privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஎனக்கு ட்ரம்ப் பொம்மைதான் வேண்டும் - மெக்சிகோ குறும்படம்

எனக்கு ட்ரம்ப் பொம்மைதான் வேண்டும் – மெக்சிகோ குறும்படம்

-

ந்தச் சிறுவனுக்கு வாரக்கடைசியில் பிறந்த நாள் கொண்டாட இருக்கின்றனர். தாய் மகனிடம் கேட்கிறாள் என்ன வேண்டுமென்று! மகனோ“டிரம்ப்” பொம்பை வேண்டும் என்கிறான். “என்ன சொன்னாய்?” கோபமும் கவலையுமாக ”டிரம்ப் நம் வீட்டிற்கெல்லாம் வருவது சாத்தியப்படாது” என்கிறாள் தாய். மகனோ மற்றுமொரு எரிச்சலூட்டும் பிறந்தநாள் என்று முனகுகிறான்.

இவனுக்கு எப்படி இந்த யோசனை உதித்தது? குழம்புகிறாள் தாய். அவளை சமாதானப்படுத்துகிறார் தந்தை. அவன் பிறந்த நாள் பொம்மையாக டிரம்ப் வேண்டும் என்று தானே கேட்கிறான் இதிலென்ன தவறு இருக்கிறது என்கிறார். டிரம்ப் ஒரு பிசாசு அதை எந்த வடிவத்திலும் வீட்டிற்குள் அனுமதிக்க முடியாது என்று தாய் உறுதியாக மறுக்கிறாள்.

ஆனாலும் தாய் மனது அல்லவா?

தனக்கு தெரிந்த நபர்களிடம் போனில் விசாரித்துப் பார்க்கிறாள் தாய். ஆனால் யாரிடமும் டிரம்ப் பொம்மை இல்லை. வேறுவழியின்றி மகனை கடைவீதிக்கு அழைத்துச் சென்று வேறு பல பொம்மைகளைக் காண்பிக்கின்றாள். மகனோ டிரம்ப் மட்டும் தான் வேண்டுமென்கிறான். சரி பார்ப்போம் என்று பேசிக்கொண்டே குழப்பத்தில் வீடு திரும்பிய தாய் ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபடுகிறாள். சிறுவனின் பாட்டி தொலைக்காட்சியில் செய்தி பார்த்துக் கொண்டிருக்கிறார். அதில் டிரம்ப் அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் பிரம்மாண்டமான எல்லைச் சுவரைக் கட்டுவது குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். தாயின் மனதில் ஏதோ ஒரு சிந்தனை உதிக்க சில நாட்களில் திரும்பி வருவேன் என்று மகனிடம் சொல்லிவிட்டு வெளியில் கிளம்புகிறாள்.

மெக்சிகோவின் நிலப்பரப்புகளில் நம்மூர் டிவிஎஸ் 50 போன்றதொரு வண்டியில் பயணிக்கிறாள். எங்கோ ஒரு குகையில் ஒருவர் டிரம்ப் பொம்மை செய்கிறார். அதுதான் பிறந்த நாள் பரிசா?

டிரம்ப் பொம்மை தன் முதுகில் கட்டியவாறு திரும்பி வருகிறாள். பிறந்த நாள் விழா ஆரம்பித்து விட்டது. சிறுவனின் கண்கள் கட்டப்பட்டு டிரம்ப் பொம்மை வந்துவிட்டதை உணர்த்துகிறார் சிறுவனின் பாட்டி. கையில் இருக்கும் கம்பால் டொனால்ட் ட்ரம்பை ஆக்ரோஷமாக அடித்து நொறுக்குகிறான் சிறுவன். ட்ரம்ப் முகம் சிதைகிறது.

மெக்சிகோவை அதிகம் நேசிக்கிறேன் என்ற கூட்டம் ஒன்றில் டிரம்ப் பேசிய குரலோடு முடிகிறது அந்த குறும்படம். சாரா கிளிஃப்ட் எழுதி இயக்கியிருக்கும் இந்தக் குறும்படம் நறுக்கென்று ஒரு குழந்தையின் பார்வையில் அமெரிக்காவை எதிர்க்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க