privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்த வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு - 16 ஜூன் 2017

இந்த வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 16 ஜூன் 2017

-

ந்த வாரம் 12.07.2017 முதல் 16.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான 31 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. நீங்கள் படிக்கத் தவறிய செய்திகளையும், பின்னர் படிக்கலாம் என்று தள்ளி வைத்த செய்திகளையும் கண்டுபிடிப்பதற்கு உதவியாக இந்த தொகுப்பை வெளியிடுகிறோம். இந்தக் குறுஞ்செய்திகளில் அமெரிக்கா, மத்திய கிழக்கு, அறிவியல், ஆவணப்படங்கள, புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. சோதனை முயற்சியாக துவங்கப்பட்ட இந்தக் குறுஞ்செய்திகள் குறித்த உங்கள் கருத்துக்களையும் அறிய விரும்புகிறோம். நன்றி
– வினவு

சுதேசி ரயிலில் இனி விதேசி பர்க்கர் !
கடந்த வருடம் இந்த பீட்சா சோதனையை பாட்னா ராஜ்தானி, டெல்லி – மும்பை, கிராந்தி ராஜ்தானி, புனே செகந்திராபாத் சதாப்தி, ஹௌரா – பூரி சதாப்தி ஆகிய ரயில்களில் சுமார் 45 நாட்களுக்கு இந்திய ரயில்வே நடத்தியிருக்கிறது.
ஸ்மார்ட் சிட்டி : பாஜக -வின் புது அக்கிரகாரங்கள் !
வர்ணாசிரம தருமத்தை மனிதர்களின் மேல் பிரயோகித்தது போய், இன்று நாட்டின் புவியியல் அமைப்பையே வருணாசிரம ரீதியில் மறுவரையறை செய்ய முயலும் இந்த எத்தர்கள் கூட்டம் தமிழகத்திலும் காலூன்றப் போகிறோம் எனச் சவால் விடுகின்றனர். தமிழக மக்களே சவாலைச் சந்திக்கத் தயாரா?
வலி நிவாரணிகளால் உயிரை விடும் அமெரிக்க மக்கள்
“ஓப்பியாய்டு உபயோகத்தில் மருத்துவர்களின் பங்கு கணிசமாக உள்ளது. எதற்கெடுத்தாலும் வலி நிவாரணிகளை அளவுக்கதிகமாகப் பரிந்துரைக்கின்றனர்.
மோடி அரசைக் கண்டிக்கும் ஓய்வுபெற்ற IAS – IPS அதிகாரிகள்
இந்திய அரசியல் சாசனத்தின் மீதான பொறுப்புணர்வின் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறோம்.இந்தியாவில் நடைபெற்று வரும் சம்பவங்கள் ஏற்படுத்தியிருக்கும் ஒரு அமைதியற்ற உணர்வு தான் எங்களை இக்கடித்தை எழுதச் செய்திருக்கிறது.
ஸ்டிக்கர் சாதனையில் லேடியை முறியடித்த மோடி !
இது போல் போலியாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிடுவதும், அமெரிக்காவை அகமதாபாத்தில் படைப்பதும் சுவிட்சர்லாந்தை சூரத்தில் பிரசவிப்பதும் பாஜகவிற்கு சாதாரணமானது தான்.
பொன்னாரிடம் சரணடைந்த பொன்னம்பலம் !
சென்னைக்கு தெற்கே இருக்கும் தமிழகத்தின் குண்டுமணி அளவைக் கூட அறியாத ரஜினியைக் கூட வடக்கே இருந்து வந்த மோடி வீடு தேடி பார்க்கும் போது,தெற்கே இருக்கும் பொன்னார் போன்ற காவிக்கட்சியின் கருப்புத் தரகர்கள் வெள்ளித்திரையின் ஓய்வு பெற்ற நட்சத்திரங்களை தேடி ஓடுவார்கள் என்பதில் என்ன அதிசயம்?
பல்லாவரம் பொதுவழியை ஆக்கிரமிக்கும் பொறுக்கி நித்தியானந்தா சீடர்கள்
ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து, அதிகாரத் தரகு போன்றவற்றில் காஞ்சி சங்கர மடம் இன்றும் நம்பர் ஒன்னில் இருக்கிறது. நித்திக்கு சின்ன வயது என்பதால் போட்டியில் இன்னும் இருக்கிறார். இவர்களுக்கு நாம் வேட்டு வைக்கவில்லை என்றால் பொதுப்பாதை மட்டுமல்ல, மக்களின் பொது வாழ்க்கையின் ஆரோக்கியமே பறிபோகும்.
 அதிர்ச்சி செய்தி : இவ்வாண்டு தமிழக நெல் கொள்முதல் 85% சரிவு
தமிழ்நாட்டு விவசாயிகள் தனியார் நுண்கடன் நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கி 125% வரை வட்டி அதிகரித்திருப்பதை பி.யு.சி.எல் ஆய்வறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
 ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி
ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரத்தின் படி ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு மனித உயிர் பறிபோகிறது. 2017, ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து இதுவரை 859 மனித உயிர்கள் பலியாகி உள்ளன.
 பாஜக ஆளும் மும்பையில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடையாது
மும்பை மாநகராட்சி பள்ளி குழந்தைகளில் மூன்றில் ஒரு சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிகப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
 ஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி ?
அத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டையரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன.
 நீலகிரி : எருமைகளின் எமனாக தமிழக வனத்துறை
ஏற்கனவே வறட்சி, அரசின் அலட்சியம் என்று வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டு வதைபடும் இப்பழங்குடி மக்கள் வனப்பகுதிகளில் மாடு மேய்க்க கூடாது என்று சொன்னால் எங்கேதான் போவார்கள்?
 பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர் !
இதே போன்ற ஒரு ஆட்சியைத் தான் நமது தமிழகத்திலும் ஏற்படுத்தப் போவதாகவும், காவிக் கொடியை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப் போவதாகவும் சூளுரைத்துள்ளார் தமிழிசை.
 ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்
ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர்.
 இந்தியாவின் தீட்(ண்)டப்படாத வைரங்கள் – ஆவணப்படம்
இந்தியாவில் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் மேதைகளுக்குரிய அறிவுத்திறனை கொண்டுள்ளனர். ஆனால் அவர்கள் பெரும்பாலானோர் சேரிகளில் வாழ்வதால் ஒருபோதும் கண்டறியப்படுவதில்லை.
 யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்
சவூதி மக்களை பொருத்தவரை தீவிரவாதம் என்பது பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு, ஈராக் மற்றும் அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளே!
 விவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது !
கருப்புப் பணக்காரர்கள் பிடிபடப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் சிரமங்களைப் பொறுத்துக் கொண்ட விவசாயிகள் சந்தை நிலைமை இன்று வரை சீரடையவில்லையெனினும் கருப்புப் பணம் ஏதும் பிடிபட வில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.
 ஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் – என்னடா நாடு இது ?
2007-ம் ஆண்டு நடைபெற்ற கோரக்பூர் கலவரத்தின் சூத்ரதாரியான காவி ரவுடி ஆதித்யநாத்தை முதல்வராகக் கொண்ட மாநிலத்தில், ஜனநாயகப் போராட்டத்திற்கு நீதியாக பொய் வழக்குகளைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?
 டொனால்ட் டிரம்ப் – சவுதி நாடுகளின் கள்ளக்கூட்டணி
ஹிலாரியின் மின்னஞ்சலில் சவுதியும், கத்தாரும் கூட்டுக்களவாணிகள் என்பதுடன் சேர்த்து டிரம்ப் ஒரு பொய்யர் என்பதையும் நிரூபிக்கிறார்.
 நீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார் !
வரும் ஜூன் 24 -ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இனி 2017 -ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த எந்த வழக்குகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் உயர்நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
 சீர்காழியில் ஜனநாயகத்திற்கு நிரந்தரத் தடை ?
மக்களுக்கு சட்டப்படியான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால், மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக போவதை தவிர வேறு வழியில்லை என்பது அரசுக்கு தெரியும்.
 துக்ளக் மோடி அரசால் பாதாளத்தில் பொருளாதாரம் – SBI அறிக்கை !
இன்றைய தேதி வரை அரசின் தரப்பில் இருந்து உண்மை நிலையை விளக்கி எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் வெளியாகியுள்ளது.
 கூவத்தூர் வீடியோ : ஏ 1 ஏ 2 கட்சியில எவன்டா யோக்கியன் ?
6 மாத ஆட்சியில் கிருஷ்ணா நீரை கொண்டு வந்தார், ஜல்லிக்கட்டுக்காக டெல்லி சென்று பேசினார் என்று படித்தவர்கள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள் கூட பேசுவதை பார்க்கமுடிகிறது.
 தமிழக அதிகாரிகளை உதைத்த ராஜஸ்தான் RSS ரவுடிகள் – வீடியோ
முறையான ஆவணங்களுடன் இந்த மாடுகள் எடுத்துச் செல்லப்பட்டாலும் கூட பாசுப்பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த ரவுடிகள், அதிகாரிகளுக்கு விளக்குவதற்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் அந்த ஐந்து லாரிகளை தாக்கியுள்ளனர்.
  அமெரிக்கா : கருப்பின மக்களை மிரட்டும் பன்றிகளின் கூவம்
கதவுகள், ஜன்னல்களைத் தாழிட்டுக்கொள்வோம், துணிமணிகளை வெளியே உலர்த்தும் வாய்ப்பே இங்கில்லை: தலைவலி, மூச்சுத்திணறல் போன்ற பல்வேறு பிரச்சினைகள் இங்குள்ள மக்களுக்கு சர்வசாதாரணமாகிவிட்டது.
   பாஜக ஆளும் மாநிலங்களில் குழந்தை திருமணங்கள் அதிகம் !
இவ்வாய்வில் குழந்தை திருமணங்கள் மிகமிக குறைவாக நடைபெறும் முன்னேறிய மாநிலங்களாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் இந்திய மாநிலங்கள், காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
  பாண்டேவை பப்பிஷேம் ஆக்கும் நக்கலைட்ஸ் வீடியோ
அரசு, ஆர்.எஸ்.எஸ்-இன் அடக்குமுறை தேடி வருவது நிச்சயம் என்ற நிலைமையில் இப்படி நக்கலைட்ஸ் நண்பர்கள் வெளிப்படையாக பேசுவது மகிழ்ச்சிக்குரியது, வாழ்த்துக்கள்!
  பணிந்தது பாஜக ! வென்றனர் மராட்டிய விவசாயிகள் !!
“மயிலே! மயிலே!” என்றால் எந்த மயிலும் இறகு போடாது, பிடுங்கினால் தான் இறகு கிடைக்கும் என்பது மராட்டிய விவசாயிகளுக்குப் புரிந்திருக்கிறது, சாதித்திருக்கிறார்கள். ஆனால் தமிழக விவசாயிகளோ, மயிலுக்கு மனுக் கொடுத்து விட்டுக் காத்திருக்கிறார்கள். இறகு அல்ல, மயிரு கூடக் கிடைக்காது என்பது தான் எதார்த்தம்!
  பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமப்பதில் கங்கா மாதா இரண்டாம் இடம் !
கங்கா மாதாவை உலகின் பிளாஸ்டிக் கழிவுகளைச் சுமப்பதில், இரண்டாவது இடத்துக்கு முன்னேற்றியுள்ளார் மோடி. அடுத்து வரும் கும்பமேளா முடிந்ததும் கங்கையை முதலிடத்துக்கு உயர்த்தும் வேலையை அகோரிகள் பார்த்துக் கொள்வார்கள்.
 அரபுலகில் தோன்றிய நவீன வேதியியலின் பிதாமகர்கள் – வீடியோ
அரபுலகின் இன்றைய அனைத்து கட்டுமானங்கள் மற்றும் வளர்ச்சிக்கு அடிப்படை அங்கு கிடைக்கும் எரிபொருட்கள் – வேதியியல் தொழில்துறை. அறிவியலுக்கும், நவீன வேதியியல் தொழில்துறைக்கும் இஸ்லாமிய அரபுலகம் அளித்த பங்களிப்பை இந்த ஆவணப்படம் விளக்குகிறது.
போயஸ் : பொறுக்கித்தனத்தில் விஞ்சி நிற்பது அத்தையா மருமகளா ?
போயஸ் தோட்டத்தின் வாசலில் நடந்த ஆபாசக் கூத்துகளுக்கு ஊடகங்கள் அளித்து வரும் கவரேஜைக் காணும்போது, இதைப்பற்றி எழுதவும் கூசுகிறது. மானங்கெட்ட  நிலையின் உச்சம் என ஒன்று இருப்பதாகக் கொண்டால், அந்த நிலையை எட்டியிருப்பது யார், தீபாவா, போலீசா, ஊடகங்களா, தமிழக மக்களா என்று கேட்டால் எளிதில் பதில் சொல்லி விட முடியாது.