privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅவசரச் செய்தி : திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டத்திற்கு தடை - கைது !

அவசரச் செய்தி : திருத்துறைப்பூண்டி பொதுக்கூட்டத்திற்கு தடை – கைது !

-

விவசாயிகளின் பிரச்சினைகளுக்காக இன்று (2017 பிப் 26) நடக்க இருந்த திருத்துறைப்பூண்டி “மக்கள் அதிகாரம்” பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு! ஜெயாவின் காட்டாட்சி தொடர்கிறது!!

“நெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி, என்ன செய்யப் போகிறோம்?” எனும் தலைப்பில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் திருத்துறைப்பூண்டியில் ஒரு பொதுக்கூட்டம் நடத்த இருந்தனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு விவசாயிகள் சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் உரையாற்ற இருந்தனர். இந்தக் கூட்டத்திற்காக மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் பல நாட்களாக அம்மாவட்டத்தில் கிராமம் கிராமமாக பிரச்சாம் செய்து வந்தனர்.

முதலில் பிப் 25, 2017 அன்று பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்ட போது போலீஸ் மறுத்தது. பிறகு அடுத்த நாள் பிப் 26 ஞாயிற்றுக் கிழமை நடத்திக் கொள்ளுங்கள் என்று அனுமதித்தாலும் இதை முறையாக எழுதிக் கொடுக்கவில்லை. வாய்வழியாக சொல்லிவிட்டு ஒன்றும் பிரச்சினை இல்லை என்று கூறிவிட்டார்கள். இதையடுத்து மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஏற்கனவே போட்ட பிரசுரம், சுவரொட்டிகளை நீக்கிவிட்டு புதிதாக அச்சடித்து பிரச்சாரம் செய்தனர்.

இந்நிலையில் இன்று பிப் 26 நடைபெற இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு என்று போலீசு திடீரென்று தெனாவெட்டாக கூறிவிட்டது. மேலும் மக்கள் அதிகாரம் தோழர் முரளியை திருவாரூரிலும், தோழர் செல்வத்தை திருத்துறைப்பூண்டியிலும் நேற்று நள்ளிரவு கைது செய்து காவல் நிலையம் கொண்டு சென்று வைத்திருக்கின்றனர்.

உழைக்கும் மக்களிடம் பிரச்சாரம் செய்து, அவர்களின் உதவியோடு விவசாயிகளின் பிரச்சனைகளுக்காக நடைபெற இருந்த இந்தக் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டிய அவசியம் என்ன? விவசாயி செத்தால் சாகட்டும், நீ பேசாதே என்ற திமிரா, இல்லை அரசுகளின் வண்டவாளம் மக்களிடம் பரவும் என்ற பயமா?

ஆதி யோகி என்ற காட்டு வளத்தை அழித்து உருவாக்கப்பட்ட பொம்மை சிலைக்கு ஆயிரக்கணக்கில் போலீசு பாதுகாப்பு, அரசுப் பணம் செலவழிப்பு, மோடி, முதல்வர் வருகை, தொலைக்காட்சிகளில் நேரலை என்று ஆணவத்துடன் செயல்படுபவர்கள், தமிழகத்திற்கே சோறு போடும் விவசாயிகளை எப்படிக் கிள்ளுக்கீரைகளாக நினைக்கிறார்கள் என்பதற்கு இந்த அனுமதி மறுப்பே ஒரு சான்று!

தமிழகத்தில் ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகவும், இங்கே மக்கள் போராட்டங்கள் தங்கு தடையின்றி நடப்பதாகவும் ஒரு மாயை இருக்கிறது. அது உண்மை இல்லை. அதனால்தான் ஜல்லிக்கட்டு போராட்டம் போலீசு வன்முறையால் முடித்து வைக்கப்பட்டது. என்ஜிவோ தன்னார்வக் குழுக்களுக்கும், பெயர்ப்பலகை அமைப்புக்களுக்கும், அரசுகளைக் கேள்வி கேட்காதவர்களுக்கும்தான் இங்கே பிரச்சாரம் செய்ய அனுமதி!

டாஸ்மாக் போராட்டத்தின் போதே கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்டுதான் மக்கள் அதிகாரம் அமைப்பில் மக்களும் மாணவர்களும் போராடினர். இன்று விவசாயிகளின் பிரச்சினைகளுக்கும் அவர்கள் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இத்தகைய அரசியல் விழிப்புணர்வை மக்கள் பெறக்கூடாது என்று மோடி அரசும், அடிமையான சசிகலாவின் பினாமி எடப்பாடி அரசும் ஒருசேர நினைக்கின்றன.

இருப்பினும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சாமல் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராடுவதோடு, மக்களையும் அணிதிரட்டுவது உறுதி. அடக்குமுறை வென்றதாக வரலாறு இல்லை.

விவசாயிகளின் விடுதலைக்கு போராடும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மீதான அடக்குமுறையை கண்டிப்போம்! விவசாயிகளுக்கு தோள் கொடுப்போம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க