privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபுதிய ஜனநாயகம்கம்யூனிசக் கல்விமார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

மார்க்சின் வாழ்க்கை வழி மார்க்சியம் கற்போம் !

-

மார்க்ஸ் பிறந்தார் – 1

(கார்ல் மார்க்சின் ஆளுமை மற்றும் உலகக் கண்ணோட்டத்தினுடைய வளர்ச்சியின் வரலாறு)


னிதகுலம் படைத்தளித்திருக்கும் கருவூலங்கள் யாவற்றையும் பற்றிய அறிவைப் பெற்று உங்கள் சிந்தனையை நீங்கள் வளமாக்கிக் கொள்ளும் போது மட்டுமே உங்களால் கம்யூனிஸ்டு ஆக முடியும்.
வி. இ. லெனின்

ங்கள் கைகளில் தவழும் புத்தகம் கார்ல் மார்க்சின் வாழ்க்கைச் சரிதம் அல்ல, அல்லது மார்க்சியத் தத்துவத்தை எளிய முறையில் விளக்குகின்ற நூலும் அல்ல. இப்புத்தகம் மார்க்சியத்துக்கு ஒரு வகையான “அறிமுகம்” என்று கூறலாம். வேறு எத்தத்துவத்தைக் காட்டிலும் அதிகமாக மனிதகுலத்தின் விதியை நிர்ணயித்திருக்கின்ற இந்த மாபெரும் தத்துவத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் விவரிக்கின்ற நூல் இது.

இளைஞரான மார்க்சின் தேடல்கள், சிந்தனைகள், உணர்ச்சிக் குமுறல்கள் என்ற உலகத்துக்குள், அவருடைய நெருப்புப் போன்ற கருத்துக்கள் பரிணாம வளர்ச்சியடைந்த படைப்புத் தன்மை கொண்ட சோதனைச் சாலைக்குள் தன்னோடு வாசகரையும் அழைத்துச் செல்வதற்கு, இந்த உலகத்துக்குள் தன்னை அமிழ்த்திக் கொள்ளும்படி வாசகரை ஊக்குவிப்பதற்கு இப்புத்தகத்தின் ஆசிரியர் முயற்சி செய்திருக்கிறார், ஏனென்றால் ஒரு மேதையுடன் ஆன்மிக ரீதியில் கலந்துறவாடுவதற்கு அவருடைய தத்துவத் தேடல்களின் பாதையைப் பின்தொடர்வதைக் காட்டிலும் அதிக வளமான சாதனம் வேறில்லை.

மார்க்சியம் வறட்டுக் கோட்பாடு அல்ல, அது செயலுக்கு வழிகாட்டி என்பது பிரபலமான உண்மையாகும். எனவே உருப்போட்டு ஒப்பிக்கப்பட வேண்டிய, “முன்னரே தயாரிக்கப்பட்ட” உண்மைகளின் தொகுப்பு என்றபடி இல்லாமல் மார்க்சியத்தை அதன் வளர்ச்சியில், இயக்கத்தில், நடவடிக்கையில் ஆராய வேண்டும் என்பது பெறப்படும்.

நாம் மார்க்சியத்தின் இதயத்துக்குள் நுழைவது எப்படி? உலகத்தைப் பற்றி நாம் புரிந்து கொள்வதற்கு அது வழங்கியுள்ள பங்கை நாம் மதிப்பிடுவது எப்படி? மார்க்சியத்துக்கு முந்திய தத்துவஞான மற்றும் சமூக-பொருளாதாரப் போதனைகளிலிருந்து அதை வேறுபடுத்திக் காட்டுவது எது? இதைப் புரிந்து கொள்வதற்கு மார்க்சியதத்தின் மூலவர்கள் நடந்து சென்ற பாதையை நாம் சிந்தனையில் பின்பற்றிச் செல்ல வேண்டும். புதிய உலகக் கண்ணோட்டத்துக்கு இட்டுச் சென்ற படைப்பாற்றல் மிக்க சிந்தனையின் அனுபவத்தையும் கடுமுயற்சிகளையும் நாம் ‘மீண்டும் செய்வது’ இதற்கு அவசியம். எல்லாவற்றையும் காட்டிலும், மார்க்சியத்தின் பிறப்பிடமாக இருந்த மனித சமூகப் பண்பாட்டுச் செல்வத்தை நாம் தன்வயமாக்குவதும் விமர்சன ரீதியில் மறு பரிசீலனை செய்வதும் மிக அவசியம். இதைச் செய்வதற்கு மார்க்சியத்தைத் தத்துவ ரீதியாகவும் செய்முறையாகவும் கையாள்வதற்குரிய திறமையை நாம் பெறுவதும் அவசியம்.

இது மிகவும் கடினம் என்பது உண்மையே. இதற்குச் சக்தி, முயற்சி மற்றும் காலத்தை அதிகமாகச் செலவிடுவது அவசியம். ஆனால் “விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது. அதன் செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்.”( 1)

சுலபமான பாதைகளும் உண்டு; ஆனால் அவை பொதுவாக மார்க்சியத்தை அளவுக்கு மீறி எளிமைப்படுத்துவதிலும் கொச்சைப்படுத்துவதிலும் முடிகின்றன. அவை ஒரு பக்கத்தில் வறட்டுக் கோட்பாட்டுவாதிகளைத் தயாரிக்கின்றன, மறு பக்கத்தில் ‘ஏமாற்றத்தைத்’ தோற்றுவிக்கின்றன. இதை மனத்தில் கொண்டு தான் லெனின் கம்யூனிஸ்டு இளைஞர் சங்கத்தின் மூன்றாவது காங்கிரசில் உரையாற்றிய பொழுது பாடபுத்தகங்கள் மற்றும் பொதுமக்களுக்காக எழுதப்பட்டிருக்கும் பிரசுரங்களில் உள்ள முன்னரே தயாரிக்கப்பட்ட முடிவுகள் கோஷங்களின் உதவியுடன் மார்க்சியத்தை (கம்யூனிசத்தை) அளவுக்கு மீறி எளிமைப்படுத்திக் கற்பதற்கு எதிராக எச்சரிக்கை செய்தார்.

மார்க்ஸ் “மனித சிந்தனை தோற்றுவித்திருந்தவை யாவற்றையும் மறுபரிசீலனை செய்தார், விமர்சனத்துக்கு உட்படுத்தினார், தொழிலாளி வர்க்க இயக்கத்தைக் கொண்டு சரிபார்த்தார். முதலாளித்துவ வரம்புகளால் கட்டுப்படுத்தப்பட்டோரால் அல்லது முதலாளித்துவத் தப்பெண்ணங்களால் கட்டுண்டோரால் வந்தடைய முடியாத முடிவுகளை இவ்வழியில் வந்தடைந்து அவர் வரையறுத்துக் கொடுத்தார்.” (2)

காரல்மார்க்ஸின் இளவயது தோற்றம்

மார்க்ஸ் மார்க்சியத்துக்கு வந்த பாதை எது, மனித மேதாவிலாசத்தின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று எப்படி சாத்தியமாயிற்று என்பதை நாம் அறிந்து கொள்ள விரும்பினால், மார்க்சியத்தை அதன் கரு நிலையில், அதன் தயாரிப்பு நிகழ்வுப் போக்கில் புரிந்து கொள்வதற்கு இதை அறிய விரும்பினால் நாம் இயற்கை யாகவே மார்க்சின் ஆரம்ப கால நூல்களுக்கு அவருடைய வாழ்க்கை மற்றும் பணியின் துவக்கக் கட்டத்துக்குச் செல்ல வேண்டும். மனிதகுலத்துக்குப் புதிய கண்களே” வழங்கிய, அதற்கு முன்னால் புதிய வானங்களைத் திறந்து காட்டிய தத்துவஞானப் புரட்சியை மார்க்ஸ் எப்படி நிறைவேற்றினார்? இதற்கு எத்தகைய தனிப்பட்ட, மனித குணாம்சங்கள் அவசியமாக இருந்தன? மார்க்சின் தத்துவஞானத்தையும் வாழ்க்கையையும் பின்தொடர்ந்து செல்பவர்களுக்கு இக்கேள்விகள் மிக முக்கியமானவை என்பது தெளிவு.

ஒரு மனிதனுடைய நடவடிக்கை அவனை விளக்கிக் காட்டும் என்பது உண்மையானால் இது மார்க்சுக்கு மிகவும் பொருந்தும். ஏனென்றால் அவர் குறிப்பிடத்தக்க அளவுக்கு ஒரே குறியும் நோக்கமும் கொண்ட மனிதராக இருந்தார்.

மார்க்சின் புரட்சிகரத் தத்துவஞானம் வளர்ச்சியடைந்த பொழுது அவருடைய ஆளுமையும் உருவாயிற்று. அவருடைய ஆன்மிக சோதனைச் சாலையின் மிக ஆழமான இடங்களை அறிந்து கொள்வதற்கு, அறிஞர், புரட்சிவாதி, குடிமகன் என்ற முறையில் அவருடைய தார்மிகப் பண்பை வெளிக்காட்டுவதற்குரிய திறவுகோல் அவருடைய நூல்களை ஆராய்ச்சி செய்வதே. ஆகவே இப்புத்தகத்தில் மார்க்சின் ஆளுமையின் வளர்ச்சியும் மார்க்சியத்தின் வளர்ச்சியும் ஒரே நிகழ்வுப் போக்காக ஆராயப்படுகிறது.

விஞ்ஞான கம்யூனிசத்தின் மூலவருடைய வாழ்க்கையில் ஒப்பீட்டளவில் ஒரு சிறு காலப் பகுதியில், 1835க்கும் 1844க்கும் இடையிலுள்ள காலப் பகுதியில், அதாவது அவர் பள்ளிக் கல்வியை முடித்ததிலிருந்து முதல் நூல்கள்-அவர் பொருள்முதல்வாதத்துக்கும் விஞ்ஞான கம்யூனிசத்துக்கும் மாறிவிட்டது இவற்றில் நிரூபணமாகின்றன – எழுதிய வரையிலுள்ள காலப் பகுதியில் இப்புத்தகம் அதிகமான கவனம் செலுத்துகிறது.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் பத்து வருடங்கள் அவ்வளவு முக்கியமாகத் தோன்றுவதில்லை. ஆனால் இக்காலப் பகுதியில் ஒரு குட்டிமுதலாளி வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்த முன்னாள் பள்ளி மாணவன் தன்னுடைய பல்துறைப் புலமை கொண்ட ஆளுமையின் வளர்ச்சியில் புதிய சிகரங்களை எட்டியபடியால் அவர் தன்னுடைய காலத்தையும் தன் காலத்தைச் சேர்ந்தவர்களையும் வெகுதூரத்துக்குப் பின்னால் விட்டுவிட்டு முன்னே போய்விட்டார்.

இளைஞரான மார்க்சின் ஆன்மீக வளர்ச்சியைப் பற்றிய நுணுக்கமான அல்லது முழுமையான சித்திரத்தை வரைவதற்கு நான் முயற்சி செய்யவில்லை. அவருடைய ஆளுமையும் அவருடைய உலகக் கண்ணோட்டமும் வளர்ச்சியடைந்த முக்கியமான திசைவழிகளைக் குறிப்பிடுவது இந்தச் சிறு நூலுக்குப் போதுமானதாகும். மார்க்சின் நூல்களில் உள்ள கருத்துக்களை விளக்குவதும் விமர்சிப்பதும் என்னுடைய நோக்கமல்ல; அவற்றில் வாசகரின் அக்கறையைத் தூண்டி தானாகவே சிந்திக்கும்படி, தேடும்படி வாசகரை ஊக்குவிப்பதே என்னுடைய நோக்கம்.

செங்குத்தான பாதைகளில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்

இளம் வாசகர் தனக்கு அறிமுகமில்லாத பெயர்கள், கருத்தினங்கள், பிரச்சினைகளை இந்நூலில் சந்திக்கக் கூடும்; அவர் எல்லாவற்றையும் உடனடியாகப் புரிந்து கொள்வதும் இயலாதிருக்கலாம். ஆனால் அவரை சிந்தனை செய்யத் தூண்டுகின்ற பகுதிகள் அதிகம்; பிரச்சினைகளை எழுப்பி அவற்றை இன்னும் நுணுக்கமாக ஆராய வேண்டும் என்ற விருப்பத்தைத் தூண்டுகின்ற பகுதிகள் அதிகம். இங்கே மூல நூல்களைப் பற்றிய குறிப்புகள் தரப்பட்டிருக்கின்றன. இவை மேலும் சிந்திப்பதற்குப் பேருதவியாக இருக்கும். இங்கே எழுப்பப்பட்டிருக்கும் பிரச்சினைகளை சுயேச்சையாக ஆராய்வதற்கு வழிகாட்டியாக உதவும்.

இந்நூலைப் படித்த பிறகு மார்க்சின் கருத்துக்களின் உலகத்தில் இன்னும் ஆழமாகப் பயில்வதற்கு வாசகர் விரும்பினால், பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில், கான்ட் மற்றும் ஃபிஹ்டே, ஹெகல் மற்றும் ஃபாயர்பாஹ் ஆகியோருடைய தத்துவஞானத்துக்கும் சான்சிமோன், ஃபூரியே மற்றும் ரிக்கார்டோவின் நூல்களுக்கும் ஷேக்ஸ்பியர் மற்றும் பல்ஸாக், கேதே மற்றும் ஹேய்னெயின் இலக்கியங்களுக்கும் வாசகர் திரும்பினால் மார்க்சியம் எப்படித் தோன்றியது, அதில் என்ன இருக்கிறது என்பனவற்றைப் புரிந்து கொள்கின்ற பாதையில் அவர் முன்னேறிக் கொண்டிருப்பார் .

இங்கே நாம் கலை, இலக்கியத்தை ஏன் குறிப்பிடுகிறோம்? மார்க்சியத்தின் வளர்ச்சியில் தத்துவஞான மற்றும் சமூக-பொருளாதாரக் கருத்துக்கள் மட்டுமின்றி கலை-அழகியல் கருத்துக்களும் முக்கியமான பாத்திரத்தை வகித்தன என்பது மெய்யாகும். சுதந்திரத்தை நேசிக்கின்ற கலை உலகமே இளைஞரான மார்க்சின் கருத்துக்கள் மலர்ந்த முதல் கல்விக்கூடமாகும். கலை அவரை யதார்த்தத்தின் பால் விமர்சன ரீதியான அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறு செய்தது, தன்னிறைவுடைய அற்பவாதத்தைக்(2) கண்டனம் செய்யுமாறு பணித்தது. மார்க்சின் கலையுணர்வின் வளர்ச்சி அவருடைய அரசியல் உணர்வின் வளர்ச்சியுடன் இணைந்தது. அற்பவாதத்தைப் பற்றிய அவருடைய விமர்சனம் அதைப் பேணி வளர்த்த சமூகத்தின் அடிப்படைகளைப் பற்றிய விமர்சனமாயிற்று.

கலையில் மார்க்சுக்கு ஏற்பட்டிருந்த தீவிரமான ஈடுபாடு, தொடக்க காலத்திலேயே அவரிடம் ஏற்பட்டிருந்த கலா ரசனை, கவிதையிலும் உரைநடையிலும் அவர் செய்த சோதனைகள் இவை அனைத்தும் பிற்காலத்தில் அவருடைய எழுத்துக்களின் மீது மிகச் சிறப்பான தாக்கத்தைக் கொண்டிருந்தன. அவருடைய எழுத்துக்கள் ஆழமான விஞ்ஞானச் சிந்தனையை மேதா விலாசம் நிறைந்த கலா வடிவத்துடன் இணைத்தன.

குறிப்பு :
(1) Karl Marx, Capital, Vol. 1, Moscow, 1977, p. 30. (2) வி. இ. லெனின், தேர்வு நூல்கள், பன்னிரண்டு தொகுதிகளில், தொகுதி 11, மாஸ்கோ, முன்னேற்றப் பதிப்பகம், 1982, பக்கம் 87
(2) அரசியல் மற்றும் சமூகத் துறையில் குறுகிய மலட்டுத் தனமான மனோபாவத்தைக் கொண்டவர்கள் அற்பவாதிகள் (Philistines), அவர்களுடைய சித்தாந்தம் அற்பவாதம் எனப்படும். – மொ-ர்.

– தொடரும்


நூல் : மார்க்ஸ் பிறந்தார்
நூல் ஆசிரியர் : ஹென்ரி வோல்கவ்
தமிழில் : நா. தர்மராஜன், எம். ஏ.
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், 1986 -ல் சோவியத் நாட்டில் அச்சிடப்பட்டது.

நூல் கிடைக்குமிடம் :

கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை,
சென்னை – 600 002. பேச: 044-2841 2367.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்பிரைவேட் லிமிடெட்,
சென்னை.

  1. பிளாட்டோ ஹெகல் என அனைத்தையும் சிறப்பாக முன்னுரையோடு கார்ட்டூன் வடிவில் உள்ளது .

    http://www.amazon.in/Introducing-Marx-Graphic-Guide-Rius/dp/1848314078

    ( இதை குறைந்த விலையில் அனைவருக்கும் எளிதில் கிடைக்க செய்த அமெரிக்க கார்பரேட்டுக்கு நன்றி )

    • இதுவே சோசலிச உற்பத்தி முறைமையில் இருந்திருந்தால் 5 ரூபாய்க்கு கிடைத்திருக்கும்

      • அச்சடிக்கும் தொழிலாளர்கள் ஓய்வூதியம் கேட்டு போராட்டம் நடத்தி கொண்டு இருப்பார்கள் . நாம் அரசாங்கம் ஏழைக்கும் சும்மாவே கொடுக்கணும் சார் என்று கருத்தை போட்டு விட்டு நல்ல பேர் வாங்கி கொண்டு போக வேண்டியதுதான் 🙂

  2. மார்க்ஸ் பற்றி பெருமை பேச இந்த நூல் எழுதப்படவில்லை என்று கூறிக்கொண்டே அவருடைய பெருமைகளை பற்றி பேசி அலுப்படைய செய்கிறது.

    மதவாதிகளின் தலைவர்களை மதவாதிகள் புகழ்வதற்கும், கம்னியூஸ்டுகள் மார்க்ஸை புகழ்வதற்கும் பெரிய வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.

    மதவாதிகளால் மனித சமூகத்திற்கு பலனில்லை, ஆனால் கம்யூனிஸ்ட் களால்
    மனித இனம் முழுவதற்கும் நலன் உண்டு என்று விடையளிப்பீர்கள்.

    நன்றி.

    • ஐயா, இந்த பதிவின் தலைப்பே எல்லாவற்றையும் சந்தேகப்படு – அதன்படி உங்களது ‘அறிவை’ நீங்கள் இதுவரை சந்தேகப்படாமல் சேர்த்து வைத்திருக்கிறீர்கள் அல்லவா, கஷ்டம்தான். அடுத்து இந்த தொடரின் நான்காவது தலைப்பே பள்ளியில் காரல் மார்க்ஸ் சுமாரான மாணவராக இருந்தார் என்பதுதான். மதவாதிகளைக் கூட திருத்தி விடலாம். உங்களைப் போன்ற மகா முட்டாள்களை திருத்துவது இருக்கட்டும் உரையாடுவதே சிரமம். நீங்கள் எதையெல்லாம் பெருமை என்று புரிந்து கொண்டிருக்கிறீர்களோ அவற்றையெல்லாம் அற்பத்தனம் என்று மார்க்ஸ் தூக்கி எறிகிறார். அதை மல்டி பிளக்சில் ஃபிளாக் ஃபாரஸ்ட் கேக்கை கடித்து கொண்டே ஏழைகளுக்காக உச்சு போடும் உங்களைப் போன்ற கோமகன்களால் புரிந்து கொள்ளவே முடியாது. இருப்பினும் முயல்கிறோம். தொடர்ந்து படியுங்கள். தயவு செய்து உங்களது ‘அறிவை’ இனிமேலாவது சந்தேகப்படுங்கள் – பாவம் மனித சமூகம்!

    • சேற்றில் கல்லெறிந்தால் சேறு நம் மீது தான் தெறிக்கும் என்பதற்கு வினவின் பதிலே சாட்சி…

      நாய் வாலை நிமிர்த்த முடியாது வினவு போன்ற கொலைகளை நியாயப்படுத்தும் கொலைகாரர்களிடம் நற்சிந்தனையை எதிர்பார்க்க கூடாது.

Leave a Reply to ferouce பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க