privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காஅதிபர் ட்ரம்ப் ஜொள்ளு வடிப்பதை ரசிக்கும் தினமணி

அதிபர் ட்ரம்ப் ஜொள்ளு வடிப்பதை ரசிக்கும் தினமணி

-

அயர்லாந்து செய்தியாளரை இழிவுபடுத்தும் ட்ரம்ப்!

தினமணியில் 29.06.2017 அன்று ஒரு உலகச் செய்தி வெளிவந்தது. ”தொலைபேசி அழைப்பை பாதியில் நிறுத்தி, நிருபரின் அழகிய புன்னகையை பாராட்டிய ட்ரம்ப் ” என்பதே அந்தச் செய்தி.

வெளியிட்டதோடு டிரம்ப்பை வாழ்த்தி கவிதை எழுதாதது ஒன்று மட்டும்தான் செய்யவில்லை, திருவாளர் வைத்தியை ஆசிரியராகக் கொண்ட தினமணி. அமெரிக்க அதிபராக பதவியேற்றிருக்கும் டொனால்ட் ட்ரம்ப் குறித்து ஏகப்பட்ட பாலியல் புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அந்த புகார்கள் குறித்தோ, பொதுவில் டிரம்ப் குறித்த மதிப்பீடு எதுவுமின்றி அந்த செய்தியின் உண்மைத் தன்மை குறித்து அறிவோ, ஆர்வமோ இன்றி அப்படியே அமெரிக்க ஊடகங்களின் பிரச்சாரத்தை வாந்தி எடுத்திருக்கிறது தினமணி.

டொனால்ட் டிரம்ப் அயர்லாந்தின் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள லியோ வரத்கருக்கு தொலைபேசியில் வாழ்த்துத் தெரிவிக்கும் போது தான் இந்த சம்பவம் நடந்தது.

உண்மையில் என்ன நடந்தது? வீடியோவைப் பார்த்தால் அயர்லாந்து பிரதமருடன் டிரம்ப் தொலைபேசியில் பேசிக்கொண்டிருக்கும் போது அயர்லாந்து நிருபர்கள் அந்த அறையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர். அப்போது டிரம்ப் வலுக்கட்டாயமாக ஒரு அயர்லாந்து நிருபரை ”அழகிய பெண்ணே” இங்கே வா என்று அழைத்து அவரைப் பற்றி விசாரிக்கின்றார்.

அதிபரே அழைத்து விட்டாரே என வேறு வழியின்றி மரியாதையுடன் அந்தப் பெண் நிருபரான கெய்த்திரியோனா பெர்ரி தன்னை அறிமுகப்படுத்தும் அந்த தருணத்தில் மைனர் குஞ்சு டிரம்ப் சற்றும் தொடர்பின்றி “இந்தப் பெண் அழகாகச் சிரிக்கின்றாள்; எனவே அவள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வாள்” என்று அயர்லாந்து அதிபரிடம் கூறி சிரித்தார். இதைச் சற்றும் எதிர்பாராத அந்தப் பெண் நிருபரும் முகத்தைச் சுளித்தவாறே வெளியேறி விட்டார். இது தான் நடந்தது.

இந்தப் பெண் சிரித்ததற்கும், உடனே டிரம்ப் அயர்லாந்து அதிபரான லியோ வரத்கரிடம் “அவள் உன்னை நன்றாகக் கவனித்துக் கொள்வாள் என்பதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? இதில்தான் டிரம்பின் “இரசனை”த் தன்மையைக் குறித்து ஆஹா ஓஹோவென்று அங்கலாய்க்கிறது தினமணி.

தினமணி சொல்வது ஒருபுறம் இருக்கட்டும். அந்தப் பெண் செய்தியாளர் இது குறித்து ட்விட்டரில் வெளியிட்ட செய்தியில் “அது ஒரு விசித்திரமான மற்றும் சகித்துக்கொள்ள முடியாத சம்பவம் “ என்று பதிவிட அந்தப் பெண்ணுக்கு ஆதரவாக பலரும் டிரம்ப்பைக் கழுவிக் கழுவி ஊற்றியுள்ளனர். ‘பெண் பித்தன், காமவெறி பிடித்த மிருகம், காட்டுமிராண்டி” என ஏகப்பட்ட வசைகளுடன் ட்விட்டரில் கொந்தளித்துள்ளனர். ஆனால் வைத்தி மாமாவின் தினமணிக்கோ டிரம்ப்பின் செயல் தேனாய் இனித்துள்ளது.

ஒரு பத்திரிகை என்ற முறையில் சக பத்திரிகையாளர் இழிவுபடுத்தப்பட்டது கூட தினமணிக்கு பிரச்சினையில்லை என்றால் இவர்கள் அன்றாடம் ஊருக்கும், உலகுக்கும் அள்ளிவிடும் உபதேசங்கள் அனைத்தும் முழு ஏமாற்றுதானே?

என்ன இருந்தாலும் காமசூத்திரத்தை உலகுக்கு அளித்த புண்ணிய பாரதத்தின் வாரிசுகளல்லவா?

செய்தி ஆதாரம்:

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க