privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்போராடும் உலகம்நெடுவாசலுக்கு ஆதரவாக கோவை பாரதியார் பல்கலை மாணவர் போராட்டம்

நெடுவாசலுக்கு ஆதரவாக கோவை பாரதியார் பல்கலை மாணவர் போராட்டம்

-

கோவையில் மருதமலை அருகில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் 06.03.2017 அன்று மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும், நெடுவாசல் மக்களின் போராட்டத்தை ஆதரித்தும் பல்கலை கழக மாணவர்கள் போராட்டம் துவங்கினர். அனுமதி வாங்கி போராட்டம் செய்யும் மாணவர்கள் அன்று போராட அனுமதி தரவில்லை என்றாலும் போராடுவோம் என உறுதியாள நின்றனர். போராட்டத்தை ஆதரித்து சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களும் சென்றனர்.

 இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க
இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க

மாணவர்கள் விண் அதிர முழக்கமிட்டு கொண்டிருக்கையில் பலத்த மழை பெய்ய தொடங்கியது. அந்த மழையை சற்றும் பொருட்படுத்தாது மாணவர்கள் தொடந்து போராட்டத்தை நடத்தினர்.

உடன் ஓடி வந்த காவல் துறை போராட்டத்தை கலைக்கும் படியும், போராட்டம் நடத்த கூடாது எனவும் மிரட்டினர். கோரிக்கை நிறைவேற வில்லை என்றால் திரும்பவும் நீங்கள் ஒன்று கூடி போராடலாம் என்ற காவல் துறையின் நயவஞ்சக பேச்சை மாணவர்கள் நம்பவில்லை.

சட்ட கல்லூரி மாணவர்கள் உள்ளே இருப்பதை தெரிந்து கொண்ட காவல்துறை மாணவர்களை கலைக்க பல்கலை கழக பேராசிரியர்களை அழைத்து பேசினர். பேராசிரியர்கள் மாணவர்களிடம் வந்து இங்கு மற்ற கல்லூரி மாணவர்களை வெளியேறுமாறு கூறினர்.

அதன் பின் காவல்துறை பேராசிரியர்களையும், நிர்வாகத்தையும் அழைத்து அவர்களின் மூலமாகவும் ” இன்டர்னல் மார்க்ல கை வச்சுருவேன் ஒழுங்கா கலைஞ்சு போங்க ” என கூறியும் மிரட்டியுள்ளனர். மாணவர்கள் போராட்டத்தை மக்கள் பார்த்துவிட கூடாது என எண்ணிய காவல்துறை பல்கலை கழக வாயிலில் பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தை மறைத்தனர்.

மழையை சற்றும் பொருட்படுத்தாது மாணவர்கள் தொடந்து போராட்டத்தை நடத்தினர். இது மாணவர்களின் உறுதியை பறைசாற்றுகிறது
மழையை சற்றும் பொருட்படுத்தாது மாணவர்கள் தொடந்து போராட்டத்தை நடத்தினர்.

காவல்துறையும், நிர்வாகமும் மிரட்டினாலும் அதற்கு அஞ்சாமல் போராட்டத்தை மாணவர்கள் தொடர்ந்தனர். பின்பு காவல்துறை கைது செய்வதாக அறிவித்து வேனில் ஏற்றி வடவள்ளியில் உள்ள மண்டபம் ஒன்றில் அடைத்தனர். கைது செய்து மண்டபத்தில் உள்ள மாணவர்களை பார்க்க தோழர்கள் சென்ற போது சட்ட கல்லூரி மாணவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என கூறினர்.

மண்டபத்தின் உள்ளே உள்ள மாணவர்கள் இனி போராட கூடாது என நினைத்த  காவல்துறை பெற்றோரின் தொலைபேசி எண் மற்றும் முகவரியை கேட்டும் , வழக்கு தொடுப்பேன் என மிரட்டத் துவங்கினர்.

எனினும் மாணவர்கள் போலீசின் அச்சுறுத்தலுக்கு அஞ்ச மாட்டோம் அடுத்த முறை எங்களின் எண்ணிக்கை பலம் அதிகரிக்கும் எனவும் உறுதியேற்றனர். கல்லூரி  நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் சற்றும் அஞ்சாத போர்க்குணத்தையும் , உறுதியையும் வெளிப்படுத்திய மாணவர்களை பு.மா.இ.மு போற்றுகிறது.

 

 

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
கோவை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க