privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவிவசாயிகளைக் காப்போம் - நெல்லையில் மக்கள் அதிகாரம் கூட்டம் !

விவசாயிகளைக் காப்போம் – நெல்லையில் மக்கள் அதிகாரம் கூட்டம் !

-

விவசாயியை வாழவிடு ! – விவசாயியின் அழிவு, சமூகத்தின் பேரழிவு !! ஆகஸ்ட் 5 தஞ்சையில் நடக்க இருக்கும் மாநாட்டுக்கான விளக்கத் தெருமுனைக் கூட்டம் ஜூன் 3, 2017 அன்று நெல்லையில், தெற்கு பஜார், லூர்து நாதன் சிலை முன்பு நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்விற்கு மக்கள் அதிகாரம் நெல்லை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். அவரது உரையில்  ஆகஸ்ட் 5  மாநாடு நடத்தப்படுவதன் நோக்கத்தைப் பற்றியும், அதில் ஏன் கலந்து கொள்ள வேண்டும், விவசாயிகளுக்காக அனைத்துத் தரப்பு மக்களும் போராட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியும் பேசினார்.

அடுத்து பேசிய விவசாயிகள் விடுதலை முன்னணியின் கோவில்பட்டி பகுதியைச் சார்ந்த தோழர் சக்தி “விவசாயி கடுமையாக உழைத்தாலும் இலாபம் கிடைக்கவில்லை, அதற்கு காரணம் பசுமைப் புரட்சி என்ற பெயரில் அரசாங்கமே இந்திய விவசாயத்தையே நாசமாக்கி விட்டது, எல்லா தரப்பு மக்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்க வேண்டும்” என்று பேசினார்.

நெல்லைப்பகுதி, பொட்டல் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் விவசாயி செல்லம் அவர்கள் எளிமையாகப் பேசினார். “இந்த மாதிரி அமைப்பு முன்பே சந்தித்திருந்தா,  நான் அப்போதே சேர்ந்திருப்பேன், தோழர்கள் சொன்ன பின்புதான் உண்மை தெரிஞ்சுது, இயற்கை சார்ந்த விவசாயத்தை நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று பேசினார். இன்றைக்கு தண்ணீர் காசாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் நாமே பாக்கெட் தண்ணி வாங்கி குடிக்கிறோம். நான் குடத்தில் தண்ணீர் இருந்தால்தான் குடிப்பேன்,” என்று பேசினார்.

குமரி மாவட்ட பாசனத்துறை சேர்மன் திரு. வின்ஸ் ஆண்ட்டோ பேசியபோது, “நீர் நிலைகளை அரசு எப்படி பராமரிக்காமல் உள்ளது, அதிகாரிகள் எப்படி பொறுப்பற்றவர்களாக இருக்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டிப் பேசினார். மக்கள் அதிகாரம் இப்பிரச்சினையில் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எங்களுடைய ஆதரவு எப்போதும் உண்டு” என்று கூறினார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் தேனி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் மோகன் “ஆக 5 மாநாடு மக்கள் அதிகாரத்தின் பலத்தை நிரூபிப்பதற்கோ, பிரபலப்படுத்துவதற்கோ அல்ல, விவசாயியின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்குத்தான் என்பதை உணர்த்தும் விதமாக பேசினார். கடன் நெருக்கடிக்கு ஆளான விவசாயிகள் எந்தளவுக்கு நொடிந்து போயுள்ளார்கள், இந்த அரசு ஈவிரக்கமற்று, குரூரமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாகப் பேசினார். இந்த சூழ்நிலையில் நாம் விடுதலைப் போராட்ட வீரர்களின் வாரிசுகளாக மாற வேண்டும். அதிகாரத்தைக் கையில் எடுக்காமல் தீர்வில்லை” என்று கூறி முடித்தார்.

மக்களிடையே பிரச்சாரத்தின் போது ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. நிகழ்ச்சி முழுவதையும் சுற்றி நின்ற பொதுமக்கள் ஆர்வத்தோடு கவனித்து சென்றனர்.

விவசாயியை வாழவிடு மாநாட்டைப் பற்றிய உந்துதலை ஏற்படுத்தும் விதமாக கூட்டம் நிறைவுற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
நெல்லை – மண்டலம்.