• ஜூன் 10 , 11 – அரியலூர் மண்ணை கலக பூமியாக்க RSS இந்து முன்னணி கொலைகார கும்பலின் இரண்டு நாள் பயிற்சி முகாம் !
  • விவசாயிகளை நிர்வாணமாக்கியவர்கள் NEET Exam , மீத்தேன், கெயில், மீனவர் படுகொலை, காவிரி பிரச்சினை என அனைத்திற்கும் காரணம் RSS
  • MRC கல்வி நிறுவனமா ?
    RSS கூடாரமா ?
    MRC கல்லூரியை புறக்கணிப்பீர் !

ரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் தத்தனூர் கிராமத்தில் செயங்கொண்டம் – திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது மீனாட்சி இராமசாமி கல்லூரி. இயல்பாகவே தனியார் கல்லூரிகள் என்பது உழைக்கும் மக்களை சுரண்டி தின்னும் கழுகு கூட்டமாகும். இதில் உச்ச நிலையில் உள்ளது மீனாட்சி இராமசாமி(MRC) கல்லூரி.

கட்டண கொள்ளை, தலித் மாணவர்களுக்கு கட்டணமில்லா படிப்பு என்று சொல்லி கல்லூரியில் சேர்த்த பிறகு அதிகப்படியான கட்டணம் நிர்ணயித்து கொள்ளையடிப்பது, கல்லூரியில் இருந்து இடைநின்ற மாணவர்களுக்கு சான்றிதழ் தராமல் பணம் கேட்டு மிரட்டுவது என அனைத்து ரெளடி வேலையையும் செய்து வரும் நிறுவனம் தான் மீனாட்சி இராமசாமி கல்லூரியாகும்.

ஏழை, எளிய மாணவர்களிடம் ஏமாற்றி வாங்கிய கட்டணங்களில் கட்டப்பட்டுள்ள வானுயர்ந்த கட்டிடங்களுக்கு எந்த அனுமதியும் உள்ளாட்சி துறையில் பெறவில்லை, மேலும் மக்களின் வரிப்பணத்தில் ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட தார்சாலையை, தனது கல்லூரிக்கு வழிச்சாலையாகவும் சுற்றுசாலையாகவும் போட்டுள்ளார்கள்.

இவை போன்று ஆயிரமாயிரம் குற்றச்சாட்டுகள் குவிந்த குப்பை தொட்டிதான் MRC எனும் மீனாட்சி இராமசாமி கல்லூரியாகும்.

இந்நிலையில்தான் கடந்த ஓராண்டிற்கு முன்னர் ABVP எனும் RSS ன் மாணவர் அமைப்பை தங்கள் கல்லூரியில் அறிமுகம் செய்து, அதற்கான முழுநேர பொறுப்பாளர்களையும் நியமித்து, ABVP யை அரியலூர் மாவட்டத்திற்கு அழைத்து வந்தது மீனாட்சி இராமசாமி கல்லூரியே ஆகும்.

இதன் அடுத்தபகுதியாக அரியலூர் மாவட்டத்தின் நந்தினி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் RSS-ன் இந்துமுன்னணி பொறுப்பாளர்கள் என்பது ஒருபுறம் இருக்க, தற்போது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரம் என தென்னிந்திய அளவில் நடைபெறும் RSS-ன் பயிற்சி முகாம் ஜூன் 10, 11 இரண்டு நாட்கள் மீனாட்சி இராமசாமி கல்லூரியில் நடைபெற இதில் குறைந்தபட்சம் 300 நபர்கள் பங்கேற்று பயிற்சி பெற போவதாகவும், பெரும்பான்மையோர் முழுநேர ஊழியர் என்பதும் சில பத்திரிக்கையாளர்களின் ஆணித்தரமான தகவல் ஆகும்.

இப்படுபாதக பயிற்சியை இந்திய ஒருங்கிணைப்பாளர்(Organizer) செந்தில் ஒருங்கிணைத்துள்ளார். RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஸ்தானுமலையன்(STHANUMALAIYAN) மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் (State Organizer) வன்னியராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, அரியலூர் மண்ணை காவி வெறியூட்டி கலவர பூமியாக்க திட்டமிட்டுள்ளனர்.

மேற்கண்ட செயல்பாடுகளை கவனித்த சில முற்போக்கு தோழர்கள் 08-06-2017 அன்று MRC கல்லூரியின் தாளாளர் இரகுநாதன் அவர்களை சந்திக்க சென்றனர். ஆனால் தோழர்களை காத்திருக்க வைத்து சந்திக்க முடியாது என திருப்பி அனுப்பி உள்ளார். இருப்பினும் RSS-ன் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கடிதம் ஒன்றை கல்லூரி நிறுவனத்திடம் வழங்கி எச்சரித்து வந்துள்ளனர்.

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைகழகத்திற்கு RSS-ன் தலைவன் மோகன் பகவத் பயிற்சி அளித்து ஒரு மாதம் நிறைவுறாத நிலையில், அடுத்து அதே பகுதியில் அரியலூரில் RSS-ன் தேசிய ஒருங்கிணைப்பாளர்கள் பயிற்சியளிப்பது கவனிக்கதக்கதாகும்.

இதற்கு பாதுக்காப்பளிக்க எடப்பாடி அரசின் போலீசு குவிக்கப்படுவதும், எதிர்க்கும் முற்போக்கு சக்திகளை ஒடுக்குவதும், தமிழகத்தில் நடப்பது BJP-யின் பினாமி அரசு என்பதை வெளிச்சமாக்குகிறது.

தகவல்
மதவாத எதிர்ப்பு கூட்டிமைப்பு
அரியலூர் மாவட்டம்
84288 12913

RSS-ன் பயிற்சி முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுப்பப்பட்ட கண்டன கடிதம்

03-06-2017
தத்தனார்

மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு
அரியலூர் மாவட்டம்
செல் 84288 12913

தாளாளர்
MRC கல்வி நிறுவனம்
தத்தனூர்
அரியலூர் மாவட்டம்

ஐயா

வணக்கம்

தங்கள் கல்லூரி மிகச்சிறந்த சேவையை இந்தப் பகுதி மக்களுக்கு வழங்கி வருகிறது, அனைத்து மதம், மற்றும் சாதியினரும் இந்த கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் தங்கள் கல்லூரியில் வரும் 10-06-2017 மற்றும் 11-06-2017 ஆகிய தேதிகளில் இந்து பார்ப்பன மதவாத சக்தியான RSS மதவெறியியூட்டும் பயிற்சியை மேற்கொள்வதாக அறிந்து வேதனையுற்றோம், தங்கள் கல்லூரியில் பயிலும் மற்ற மதத்தினருக்கும், பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் அச்சமூட்டும் செயலாகவே இந்த பயிற்சி அமையும், கல்வியையும், ஒழுக்கத்தையும் கற்க வேண்டிய மாணவர்கள், மதவெறியையும் சேர்த்து கற்க போவதை கண்டு நாங்கள் பயப்படுகிறோம், ஆகவே ஐயா அவர்கள் அதற்கு இடம் கொடுக்காது பயிற்சியை இரத்து செய்யுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு
மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு
அரியலூர் (மா)
84288 12913

கடைசிச் செய்தி: திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் 10, 11 தேதிகளில் நடந்தது. கல்லூரியின் பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரையும் வெளியே அனுப்பிவிட்டு மூடிய வளாகத்தில் சங்க பரிவாரங்களின் வன்முறை பயிற்சி முகாம் திட்டமிட்டவாறு முடிந்து விட்டது. மீனாட்சி ராமசாமி கல்லூரி நிர்வாகம் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தை ஆதரிப்பதில் உறுதியாக நிற்கிறது. தமிழக மக்கள் திரளும் போது அந்த உறுதி உளுத்துப் போவது உறுதி!