privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபத்தாம் ஆண்டில் வினவு !

பத்தாம் ஆண்டில் வினவு !

-

உழைக்கும் மக்களின் இணையக் குரலை ஆதரியுங்கள்!

வினவு தளம் துவங்கி ஒன்பது ஆண்டுகள் முடிந்து விட்டன. பத்தாமாண்டு துவக்கத்தில் அடியெடுத்து வைக்கிறோம். தற்போது வினவு இணைய தளத்தை சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் சுமார் 1,30,000 பேர்கள் பின் தொடர்கிறார்கள்.

இன்று வரை 6,875 பதிவுகளை வெளியிட்டிருக்கிறோம். அதற்கு 1,17,574 மறுமொழிகள் வந்திருக்கின்றன. வினவு யூ டியூப்பில் இது வரை மொத்தம் 72 இலட்சம் பார்வைகளும், 20,479,874 நிமிட பார்வைகளும் எட்டப்பட்டிருக்கின்றன. வீடியோ பார்க்கும் சராசரி நேரம் இரண்டரை நிமிடமாகும்.

ஃபேஸ்புக்கில் கடந்த இருவடங்களாக வீடியோக்களை வெளியிடுகிறோம். அவற்றின் பார்வைகளும் சமீக காலத்தில் அதிகரித்திருக்கின்றன. ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் பதிவுகளும் பரவலாக பார்க்கப்படுவதோடு பகிரவும் படுகின்றன.

இருப்பினும் இன்றைய இணைய வளர்ச்சியில் இந்த எண்ணிக்கை சொல்லும்படியான எண்ணிக்கை இல்லை என்பதையும் சேர்த்தே தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆண்டு வழமையான வேலைகளோடு நேரலை செய்திப் பதிவுகளும் கடந்த இரண்டு மாதமாக குறுஞ்செய்திப் பதிவுகளையும் ஆரம்பத்திருக்கிறோம். செய்ய வேண்டிய பணிகள் ஏராளமிருக்கின்றன. ஒரு மாதம் வெளியிடப்படும் பதிவுகளோடு வெளியிட நினைத்தும், பாதியில் எழுதி நிறுத்தப்பட்டவையும் ஏராளமிருக்கின்றன.

தொழில்முறை செய்தி ஊடகமாக நடத்தும் விருப்பம் இருந்தாலும் அதன் அடிப்படை தேவைகள், வசதிகளை இன்னும் செய்ய முடியாமல் இருக்கிறோம்.

ஆகவே இந்த பத்தாமாண்டின் துவக்கமாய் சொல்வதற்கு புதிதாக ஏதுமில்லை. ஆனாலும் பயணம் தொடர்கிறது. இது சோர்வில் வெளிப்படும் வார்த்தை அல்ல. துவளாமல் எத்தடை வந்தாலும்  உழைக்கும் மக்களின் இணையக் குரலாய் வினவு வெளிவந்தே தீரும் என்பதன் மறுபக்கம்.

இதுநாள் வரை வினவு எனும் நமது மக்கள் ஊடகத்தை நடத்துவதற்குரிய நன்கொடை குறித்து நாங்கள் பெரிதும் கவலைப்படவில்லை. அதற்குரிய விசேடமான முயற்சிகளையும் எடுக்கவில்லை. ஒரு சில நண்பர்கள் மட்டும் தொடர்ந்து நன்கொடைகளை கிரமமாக அனுப்பித் தருகிறார்கள். அவை எமது செலவில் ஒரு சிறிய பங்கை எடுத்துக் கொண்டாலும் இத்தனை ஆண்டுகளில் எமக்கென நிரந்தரமான நன்கொடைகளோ, கிரமமான ஆதரவோ இல்லை.

இதற்கு எல்லாரையும் விமரிசிப்பது ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் மக்கள்தான். நன்கொடை குறித்து நாங்கள் கவலைப்படவில்லை என்றாலும் நீங்கள் கவலைப்பட்டிருக்க வேண்டும். இலாப நோக்கம், விளம்பரம் அற்ற ஒரு மக்கள் ஊடகம் இன்னும் பெரிதாக வளரவேண்டுமென்றால் அது உங்கள் கையில்தான் உள்ளது.

அச்சுப்பத்திரிகளின் தேக்கமும், பத்திரிகையாளர்களின் வேலையிழப்பும் மேலை நாடுகளில் பெரும் பிரச்சினையாக மாறிவிட்டன. காத்திரமான பத்திரிகைத்துறை அனுபவத்தை கற்றுக் கொடுக்கும் ஊடகங்கள் அங்கே அருகி வருகின்றன.

இணையம் வந்த பிறகு அனைத்து ஊடகங்களும் இணையத்தில் முதன்மை இடத்தை வைத்து செயல்படுகின்றன. கார்டியன் போன்ற பத்திரிகைகள் கூட வாசகர்களின் சந்தாக்களை வைத்து நடத்தப்படுகின்றன. இந்நிலையில் குறைந்தபட்ச பொருளாதார வசதியோடும், விளம்பரம் இன்றியும் ஒரு மக்கள் ஊடகத்தை நடத்துவது சவாலானது என்பதை நீங்களும் மறுக்க மாட்டீர்கள்.

இந்த ஆண்டிலிருந்து வினவுக்கு நீங்கள் நன்கொடை அனுப்பும் முகமாக சந்தா வசதிகளை துவக்கியிருக்கிறோம். இதன் பொருள் இனிமேல் வினவு காசு கொடுத்துத்தான் படிக்க வேண்டியிருக்கும் என்பதல்ல. எப்போதும் வினவு அனைத்து மக்களுக்கும் இலவசமாகவே கிடைக்கும்.

எனினும் சந்தா கட்டுபவர்களுக்கு வாரந்தார குறுஞ்செய்தி மின் புத்தகம், புதிய கலாச்சாரம், புதிய ஜனநாயகம் மின் புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் ஆகியன அனுப்பப்படும். இவைகளை தனிக் தனிக் கட்டுரைகளாக இலவசமாக அனைவரும் படிக்க முடியும்.

ஆகவே இந்த சந்தா முறை என்பது நன்கொடைக்கான ஒரு மாற்று வடிவம் என்றும் சொல்லலாம். தற்போது இணைய பண பரிவர்த்தனை வளர்ந்த பிறகு அதற்கான வசதிகளை செய்யாதது எமது பிழை. தற்போது அதை சரி செய்திருக்கிறோம்.

இனி நீங்கள் (இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள்) டெபிட் கார்டு, கிரெடிக் கார்டு மூலம் பணம் அனுப்பலாம். ஆதரியுங்கள்!

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

சந்தா செலுத்த கீழ்க்கண்ட இணைப்பை அழுத்துங்கள்

  1. பல முகம் தெரியா கம்யுனிச தோழர்களின் உழைப்பில் மிளிரும் வினவு மேலும் மேலும் தொழிலாளர் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக போராடும் என்ற நம்பிக்கையுடன்…… வாழ்த்துக்கள் வினவு….

  2. உழைக்கும் மக்கள் சார்பாக வினவுக்கு எனது வாழ்த்துக்கள்.

    • நன்றி லெட்சுமி, விவாதங்களில் தொடர்ந்து பங்கு பெறுங்கள்!

  3. வினவுக்கு வாழ்த்துக்கள்… அ.தி.மு.க அரசு மற்றும் பாசிச மோடி அரசும் வினவை முடக்க செய்த முயற்சிகளையும், அதை எதிற்கொண்ட தீரத்தையும் வாசகர்களுக்கு விளக்கியிருக்கலாம்
    தொடருட்டும் வினவின் மக்கள் பணி

  4. Konjame konjamenum paatali varkka arasiyal purindhirukiren enil athu mulukka vinavayum athan vasagargalayume serum.Mikka nandri vinavukkum vasaga nanbargalukum.vinavu tholargalin kadumayana ulaippu puratchi nokki thirala irukkum makkalukku perithum uthaviyai amayum.vinavu naam aamai nadaye poduvom.athu muyalin vegethayum vida vegamanathu.vivegamanathum kooda puratchikku panipuriyum vinavu thodarum kalangalil purtchikku pin adhai pathukappathu kurithu eludhum kaalam viraivaai udhikka purtchikara vaalthukkal.nandri

  5. மிக தைரியமான பணி, அருமையான ஆக்கங்கள், எளிய வர்க்கத்தின் நம்பிக்கை குரல்,

    ஆபாசமும் அடுத்த வீட்டு ரகசியமும் பகிரும் ஊடகம் போன்று அல்லாமல் மிக தெளிவாக எழுதுவதால் தான் “வினவு” பிற ஊடகங்களில் இருந்து தனித்து நிற்கிறது.

    ஆயிரம் பேர் கடந்து சென்றாலும் உண்மைகளை விரும்பும் பத்து பேர் வினவை நிச்சியம் தேடுவார்கள்.

    அதில் நான் ஒருவன்.

    • நன்றி அகமது, உங்களைப் போன்றவர்கள் வினவு தளத்தை தேடுவது அதிகரிக்கட்டும்!

  6. என்னை போன்ற தமிழக இஸ்லாமியர்களுக்கு வினவு பெரிய ஆறுதல்.
    ஒரு நேரத்தில் பெரிய அச்சமும் அவநம்பிக்கையும் வாட்டிய நேரம்.மோடி பிரதம வேட்பாளராய் அறிவிக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், காலை மாலை தினசரிபத்திரிகளை இணைய்த்தில் படிக்கிற பொழுது செய்திக்கு கீழே இருக்கும் பதிவுகளில் உள்ள வாசங்கள் ஒட்டு மொத்த தமிழகமும் மத வெறிக்கு பலியாகி விட்டதோ என நிலைக்கும் அளவிற்க்கு அதில் வாசக கருத்துகள் என்று பல பதிவாகியிருக்கும்.
    அந்த நேரத்தில்தான் வினவு அறிமுகம் எனக்கு கிடைத்தது.அதுதான் என் மனதை தூக்கி நிறுத்தியது.
    என் சகோதர மக்கள் எவ்வளவு முற்போக்காளர்கள் சிந்தனையாளர்கள் என்று நம்பிக்கையை கொடுத்தது.
    செய்திகளின் ஆழமான நுட்பமான பார்வை அதை வெளிப்படுத்தும் விதம் துளியும் அசிங்க ஆபாசமற்ற தனமை..
    எல்லாவற்றிர்க்கும் மேலாக எந்த கருத்தையும் வாசகர்கள் சுதந்திரமாய் வெளிப்படுத்த அமைத்து கொடுத்திருக்கும் களம்.
    இதில் வரும் கட்டுரைக்கு நிகராக வாசகர்களிலும் பல சிந்தனையாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
    வினவு எனக்கு ஒரு பெரிய ஊன்றுகோல்.

    • நன்றி மீரான் சாகிப், உங்களது நம்பிக்கை தொடரவதற்கு உறுதி அளிக்கிறோம்.

  7. Meeransahib nanba vanakkam.islamiyargalum indhiyargaley endru arivithukollum nilamaiku naattai matha verikkul thalli vittuturukirargal.ondrupaduvom muriyadippom.vinavukkum namakkum pani ondruthan.athu vinai purivathu

  8. நெப்போலியன் சகோ
    ஏன் ஆங்கில எழுத்தைக்கொண்டு தமிழை எழுதி மிக சிரமப்படுகிறீர்கள்
    சிரமப்பட்டாவாது கருத்தை சேர்ப்பித்து விடவேண்டும் என்ற உங்கள் ஆர்வம் புரிகிறது.
    ஆங்கிலம் தமிழ் ஒலிபெயர்ப்பு என்ற வசதி இருக்கிறதே நண்பா..
    நீங்கள் கணிணி மூலம் தொடர்புடையவரென்றால் இந்த வசதி கிடைக்கிறது.ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமம் இருக்கும் எனக்கும் இருந்தது.பழக ப்ழக எளிதாகி விடுகிறது.தவறா இருந்தாலும் பரவாயில்லை
    முயலுங்கள். நாங்கள் புரிந்து கொள்கிறோம்.
    தமிழால் இணைவோம் நண்பா..
    சிலர் ஆங்கிலத்திலேயே உரையாடுதலும் இருக்கிறது.கூடுமானவரை தமிழை பயம்படுத்தலாமே..
    ஒரு தமிழ் தளத்தில் நாம் ஒன்றாய் இணைந்திருக்கிறோம்.
    கண்டிப்பாய் வேறு மொழி காரர்கள் இங்கே வரும் வாய்ப்பு இல்லை.
    இதுபோக இந்த தளத்தின் பெயரான வினவு என்பதே ஈர்க்கிற வசீகரிக்கிற ஒரு தமிழ் சொல்லாக இருக்கிறது.
    உண்மையில் இதற்க்கு உள்ளே வரும்முன் ஏதோ இலக்கிய இதழோ என்றுதான் நினைத்து உள்ளே வந்தேன்.
    இன்றும் அந்த வினவு என்ற சொல்லின் மயக்கம் குறையவில்லை.
    யாருக்கேனும் தமிழ் சரளமாய் வரவில்லையானாலும் தமிழிலேயே முயலுங்கள்.
    இங்கே செந்தமிழும் கை பழக்கமாகவும் இருக்கட்டும்

  9. வாழ்த்துக்கள் தோழர். மிக பெரிய அளவில் மக்களிடையே சென்றடைவதற்க்கு வாழ்த்துக்கள்

    • இல்லையே செயல்படுகிறதே! முதலில் சந்தா இணைப்பை அழுத்துங்கள். அடுத்து மாத, காலாண்டு, அரையாண்டு, ஆண்டு சந்தாக்களில் ஒன்றை தெரிவு செய்து அழுத்துங்கள். அடுத்து add to cart, அழுத்துங்கள், பிறகு view cart அழுத்தி பணம் செலுத்தலாம். கூடிய விரைவில் பட்டன் முறையில் இணைப்பை சேர்க்கிறோம். அதன் பிறகு உடனே சுலபமான முறையில் பணம் செலுத்தலாம்.

  10. செய்தி வட்டாரத்தில் கவனிக்கப்படும் மாற்று ஊடகச் செய்திகளில் வினவின் பக்கம் தவறாமல் இடம்பெற்றுவருகிறது என்றே நினைக்கிறேன். தரவுகளோடு தமிழில் வெளியாகும் பகுப்பாய்வுச்செய்திகள் வினவு தளத்துக்கு வலு சேர்ப்பவை. இப்பணியும் திறனும் மேலும் சிறக்கட்டும்!

  11. வாழ்த்துக்கள்!!

    எளிய மக்களின் வாழ்க்கையை நேரிடையாக சென்று அலசி எழுதுவது தமிழ் வினவு மட்டும் தான் என்று நினைக்கிறேன் .
    அதே போல அறிவியல் கட்டுரைகளும் சிறப்பாக உள்ளன .

    நிறைய வரலாற்று சம்பவங்களும் ( அய்யா வழி ) வினவில் தான் தெரிந்து கொண்டேன் .

    ஆரம்பத்தில் இருந்த அரசியல் கட்டுரைகளின் தரம் குறைவதாக உணர்கிறேன் .ஆரம்ப காலங்களில் தகவல் இருக்கும், கூடவே பிரச்சாரம் இருக்கும்.

    இப்பொழுது தகவல் என்பது இருட்டடிப்பு செய்யப்பட்டு பாதி தகவல் மட்டும் தந்து பிரச்சினை அலசப்பட்டு இருக்கிறது . குறிப்பாக தில்லி விவசாயிகள் போராட்டத்தில் , மத்திய மாநில அரசுகளின் வரையறை, பிற மாநிலங்களின் அணுகுமுறை , தமிழகத்தின் அணுகுமுறை என்கின்ற அலசல் இல்லாமல் , மோடி எதிர்ப்பு என்னும் அளவில் சுருங்கி விட்டது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க