரவழைத்த மக்கள்

-

மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் உழைத்து சேர்த்த பணத்தை அத்தியாவசிய தேவைகளுக்காக கூட எடுக்க முடியாமல் அனைவரும் வங்கி முன் வரிசையில் காத்திருந்தனர். பணத்தை எடுக்க அரசு 24 மணி நேரத்திற்கு நான்காயிரம் ரூபாய் எடுக்கலாம் என்பதும், கால்கடுக்க காத்திருந்த மக்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் தான் தரமுடியும் என்று வங்கிகள் சொல்வதும் அதன் பிறகு அரசு மீண்டும் 24 மணி நேரத்திற்கு இரண்டாயிரம் ரூபாய் தான் எடுக்க முடியும் என்பதும் மக்களை கொந்தளிக்க வைத்தன. அதனால் மோடி 50 நாட்கள் பொறுத்து கொள்ளுங்கள் அதன் பிறகு நாட்டையே சொர்க்கமாக மாற்றிவிடுவேன் பணம் எடுக்க தடையே இருக்காது என்றும் நாடகமாடினார்.  அதனால்தான் பணம் எடுக்க இருந்த தடை நீங்கவில்லை.

ocheri-indian-bank-protest
வங்கி திறந்து உள்ளே நுழையும் பொழுதே வங்கி மேலாளர் இன்றைக்கு வங்கியில் பணம் இல்லை, பணம் எல்லாம் எடுக்க முடியாது கிளம்புங்க, கிளம்புங்க என்று கூறினார்.

தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட பூர்த்தி செய்து கொள்ள முடியாமல் பாதிக்கப்பட்ட மக்கள் ஆங்காங்கே தன்னெழுச்சியாகவும் பல அமைப்புகளிலும் போராடி வருகின்றனர். அப்படி வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், ஓச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கி கிளையில் மக்கள் போராட்டத்தின் மூலம் தீர்வு கண்டுள்ளனர்.

11.01.17 அன்று காலை 10 மணிக்கு வங்கி திறப்பதற்கு முன்பாகவே வங்கி வாசலில் மக்கள் பணம் எடுக்க காத்திருந்தனர். வங்கி திறந்து உள்ளே நுழையும் பொழுதே வங்கி மேலாளர் இன்றைக்கு வங்கியில் பணம் இல்லை, பணம் எல்லாம் எடுக்க முடியாது கிளம்புங்க, கிளம்புங்க என்று கூறினார். அதன் பிறகும் மக்கள் வரிசையில் நிற்க மீண்டும் வங்கி துணை மேலாளர் இன்னைக்கு பணம் இல்லை கிளம்புங்க என்றார். காத்திருந்த வரிசையில் மக்கள் அதிகாரம் தோழர் உடனே வங்கி துணை மேலாளரிடம் பணம் கேட்டு பலநாள் வந்திருக்கிறோம், ஒவ்வொரு முறையும் இப்படித்தான் கூறுகிறீர்கள், இப்போது கிடைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறியுள்ளார். அதற்கு வங்கி துணை மேலாளர் போராடினாலும் பணம் கிடைக்காது என்று கூறியுள்ளார்.

வங்கியில் காத்திருந்த மக்களை பார்த்து நாம் உழைத்து சேர்த்த பணம் நமக்கில்லை என்கிறார்கள். ஆனால் சேகர் ரெட்டிக்கு கட்டு, கட்டாக புதிய 2000 ரூபாய் நோட்டு எப்படி கிடைத்தது. தமிழ்நாட்டில் பல கிரிமினல்கள் வீட்டில், BJP கட்சி பிரமுகரின் வீட்டில் புதிய நோட்டுக்கள் கிடைத்துள்ளது . அப்படி என்றால் உழைத்து சேர்த்த நமக்கு பணம் இல்லையா? வாங்க நாம நம் பணத்தை எடுக்கணும்னா போராட்டம் நடத்தலாம் என்று சொல்ல மக்களும் உடனே அணிதிரண்டு தேசிய நெடுஞ்சாலையை மறித்து போராடினர். உடனே வங்கி கிளை மேலாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். உடனே காவேரிப்பாக்கம் உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தலைமையிலான போலிசு வந்து கூட்டத்தை கலைந்து செல்லுமாறு பேச மக்கள் நாங்க சேர்த்த பணத்தை எங்களுக்கு கொடுக்க மறுக்கிறார்கள் எங்க பணத்த கொடுத்தா நாங்க ஏன் சாலைமறியல் செய்யப்போகிறோம்,  நீங்க போய் வங்கி மேலாளரிடம் பேசுங்கள் என்று கூறினர்.

ocheri-indian-bank-protest1
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசு வங்கி மேலாளரிடம் இதை முதலிலேயே செய்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டார்

ஆய்வாளர் சந்திரசேகர் வங்கி மேலாளரிடம் வங்கியில் உண்மையில் பணம் இல்லையா என்று கேட்க மூன்று லட்சம் ரூபாய் பணம் தான் இருக்கு என்று கூற இருப்பதை கொடுக்க ஏற்ப்பாடு செய்ய சொன்னார். அதன் பிறகு வங்கியில் பணம் கொடுப்பதாக சொல்ல கூட்டம் கலைந்து வங்கிக்குள் சென்றது. அதுவரை சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசு, வங்கி மேலாளரிடம் இதை முதலிலேயே செய்து இருக்கலாம் இல்லையா என்று கேட்டார். மக்கள் அதிகாரம் தோழர் மக்களைப் பார்த்து பாருங்க முதலில் போரடினாலும் பணம் கிடைக்காது என்று கூறிய வங்கி நாம் போராடின பிறகு இப்பொழுது பணம் கொடுக்கிறது போராட்டம் தான் இங்கு அனைத்திற்கும் தீர்வு என்றார். அங்கு இருந்தவர்கள் மக்கள் அதிகார தோழரை பார்த்து நன்றி கூறினர்.

மீண்டும் அடுத்த நாள் காலை 12.01.17 அன்றும் மக்கள் இதே போல் வரிசையில் காத்திருக்க அதில் தோழரும் இருந்தார். முந்தைய நாள் போராட்டம் செய்தாலும் பணம் கிடைக்காது என்று பேசிய வங்கி மேலாளர் வங்கி ஊழியர் ஒருவரை அழைத்து மக்களுக்கு ஃபேன் போடு வரிசையில் நிற்பவர்களுக்கு வியர்க்காதா என்று கூறினார். ஏற்கனவே போலீசு வங்கியில் இரண்டு பேரை காவலுக்கு நிற்க வைத்திருந்தனர். பணம் கொடுக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திலேயே பணம் காலியாக வங்கி மேலாளர், போலீசு ஆய்வாளரை அழைத்து வங்கியில் பணம் காலியாகிவிட்டது போராடப்போகிறார்கள் இன்னும் ஒரு மணி நேரத்தில் பணம் எடுத்து வந்து விடுகிறேன் பொறுமையாக இருக்க சொல்லுங்கள் என்று கூறினார். போலிசு ஆய்வாளர் சந்திரசேகர் மக்களிடம் வந்து பணம் காலியாகி விட்டதாம் ஒரு மணி நேரத்தில் வந்துவிடுமாம் பொறுத்திருங்கள் என்று கூறினார்.

இந்த அரசு தானே சொல்லிக் கொள்ளும் சட்டப்படி கூட செயல்படுவதில்லை. தானே அறிவித்திருக்கும் உத்தரவுகளை மதிப்பதில்லை. இந்நிலையில் எங்கேயும் எப்போதும் மக்கள் தமக்கான உரிமையை போராடித்தான் பெற முடியும் என்பது அங்கிருக்கும் மக்களுக்கு ஒரு சிறிய நம்பிக்கையாக உதித்திருக்கும் என்று நம்புகிறோம்.

தகவல் :
மக்கள் அதிகாரம், காஞ்சிபுரம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க