privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஎண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு

எண்ணூர் துறைமுகத்தை தனியாருக்கு விற்கும் மோடி அரசு

-

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்திருப்பதைக் கண்டித்து, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

லை முழுங்கி மோடி அரசு, சுமார் 3,100 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தை தனியாருக்குத் தாரைவார்க்க முடிவு செய்திருப்பதைக் கண்டித்து, அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் 22-06-2017 அன்று துறைமுக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கடந்த 2000-ம் ஆண்டு ரூ.4,800 கோடி செலவில் எண்ணூர் துறைமுகம் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் தமிழக மின்சார வாரியத்திற்கும், தனியார் நிறுவனங்களுக்கும் சேர்த்து 250 லட்சம் டன் நிலக்கரி இத்துறைமுகத்தின் மூலம் தான் இறக்குமதி செய்யப்படுகிறது. நிஸான், ஃபோர்டு, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களின் கார்கள் ஆண்டுக்கு 3 இலட்சம் எண்ணிக்கையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது தவிர, சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களும் இறக்குமதியாகின்றன.

காமராஜர் துறைமுகம், ஏற்றுமதி, இறக்குமதி உள்ளிட்ட நடவடிக்கைகளால் கடந்த 2015-ம் ஆண்டில் மட்டும் ரூ.353 கோடி இலாபத்தை ஈட்டியுள்ளது. இது 2016-ம் ஆண்டில் ரூ.450 கோடியாக உயர்ந்துள்ளது. இத்துறைமுகம் தான் 2013-ம் ஆண்டின் மிக இலாபகரமான துறைமுகம் என்று மத்திய அரசின் பாராட்டைப் பெற்றது. இந்தியாவில் உள்ள துறைமுகங்கள் கையாளும் மொத்த சரக்குகளில் சுமார் 19 விழுக்காடு வரை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் மட்டுமே கையாளப்படுகிறது. தற்போது இத்துறைமுகத்தை மேலும் விரிவாக்கும் பணி ரூ.8,000 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.

இத்துறைமுகத்தில் மத்திய அரசின் பங்கு 68 விழுக்காடும், சென்னைத் துறைமுகத்தின் பங்கு 32 விழுக்காடும் உள்ளது. இந்நிலையில் தற்போது தன் வசம் உள்ள பங்குகளைத் தனியாருக்கு விற்க மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்துப் போராட்டம் நட்த்திய சி.ஐ.டி.யூ. சங்கத்தினர் கூறுகையில், இத்துறைமுகத்தை அதானிக்கு தாரை வார்க்கவிருப்பதாகக் கூறினர். காமராஜர் துறைமுகம் உட்பட இலாபம் ஈட்டக்கூடிய ஐந்து பொதுத்துறை நிறுவனப் பங்குகளை 100% தனியாருக்கு விற்க அரசு முடிவு செய்துள்ளது. அந்த அடிப்படையில் மத்திய அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான அரசு செயலாளர்கள் குழு, எண்ணூர் காமராஜர் துறைமுகம், ஹெச்.எல்.எல் லைப் கேர், இந்திய மருந்துகள் மற்றும் மருத்துவத் தயாரிப்புகள் நிறுவனம், கர்நாடகா ஆண்டிபயாடிக்ஸ் மற்றும் மருத்துவப் பொருட்கள் நிறுவனம் ஆகியவற்றின் 100% பங்குகளை விற்கப் பரிந்துரைத்துள்ளது. இதற்கு ‘நிதி ஆயோக்’ அமைப்பும் ஒப்புதல் அளித்துள்ளது .

இது குறித்து பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் கமிட்டியின் ஒப்புதல் பெறப்பட்டவுடன், இந்நிறுவனங்களின் பங்குகள் விற்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்றே தமிழகத்தில் செயல்பட்டு வரும் நிறுவனமான ட்ரெட்ஜிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்ற நிறுவனத்தின் 73.47% பங்குகளை விற்கவிருக்கிறது மத்திய அரசு. இதன் மதிப்பு சுமார் ரூ.1400 கோடி ஆகும். இந்த ஆண்டு இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்து சுமார் ரூ.15,000 கோடியை திரட்டவிருப்பதாக இந்த ஆண்டின் நிதி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது, மத்திய அரசு.

வீட்டில் உள்ள பொருட்களை விற்றுக் குடுக்கும் குடிகாரனைப் போல் நாட்டின் சொத்தான அரசு பொதுத்துறை நிறுவனங்களை அடிமாட்டு விலைக்கு விற்று வருகிறது மோடி அரசு. அப்படி விற்று வரும் தொகையையும் மீண்டும் கார்ப்பரேட்களுக்கே அள்ளி வழங்குகிறது மோடி அரசு.

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க