privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅரசு அலுவலகங்களில், பாட நூல்களில் குற்றவாளி ஜெயா பெயர் நீக்கம்

அரசு அலுவலகங்களில், பாட நூல்களில் குற்றவாளி ஜெயா பெயர் நீக்கம்

-

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் அரசு வேளாண்மை அலுவலகங்களில் ஜெயா படத்திற்கு கரி பூசி தடை!

தருமபுரி மாவட்ட அரசு அலுவலகங்களில் குற்றவாளி ஜெயா படத்திற்கு கரி பூசும் போராட்டம்!

காக்கையை குயில் என்றும், பித்தளையை தங்கம் என்றும், கொள்ளைக்காரியை புரட்சி தலைவி என்றும் சொன்னால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? அல்லது மறுத்தாவது பேசுவீர்களா? இல்லை கண்டுக்கொள்ளாமல் சென்று விடுவீர்களா? ஜெயா சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு, ஜெயாவின் படத்தை பிடித்துக் கொண்டே தர்மம் வாழ்வுதனை சூது கவ்வும் தர்மமே இறுதியில் வெல்லும் என்று இனிப்புகளை வழங்கி பட்டாசு வெடிக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.

ஜெயா வழியில் ஆட்சி தொடரும் என்று கூறுகின்றனர் தற்போதைய அதிமுக ஆட்சியளார்கள். இது இந்த அளவில் மட்டும் நிற்கவில்லை. திருடர்களே ஆட்சி செய்ய முடியும், திருடர்களே அதிகாரத்திற்கு வரமுடியும், திருடர்களே உத்தமர்களாகவும், தேசப்பக்தர்களாகவும் காட்டிக்கொள்ளமுடியும். இந்த ஆபத்தை உணர்ந்து மக்களுக்கு சுரணையூட்டுவது நமது கடமை.

வெட்கமே இல்லாமல் இன்று மக்களின் வரி பணத்தில் ஜெயாவிற்கு பிறந்த நாள் விழா எடுக்கும் நிலையில், நாங்கள் அம்மாவின் பொன்னான ஆட்சியை மீண்டும் கொண்டு வருவோம் என பேசி குற்றாவளிகளையே யோக்கியர்களாக காட்டுகின்றனர் அதிமுக-வினர். இதனை எந்த சட்டமும், நீதி மன்றமும் கண்டிக்க போவதுமில்லை. எந்த எதிர்க்கட்சிகளும் இதை தீவிரமாக எதிர்த்து போராடப் போவதுமில்லை. ஜெயாவின் படத்தை நாங்கள் சட்டமன்றத்தில் வைக்கபோவது உறுதி என்று சவால்விட்டு பேசுகிறார்கள் ஜெயாவின் அடிவருடிகள்.

பல நாடுகளில் சொத்துகளை குவித்து வைத்துள்ள அருமை சின்னம்மா இந்த நீதிமன்றத்தை விலைக்கு வாங்க எத்தனை நாட்கள் பிடிக்கும்

தமிழகத்தின் நெற்களஞ்சியம் டெல்டாவில் ஹட்ரோ கார்பன் எடுப்பதாக கூறி தமிழகத்தையே பாலைவனமாக்க துடிக்கும் பா.ஜ.க., மீத்தேன், ஷெல் கேஸ் என பல பெயர்களில் அழிக்க காத்திருக்கிறார்கள். தமிழகமோ, சசி குடும்பமா? பன்னீரா? தீபாவா? என ஊடகங்கள் நம்மை விவாதிக்க பேச வைக்கின்றனர்.

கொள்ளைக் கூட்டத்தின் தலைவியான ஜெயாவுடன்  இருந்து பல நாடுகளில் சொத்துகளை குவித்து வைத்துள்ள சசிகலா இந்த நீதிமன்றத்தை விலைக்கு வாங்க எத்தனை நாட்கள் பிடிக்கும்? இந்த திருட்டு கூட்டம் நாளை உத்தமர்  கூட்டமாக  தன்னைக் காட்டிக் கொள்ளும். இன்று ஜெயாவிற்கு மெரினாவில் கோயில் கட்டுவோம் என்று தமிழ்நாட்டு மக்களை இளித்தவாயர்களாக்கும் இவர்கள் நாளை சின்னாம்மாவிற்கு மெரினாவில் சிலையும் வைப்பார்கள். நாம் ஏமாளிகளாக, சுரணைற்றவர்களாக இருக்கும் வரைக்கும் இந்தக் கூத்துக்கள் ஆளத்தகுதியிழந்த  அரசு கட்டமைப்பில் நீடிக்கும்.

இந்த இழி நிலைக்கு எதிராக நாம் சுயமரியாதையுடன் போராட முன்வரவேண்டும்.

குற்றவாளிகள் நம்மை ஆள்வது நமக்கு அவமானம், கொள்ளையர்களை எதிர்த்து போராடாமல் இருப்பதும் குற்ற செயலுக்கு ஒப்பானது.

வாருங்கள் மெரினா நமக்கு வழி காட்டியுள்ளது.

கீழே அரசு அலுவலகங்களில் ஜெயா படத்திற்கு கரி பூசியும், குற்றவாளி என்று அடையாளம் காட்டியும் உள்ளது. படங்களை பெரிதாக காண அழுத்தவும்.

தோழர் கோபிநாத் வட்டார செயலர்,
மக்கள் அதிகாரம், பென்னாகரம்.
9943312467

***

நம் கையில் இருந்த திருவள்ளுவர் படத்தை வாங்கி அவர்களே தங்களுடைய பைகளிலும் புத்தகங்களிலும் இருந்த களவானி ஜெயாவின் படத்தின் மீது ஒட்டிக் கொண்டன

ச்சநீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை பாடநூல்களில் இருந்து அகற்றும் போராட்டத்தை திட்டமிட்டபடி 2017 பிப் 23-ம் தேதி வியாழன் அன்று காலை மதுரை ஒத்தக்கடை அரசினர் மேல்நிலைப்பள்ளி வாயிலில் மக்கள் அதிகாரம் சார்பாக‌ நடந்தது. அதிமுகவின் கட்சி பிரமுகர்கள் நாட்டை கொள்ளையடிப்பதற்காக பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்து கொடுத்த ஜெயாவை அவர்கள் அழைப்பதை போல “அம்மா” என்கின்ற வார்த்தைக்கு கடுகளவில் கூட மக்கள் மரியாதை செய்வதில்லை என்பதை பளிச்சென்று மக்களும் மாணவர்களும் நமக்கு புரிய வைத்தனர்.

நம் கையில் இருந்த திருவள்ளுவர் படத்தை வாங்கி அவர்களே தங்களுடைய பைகளிலும் புத்தகங்களிலும் இருந்த களவாணி ஜெயாவின் படத்தின் மீது ஒட்டிக் கொண்டனர். அவர்களுடையதை மட்டுமின்றி பள்ளிக்கு சென்று கொண்டிருந்த மற்ற மாணவர்களையும் அழைத்து திருவள்ளுவர் படத்தை ஒட்டி விட்டனர். மேலும் பல பெற்றோர்கள் என்னவென்று கேட்டறிந்து பின்னர் அவர்களாகவே வாங்கி தங்களுடைய குழந்தைகளின் பைகளிலும் பாட நூல்களிலும் ஒட்டிவிட்டனர். ஒரு பெண் குழந்தையின் அம்மாவோ நாம் கூறியதை கேட்டுவிட்டு, ஏற்கனவே வகுப்பறைக்குள் சென்று விட்ட தன் மகளை மீண்டும் உள் சென்று அழைத்து வந்து திருவள்ளுவர் படத்தை ஒட்டிவிட்டார். இதில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த பெற்றோர்கள் கூட மகிழ்ச்சியாக வாங்கி ஒட்டிக்கொண்டனர்.

ஒரு வருடத்திற்கு முன்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் நிவாரணத்தில் கூட அம்மா ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும் என்று திரிந்து கொண்டிருந்த அடிமைகளின் முகத்தில் காறி உமிழ்வது போல் இருந்தது இந்த நிகழ்வு. மேலும் இதை பருண்மையாக மக்கள் மத்தியில் பிரச்சாரமாக கொண்டு சென்று, ஊரறிந்த குற்றவாளி ஜெயாவின் படங்கள் நாம் தேர்ந்தெடுத்த அரசு அலுவலகம், பாட நூல்களில் இருப்பதும், நாம் தேர்ந்தெடுத்த மந்திரிகள் அவரின் ஆசிப்படி நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என்று பகிரங்கமாக கூறிகொண்டு ஒரு களவாணியின் படத்தை சட்டைப் பையில் ஊர் பார்க்க வைத்துக் கொண்டிருப்பது நமக்குத்தான் அவமானம் என்ற கருத்தை பரப்பு வேண்டும்.

மக்கள் அதிகாரம்
மதுரை

  1. நெடுவாசல் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடும் மக்களை பார்த்து பிஜேபி கட்சியின் தமிழ் நாட்டு தலைவர்கள் இல.கணேசன் “ஹைட்ரோ கார்பன் போன்ற மக்கள் நலத்திட்டங்களுக்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தால் அத்திட்டத்தை என்ன ஆகாயத்திலா செயல்படுத்த முடியும். நாடு நலம் பெறுவதற்காக ஒரு மாநிலம் தியாகம் செய்து தான் ஆக வேண்டும்” என்று எச்சரித்திருக்கிறார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனோ, “நெடுவாசல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் எல்லாம் விஞ்ஞானிகளா?” என்று நிதானம் இழந்து பேசியிருக்கிறார். இவர்கள் எல்லாம் கூறாமல் கூறவரும் செய்தி என்னவென்றால் பெரு நிறுவனங்களிடம் இந்தியாவை அடமானம் வைத்து விட்டோம்…வேறு வழி இல்லை இந்தியாவின் இயற்க்கை வளங்கள் கொள்ளையடிக்கத்தான் படும்…. பெரு நிறுவனங்களின் வர்த்தக நலனுக்காக மக்கள் தங்கள் வாழவாதாரங்களை விட்டுக்கொடுத்து தான் செல்லவேண்டும் அது தான் தேச பக்தி என்ற கருத்ததை இவர்கள் வலியுறுத்துகின்றார்கள்…. நாமும் நமது உண்மையான தேச பக்தியை நிருபிக்க இந்தியாவின் இயற்கை வளங்களை கொள்ளை அடிக்க விழையும் இந்த மோடியின் அரசின் திட்டங்களை சிதறடிப்போம்….

    • முன்பு மயிலாடுதுறை பகுதிக்கு தான் முதலில் அகலரயில் பாதை கொண்டு வர பார்த்தார்கள் வழக்கம் போல் போராட்டம் நடத்தி வெற்றிகரமாக தடுத்து விட்டார்கள், பிறகு தமிழகத்தின் பிற பகுதிகள் எல்லாம் அகல ரயில் பாதைக்கு மாறிய பிறகும் மயிலாடுதுறை பகுதி மட்டும் பழைய மீட்டர் கேஜில் ரயில்கள் ஓடியது. பிறகு அகல ரயில் பாதையில் இருக்கும் வசதிகளை புரிந்து கொண்டு எங்களுக்கும் அகல ரயில் பாதை வேண்டும் என்று போராடினார்கள், பல வருடங்கள் கழித்து தான் மயிலாடுதுறைக்கு அகல ரயில் பாதை வந்தது.

      இப்போதும் தமிழக மக்களுக்கு எந்த நல்லதும் நடக்க கூடாது என்பதற்காக மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்கிறார்கள், இவர்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள்.

      • விழுப்புரத்தில் இருந்து கடலூர் ,சிதம்பரம், மயிலாடுதுறை வழியாக திருச்சி செல்லும் தொடரி பாதை அகலப்பாதையாக விரைவில் ஆக்கப்படாமைக்கு காரணம் மக்கள் அல்ல. அந்த திட்டத்துக்கு மத்திய அரசு ஆண்டு தோறும் தேவையான அளவு நிதி ஒதுகாததே மிக முக்கிய காரணம்.கிட்ட தட்ட பத்தாண்டுகள்

  2. ” நலத்திட்டங்கள் தேவை என்று கேட்கும் மக்கள் அதற்கான நிலத்தைத் தர மறுத்தால் வானத்திலா திட்டத்தை செயல்படுத்த முடியும்?” புதுச் சேரியில் இல.கணேசன் திருவாய் மலர்ந்தருளியது.இல என்றால் இல்லாத என்று பொருள்.இவருக்கு என்ன இல்லை என்று தெரியாமல் இருந்தால் இப்போது தெரிந்துவிட்டது மண்டையில் என்று.மீத்தேனை பெயர் மாற்றி ஹைடிரோகார்பன் என்று ஏய்க்கும் குள்ள நரிக்கூட்டமே!மக்கள் என்ன கேட்டார்கள் நீ என்ன கொண்டுவருகிறாய்?காவிரியில் தண்ணீர் கேட்டார்கள்.மேலாண்மை வாரியம் கேட்டார்கள்.விவசாயத்தை வாழவைக்கச் சொல்லி கெஞ்சினார்கள்.கொத்துக் கொத்தாகச் செத்து மடிந்தார்கள்.மடிந்துகொண்டிருக்கிறார்கள். நீங்கள் கயவன் ஜக்கியுடன் ஆனந்த அலையில் நடனமாடிக்கொண்டிருக்கிறீர்கள்.காடுவெட்டி குருவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த மக்களின் தலையில் மண்ணை அள்ளிப் போட்டீர்கள்.குடிக்கத் தண்ணீர் கேட்டால் யோகா உலகம் முழுவதும் பரவுகிறதாம்.விவசாயி பட்டினி கிடந்தால் அதற்கு லங்கண யோகா என்று பெயர்வைக்கத் தயங்காத பாவிகள் நீங்கள்.அதையும் உங்கள் பரிவாரங்கள் உலகம் முழுவதும் பரப்பி மோடிக்குப் புகழ் சேர்ப்பார்கள்.உங்களிடம் கோயபல்ஸ் ,ஹிட்லர் வகையறாக்கள் மீண்டும் மீண்டும் தோல்வி அடைகிறார்கள்.ஹைடிரோ கார்பன் எரிவாயுவை வைத்து விவசாயி என்ன செய்வான்?யாருக்காக இந்த எரிவாயு? ஏற்கனவே சமையல் எரி வாயுவின் விலையைப் படிப்படியாக உயர்த்தியதோடு நில்லாமல் இப்போது வினியோகத்தையும் அதிகாரவர்க்கக் கொள்ளையர்களிடம் கொடுத்து நடுத்தர மக்களைத்தவிக்கவிட்டுக்கொண்டிருக்கிறாய்.ரேசன்கடையை மூடி மக்களைக் கொன்று குழியில் இறக்கும் திட்டம் உன் கைவசம் இருக்கிறது.எது நலத்திட்டம்? யாருக்கு நலத்திட்டம்?தமிழ் நாட்டை பலி கொடுக்க வேண்டும் என்று நீங்கள்(சங்கப் பரிவார சதிக் கும்பல்) நீண்ட காலத் திட்டத்தில் இருக்கிறீர்கள் என்று மக்களுக்குத் தெரிந்துவிட்டது.உன்னை நம்பத் தயாராக இல்லை. மீனவர் பிரச்சினை,ஜல்லிக்கட்டு பிரச்சினை,இப்போது நீட் தேர்வு (வேண்டுமாம்- வடமொழியிசை சொல்கிறார்)எல்லாவற்றிலும் உங்கள் கபட நாடகத்தை மக்கள் நன்றாகவே புரிந்து கொண்டார்கள்.புதுக்கோட்டை- நெடுவாசல் உஙளுக்கு சொர்க்கவாசலாக அமையட்டும்.உங்களுக்கு ஹைடிரோ கார்பனோபிஷேகம் செய்யாமல் மக்கள் ஓய மாட்டர்கள்.மணிகண்டன்கள் பம்பையில் கரைக்கப்படுவார்கள் உஷார்!!

  3. மணிகண்டன்…

    ரயில்களே இந்த நாட்டிற்கு தேவை இல்லை என்று எப்போதோ காந்திஜி கூறி விட்டார். ரயில்வேக்களால் தான் இந்நாட்டில் நோய் நொடியும், உணவு பஞ்சமும் ஏற்படுகிறது என்பது காந்தியின் நம்பிக்கை. இதை ஏன் சொல்கிறேன் என்றால் நீங்கள் காந்தியை பின்பற்றுபவர் ஆயிற்றே அதனால் தான். ஆக, ரயில்களே வேண்டாம் என்று காந்தியார் மறுக்கும் போது, விவசாயத்தையே நாசமாக்கி, மக்களை உணவிற்கு கையேந்த வைத்து பஞ்ச பராரிகளாக்கும் இந்த ஹைட்றோ கார்பன் திட்டம் தேவை தானா. ஹைட்றோ கார்பன், ஒரே நேரத்தில் 104 செயற்கை கோள்களை சுமந்து கொண்டு விண்ணில் பாயும் ராக்கெட் எல்லாம் நமக்கு தேவை இல்லாத ஒன்று. இது போன்ற போலி அறிவியல்களால் நாட்டிற்க்கோ அல்லது மக்களுக்கோ என்ன நன்மை ஏற்பட போகிறது. உண்மையில் இந்திய தேசம் நல்ல நிலையை அடைய வேண்டுமானால், இது போன்ற போலி அறிவியலை குப்பையென தூக்கு எறிந்து, அது தன்னுடைய பழைய பாதைக்கே மீண்டும் செல்வதுதான் நல்லது.

    நமக்கு மண் ரோடும், மாட்டு வண்டியும் விவசாயமுமே போதும். தொழில் நுட்பங்கள் அவ்வளவாக ஒன்றும் வேண்டாம். உங்களின் பாணியில் கூற வேண்டுமானால் “பாவம் பாரத மாதாவை அவள் பாணியிலேயே வாழ விடுங்கள்!!!!!!!!!!.

    • ஏம்மா மண்ரோடு மாட்டு வண்டியோடு நிறுத்திட்டிங்க ஆதிவாசிகள் மாதிரி இலைதழை போதும் எதுக்கு ஜீன்ஸ் பந்த் ட்ஷிர்ட் என்று கேட்க வேண்டியது தானே மண்ரோடு மாட்டு வண்டி விவசாயம் மூலம் 130 கோடி மக்களுக்கு சோறு போட முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா ? வினவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் போது எதற்கு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் என்று கேட்டார்கள் இந்த அதிபுத்திசாலிகள், பொங்கல் திருவிழாவை நம்பி எத்தனை கரும்பு விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது பற்றி இந்த அதிபுத்திசாலிகளுக்கு தெரியுமா… பொங்கல் பண்டிகை கொண்டாடவில்லை என்றால் அந்த விவசாயிகள் எல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதாவுது இவர்களுக்கு தெரியும்மா ?

      காரைக்கால் நாகப்பட்டினம் அருகில் உள்ள இடங்களில் எல்லாம் பெட்ரோல் மற்றும் காஸ் எடுக்கிறார்கள் அதனால் அந்த சுற்றுவட்டாரம் முழுவதும் விவசாயம் செய்யாமல் இருக்கிறார்கள் ? அல்லது விவசாயம் தான் அழிந்து விட்டதா ?

      தமிழக மக்களுக்கு பயன் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி கவலையே படாமல் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கவே ஒரு கூட்டம் தமிழ் நாட்டில் செயல்பட்டு கொண்டு இருக்கிறது, இதனால் இழப்பு தமிழக மக்களுக்கு தான். தமிழக மக்கள் இந்த மாதிரியான கூட்டங்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

  4. மணிகண்டன் …..

    //மண்ரோடு மாட்டு வண்டி விவசாயம் மூலம் 130 கோடி மக்களுக்கு சோறு போட முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா ? ……..//

    போட முடியும்.. 130 கோடிக்கு மட்டுமல்ல 300 கோடி மக்கள் இருந்தாலும் தாராளமாக போடலாம். பிரச்சனை இங்கு உற்பத்தி முறையில் அல்ல. பொருளாதாரத்தில் தான் இருக்கிறது, அதனை சரி செய்தாலே போதும். உணவு ஏற்றுமதியை முற்றிலுமாக தடை செய்யுங்கள். குறைந்த பட்சம், உள்நாட்டு தேவைக்கு போக மிச்சம் இருப்பதை மட்டுமாவது ஏற்றுமதி செய்யுங்கள் போதும். அதை விட்டு தேவை இல்லாத தொழில் நுட்பங்களை எல்லாம் புகுத்துவது கடைசியில் பேராபத்தில் போய் தான் முடியும். தொழில்நுட்பம் என்பதே மனிதனின் பேராசையின் விளைவினால் ஏற்பட்ட ஒரு சீர்கேடு. அது பெரிய அறிவோ, மனித குலத்திற்கு கிடைத்த மாபெரும் வரப்ரசாதமோ எல்லாம் கிடையாது.

    //ஏம்மா மண்ரோடு மாட்டு வண்டியோடு நிறுத்திட்டிங்க ஆதிவாசிகள் மாதிரி இலைதழை போதும் எதுக்கு ஜீன்ஸ் பந்த் ட்ஷிர்ட் என்று கேட்க வேண்டியது தானே//

    பார்த்தீர்களா!!!!! பாரத மாதாவை மீண்டும் கேவலபடுத்த ஆரம்பித்து விட்டீர்கள். ஜீன்ஸ் பேண்ட்டும், t-ஷர்ட்டும் வருவதற்கு முன்னாள் நம் பாரத மக்கள் இலை தழைகளை கட்டிக்கொண்டு நிர்வாணமாகவா அலைந்தார்கள். நமக்கென்று ஒரு சுதேசியம், பாரம்பரியம் இருக்கிறது. அதை மீற கூடாது.

  5. கார்ப்பரேட் காரர்கள் இயற்கையைக் கொள்ளையடிக்கும் வேகத்தைப் பார்த்தால் எல்லா நாடுகளுமே போண்டியாகி கடைசியில் இலைதழை (அதுகூட மழையில்லாமல் கிடைக்காது) கட்டிக்கொள்ளும் நிலை வரும்போல்தான் தெரிகிறது. எத்தனைநாடுகள் பாலைவனமாகி மக்கள் எலும்புக்கூடாக வாழ்ந்து கொண்டிருப்பதை நம் தோழர்கள் மணிகண்டன் ரெபெக்கா மேரி போன்றவர்கள் பார்ப்பதே இல்லை போல் தெரிகிறது. பாவம். எவனாவது மோடி மாதிரி அரசியல்வாதிகள் கூஜா தூக்கட்டும் அவர்களுக்கு. ஒரு நூறு தலைமுறைக்கு (பிறநாட்டு வங்கிகளில்) சேர்த்தாவது வைக்கலாம். பாவம்பா, நீங்களெல்லாம் எதுக்கு கூஜா தூக்கறீங்கன்னே எங்களுக்குப் புரியவில்லையே,

    • ஐயா பூர்ணசந்திரன் அவர்களே……..

      மொழிபெயர்ப்பு செய்வதையும் தாண்டி, கொஞ்சமேனும் அறிவை பயன்படுத்த வேண்டும். நான் எங்கே, எந்த இடத்தில் மோடிக்கு கூஜா தூக்கினேன் என்று தெளிவு படுத்த முடியுமா.

    • பின்னுட்டத்தை முழுமையாக படித்துவிட்டு பின்பு ஆய்வு செய்து பதில் அளிக்கவும்… தேவையின்றி பிறரை வசைபாடவேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுகொள்கின்றேன்… பாசிச கோமாளியை யாருமே முழுமையாக ஆதரிக்கமாட்டார்கள்… ஏன் மணிகண்டன் கூட முழுமையாக ஆதரிக்க மாட்டார்…..

      இதற்கு முன்பு கூட பெரியசாமியின் பின்னுட்டத்தை கண்களை மூடிக்கொண்டு ஆதரித்தீர்கள் என்பதனை நினைவு படுத்த விரும்புகிறேன்.

Leave a Reply to நிறைமதி பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க