privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபிளாஸ்டிக் கழிவுகளைச் சுமப்பதில் கங்கா மாதா இரண்டாம் இடம் !

பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமப்பதில் கங்கா மாதா இரண்டாம் இடம் !

-

ஷன் கிளீனப் (Ocean Clean-up) என்கிற டச்சு சூழலியல் ஆராய்ச்சிக் குழு பெருங்கடல்களில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் படி உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 1.15 -லிருந்து 2.41 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கலப்பதாகவும், பெரும்பாலும் ஆற்றோட்டங்களின் மூலமே பிளாஸ்டிக் கழிவுகள் கடலுக்கு வந்து சேர்வதாகவும் தெரிய வந்துள்ளது.

கடலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு வந்து சேர்ப்பதைப் பொருத்தவரை சீனாவின் யாங்ஜி நதி முதலிடத்திலும் இந்தியாவின் கங்கை நதி இரண்டாமிடத்திலும் இருப்பதாக மேற்படி ஆய்வறிக்கை தெரியப்படுத்துகின்றது. உலகிலேயே மூன்றாவது நீளமான நதியான யாங்ஜி ஒவ்வொரு ஆண்டும் சுமார் 3.3 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கொண்டு சேர்க்கிறது. இரண்டாம் இடம் பிடித்துள்ள கங்கை 1.15 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகளை சுமந்து செல்கின்றது.

சீனர்கள் நதியை “தாயாக” பார்ப்பதில்லை என்பதால், பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளோடு நிறுத்திக் கொண்டிருப்பார்கள் என்று நாம் அனுமானிக்கலாம். ஆனால் பார்ப்பன பண்பாடு கங்கையைத் தாயாக போற்றுவதால் அதில் பிணத்தை வீசியெறிவதைப் புண்ணியம் என்று கருதுகின்றனர் ‘இந்துக்கள்’. எனவே, பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளோடு அதில் வீசப்படும் ஆயிரக்கணக்கான பிணங்களையும் நாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறை கும்பமேளா முடிந்த பின்னும் மாசுபாட்டின் தர வரிசையில் மேலும் சில புள்ளிகளோடு கங்கை முன்னேறி வருகின்றது. கங்கை நீர் புற்றுநோயை உண்டாக்கும் அளவுக்கு மாசுபட்டு இருப்பது முன்பே பல ஆய்வுகளின் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இத்தனைக்கும் கங்கையைத் தூய்மைப்படுத்த கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளில் சுமார் 20 ஆயிரம் கோடிகளை மத்திய மாநில அரசுகள் செலவழித்துள்ளன. அதிலும் மோடி ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் கங்கா மாதாவைத் தூய்மையாக்க சோப்பு ஷாம்பு வாங்க சுமார் 3,703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2016 ஆகஸ்டு மாதம் வரை சுமார் 2,958 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது.

ஆகவே மூவாயிரம் கோடி ரூபாய் செலவழித்து கங்கையை உலகின் இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார் மோடி. அடுத்து வரும் கும்பமேளா முடிந்ததும் கங்கையை முதலிடத்துக்கு உயர்த்தும் வேலையை அகோரிகள் பார்த்துக் கொள்வார்கள். மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா அடைந்து வரும் வேகமான வளர்ச்சிக்கு இதுவும் ஒரு சான்று. சமீபத்தில் தான் ஆசியாவிலேயே ஊழல் மிகுந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்து சாதனை படைத்திருந்தது. தற்போது கங்கா மாதாவும் மோடியின் புகழை உலகளவில் பரப்பிக் கொண்டிருக்கிறாள்.

இந்துத்துவ கும்பல் எதைப் புனிதம் எனக் கொண்டாடுகின்றதோ அதன் டவுசரை உருவித் தெருவில் நிறுத்தி விடும் என்பது வரலாறு. பிள்ளையாரும், கோமாதாவும், கங்கையுமே அதற்கு சிறந்த உதாரணங்கள்.

மேலும் :

  1. உண்மையான பிரச்சினையில் மோடி பெயர் இழுத்து அரசியல் தேவையா ?

    ஒரு வேளை மோடியின் பாலிசி தான் காரணம் என்றால் , அதையும் குறிப்பிட்டு இருக்கலாம் .

    கடந்த பத்து வருடங்களில் ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு கழிவு என்று புள்ளி விவரம் இருந்தால் , அதில் மோடியின் ஆட்சி காலத்தில் எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்று விவாதிக்கலாம் .

    எல்லாவற்றிலும் மோடிதான் காரணம் என்று மங்களம் பாடினால் , இவர்கள் அரசியல் பேசுகிறார்கள் என மக்கள் உண்மையான பிரச்சினையை கூட செவி மறுப்பதில்லை

    • ராமன் அவர்களே, மோடியின் மீதான உங்கள் நல்லென்னத்துக்கு கேடு விளைவிக்கும் படியாகவா இந்த சின்ன கட்டுரை அமைந்து உள்ளது? இல்லையே! கங்கையை சுத்தம் செய்ய 3,703 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு 2016 ஆகஸ்டு மாதம் வரை சுமார் 2,958 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மாசு கட்டுப்பாட்டுக்குள் வராமைக்கு என்ன காரணம் என்று தானே இந்த சின்ன கட்டுரை கேள்வி எழுப்புகிறது…வினவு கேள்வி எழுப்பும் அதே தருணத்தில் கட்டுபாடு அற்ற மாசுக்கான காரனங்க்களாக பிளாஸ்டிக் மற்றும் தொழிற்சாலைக் கழிவுகளோடு அதில் வீசப்படும் ஆயிரக்கணக்கான பிணங்களையும் நாம் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று நியாயமாகத்த்தானே பேசுகிறது வினவு! மேலும் கும்பமேள போன்ற மதம் சார்ந்த நிகழ்வுகள் கங்கையை மேலும் மேலும் மாசுபடுத்துகிறது என்றும் தானே குற்றம் சாட்டுகிறது! மதத்தின் பெயரால் நதி மாசு அசைய்லாமா? நதிகளை தாயாக கருதும் ஹிந்து சமுகம் தன் நிலைபாட்டுக்கு எதிராகவே அதே தாயை கசடாக்குகிறது என்றால் கேள்வியை யாரை நோக்கி நாம் கேட்கவேண்டும்? ஹிந்துதுவாகளை நோக்கி தானே கேட்ட்க முடியும்?

Leave a Reply to கி.செந்தில்குமரன் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க