privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !

வெல்லட்டும் போக்குவரத்துத் தொழிலாளர் போராட்டம் !

-

அன்பார்ந்த உழைக்கும் மக்களே! தொழிலாளர்களே!

ணவு உற்பத்திக்கு விவசாயி என்றால், துணி மணி உற்பத்திக்கு நெசவாளர்கள், குடியிருப்புகளை உருவாக்குவது கட்டிடத் தொழிலாளி போல அரசுப் போக்குவரத்து என்றால் அதன் ரத்தமும் சதையுமாக இருப்பவர்கள் போக்குவரத்துத் தொழிலாளர்கள். இவர்கள் சமூகத்திற்கு ஆற்றும் உழைப்பும் தியாகமும் சொல்லிமாளாது. தங்களது உயிரையே கொடுத்து, பயணம் செய்யும் மக்களின் உயிரைக் காப்பாற்றியவர்கள் மட்டுமல்ல, ஓட்டைப் பேருந்துகளின் ஸ்பேர்பார்ட்ஸை தமது சொந்த உழைப்பில் வாங்கிப் போட்டு போக்குவரத்தை மக்களுக்கு அன்றாடம்  வழங்கும் தொழிலாளர்களும் உள்ளனர்.

இப்படிப்பட்ட தொழிலாளர்களின் உழைப்பில் உயர்ந்து வளர்ந்த, ஆலமரமாக தழைத்து நிற்கும் போக்குவரத்துக் கழகம், மக்கள் வரிப்பணத்தில் முதலீடாகக் கொண்டு தொடங்கப்பட்டது. இன்று தமிழகம் முழுவதும் பல நூறு கிளைகள், 24,000 பேருந்துகள், ஒன்றரை லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு பரந்து விரிந்துள்ளது. இவையனைத்தும் பொருத்துக் கொள்ள முடியாத தனியார்மய-தாராளமயவாதிகள் இச்சொத்துக்களைத் தின்று ஏப்பம் விடுவதற்கென நாக்கில் எச்சியூற ஓநாயாக அலைகின்றனர்.

போராடும் போக்குவரத்து தொழிலாளர்கள் ( கோப்புப் படம் )

தொழிலாளர்களுக்கு சேரவேண்டிய நியாயமான பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்கள், பென்சன் போன்றவற்றை தடுத்து நிறுத்தியுள்ளது தமிழக அரசு. அற்பக் கூலிக்கு தொழிலாளர்களின் வாழ்வை நசுக்கி வருகின்றது. பல நூறு முறை போராடிப் பெற்ற இந்த உரிமைகளை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தடுத்து வருகின்றது. இவ்வாறு தொழிலாளர்களை வஞ்சிப்பதற்கு காரணம், போக்குவரத்துத் துறை நட்டத்தில் இயங்குவதாகக் கூறுகின்றது.

அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் இந்தக் கூற்று உண்மையா? இல்லை. அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தான் போக்குவரத்துக் கழக நட்டத்திற்கு முக்கியக் காரணம். அண்மையில் பண மதிப்பிழக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போதுகூட போக்குவரத்து துறையில் தொழிலாளர்களுக்கு முழுமையான ஊதியத்தை வழங்காமல் கருப்புப் பணத்தை வெள்ளையாக் கியதை நாடே அறியும். இந்த ஊழல் குற்றவாளிகள் தான் போக்குவரத்துத் துறை நட்டமடைவதற்கு காரணமாக இருக்கின்றனர். மேலும், இந்தக் குற்றவாளிகள் தொழிலாளர்களது சேமிப்புப் பணம் ரூ.7,000 கோடியை தொழிலாளர்களுக்கு கொடுக்காமல் ஏமாற்றி கபளீகரம் செய்யத் துடிக்கின்றனர்.

மற்றொருபுறம், ஆம்னி பேருந்து, தனியார் பேருந்துகளை 7,500-க்கும் அதிகமாக பெருக்கி போலியான பர்மீட்களை அவற்றிற்கு அளித்து, பொதுப்போக்குவரத்தை நாசப்படுத்தி வருகின்றனர். அரசுப் பேருந்தின் மீது டோல்கேட் வரி, டீசல் மீதான வரி என அனைத்து வழிமுறைகளிலும் சூறையாடி அரசு போக்குவரத்துத் துறையை சுக்குநூறாக்கியுள்ளனர். இந்த நிலையிலும் அரசுப் பேருந்து சாலையில் செல்கிறது என்றால் அதற்கு காரணம், தொழிலாளர்களின் கடுமையான உழைப்புதான். தொழிலாளர்களின் நியாயமான பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, பென்சன், ஓய்வுகாலப் பலன்களை நிறைவேற்றாமல் இழுத்தடித்து வஞ்சிக்க அரசு சதித்தனமாக நடந்து கொண்டு வருகிறது.

தனியார் பேருந்துகளுக்கு உரிமம் கொடுத்து அரசுப் போக்குவரத்தை நாசமாக்குகிறது போக்குவரத்துத் துறை

விவசாயிகளுக்குச் சேரவேண்டிய உரிமைகளைப் பறித்து அவர்களை ஓட்டாண்டிகளாக்கி விவசாயிகளைத் தற்கொலைக்கு தள்ளுவது , நீட் தேர்வைக் கொண்டுவந்து தமிழக மாணவர்களை மருத்துவத்துறையில் இருந்து விரட்டியடிப்பது போல, மீனவர்களை கடலில் மீன்பிடிக்கவிடாமல் சுட்டுத் தள்ளுவது போல இந்தப் போக்குவரத்துத் துறையையும் நாசப்படுத்தும் வேலையைச் செய்து வருகிறது.

ஆகையால், தொழிலாளர்களின் உரிமைப் பறிப்பு என்பது தனியார்மயமாக்க சதித்திட்டத்தின் ஒரு பகுதியே. தமிழக அரசு இவ்வாறு தனியார்மயத்திற்கு சதித்திட்டம் தீட்டிவரும் போது, மத்தியில் ஆளும் மோடி அரசோ, ஒட்டுமொத்த பொதுப்போக்குவரத்தையே பன்னாட்டு, கார்ப்பரேட் முதலாளிகளின் கையில் கொண்டு செல்லும் வகையில் போக்குவரத்துச் சட்டத் திருத்த மசோதாவைக் கொண்டு வந்துள்ளது.

எனவே, தனியார்மயம் மற்றும் ஊழலை எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் போக்குவரத்துத் தொழிலாளர்கள் நியாயமான ஊதிய உயர்வைப் பெற முடியும், பொது மக்களும் குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பாக பயணிக்க முடியும். தனது அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடும் போலவே, தனியார்மயம் தாராளமயத்தாலும் இந்த அரசு ஆளத் தகுதியிழந்ததாலும் பாதிக்கப்படும் பிற உழைக்கும் மக்களுடன் இணைந்து இந்த அரசை நிர்பந்திக்கும் போராட்டங்களே தீர்வாக இருக்க முடியும். அந்த வகையில், ஒன்றிணைந்து போராடுவோம்!

  • ஊதிய உயர்வு, பணிநிரந்தரம், பணி ஓய்வுப் பலன்கள், பென்சன் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் தொழிலாளர்களை வஞ்சிப்பது – தமிழக அரசின் தனியார்மயமாக்க சதித்திட்டமே!
  • போக்குவரத்துக் கழக நட்டத்திற்கு காரணமான அமைச்சர்கள் – அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யப் போராடுவோம்! கடனில் தத்தளிக்கும் கழகத்தை மீட்டெடுப்போம்!
  • தனியார்மயத்தால் பாதிகப்படும் மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து போராடுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784
email: ndlfhosur2004@gmail.com


மே 15 : போக்குவரத்துத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆதரிப்போம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 81485 73417, 80152 69381.

  1. விலைமதிப்பில்லா உழைப்பே! ஊதாரிகும்பலிடம் உரிமைகேட்டு கெஞ்சாதே! தடுக்கவரும்தடியன்களைகண்டுஅஞ்சாதே!உன்தலைமுறையிலேயேஉரிமைபெறுவோம்!உரசிபார்த்துசங்கம்தேடு!அதில் வியர்வையும் இரத்தமும் வந்தால் ஆதுஉன்வாசனை!பணமும் போதையும்இருந்தால்அதுஎதிரிவாசனை!சங்கம்தேடபழகு!சாதனையே டிவியும்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க