விருதை திரு.கொளஞ்சியப்பர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி அமைப்பின் சார்பாக, புதிதாக வந்த மாணவர்களை “மெரினாவில் மிளிர்ந்த நட்சத்திரங்களே கல்லூரி வானில் ஒளிவீச வாருங்கள் !” வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆர்வமுள்ள மாணவர்கள் பலர் பு.மா.இ.மு-வின் கொள்கை, போராட்டங்களை கேட்டுத் தெரிந்து கொண்டு உறுப்பினராகினர்.
பல மாணவர்கள் ஆர்வத்துடன் தங்களை பு.மா.இ.மு -வில் உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இதனைக் கண்ட கல்லூரி பேராசிரியர்களும் அமைப்பின் கருத்துகளையும், அரசியலையும் கேட்டு தெரிந்து கொண்டனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விருத்தாச்சலம் – 88703 81056.