privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்ம.பி. விவசாயிகள் படுகொலை : நெல்லை - கோவில்பட்டி - நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் !

ம.பி. விவசாயிகள் படுகொலை : நெல்லை – கோவில்பட்டி – நாகர்கோவிலில் ஆர்ப்பட்டம் !

-

த்திய பிரதேசத்தில் பா.ஜ.க அரசால் விவசாயிகள் சுட்டுக்கொல்லப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் சார்பில் நெல்லை, நாகர்கோவில், கோவில்பட்டி ஆகிய இடங்களில் 14.6.17 அன்று மாலை 5:00 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

நெல்லை ஆர்ப்பாட்டத்திற்கு  மக்கள் அதிகாரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். கண்டன முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது.

மக்கள் அதிகாரம் தோழர் நாகராசன் சிறப்புரையாற்றினார். தனது சிறப்புரையில்,  எப்படி இந்திய விவசாயமும்,  விவசாயிகளும் படுகுழிக்குத் தள்ளப்பட்டனர் என்பதையும், உலகம் முழுக்க குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளிகளின் இலாபவெறிக்காக விவசாயம் அழிக்கப்பட்டு மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர் என்பதைப் பற்றியும் எடுத்துக் கூறினார்.

மேலும், மோடி அரசு எந்த அளவுக்கு முட்டாள்தனமாகவும்,  கொடூரமாகவும் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தோடு செயல்படுகிறது, என்பதை எளிமையாக உணர்த்தும் வகையில் பேசினார். இறுதியாக, எப்படி விவசாயத்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளும் சீரழிந்து மக்களுக்கு எதிரானதாக உள்ளது என்று கூறி, ஒரே மாற்று மக்கள் அதிகாரமே என்பதைக் கூறி முடித்தார். தோழர். சரவணன் நன்றி கூறினார்.

நூற்றுக் கணக்கான மக்கள் சுற்றிலும் நின்று ஆர்வமாக பேச்சைக் கவனித்தனர்.

நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்திற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவராஜபூபதி தலைமை தாங்கினார். முதலில் பேசிய குமரி மாவட்ட பாசனசபை தலைவர்கள் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் புலவர் செல்லப்பா டாஸ்மாக் போராட்டம் பற்றியும், அதில் எப்படி மக்கள் போராடினர் என்பதைப் பற்றியும் மக்கள் அதிகாரம் அமைப்பின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதையும் குறிப்பிட்டுப் பேசினார்.

அடுத்து பேசிய பூமி பாதுகாப்பு சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு பத்மதாஸ் விவசாயிகளுக்காக களத்தில் இறங்கிப் போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்திப் பேசினார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் நெல்லை அமைப்பாளர் தோழர் சிவா, விவசாயப் பிரச்சினைக்கு அதிகாரத்தைக் கையில் எடுப்பதே தீர்வு என்பதைவலியுறுத்தும் விதமாகப்பேசினார்.

குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் திரு வின்ஸ் ஆண்ட்டோ விவசாயிகள் எப்படிபோராட வேண்டும் என்பதற்கு மத்தியபிரதேச விவசாயிகளை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பேசினார். மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், திருச்சி வழக்கறிஞர் காவிரிநாடன் கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபத்திற்கு நம் விவசாயிகள் கொல்லப் படுவதையும், விவசாயம் அழிக்கப்படுவதையும், அதற்கேற்ப மாட்டுக்கறிதடை உள்ளிட்ட உத்தரவுகள் போடப்பட்டு அதிகாரத் திமிரோடும், கார்ப்பரேட் அடிமையாகவும் மோடி அரசு செயல்படுவதையும் அம்பலப்படுத்திப் பேசினார்.

இறுதியாக மக்கள் அதிகாரம், நாகர்கோவில் பகுதி தோழர் வனிதா நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் பரவலாக பெண்கள் கலந்து கொண்டனர். மக்கள் அதிகாரமே தீர்வு என்பதை வலியுறுத்தி எழுப்பப்பட்ட முழக்கங்களும், உரைகளும் மக்களிடையே பரவலாக கவனத்தைப்பெற்றன.

கோவில்பட்டியில் மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆதி தலைமை தாங்கினார். முதலில் பேசிய கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாய ஆர்வலர் ஜெயேந்திரன், இன்று விவசாயம் திட்டமிட்டு அரசால் அழிக்கப்படும் சூழலில், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளோடு இணைந்து செயலாற்ற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் விதமாக பேசினார்.

அடுத்து கண்டன உரையாற்றிய மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரை மாவட்ட செயலாளர், தோழர் லயனல் அந்தோணிராஜ் அரசு விவசாயிகளுக்கு எதிரானதாகவும், கார்ப்பரேட்டுகளின் தரகனாகவும் மாறிப் போனதையும், ஒரே தீர்வு மக்கள் அதிகாரமே என்பதை நிறுவும் வகையிலும் உரையாற்றினார்.

இறுதியாக தோழர் பொன்ராஜ் நன்றியுரையாற்றினார். நூற்றுக் கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தை கவனித்து, பிரசுரத்தை ஆர்வமுடன் வாங்கிப் படித்தனர்.

( படங்கலைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க