privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபுதிய ஜனநாயகம் - மே 2017 மின்னிதழ்

புதிய ஜனநாயகம் – மே 2017 மின்னிதழ்

-

புதிய ஜனநாயகம் மே 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இந்த இதழில் வெளியான கட்டுரைகள்

1. திருடன் – போலீசா, திருட்டு போலீசா?
அதிமுக எனபது உதிரியான கிருமினல்களைச் சேர்த்துக் கட்டப்பட்ட ஒரு மாபியா கும்பல். பாரதிய ஜனதாவோ முறைப்படி ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு கிருமினல் கும்பல். அ.தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையிலான வேறுபாடு திருடனுக்கும் போலீசுக்கும் இடையிலான வேறுபாட்டைப் போன்றது தான்.

2. மார்க்ஸுக்கு முன்… மார்க்ஸுக்கு பின்…
சமூகத்தை மாற்ற விரும்புகிறவர்கள் அனைவரும் வரலாற்றை இப்படித்தான் பிரித்துப் பொருள் கொள்ள முடியும்.

3. நீட் தேர்வு : ஏழைகளுக்கு எதிரான புதிய மனுநீதி!
உச்சநீதி மன்றத்தின் கட்டப் பஞ்சாயத்து மூலம் திணிக்கப்பட்டுள்ள நீட் தேர்வு, மருத்துவக் கல்வியை பணக்கார வீட்டு வாரிசுகளின் தனிச் சொத்தாக்கிவிட்டது.

4. மானத்தை இழந்து மருத்துவராவதா ?
நீட் தேர்வின்போது தமிழக மாணவர்கள் மீது ஏவிவிடப்பட்ட சோதனைகளில் மேட்டுக்குடி வர்க்கத் திமிரும், ஆதிக்கசாதி வெறியும், தமிழர்களுக்கு எதிரான காழ்ப்பும் வெளிப்பட்டன.

5. இந்தித் திணிப்பு : “பிரிவினைவாதி மோடி!”
இந்து-இந்தி-இந்தியா என்ற தனது கனவுத் திட்டத்தின் மூலம் இந்தியாவை உடைக்கும் வேலையைச் சுறுசுறுப்பாக முடுக்கிவிட்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

6. “இந்தியாவோ, ஆஸ்திரேலியாவோ, முதலாளிகள் எங்கும் உள்ளூர் மக்களை அழிக்கிறார்கள்!”
அதானிக்கு எதிராக ஒரு ஆஸ்திரேலிய விவசாயியின் எதிர்ப்புக் குரல்

7. மோடியின் இந்தியாவும் தொழிலாளர்களின் இந்தியாவும்!
ஊதிய உயர்வு, பணிப் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக நாடெங்கும் தொழிலாளர்கள் போராடிவரும் போது, பா.ஜ.க. ஆளும் அரசுகளோ தொழிற்தகராறு சட்டத்தியே ஒழித்துவிட முயலுகிறார்கள்.

8. காஷ்மீர் : தெருக்களே வகுப்பறை! கற்களே பாடநூல்கல்!!
பள்ளி மாணவ – மாணவிகளையும் தெருவுக்கு இழுத்து வந்ததன் விளைவாகச் சந்தியில் நிற்கிறது மோடி அரசு.

9. பெஹ்லு கான் கொலை : இந்துத்துவப் பிணந்தின்னிகளுடன் நாம் சேர்ந்து வாழ இயலுமா?
தலித் மக்களுக்கு எதிரான தீண்டாமைக் கொடுமைகள் போல, இசுலாமியர்களுக்கு எதிரான தக்குதல்களும் கண்டும் காணாது கடந்து செல்லும் அன்றாட நிகழ்வுகளாக மாறி வருகின்றன.

10. ஆதார் – மீப்பெரும் மிந்தரவுக் கிடங்கு : மக்களை ஒடுக்கும் டிஜிட்டல் ஆயுதம்!
ஆதார் அட்டையைக் குடிமக்களின் மீது திணிப்பது ஜனநாயக விரோதமானது என்பது மட்டுமல்ல, அத்திணிப்பின் நோக்கமே ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டுவது தான்.

11. டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி!
கடைகள் உடைபடுகின்றன என்பதைக் காட்டிலும், இந்த அரசமைப்பு குறித்த பிரமைகள் உடைபடத் தொடங்கிவிட்டன என்பதே இன்றைய போராட்டங்களின் முக்கியத்துவம்.

12. தமிழகமெங்கும் டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : அடித்தாலும் அடங்காது, இது வேற தமிழ்நாடு!

புதிய ஜனநாயகம் மே 2017 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 2 MB இருப்பதால் தரவிறக்கம் செய்ய நேரம் ஆகும். கிளிக் செய்து காத்திருக்கவும்.

புதிய ஜனநாயகம் மாத இதழின் ஆண்டுச் சந்தா : உள்நாடு ரூ.180

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க