privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்போலீசுதிருத்துறைப்பூண்டி போலீசின் காலில் மிதிபடும் ஜனநாயகம்

திருத்துறைப்பூண்டி போலீசின் காலில் மிதிபடும் ஜனநாயகம்

-

னநாயக நாடு ஒன்றில் விவசாயிகளின் தற்கொலை குறித்து ஒரு பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்கிறீர்கள். அந்நாட்டு ஜனநாயகத்தை காக்கும் பொறுப்புள்ள போலீசு அந்த அனுமதியை ஆய்வு செய்து, விவசாயிகளின் தற்கொலை குறித்து பேசுவது வன்முறைக்கு வழிவகுக்கும், சீருடையுடன் கொடியும் தடியும் முதலான ஆயுதங்களை வைத்துள்ளீர்கள், ஏற்கனவே விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் அளித்து விட்டதால் நீங்கள் கூட்டம் நடத்துவது தேவையற்றது என்று பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுக்கிறது. இது கற்பனை இல்லை. திருத்துறைப்பூண்டியில் மக்கள் அதிகாரம் நடத்த இருந்த கூட்டத்திற்கு அனுமதி மறுத்த போலீசு இப்படித்தான் எழுதிக் கொடுத்திருக்கிறது. இதுதான் இந்தியா – தமிழகத்தில் நிலவும் அதி உயர் ஜனநாயகத் தரம். செத்துப் போன விவசாயிகள் குறித்து நீங்கள் கூட்டம் நடத்த தேவையில்லை என்று அலட்சியமாகவும் சாதரணமாகவும்  கூறும் இந்த ஜனநாயகத்தின் பெயர் சர்வாதிகாரமா காட்டாட்சியா போலீஸ் ராஜ்ஜியமா? கீழே போலீசு எழுதிக் கொடுத்திருக்கும் ஆணவ ஆவணத்தை படியுங்கள்!

– வினவு

திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளரின் செயல்முறை ஆணை

முன்னிலை :
திரு.M.கண்ணதாசன்
காவல் துணைக் கண்காணிப்பாளர்,
திருத்துறைப்பூண்டி உட்கோட்டம்,
திருவாரூர் மாவட்டம்.

ந.க.எண்: ……/து.கா.க/திரு.பூண்டி/2017
நாள்:   .02.2017

பொருள்:- காவல் – திருத்துறைப்பூண்டி உட்கோட்டம் – திருத்துறைப்பூண்டி காவல் சரகம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்துநிலையம் அருகில் விளக்க பொதுக்கூட்டம் நடத்தக்கோரி மனு செய்தது  – காவல் துறை அனுமதி மறுப்பது தொடர்பாக

பார்வை:- திரு முரளி, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம் அமைப்பு, அம்மையப்பன், திருவாரூர் என்பவரின் மனு…

தமிழக விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கும், இறந்த விவசாயிகளுக்கும் நிவாரணம் கோருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் திருத்துறைப்பூண்டி காவல் சரகம், திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் எதிர்வரும் 26.02.17 அன்று மாலை 17.00 மணியளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் திரு.காளியப்பன் அவர்கள் தலைமையில் விளக்க பொதுக்கூட்டம் நடத்துவதாக சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்கள் அச்சடித்து தாங்கள் அமைப்பு வெளியிட்ட தகவலின் பேரிலும், மாவட்ட செயலாளராகிய தாங்கள் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் அணுகி பொதுக்கூட்டம் நடத்த கோரியிருந்த மனுவின் பேரிலும், பரிசீலனைக்கு பிறகு தங்களுக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள விபரங்கள் அறிவிக்கப்பட்டு, தாங்கள் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது

1) தாங்கள் வலியுறுத்தியுள்ள விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கான நிவாரணம் குறித்து ஏற்கனவே தமிழக அரசு கடந்த வாரம் நிவாரணம் அறிவிப்பு செய்துள்ளது. மேற்படி கோரிக்கைகளுக்காக தங்களது அமைப்பு நடத்தும், விளக்க பொதுக்கூட்டம் தேவையற்ற ஒன்றாகும். இத்தகைய சூழ்நிலையில் தாங்கள் நடத்தும் பொதுக்கூட்டம் பொதுமக்கள் மத்தியில் வன்முறை போராட்டத்தினை தூண்டும் விதமாகவும், பொதுக்கட்டம் குறித்து வெளியிட்டு வரும் அறிக்கைகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வன்முறையை தூண்டும் விதமாகவும் உள்ளதால் இதனால் ஏதேனும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

2) மேலும் இதே போன்று விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு நிவாரணம் கோரி கடந்த 11.01.17 அன்று திருவாரூர் நகர காவல் சரகம், திருவாருர் புதிய இரயில் நிலையம் அருகில் தொடர் முழக்க ஆர்பாட்டம் நடத்த தாங்கள் திருவாருர் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரியிருந்த மனுவின் பேரில் தங்களுக்கு நிபந்தனையுடன் செயல்முறை ஆணை வழங்கிய நிலையில் தாங்கள் நடத்திய தொடர்முழக்க ஆர்பாட்டத்தில் நிபந்தனைகளை மீறி உரை நிகழ்த்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் விதமாக செயல்பட்டதாகவும், மேலும் போராட்டத்தின் போது தங்களது அமைப்பினர் சீருடை அணிந்து பெரிய அளவில் தடி மற்றும் கம்பு போன்ற ஆயுதங்களை பயன்படுத்தியபோது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள் அதனை அப்புறப்படுத்தமாறு அறிவுறுத்தியும் மீறி அத்தகைய ஆயுதங்களை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளீர். இதுகுறித்து திருவாரூர் நகர காவல் நிலைய குற்ற எண். 08/17 u/s. 143, 188, 504, IPC r/w 109 IPC-ன் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருவது குறிப்பிடதக்கது

3) மேலும் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள இடமானது மிகவும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் பகுதியாகும். தங்களது பொதுக்கூட்டத்திற்கு தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கரூர் போன்ற மாவட்டங்களிலிருந்து அமைப்பினர் வாகனங்களில் வரும் சமயத்தில் திருத்துறைப்பூண்டி பகுதியில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது.

மேற்கண்ட காரணங்களால் தாங்கள் கோரிய விளக்க பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்படுகின்றது.

இச்செயல்முறை ஆணையினை பெற்றுகொண்டமைக்கு ஏற்பளிக்கவும்.

காவல் துணை கண்காணிப்பாளர்
திருத்துறைப்பூண்டி உட்கோட்டம்.

 

பெறுநர்:
திரு. முரளி, மாவட்ட செயலாளர், மக்கள் அதிகாரம் அமைப்பு,
அம்மையப்பன், திருவாருர்.

நகல்:
1. காவல் கண்காணிப்பாளர், திருவாரூர் மாவட்டம், திருவாரூர்… மேலான பார்வைக்காக.
2. காவல் ஆய்வாளர், திருத்துறைப்பூண்டி காவல் நிலையம்.

காவல் ஆய்வாளர், திருத்துறைப்பூண்டி (இந்த செயல்முறை ஆணையினை மனுதாரருக்கு சார்வு செய்து ஏற்பளிப்பு நகலை உட்கோட்ட அலுவலகம் அனுப்பு வைக்கவும்)

***

மக்கள் அதிகாரம் கண்டன சுவரொட்டி
அரசின் நிவாரணம் வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் கண் துடைப்பு நடவடிக்கையே, வேதாரண்யத்தில் மேலும் ஒரு விவசாயி தற்கொலை – மக்கள் அதிகாரம் கண்டன சுவரொட்டி

 

மக்கள் அதிகாரம்
வேதாரண்யம்

  1. எலிகள் அம்மணமாக வரத் தொடங்கிவிட்டன.மக்களே! நாட்டியம் பார்க்கத் தயாராகுங்கள்!ஜனனாயகத்தைக் காக்கப் பிறந்துள்ள காவலர்கள்.அரசு நிவாரணம் அறிவித்துவிட்டதாம்.அது போதுமாம்.யாரும் எதுவும் சொல்லவேண்டாமாம்.வாயைப் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்தாலே போதுமாம்!இனி போலீசு நியாயம்தான்.

  2. பய புள்ளைக்கு சம்பளம் அமெரிக்க்காரன் தர்றான் போல
    தமிழ் நாடு போலீசு ஒVரா சீன் போடுது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க