privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !

மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து புரட்சிகர அமைப்பினர் ஆர்ப்பாட்டம் !

-

வேலூரில் பு.ஜ.தொ.மு ஆர்ப்பாட்டம் !

ழைக்கும் மக்களே,

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி, மாணவர்கள், பொதுமக்கள் குழந்தைகள் அனைவரும் அறவழியில் கடந்த ஒரு வாரமாக போராடிக்கொண்டுருந்த நிலையில், 23-01-17 திங்கட்கிழமை காலை முதல், அரசு தனது காட்டுமிராண்டிதனமான அடக்குமுறையை மாணவர்கள் மீது, கட்டு அவிழ்த்துவிட்டுயுள்ளது. ஏராளமான பெண்கள், குழந்தைகள் காயமடைந்து உள்ளனர். இரு மாணவர்கள் உயிரிழந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இதை கண்டித்து வேலூர் பு.ஜ.தொ.மு அமைப்பினர் காலை 11:00 மணியளவில், வேலூர் பழைய பேருந்து நிலையத்தில்,ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் என பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு தோழர்கள், மத்திய, மா நில அரசின் தமிழின விரோத நடவடிக்கைக்கு ஏதிராக முழக்கங்களை எழுப்பினர்.

Vellore

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
வேலூர்.

பென்னாகரத்தில் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

டெல்லிக்கு எதிராக எழுந்தது தமிழகம்! விடாதே…!
தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டு!

மாணவர்களை  தாக்கி சதி செய்த மோடி அரசை கண்டித்தும், ஓபிஎஸ் பொம்மை அரசை கண்டித்தும் 23.1.2017 , திங்கள்கிழமை காலை 11 மணியளவில் பென்னாகரம் பேருந்துநிலையத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கினைப்பாளர் தோழர். முத்துக்குமார் தலைமையேற்று கண்டன உரையாற்றினார்.அமைதியாக போராடிய மாணவர்களை தாக்கி வன்முறையில் ஈடுப்பட்டது மோடி அரசு. மாணவர்களின் மண்டையை உடைத்தும், கடுமையாக தாக்கியது. மோடி அரசும்,ஓபிஎஸ் பொம்மை அரசும் தான் காரணம். குஜராத்தில் 2000 முஸ்லீம்களை கொன்று குவித்தது மோடி அரசு. காவிரியில் தண்ணீரை கொடுக்க மறுத்தது மோடி அரசு . “மாட்டு மூத்திரத்தை குடிப்பவன் மாட்டை அடக்க  முடியுமா?”  இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாகவும்,மோடி அரசை எதிர்த்து போராடினால் தான் நமக்கு வாழ்வு என்று பேசினார். மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் நின்று கவனித்தனர்.

Pennagaram 1

Pennagaram 2

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.

காஞ்சிபுரத்தில் பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் காஞ்சிபுரம் மாவட்டம் சார்பாக ஜல்லிக்கட்டு உரிமைக்காக மெரீனாவில் போராடிய  மாணவர்கள், இளைஞர்களை இன்று காலை 23.01.2017 அன்று போலீசு கொலை வெறிதாக்குதல் நடத்தியது. இதனை கண்டித்தும் போலீசின் அராஜகத்திற்கு முடிவுகட்டும் வகையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு , பு.மா.இ.மு தோழர்கள் கலந்துக்கொண்டனர் . இவ்வார்ப்பாட்டம் மாலை 5 மணியிலிருந்து 6.30 மணிவரை நடந்தது.
இடம்:காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் எதிரில்

Kanchi

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின்,
காஞ்சிபுரம் மாவட்டம்.

கும்மிடிப்பூண்டியில் தொழிலாளர்கள் பேரணி !

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் தொழிலாளர்கள் நூற்றுக் கணக்கில் திரண்டு நேற்று 23.01.17 மாலை பேரணி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Gumidipundi

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
திருவள்ளூர் மாவட்டம்.

தேன்கனிக் கோட்டை ஆர்ப்பாட்டம் !

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், நாட்றாபாளையம் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்ப்பாக ஜல்லிக்கட்டு தடையை நீக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் 20-1-2017 அன்று காலை 10 மணியளவில் நாட்றாபாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சரவணன், சுரேசு, ராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மற்றும் திரளான மக்கள் இறுதிவரை ஆர்ப்பாட்டத்திற்கு திரண்டு ஆதரவளித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக கிராமங்கள் தோறும் வீடுகளில் பிரச்சாரம் செய்து இளைஞர்களைத் திரட்டியுள்ளனர். அப்பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் திரளான அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். காடுகளுக்குள் (கழனி) உள்ள பட்டித் தொட்டிகளிலும் குக்கிராமங்களிலும் மக்கள் அதிகாரம் இளைஞர்களைத் திரட்டிப் போராடி வருகிறது. இதனை அடுத்து அஞ்செட்டியில் நடந்த அனைத்துக் கட்சியினர் கூட்டத்திலும் மக்கள் அதிகாரம் தோழர்கள் கலந்து கொண்டனர். திரளான மக்களிடம் பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.

Thenkani kottai 1

Thenkani kottai

தகவல் :
மக்கள் அதிகாரம்.
கிருஷ்ணகிரி மாவட்டம்.

ஓசூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் !

மோடியின் அதிகாரம் தமிழகத்தில் செல்லாது!
டெல்லியின் கொம்பைப் பிடித்து அடக்குவதுதான் ஜல்லிக்கட்டு!

என்ற தலைப்பில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக ஒசூர் ராம்நகரில் 20-10-2017 மாலை 5 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாகலூர் பகுதி அமைப்பாளர் தோழர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். இன்று தமிழகம் எழுந்து நிற்கிறது, மோடி அரசைப் பணிய வைக்கப் போராட்டக் கோளம் பூண்டுள்ளது. தமிழர்கள் எதை விளையாட வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் டெல்லியில் உள்ள உச்ச நீதிமன்றத்திற்கோ மோடி அரசுக்கோ இல்லை என்பதை தமிழகம் அறிவித்துக் கொண்டிருக்கிறது. எதை உண்பது, எதைக் கொண்டாடுவது, என்ன விளையாட்டு விளையாடுவது என்று தமிழர்களின் மொழி, பண்பாட்டின் மீது கைவைப்பதை தமிழகம் அனுமதிக்காது என்பதை உணர்த்தும் வகையில் பேசினார்.

தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில துணைத் தலைவர் தோழர்.பரசுராமன் மோடி அரசின் தமழகத்திற்கு எதிரான போக்குகளை அம்பலப்படுத்திப் பேசினார். கூடங்களும், கெயில் எரிவாயுக் குழாய், மீத்தேன், நியூட்ரினோ போன்ற அழிவுத் திட்டங்களைத் தமிழகத்தின் மீது திணிப்பதற்கும் ஜல்லிக் கட்டு தடைக்கும் எந்த வேறுபாடும் கிடையாது. அதேபோல, இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, நீட் தேர்வு திணிப்பு, சி.பி.எஸ்.இ. பாடங்கள் திணிப்பு என்று தமிழகத்தின் மீது மொழி மற்றும் கல்விரீதியாக ஒரு தாக்குதலை மோடி அரசு தொடுத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான போராட்டங்கள், இந்தத் திணிப்புகளுக்கு எதிரான போராட்டங்களாக கட்டாயம் வளரும்.

ஒட்டுமொத்தத்தில் பாஜக தமிழகத்திடம் ஓரவஞ்சனையுடந்தான் நடத்துக் கொள்கிறது. திராவிட – தமிழின உணர்வுக்கு எதிராக பார்ப்பன வெறுப்பைக் கக்கிக்கொண்டிருக்கிறது. இதனாலேயே காவிரியில் தமிழகத்தின் உரிமையை மறுக்கும் கர்நாடகாவிற்கும் முல்லைப் பெரியாறு, சிறுவாணி போன்ற வற்றில் தமிழகத்தின் நீர் உரிமையை மறுக்கும் கேரளாவிற்கும் துணை புரிகிறது. இந்த மோடி அரசுக்கு எதிரான இந்தப் போராட்டம் கட்டாயம் வெற்றி பெறும். சென்ற ஆண்டு பி.எஃப். சட்டத்திருத்தம் செய்த மோடி அரசை பெங்களுரூரு தொழிலாளர்கள் பணியவைத்தனர்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்த மோடி அரசை தமிழகம் பணியவைத்துள்ளது. அடுத்தடுத்து இந்த போராட்டங்கள் தொடரும் என்று கூறி சிறப்புரையாற்றினார். திரளான பொதுமக்களும் கடைவியாபாரிகளும் கூடிநின்று ஆதரித்தனர். ஜல்லிக்கட்டின் மீதான தடைவிதிக்க காரணமாக இருந்த பீட்டா அமைப்பு என்பது பார்ப்பன மற்றும் ஆர்.எஸ்.எஸ். அபிமானிகளால் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பலப்படுத்தி பேசினர்.

முழக்கம்

Notice

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
ஓசூர் – கிருஷ்ணகிரி மாவட்டம்.