privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதமிழக செய்திகள் : ஓபிஎஸ் முதல் மாட்டுச் சந்தை வரை !

தமிழக செய்திகள் : ஓபிஎஸ் முதல் மாட்டுச் சந்தை வரை !

-

  • ராம்நாத் கோவிந்தின் மனுவில் முன்மொழிந்து கையெழுத்து போட்ட எடப்பாடி

ப்பல்லோவில் ஜெயலலிதாவின் ஆம்புலன்ஸ் சென்றதுமே அதிமுக கட்சி எனும் அடிமைகளின் கூட்டம் கமலாயத்தின் கட்டுப்பாட்டினுள் சென்றுவிட்டது. ஜெயாவின் பிணத்தருகே வெங்கய்யா நாயடு ஆணி அடித்த மாதிரி அமர்ந்திருந்த போதே அடிமைகள் தமது புதிய எஜமான்களை தொழுது வாழ போற்றிப் பாடல்களை இயற்றிவிட்டனர்.

இடையில்  சமாதி தியானம், இரண்டு அணி, மூன்று பிரிவு, திவாகரன் சிறை, சிறை மீட்பு போன்றவை நடந்தாலும் அனைவரும் பா.ஜ.க என்ன நினைக்குமோ அதுதான் வேதவாக்கென நடந்து கொண்டனர். தற்போது குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க-வின் ராம்நாத் கோவிந்தை ஆதரிப்பதிலும் அவர்கள் போட்டி போடுகின்றார்கள். அதன் முத்தாய்ப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தில்லி சென்று ராம்நாத் கோவிந்தின் வேட்புமனுவிலேயே முன்மொழிந்து கையெழுத்திட்டுள்ளார்.

ஓபிஎஸ், ஏபிஎஸ் இருவருமே மோடி யாரைக் காட்டுகிறாரோ அவர்களுக்குத்தான் வாக்கு என்று சொல்லிவிட்டனர். போட்டியில் பின்தங்கிவிடக் கூடாது என்று விரைந்த தினகரனும் அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்கள் அனைவரும் மோடி காட்டும் வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள் என்று அறிவித்தார். ஜனாதிபதி தேர்ந்தெடுத்த பிறகு தனது சிறை வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர சசிகலாவும் இதைத்தான் சொல்லியிருப்பார்.

ஊழலில் திளைத்த கூட்டத்தை ரெய்டு எனும் பூச்சாண்டியின் மூலமே பட்டியில் அடைத்து விடமுடியும் என்று கண்டு கொண்ட பாஜக-விற்கு இந்தியாவிலேயே முதல் தர அடிமைகள் யார் என்றால் அது அ.தி.மு.க கூட்டம்தான்.

  • ஈரோடு மாட்டுச்சந்தையில் வர்த்தகம் மந்தம்

ரோடு கருங்கல் பாளையத்தில் நேற்று 22.06.2017 கூடிய மாட்டுச் சந்தையில் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. மோடி அரசின் மாடு விற்கத்தடை காரணமாக பர்கூர் சோதனைச் சாவடி வழி வரும் ஆந்திர, கர்நாடக வியாபாரிகள் ஏற்றி வரும் மாட்டு வண்டிகளை அபராதம் விதிக்கப்படுமென்று போலிசார் விரட்டுகின்றனர்.

அதே போல கரூர் பகுதியிலிருந்து வரும் உள்ளூர் மாட்டு வண்டிகளும் போலீசின் கெடுபிடியால் திருப்பி அனுப்பப்பட்டன. வழக்கமாக 1500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனையாகும் சந்தையில் நேற்று பாதி அளவு கூட விற்பனையாகவில்லை.

மாடுகளை விற்கத் தடை காரணமாக விவசாயிகள் இனி மாட்டு வளர்ப்பையே கைவிடும் நிலைமைதான் வரப்போகின்றது.

  • கோவையில் கொடிகட்டிப் பறக்கும் லாட்டரி வியாபாரம்.

ஜெயா ஆட்சியில் 2005-ம் ஆண்டு லாட்டரி தடை செய்யப்பட்டாலும் ஆங்காங்கே சட்ட விரோதமாக லாட்டரிச் சீட்டுக்கள் விற்பனை அதிகரித்து வருகிறது. கேரளாவில் இருந்து மாட்டு வணிகர்களை தடுக்கும் போலீசு லாட்டரி ஊடுருவலை மட்டும் மாமூல் வாங்கிக் கொண்டு அனுமதிக்கிறது. கோவையில் மதுக்கரை, குனியமுத்தூர், சுந்தராபுரம், உக்கடம், காந்திபுரம், சிங்காநல்லூர், கணபதி, ஆர்.எஸ்.புரம், சரவணம்பட்டி முதலான குடியிருப்பு பகுதிகளில் டோர் டெலிவரி மூலம் லாட்டரி வினியோகிக்கப்படுகிறது.

துண்டுச் சீட்டுகளில் எண்களை எழுதித் தருவது, செல்பேசிகள் மூலம் லாட்டரி எண்களை அனுப்புவது, வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் சீட்டுக்களை படமெடுத்து அனுப்புவது என நவீன வழிகளிலும் விற்பனை நடக்கிறது. பத்து ரூபாய் லாட்டரிக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் பரிசு, 20 ரூபாய் லாட்டரிக்கு 10 இலட்சம், 50 ரூபாய் லாட்டரிக்கு 3.5 லட்சம், 100 ரூபாய் லாட்டரிக்கு ஒரு கோடி என அனைத்து வித வரிசைகளிலும் லாட்டரி விற்பனையாகின்றன.

“வின்வின், தனஸ்ரீ, பவுர்ணமி, காருண்யா, சொர்ணலட்சுமி, திவ்யலட்சுமி, சிக்கிம், மணிப்பூர்” என பல வித லாட்டரிகள் கோவையில் கிடைக்கின்றன. தொழிலாளிகள், உடல் உழைப்பாளிகள் பலர் இந்த போதையில் சிக்கி வருமானத்தை இழக்கின்றனர். டாஸ்மாக் விற்பனையை சட்டபூர்வமாகவே நடத்தும் அரசு இந்த சட்டவிரோத லாட்டரியைக் கண்டு கொள்வதில்லை. லாட்டரி விற்பனையிலேயே தரகு முதலாளியாக வளர்ந்த கோவை மார்ட்டின் இங்கேதான் எழுந்தருளியிருக்கிறார்.

கோவையில் நடக்கும் லாட்டரி விற்பனையின் அளவு நிச்சயம் சில போல கோடிகளில் இருக்கும் என்பதால் எடப்பாடி அரசும், போலீசும் தங்களது வளத்தை பெருக்கிக் கொள்ள கண்டு கொள்ளாமல் இருக்கின்றன.

டாஸ்மாக் போராட்டம் போல மக்களே களத்தில் இறங்கி இந்த லாட்டரி கும்பல்களை பிடித்து லாட்டரிச் சீட்டுக்களை தீயிட்டு கொளுத்த வேண்டும். இல்லையேல் மதுவுக்கும், லாட்டரிக்கும் நமது உழைப்பாளிகள் தங்கது உழைப்பை எழுதிக் கொடுத்து விடுவார்கள்.

  • மாடு விற்கத் தடை இருக்கும் போது கால்நடை வளர்ப்பை எப்படி ஊக்குவிக்க முடியும்?

மிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் கால்நடை வளர்ப்பில் பின்தங்கிய ஒரு கிராமத்தை தெரிவு செய்து, கோழிகளையும், மாடுகளுக்கான மடிநோயை தடுக்கும் மருந்துகளையும் அளிப்பார்களாம். இதில் நடக்கும் வழக்கமான ஊழல் விவகாரங்களை தள்ளிவிட்டு பார்த்தாலும், மோடி அரசின் மாடு விற்க தடை இருக்கும் போது மாடு வைத்திருக்கும் விவசாயிகளே அதை விற்பதற்கு பெரும்பாடு படும் போது புதிய மாடுகளை யார் வளர்ப்பார்? கால்நடை பல்கலைக்கழகம் முதலில் எடப்பாடியிடம் சொல்லி மோடி அரசு உத்திரவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க கூறட்டும். பிறகு கிராமங்களை தத்தெடுத்து மாடுகளை ஆரோக்கியமாக வளர்ப்பது குறித்து யோசிக்கலாம்.

  • கிராம சபைகளுக்கு பிளாஸ்டிக் விற்க உரிமை, டாஸ்மாக் தடுக்க அதிகாரம் இல்லை.

மிழகத்தில் 50 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள் விற்பனைக்கு தடை இருக்கிறது. ஆனால் அதை தடுக்க முடியாத அரசு மாதம் ரூ 4 ஆயிரம் முதல் 48 ஆயிரம் வரை உள்ளாட்சி அமைப்புக்களிடம் கட்டணமாக செலுத்தலாம் என உத்திரவிட்டுள்ளது. இந்த பையை பயன்படுத்தும் விற்பனையாளர்கள் வாடிக்கையாளரிடம் வசூலித்துக் கொள்ளலாம் எனவும் வழிகாட்டியுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதியோ இல்லை அனுமதி மறுப்போ கொடுக்கும் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இல்லை என்று உயர்நீதிமன்றம் சொல்லியிருப்பதை இதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். மதுவின் வரவு அரசிற்கு, நெகிழியின் வரவு ஊள்ளாட்சிக்கு! மதுவின் கொள்ளையில் மிடாஸ் போன்ற தலைமை அதிமுக கம்பெனிகள் இருந்தால் நெகிழி அனுமதி மூலம் உள்ளூர் அதிமுக பிரமுகர்கள் வசூலிப்பார்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க