privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்சிறப்புக் கட்டுரை : ஹோமியோபதி - அறிவியலா, நம்பிக்கையா ?

சிறப்புக் கட்டுரை : ஹோமியோபதி – அறிவியலா, நம்பிக்கையா ?

-

லோபதி மருத்துவத்தின் வர்த்தக வேட்டையில் சிக்கிக் கொண்ட மக்களுக்கு பரிச்சயப்பட்ட பெயர் “ஹோமியோபதி”. தமிழகத்தில் கூட முற்போக்கு வட்டாரத்தில் இம்மருத்துவ முறை அதிகம் பிரபலபமானது. இருப்பினும் அறிவியல் ரீதியாக ஹோமியோபதியை எப்படி வரையறுப்பது? அலோபதி மருத்துவம் கார்ப்பரேட் பிடியில் இருந்தாலும் அது முற்றிலும் அறிவியலால் வரையறுக்கப்பட்டது. இதர மருத்துவ முறைகளை அப்படிச் சொல்ல முடியுமா? அப்படி வரையறுக்க வேண்டுமென்றால் அதற்கு என்ன வழிமுறை?

ஹோமியோபதி சுமார் 200 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு முன்னோடி மருத்துவ முறை. ஹோமியோபதி மருத்துவர்களும் நோயாளிகளும் அதற்கு குணப்படுத்தும் திறன் இருப்பதாக நம்புகின்றனர். இன்று ஜனாதிபதிகள், பிரபல பாப் பாடகர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டு இலட்சக் கணக்கானோர் ஹோமியோ சிகிச்சையைப் பயன்படுத்துகின்றனர்.

இங்கிலாந்தின் ஓய்வுபெற்ற பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காம் தனது கால் காயத்திலிருந்து குணமடைய ஹோமியோபதி உதவியதாக குறிப்பிட்டுள்ளார். விக்டோரியா மகாராணி காலத்திலிருந்து பிரிட்டனின் அரச குடும்பத்தினர் ஹோமியோபதியின் பயனர்களாக உள்ளனர்.

சாமுவேல் ஹானிமேன்

ஆனாலும், அறிவியல்ரீதியாக ஹோமியோபதி இன்னும் ஒரு புதிர் தான். பதினெட்டாம் நூற்றாண்டில் சாமுவேல் ஹானிமேன் (1755-1843) என்பவரால் உருவாக்கப்பட்ட அதன் அடிப்படை வழிகாட்டும் கோட்பாடுகளில் சில இன்றும் புதிராகவே உள்ளன. புதிர் என்பதன் பொருள் அதை அறிவியல் ரீதியாக விளக்குவது சாத்தியமில்லை.

ஹோமியோபதி மருத்துவத்தின் அடிப்படையாக இரண்டு கோட்பாடுகளை கூறுவார்கள். முதலாவது “ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்”. ஒவ்வொரு நோயும் ஒருவித அறிகுறியை ஏற்படுத்துகின்றன எனபதை நாம் அறிவோம். குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளை ஒத்த அறிகுறிகளை ஏற்படுத்தும் மருந்துகள் அந்த நோயை குணப்படுத்தும். அதாவது, முள்ளை முள்ளால் எடுப்பதைப் போன்று. அதனால் ஹோமியோபதியில் நோய்குறிகளைக் கொண்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

உதாரணமாக, ஒவ்வாமை காய்ச்சலுக்கு (hay fever) அலியம் செபா (allium cepa) என்ற மருந்து கொடுக்கப்படுகிறது. இது வேறொன்றுமில்லை வெங்காயம் தான். அதிகப்படியாக வெங்காயத்தை உரிக்கும் போது ஏற்படும் விளைவுகள் நம் அனைவருக்குமே தெரியும். மூக்கிலும் கண்களிலும், நீர் வழிந்தோடும், கண் எரியும், தும்மல் ஏற்படும். அதனால், இந்த விளைவுகளை ஒத்த நோய்க்குறிகளைக் கொண்ட ஒவ்வாமை காய்ச்சலுக்கு இம்மருந்து பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த கோட்பாடு ஆயிரக்கணக்கான வெவ்வேறு பொருட்களை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு வழிகோலுகிறது. அதாவது, இந்த பூமியிலுள்ள எதையும் ஹோமியோ மருந்தாக மாற்றலாம். அவற்றுள் சில மிக விநோதமானவை; உயிர்கொல்லி நச்சுத் தாவரங்கள், விலங்குகள், பாம்பின் விசம், கனிமங்கள் மற்றும் உலோகங்கள், காசநோயால் பாதிப்படைந்த மாட்டின் நிணநீர் சுரப்பி என்று எதையும் ஹோமியோ மருந்தாக மாற்றலாம். இவற்றில் பெரும்பாலானவை மிகக் கொடிய விசத் தன்மையுள்ளவை. அவற்றை நேரடியாக எடுத்துக் கொள்வது உடனடி மரணத்தை விளைவிக்கும்.

இந்த பிரச்சினை ஹோமியோபதியின் இரண்டாவது அடிப்படைக் கோட்பாட்டை அளிக்கிறது. “மருந்தை வீரியப்படுத்துதல் – மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க (Dilute) வீரியம் (Potency) அதிகரிக்கும் – என்பது ஹோமியோ உலகில் பிரபலம். இதற்கு ஹோமியோ மருந்தாளர்கள் பயன்படுத்தும் முறை ‘தொடர் செறிவுக் குறைத்தல்’ (Serial Dilution) எனப்படுகிறது.

பாம்பின் விசமோ அல்லது கந்தக அமிலமோ, எந்த மூலப்பொருளாக இருப்பினும் அதன் ஒரு துளி, 99 துளி நீர் அல்லது ஆல்கஹாலுடன் சேர்க்கப்படும். பின்னர் இந்தக் கலவை தனிச்சிறப்பான முறையில் கடுமையாக குலுக்கப்படுகிறது. இதன் மூலம் இக்கலவை 100 மடங்கு செறிவுக் குறைதலுக்கு (Dilute) உள்ளாக்கப்படுகிறது. இது 1சி (1C) கரைசல் எனப்படுகிறது.

அடுத்தகட்டமாக, இந்த 1சி கரைசலின் ஒரு துளி, 99 துளி நீரில் கலந்து குலுக்கப்படுகிறது. இது 2சி, 10,000 மடங்கு செறிவு குறைத்தலாகும். இந்த செயல் தொடர்ந்து 6சி நிலைக்குச் செல்லும் போது ஒரு இலட்சம் கோடி மடங்கு செறிவு குறைத்தல் என்றாகிறது. அதாவது, ஆறு நீச்சல் குளத்தில் ஒரு சொட்டு மருந்து என்பதற்கு சமம். மருந்தின் செறிவைக் குறைக்க குறைக்க (Dilute) வீரியம் (Potency) அதிகரிக்கும் என்பதால், இந்த செயல்முறை இன்னும் தொடர்ச்சியாக நடத்தப்படுகிறது.

மருந்தின் செறிவைக் குறைத்து வீரியம் அதிகப்படுத்துவாக சொல்லும் ஹோமியோபதி முறையை விளக்கும் படம்.

அடுத்த ஆறு தொடர் நிலைகளில் (12சி), வங்கக்கடலில் ஒரு துளி மருந்தை கலப்பதற்கு சமமான நிலையை எட்டிவிடும். ஆனால், பெரும்பாலான ஹோமியோபதி மருந்துகளுக்கு இது போதாது. பொதுவான அடிப்படை மருந்து 30சி செறிவுக் குறைத்தலில் இருக்கும். இது பூமியிலுள்ள மொத்த கடற்பரப்பில் ஒரு துளி மருந்தை கலப்பதற்கு சமம். இந்த முறையில் தீவிர செறிவு குறைக்கப்பட்ட கரைசலின் சில துளிகள் மட்டுமே சர்க்கரை உருண்டைகளின் (மாத்திரைகள்) மீது ஊற்றி மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன.

சில நோய்க்குறிகளுக்கு அலோபதி மருத்துவமும், ஹோமியோபதி மருத்துவமும் ஒரே மருந்தை தான் பரிந்துரைக்கின்றன. ஆனால், வீரியமிக்க மருந்த்து என்ற பெயரில் ஹோமியோபதி மீசெறிவுக் குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதை மருந்தாக தருகிறது.

இங்குதான் ஹோமியோபதியின் அறிவியலுடனான முரண்பாடு துவங்குகிறது. எந்தப் பொருளையும், கலவையையும் செறிவுக் குறைப்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. கரைசலின் ஒரே ஒரு மூலக்கூறு மீதமிருக்கும் நிலைவரை நாம் அதை செறிவுக் குறைக்கலாம். அதற்கு மேல் சென்றால் அந்த ஒரு மூலக்கூறும் கூட இல்லாமல் போய் கரைசல் வெறும் நீர் ஆகிவிடும். ஒரு ஹோமியோ மருந்தில் மூலக்கரைசலின் மூலக்கூறுகள் எத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்க்க முடியும். இதற்கு அறிவியல் அளிக்கும் பதில் ‘முற்றிலும் இல்லை’ என்பது தான். நிகழ்தகவின் அடிப்படையில் கூட ஒரு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியக்கூறு 100 கோடியில் ஒரு வாய்ப்புக்கும் குறைவு. அதாவது ஹோமியோபதி மருந்தில் உண்மையில் மருந்தில்லை.

ஒரு குப்பி மாத்திரைகளின் மூலம் மூலமருந்தின் ஒரு மூலக்கூறுகூட நமது உடலில் சேருவதில்லை. நவீன உடற்கூறியல் மற்றும் மருந்தியலின் படி மனித உடல் மற்றும் நுண்கிருமிகளுடன் வினையாற்ற ஒரு குறிப்பிட்ட மருந்தின் ஒரே ஒரு மூலக்கூறாவது உட்செல்ல வேண்டும். ஒரு மூலக்கூறை உடலில் சேர்ப்பதற்கே பல ஆயிரம் குப்பிகளை விழுங்க / சப்ப வேண்டும். அதுவே ஒரு துளி மூலமருந்தை உடலில் சேர்க்க இந்தப் புவியளவை விட அதிக மாத்திரைகளை சப்ப வேண்டியிருக்கும்.

மூலமருந்தின் வேதிஆற்றல் தனிச்சிறப்பான தொடர் செறிவுகுறைப்பு முறையின் மூலம் குணப்படுத்தும் ஆற்றலாக நீருக்கு மாற்றப்படுகிறது என்கின்றனர் ஹோமியோபதிகள். (இனி நாம் ஹோமியோ மருத்துவர்கள், ஆதரவாளர்களை “ஹோமியோபதிகள்” என்று அழைப்போம்.)

ஆனால், முதற்பார்வைக்கே இது வேதிஅறிவியலுடன் முரண்படுகிறது. ஒரு கரைசலின் செறிவு (concentration) அதிகமாக இருக்கும் போது தான் வினைத்திறன் அதிகம் என்பது வேதியியலின் அடிப்படை விதி. மேலும், மூலப்பொருட்கள் அதாவது அணுக்கள், மூலக்கூறுகள் நேரிடையாக ஆற்றலாக மாறுவதாகக் கொண்டாலும், அதற்கு அணுக்கரு பிளவு, பிணைப்பு போன்ற வினை நிகழ்ந்தாக வேண்டும். இந்த தொடர் செறிவுக்குறைப்பு முறையின் மூலம் பொருட்களை நேரிடையாக ஆற்றலாக மாற்றவும் முடியாது. ஏனெனில் ஒரு குடுவையைக் குலுக்குவதன் மூலம் அணுக்கரு பிளப்போ இல்லை பிணைப்போ நடக்காத ஒன்று.

ஹோமியோபதி மருத்துவர்கள் தங்கள் மருந்துக்கு குணப்படுத்தும் திறன் இருப்பதாக கூறுகின்றனர். மறுபுறம், அறிவியல் ஹோமியோ மருந்தில் தண்ணீரைத் தவிர எதுவுமில்லை என்கிறது.

பின்னர், ஹோமியோபதி சொல்வது முற்றிலும் சரி என்று கண்டறிந்து சொன்னார் பிரான்சைச் சேர்ந்த விஞ்ஞானி ஜாக்ஸ் பென்வெனிஸ்டே. அவர் அப்போது அறிவியல் துறையில் சூப்பர் ஸ்டாராக இருந்தார். நோபல் பரிசை வெல்வார் என்று கூடப் பலரும் எதிர்பார்த்தனர்.

ஜாக்ஸ் பென்வெனிஸ்டே

பென்வெனிஸ்டே ஒவ்வாமை துறையில் நிபுணர். 1988-ம் ஆண்டு, ஒவ்வாமையை ஏற்படுத்தும் வேதிப்பொருட்களை மனித செல்களின் மீது ஆய்வு செய்து வந்தார். அப்போது, செறிவுக் குறைக்கப்பட்ட வேதிக் கரைசல் மனித செல்களில் ஒவ்வாமையை தூண்டியதை கண்டறிந்தார். இதையடுத்து அந்தக் கரைசலை ஹோமியோ மருந்து தயாரிப்பு முறையை ஒத்த செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சோதித்ததில் அவை ஒவ்வாமையைத் தூண்டின.

இது நீர் அதிலிருந்த வேதிப்பொருட்களை நினைவில் வைத்திருந்ததை ஒத்திருந்தது. அதனால் இதை ‘நீரின் நினைவாற்றல்’ என பென்வெனிஸ்டே அழைத்தார். இப்போது ஹோமியோபதிக்கு அறிவியல் அடிப்படை கிடைத்துவிட்டது.

அறிவியல் சமூகம் ஒப்புக் கொள்ளும் வரையில் இது ஒரு ஆய்வுமுடிவே அல்ல. அது வரை அது குளியலறையில் பாடும் ஒரு ஓபரா பாடகரை ஒத்தது. அதனால், தனது ஆய்வு முடிவுகளை இயற்கை (Nature) என்ற மதிப்புமிக்க அறிவியல் ஆய்விதழில் வெளியிட அனுப்பி வைத்தார் பென்வெனிஸ்டே.

அப்போது அந்த ஆய்விதழின் ஆசிரியராக இருந்த சர் ஜான் மடோக்ஸ், நீரின் நினைவாற்றல் என்பது விஞ்ஞானத்தை பொறுத்தவரை ஒரு அபத்தம் என்றே அறிந்திருந்தார். அதே சமயம் பிரபலமான விஞ்ஞானியின் ஆய்வை மறுக்கவும் முடியவில்லை. அதனால், ஒரு நிபந்தனையுடன் பென்வெனிஸ்டேவின் ஆய்வறிக்கையை நேச்சர் இதழில் வெளியிட்டார் மடோக்ஸ். அதாவது, ஆய்வறிக்கையை வெளியிட வேண்டுமானால், தனது ஆய்வகத்தை நேச்சர் குழுவின் சோதனைக்குட்படுத்த பென்வெனிஸ்டே ஒப்புக்கொள்ள வேண்டும்.

சர் ஜான் மடோக்ஸ்

அதன் படி, தனது குழுவுடன் பென்வெனிஸ்டேயின் ஆய்வகத்திற்கு சென்றார் மடோக்ஸ். அறிவியலாளரும், மோசடிகளை அம்பலப்படுத்துபவருமான வால்டர் ஸ்டீவர்ட், மந்திர வித்தைக்காரரும், அமானுட நடவடிக்கைகளை அம்பலப்படுத்துபவருமான ஜேம்ஸ் ராண்டி ஆகிய இருவரும் மடோக்சின் குழுவில் இருந்தனர்.

இந்தச் சோதனையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஹோமியோபதி நீர் (மருந்து) ஏற்படுத்தும் விளைவுகள் சாதாரண தண்ணீரில் இருந்து வேறுபட்டால், ஹோமியோபதி முற்றிலுமாக நிரூபிக்கப்பட்டுவிடும்.

***

மடோக்சின் குழு, பென்வெனிஸ்டேயின் குழுவுடன் இணைந்து ஆய்வுகளில் ஈடுபட்டது. கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளுடன் (Controlled Samples) ஹோமியோ மருந்து ஒப்பிடப்பட்டது. இதற்காக வேதிப்பொருளின்றி வெறும் நீரை தொடர் செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சில மாதிரிகளும், மூலவேதிப்பொருள் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கி சில மாதிரிகளும், மிக சுத்தமான சோதனைக் குழாய்களில் தயாரித்து எடுத்துக் கொள்ளப்பட்டன.

முதல் கட்ட ஆய்வில் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உட்பட்ட வேதிப்பொருள் கலவை சாதாரண நீர் ஏற்படுத்தும் விளைவுகளில் இருந்து மாறுபட்டிருந்தது.

இரண்டாம் கட்டமாக கடுமையான, கறாரான சோதனைகள் நடத்த முடிவெடுக்கப்பட்டது. எந்தக் குடுவை சாதாரண நீர், எது மருந்து என்பதற்கு மறைகுறியீடுகள் கொடுக்கப்பட்டு அவை யாரும் அறியாதிருக்க உரையிலிட்டு சோதனைச் சாலையின் மேற்கூரையில் ஒட்டப்பட்டது.

பின்னர், எந்தெந்த குடுவைகள் ஒவ்வாமையை தூண்டுகின்றன என்று சோதித்து குறித்துக் கொள்ளப்பட்டது. இறுதியாக, குறியீடுகள் நீக்கப்பட்டு குடுவைகளில் இருக்கும் தொடர்புடைய கரைசல்கள் குறித்துக் கொள்ளப்பட்டன. ஒவ்வாமையைத் தூண்டிய குடுவைகளில் பெரும்பாலானவை, மூலவேதிப்பொருள் ஹோமியோ முறையில் தொடர் செறிவுக் குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்டவையாக இருந்தால் பென்வெனிஸ்டேயின் ‘நீரின் நினைவாற்றலுக்கு’ நிரூபணம் கிடைத்துவிடும்.

ஆனால், பென்வெனிஸ்டேயின் குழுவினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக முடிவுகள் கிடைத்தது. மடோக்சின் குழு, நீரின் நினைவாற்றல் என்பது மாயை என்ற தமது ஆய்வறிக்கையை நேச்சர் இதழில் வெளியிட்டது. இது பென்வெனிஸ்டேக்கு அறிவியல் துறையில் இருந்த நற்பெயரை கெடுத்து போலி அறிவியலாளர் (Pseudo-scientist) என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.  ஹோமியோபதி மீண்டும் அறிவியலுடன் முரண்படும் நிலைக்கு சென்றது. ஆனால், இது ஹோமியோபதியின் செல்வாக்கைக் குறைக்கவில்லை, மாறாக அதிகரித்தது.

அறிவியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, உயிருக்கு ஆபத்தான நோய்களில் இருந்து ஹோமியோ மருந்துகள் தம்மைக் காப்பாற்றியதாக பலர் கூறுகின்றனர். அறிவியல் ரீதியாக ஹோமியோபதி ஒரு அபத்தம் என்றால், அதனால் பலர் எப்படி குணமடைகின்றனர்?

இயற்கையாக உடலில் இருக்கும் நோயெதிர்ப்பு மற்றும் சுய குணமாக்கும் சக்திகளை (Self-Healing Power) தூண்டுவதன் மூலம் ஹோமியோதி குணப்படுத்துவதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஆனால், இது பொய்மருந்து விளைவு (Placebo Effect) என்கிறது அறிவியல். அதாவது, மருத்துவ ஆலோசனைக்குப் பிறகு மருந்தற்ற சர்க்கரை மாத்திரைகள் கொடுக்கப்படும் போது அது நோயாளிகளிடம் உளவியல்ரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்தி குணப்படுத்தும்.

அலோபதி மருத்துவர்களில் கூட மக்களிடம் பெயர் எடுக்கம் மருத்துவர் என்னவாக அறியப்படுகிறார்? கை ராசி டாக்டர், அவரிடம் போனால்தான் நோய் குணமாகும் என்றே மக்கள் நம்புகிறார்கள். அந்த மருத்தவர் கொடுக்கும் அதே மருந்தை இன்னொரு மருத்துவர் கொடுத்தாலும் முன்னவர் போல பின்னவரிடம் குணம் கிடைக்காது என்றே மக்கள் கருதுகின்றனர்.

ஹோமியோபதிகள் தமது நோயாளிகளிடம் மற்ற எந்த மருத்துவ முறையைவிடவும் அதிகமாக உரையாடுகின்றனர். இது உளவியல்ரீதியாக நம்பிக்கையை ஏற்படுத்தி கச்சிதமான பிளாசிபோ விளைவால் குணப்படுத்துகின்றது.

ஆனால், பிளாசிபோ விளைவில் சிறியதை விட பெரிய மாத்திரைகள் அதிக பலனையும், வெள்ளையை விட வண்ண மாத்திரைகள் அதிக பலனையும் கொடுப்பதை அறிவியல் பதிவு செய்துள்ளது. மேலும், பிளாசிபோ விளைவு எனில், தாம் மருத்துவ சிகிச்சையில் இருக்கிறோம், மருந்தை உட்கொள்கிறோம் என்பதையே அறியாத குழந்தைகள் மற்றும் விலங்குகளில் ஹோமியோ மருந்து வேலை செய்யக்கூடாது. ஆனால், ஹோமியோ மருந்துகள் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் நோயையும் குணப்படுத்துகின்றன என்கின்றனர் அதன் ஆதரவாளர்கள். இதையெல்லாம் எப்படி நிரூபிப்பது?

ஹோமியோ மருந்தில் மூலக்கரைசலின் ஒரு மூலக்கூறுகூட இல்லை என்பதை ஹோமியோபதிகள் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அதற்கு குணப்படுத்தும் சக்தி இருப்பதாக வாதிடுகின்றனர்.

ஸ்காட்லாந்தின், கிளாஸ்கோவைச் (Glasgow) சேர்ந்த மருத்துவர் டேவிட் ரெய்லி ஒவ்வாமை காய்ச்சல் நோயாளிகள் 35 பேரைத் தேர்ந்தெடுத்தார். அவர்களில் ஒரு பிரிவினருக்கு ஹோமியோ மருந்தையும், மற்றொரு பிரிவுக்கு மருந்தற்ற சர்க்கரை மாத்திரைகளையும் கொடுத்து சோதித்தார். அதில், ஹோமியோ மருந்து கொடுக்கப்பட்டவர்களிடம், சர்க்கரை மாத்திரை கொடுக்கப்பட்டவர்களை விட அதிக முன்னேற்றம் இருந்தது. இதே சோதனையை அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளிடம், வெவ்வேறு நோய்களுக்கு செய்து பார்த்தார். ஆனால், அறிவியல் உலகம் அவரது ஆய்வுகளை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஏனெனில், ஹோமியோ மருந்துகள் குணப்படுத்துகின்றன என்ற முடிவுக்கு இதில் அறிவியல் விளக்கம் எதுவுமில்லை. அதாவது, சுத்தமான நீர் எப்படி குணப்படுத்துகிறது என்பதற்கு அறிவியல் விளக்கம் எதுவுமில்லை.

2000-01ம் ஆண்டுகளில் இங்கிலாந்தின் மேடலைன் எனிஸ் மற்றும் பெல்ஜியத்தின் ராபர்ஃபிராய்ட் உள்ளிட்ட ஆய்வாளர்கள் ஹோமியோ மருந்தைச் சோதித்து பார்ப்பது என்று முடிவெடுத்தனர். அவர்கள், பென்வெனிஸ்டே பின்பற்றிய அதே சோதனை முறைகளைப் பின்பற்றினர். சுமார் 12 ஆண்டுகளுக்கு முன் பென்வெனிஸ்டே முன்வைத்த ‘நீரின் நினைவாற்றல்’ என்ற அதே முடிவை வந்தடைந்தனர். ஆனால், இம்முறையும் அறிவியல் உலகம் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. நீருக்கு நினைவாற்றல் இருக்கிறதென்றால் அது எப்படி, எவ்வாறு இருக்கிறது என்பதை இது விளக்கவில்லை.

இந்நிலையில், பென்வெனிஸ்டேயின் ஆய்வகத்தை 1988-ல் சோதித்த நேச்சர் குழுவில் இடம் பெற்றிருந்த அமெரிக்காவைச் சேர்ந்த மந்திர வித்தைக்காரரும், அமானுட நடவடிக்கைகளை அம்பலப்படுத்தும் ஜேம்ஸ் ராண்டி “நீரின் நினைவாற்றலை” அறிவியல்பூர்வமாக நிரூபிப்பவர்களுக்கு 1 மில்லியன் (10 இலட்சம்) அமெரிக்க டாலர்கள் பரிசளிப்பதாக தனது வலைத்தளத்தில் அறிவித்தார்.

BBC.Horizon-Homeopathy.The.Test-2002

2002-ம் ஆண்டு பிபிசி-யின் அறிவியல் ஆவணப்பட பிரிவான ஹரிசான் (Horizon) இந்த சவாலை ஏற்று 1 மில்லியனுக்கான போட்டியை நடத்த முன்வந்தது. இதற்காக அக்குழு முதன் முறையாக, அறிவியல் ஆய்வை சொந்தமுறையில் நடத்திப் பார்க்க முடிவு செய்தது. உலகின் மிகப் பெருமைமிக்க அறிவியல் நிறுவனமான பிரிட்டனின் ராயல் சொசைட்டியின் துணைத்தலைவர் சோதனையை மேற்பார்வையிட்டு நடத்திக் கொடுக்க ஒப்புக் கொண்டார். அதற்கு சாட்சியாக ராண்டி அமெரிக்காவிலிருந்து அழைக்கப்பட்டார்.

ஜேம்ஸ் ராண்டி

இலண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் பேராசிரியர் பீட்டர் மோப்ஸ் கலவை மாதிரிகளையும், கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகளையும் உருவாக்கித்தந்தார். இவை, மூடி மறைகுறியாக்கம் செய்யப்பட்டு, இலண்டன் கைஸ் மருத்துவமனை மற்றும், ராயல் மருத்துவமனைகளின் ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டன.

தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தூய நீருக்கும், தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வேதிப்பொருளுக்கும் இடையிலான வேறுபாடுகளுக்கு எவ்வித ஆதாரமும் கிடைக்கவில்லை. அதாவது ஹோமியோ மருந்திற்கும், தண்ணீருக்கும் எந்த வேறுபாடும் இல்லை என்றன ஆய்வு முடிவுகள்.

ஒட்டுமொத்த ஹோமியோபதி – அறிவியல் முரண்பாடும், இந்த சோதனையும் ஆவணப் படமாக பதிவு செய்யப்பட்டு பி.பிசி-யில் ஒளிபரப்பப்பட்டது. ஜேம்ஸ் ராண்டி அறிவித்த அந்தப் பரிசுத் தொகை இன்றுவரை யாராலும் வெல்லப்படாமலேயே உள்ளது.

***

மீநுண் தொழில்நுட்பம் (Nano Technology) மற்றும் துகள் இயற்பியல் (Quantum Physics) மூலம் ஹோமியோபதிக்கு அறிவியல் விளக்கம் அளிக்க சிலர் முயன்று வருகின்றனர். ஹோமியோ மருந்தில் மூலவேதிப்பொருளின் மீநுண் துகள்கள் இருப்பதாகவும், அவையே குணப்படுத்தும் ஆற்றலை வழங்குவதாகவும் சில ஆய்வுகள் முன்வைக்கப்பட்டன. உதாரணமாக, 2010-ம் ஆண்டு பாம்பே ஐ.ஐ.டி-யின் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை மையத்தைச் (IRCC) சேர்ந்த ஒரு குழு உலோகம் சார்ந்த ஹோமியோ மருந்துகளில், மூல உலோகங்களின் மீநுண் துகள்கள் இருப்பதாக ஒரு ஆய்வை வெளியிட்டது.

ஆனால், அறிவியல் உலகம் இந்த ஆய்வை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டது. ஏனெனில், இந்தச் சோதனை கட்டுப்படுத்தப்படாத முறையில் நடத்தப்பட்டதோடு, கட்டுப்படுத்தப்பட்ட மாதிரிகள் சோதிக்கப்படவில்லை. அதாவது, ஹோமியோ மருந்துக்கடைகளில் இருந்து வாங்கப் பெற்ற மருந்துகள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன, சொந்தமாக தயாரிக்கப்படவில்லை. அதோடு, மருந்தில்லாத தொடர் செறிவுக்குறைத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட தூய நீர் ஒப்பீட்டு சோதனைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.

துகள் இயற்பியலில் அடிப்படை துகள்கள் ஆற்றல் தாங்கிகளாக (Carrier) இருக்கின்றன. அப்படிப்பட்ட அடிப்படை துகள்கள், மூல வேதிப்பொருளின் ஆற்றலை குணப்படுத்தும் சக்தியாகத் தாங்கி கடத்துகின்றன என்கின்றனர் சிலர். துகள் இயற்பியல் என்பது அணுவின் அடிப்படை துகள்களான குவார்க்குகள் (Quarks), லெப்டான்கள் (Leptons), போசான்கள் (Bosons) போன்ற மீநுண் அளவில் பொருட்களின் செயல்பாடுகளை விவரிக்கிறது. அணுக்கள் அல்லது மூலக்கூறுகளின் ஆற்றலை இத்தகைய அடிப்படை துகள்கள் கடத்துவதில்லை என்பதால்  அறிவியல் இதை முற்றிலுமாக நிராகரிக்கிறது.

இணையத்திலும், ஆய்விதழ்களிலும் நூற்றுக்கணக்கான ஆய்வுமுடிவுகள் ஹோமியோபதிக்கு அறிவியல் விளக்கம் அளிப்பதாக காணக் கிடைக்கின்றன. ஆனால், இதுவரை அறிவியல் விதிகளால் நிரூபிக்கப்படாத அசாதரண கூற்றுகளுக்கு, மிக மிக உறுதியான சான்றுகள் தேவை. அறிவியலில், அயராது திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளில் முடிவுகள் மறு உறுதி செய்யப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட மாதிரிகளில் திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளிலும் சரி, வெவ்வேறு மாதிரிகளில்  திரும்பத் திரும்ப நடத்தப்படும் சோதனைகளிலும் சரி முடிவுகள் மறுஉறுதி செய்யப்பட வேண்டும்.

மேலும், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் நிறுவனங்களின் ஆய்வுக் குழுக்களின் முன் சோதனைகள் நடத்தப்பட்டு முடிவுகள் மறுஉறுதி செய்யப்பட வேண்டும். இவை தான் மரபுரீதியான அறிவியலால் நிரூபிக்கப்படாத அசாதரண கூற்றுகளை நிறுவுவதற்கு அறிவியல் உலகம் ஏற்றுக் கொள்ளும் வழி. ஹோமியோபதிக்கு அப்படிப்பட்ட நிரூபணம் இன்றுவரை கிடைக்கவில்லை என்பது உண்மை.

இது குறித்து ஹோமியோபதி மருத்துவர்களிடம் விவாதித்தால் “ஹோமியோபதியை ஆய்வு செய்யும் உங்கள் கண் அல்லது அறிவியல் கருவி தவறானது” என்கிறார்கள். அதாவது வேறு ஒன்றை ஆய்வு செய்யும் முறையால் தங்களை ஆய்வு செய்வது நியாயமா என்கிறார்கள். இதை என்னவென்று சொல்வது? அறிவியல் ஆய்வைப் பொறுத்தவரை ஆள் பார்த்து செய்யப்படும் ஒன்றல்ல. அதன் அடிப்படை விதிகள் அனைத்திற்கும் பொதுவானவை. தண்ணீரில் மருந்தில்லை என அறிவியல் நிரூபித்துவிட்டது. மாறாக இருக்கிறது என்று நிரூபியுங்கள் கேட்டால் ஹோமியோபதிகள் இப்படி குதர்க்கமாக வாதிடுகிறார்கள்.

தங்களது கடவுளின் இருத்தலை நிரூபிக்கும் அளவுக்கு அறிவியல் இன்னும் வளரவில்லை என்று இதையே தான் மதவாதிகள் வேறு வார்த்தைகளில் சொல்லி வருகின்றனர். ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்தவ முறைகள் பலரிடமும் இப்படிப்பட்ட Cult போன்ற கடுங்கோட்பாட்டு மதப்பிரிவாகவே நம்பப்படுகிறது.

இந்தப் பிரச்சினையை இப்படியும் பார்க்கலாம். ஒரு விசயத்தை கோட்பாட்டால் புரிந்து கொள்வதும், அனுபவத்தால் புரிந்து கொள்வதும் ஒன்றல்ல. ஹோமியோ உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகள் பல முன்னோடிகளின் அனுபவத்தால் உருவாக்கப்பட்டவைதான். இது ஆரம்பகால அலோபதிக்கும் பொருந்தும். பிறகு அறிவியல் வளர வளர அலோபதி மருத்துவமும் சேர்ந்து வளர்ந்தது. மற்ற முறைகள் அப்படி அறிவியலுக்குள் செல்லவில்லை.

ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதம், யுனானி, அக்கு பஞ்சர் போன்ற மருத்துவ முறைகள் அறிவியல் ரீதியாக புடம்போடப்படும் போதுதான் அவற்றின் பயன்கள் பெருமளவு அதிகரிக்கும். இன்று பல நாடுகள், மாற்று மருத்துவ முறைகளை அரசு ரீதியாகவே அங்கீகரிப்பதில்லை. இந்தியாவிலும் மாற்று மருத்துவ முறைகளை அங்கீகரிக்கக் கூடாது என்று சில அலோபதி மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அலோபதியினர் கூறுவது போல இதை இன்னொரு எதிர்த்தரப்பிற்கு கொண்டு போவதால் பாரம்பரிய அனுபவத்தின் நேர்மறை பலன்களை மறுப்பதாகிவிடும். மாறாக அதை அறிவியல் ரீதியாக வளர்ப்பதே சரியானது. கீழா நெல்லி இன்று அலோபதி மருத்துவர்களாலேயே பரிந்துரைக்கப்படுகிறது.

எனினும் ஹோமியோபதி மருந்துத் துறையினர் அறிவியல் சோதனையில் தேர்வு பெறுவது என்பது ஏதோ மற்றவர்கள் அங்கீகாரம் கொடுக்கும் பிரச்சினையல்ல. சரியாகச் சொன்னால் அறிவியலின் கேள்விகளுக்கு ஹோமியோபதி விடையளிக்கும் போது மட்டுமே ஹோமியோபதியை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.

-நாசர்
_____________
மேலும் படிக்க:

இந்த மருத்துவ – அறிவியல் கட்டுரை உங்களுக்கு பிடித்திருக்கிறதா? உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்! உங்கள் ஆதரவு எங்களது முயற்சிகளுக்கு தோள் கொடுக்கும். நன்றி!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

  1. பலனுள்ள கட்டுரை, பல அறிவியல் நடைமுறைகள் ஹோமியோபதியை முன் வைத்து எளிமையாக விளக்குகிறது.

    //பொதுவான அடிப்படை மருந்து 30சி செறிவுக் குறைத்தலில் இருக்கும். இது பூமியிலுள்ள மொத்த கடற்பரப்பில் ஒரு துளி மருந்தை கலப்பதற்கு சமம். இந்த முறையில் தீவிர செறிவு குறைக்கப்பட்ட கரைசலின் சில துளிகள் மட்டுமே சர்க்கரை உருண்டைகளின் (மாத்திரைகள்) மீது ஊற்றி மருந்தாகக் கொடுக்கப்படுகின்றன.//

    இப்படி ஒரு மூலக்கூறும் இல்லாத அளவுக்கு செறிவு குறைக்கிறார்களா? ஒவ்வொரு கட்டத்திலும் செறிவான நீரை எறிந்து விடுகிறார்களா?

    //எந்தப் பொருளையும், கலவையையும் செறிவுக் குறைப்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. கரைசலின் ஒரே ஒரு மூலக்கூறு மீதமிருக்கும் நிலைவரை நாம் அதை செறிவுக் குறைக்கலாம். அதற்கு மேல் சென்றால் அந்த ஒரு மூலக்கூறும் கூட இல்லாமல் போய் கரைசல் வெறும் நீர் ஆகிவிடும். ஒரு ஹோமியோ மருந்தில் மூலக்கரைசலின் மூலக்கூறுகள் எத்தனை உள்ளன என்று எண்ணிப் பார்க்க முடியும். இதற்கு அறிவியல் அளிக்கும் பதில் ‘முற்றிலும் இல்லை’ என்பது தான். நிகழ்தகவின் அடிப்படையில் கூட ஒரு மூலக்கூறு இருப்பதற்கான சாத்தியக்கூறு 100 கோடியில் ஒரு வாய்ப்புக்கும் குறைவு. அதாவது ஹோமியோபதி மருந்தில் உண்மையில் மருந்தில்லை.//

    இதையும்

    //தங்களது கடவுளின் இருத்தலை நிரூபிக்கும் அளவுக்கு அறிவியல் இன்னும் வளரவில்லை என்று இதையே தான் மதவாதிகள் வேறு வார்த்தைகளில் சொல்லி வருகின்றனர். ஹோமியோபதி உள்ளிட்ட மாற்று மருத்தவ முறைகள் பலரிடமும் இப்படிப்பட்ட Cult போன்ற கடுங்கோட்பாட்டு மதப்பிரிவாகவே நம்பப்படுகிறது.//

    இதையும் சமமாக பார்கக வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. முழுக்க முழுக்க நடைமுறையை அடிப்படையாகக் கொண்டதையும், அடிப்படையே மூட நம்பிக்கையாக இருப்பதையும் ஒப்பிட முடியுமா?

    ஹோமியோபதி நடைமுறை இப்போதைய அறிவியல் கோட்பாட்டு விளக்கத்துக்கு முரணானது என்று சொல்லி விட்டு விடலாமா?

    மின்னல் என்பது மின்சாரம் என்று கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பு மனித குலம் மின்னலை எந்த கோட்பாட்டு அடிப்படையில் புரிந்திருந்தது என்பதோடு இதை ஒப்பிடலாமா?

    பின் குறிப்பு : இந்த கட்டுரையை மட்டும் அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட கருத்துக்கள் இவை.

  2. கட்டுரையில் நீங்கள் இந்த ஆவணப்படத்தைகுறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்:

  3. எனது மகளுக்கு மாதவிடாய் காலத்தில் கடும் வயிற்று வலி ஏற்படும். ஒரு முறை அலோபதி மருத்துவரிடம் வலிக்கான நரம்பு ஊசி போட்டும் வலி குறையவில்லை. உடனே Electro Homeopathy டாக்டரிடம் சென்று காட்டினோம். அவர் கொடுத்த மருந்தில்15நிமிடத்தில் வலி குறைந்தது.
    மற்றொரு சமயம் டான்சில் கட்டியால் அவதியுற்ற போது அலோபதி டாக்டர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டார். மீண்டும் ஹோமியோபதி டாக்டரிடம் சென்றோம். அவர் 2-3நாட்களில் குணமாக்கினார்.
    அறிவியல்படி உலோகங்களை சாம்பல் ஆக்க முடியாது. உருக்கினால் நீராக வேண்டுமானால் ஓடும். ஆனால் நம் சித்தர்கள் மற்றும் சித்த மருத்துவர்கள் தங்க பஸ்பம்(சாம்பல்) மற்றும் இரும்பு பஸ்பம் செய்கிறார்கள்.
    இவற்றை எவ்வாறு எடுத்துக்கொள்ளுவது?

  4. ஆய்வுக்கருவிகளை மட்டும் நம்பும் வரை அறிவியல் அறிவிலிகளால்(அறிவியலாளர்களை நாம் அப்படித்தான் அழைக்க வேண்டியிருக்கிறது) ஹோமியோபதியை கண்டறிய முடியாது..

    அறிவியல் என்பதை புரிந்துகொள்ளாமல் எல்லாவற்றுக்கும் அறிவியல் ஆதாரம் கேட்பது மடத்தனமானது..

    அறிவியல் என்பது புலன்களால் கண்,காது,மூக்கு,நாக்கு,தொடு உணர்வு இவற்றின் மூலம் அறிந்ததை காரண காரியங்களுக்கு உட்பட்டு ஆராய்வது..
    அதாவது அறியும் பொருளுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி உண்டு..

    ஆனால் ஹோமியோபதியை இவ்வாறு அறிய முடியாது..அறியும் பொருளுக்கும் உங்களுக்கும் இடைவெளி இருக்காது.அந்தப்போருளை நீங்கள் உட்கொள்ளவேண்டும்.அதற்கு பெயர் தான் நிரூபணம்..அது விஷமாக இருந்தாலும் அதன் பண்பை அறிய அதை நீங்கள் உட்கொண்டுதான்(வீரியப்படுத்திய பிறகு தான்) ஆகவேண்டும்.அதன் பண்பானது அதை உட்கொண்டவரின் மூலம் வெளிப்படுகிறது..

    ஹோமியோபதி மருந்துகள் நிரூபணம் பலருக்கு கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட குறிகள் மட்டுமே கொண்ட குணங்குறிகளின் தொகுப்பு.அதை நீங்கள் சரிபார்க்க வேண்டுமானால் நீங்கள் தான் உட்கொள்ள வேண்டும்.

    உட்கொண்டு நீங்களும் அதை நிரூபியுங்கள்.
    அதை விடுத்து

    ஆய்வகத்தில் ஹோமியோபதியை எக்காலத்திலும் நிரூபிக்க முடியாது..ஏனெனில் ஆய்வக அறிவியல் புறத்தை மட்டுமே அறிகிறது..அதனால் அகத்தை ஒரு போதும் அறிய முடியாது..

    இதனால் தான் எலிகளுக்கும் பன்றிகளுக்கும் கொடுத்து சோதிக்கப்பட்ட மருந்துகள் பின் வரும் காலங்களில் பக்க விளைவுகள் வருகின்றன எனக்கூறி தடை செய்யப்படுகின்றன.

    ஆனால் ஹோமியோபதி கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் நிரூபணம் செய்யப்பட்ட மருந்தை இப்போது நீங்கள் நிரூபணம் செய்தாலும் அதே குறிகள் தான் தோன்றுகின்றன.எந்த மருந்தையும் இது வரை இது பக்கவிளைவு ஏற்படுத்துகிறது எனக்கூறி தடை செய்ததில்லை..(நீங்கள் சொல்லலாம் “நாங்கள் மருந்தே இல்லைங்கறோம் அப்புறம் எப்படி பக்கவிளைவு வரும்”)

    முடிவாக ஹோமியோபதியை ஆராய மிகச்சரியான ஆய்வகம் நீங்கள் தான் ..
    இல்லை நான் இப்போதும் ஆய்வகத்தை தான் நம்புவேன் என்றால் அப்போது

    நீங்கள் சொல்லிக்கொள்ளலாம் தாராளமாக
    ஹோமியோபதி ஒரு போலி அறிவியல் என்று

    அதற்காக ‘ஹோமியோபதிகள்’ வருத்தப்படமாட்டார்கள்.
    ஏனெனில் அவர்கள் உங்கள் அங்கீகாரத்து ஆசைப்படுபவர்கள் அல்லர்

    • //ஹோமியோபதி மருந்துகள் நிரூபணம் பலருக்கு கொடுக்கப்பட்டு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்ட குறிகள் மட்டுமே கொண்ட குணங்குறிகளின் தொகுப்பு.அதை நீங்கள் சரிபார்க்க வேண்டுமானால் நீங்கள் தான் உட்கொள்ள வேண்டும்.

      உட்கொண்டு நீங்களும் அதை நிரூபியுங்கள்.
      அதை விடுத்து

      ஆய்வகத்தில் ஹோமியோபதியை எக்காலத்திலும் நிரூபிக்க முடியாது..ஏனெனில் ஆய்வக அறிவியல் புறத்தை மட்டுமே அறிகிறது..அதனால் அகத்தை ஒரு போதும் அறிய முடியாது..//

      அன்புள்ள பாலசுப்ரமணியன்,
      உங்களின் இந்த கேள்வியையும் கட்டுரை விளக்கவே செய்கிறது.

      அறிவியல் புறத்தை மட்டும் ஆய்வு செய்வதாக இல்லை. அது ஏற்படுத்தும் விளைவுகளை அகரீதியில் அதாவது ரத்தத்தில் மற்றும் நுண்னுயிர் ரீதியில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுவரை சோதிக்கப்படும் போது அதனை எப்படி புறத்தை மட்டும் அறிகிறது என்று சொல்ல முடியும்?
      மேலும் ஆய்வகமே நீங்கள் தான் என்று சொல்லுவது தான் அறிவியலுக்கு புறம்பான அனுபவ வாதமாக உள்ளது. அதை இக்கட்டுரையும் அதன் இறுதிப் பகுதியில் விளக்குகிறது. அலோபதிகூட ஆரம்பகாலத்தில் அனுபவமாகவும் பின்னர் அது அறிவியல் வளர்ச்சியினூடே மாற்றம் அடைகிறது. ஆனால் விஞ்ஞானம் வளராத காலத்து பொருள்முதல்வாதிகளான சித்தர்கள் போல் உங்கள் உடலே ஆய்வகம் என்று சொல்லுவது அறிவியலுக்கு புறம்பாக உள்ளது.

      • //அகரீதியில் அதாவது ரத்தத்தில் மற்றும் நுண்னுயிர் ரீதியில் என்ன மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதுவரை சோதிக்கப்படும் போது அதனை எப்படி புறத்தை மட்டும் அறிகிறது என்று சொல்ல முடியும்?//
        தாங்கள் சொல்லும் இந்த சோதனைகளும் புறத்தால் புலன்களால் அறிவதே..இரத்தத்தில் ஏற்படும் மாற்றங்களும் ஆய்வகச்சோதனைகளே!

        அகத்தை ஆராய்வது என்பது உணர்வுகளில் ஏற்படும் மாற்றம்,மனதில் ஏற்படும் மாற்றம்.. இவற்றை விளக்க உங்களுக்கு ஹோமியோபதியின் தத்துவத்தையே விளக்க வேண்டும்..அதற்கு நீங்களே ஹோமியோபதி தத்துவ நூலை முழுதும் படித்து விடலாம்..

        ஹோமியோபதியை உணர மட்டுமே முடியும்.அதற்கு ஆரோக்கியமான மனிதருக்கு கொடுத்து அது ஏற்படுத்திய மாற்றங்களை பதிவு செய்வது ஒன்றே வழி. இதுவே ஹோமியோபதியின் ஆதார விதி..இதை விடுத்து வேறு வழியில்லை..

        வீரியப்படுத்தப்பட்ட ஹோமியோபதி நீர்மத்தில் மருந்து உள்ளதா என்பதை கண்டறிய ஹானிமன் பயன்படுத்திய ஒரே வழி அவரே அதை உட்கொண்டு மருந்தின் குணங்களை பதிவு செய்தார்.அவரே 99 மருந்துகளை இது போல உட்கொண்டு அதன் மருத்துவ குணங்களை புத்தகமாக பதிவு செய்தார்.அதுவே ஹோமியோபதி மருத்துவர்களுக்கு அடிப்படையான நூல் ‘மெட்டீரியா மெடிக்கா பூரா’

        இதனடிப்படையில் தான் நான் நீங்களே ஆய்வகம் எனக்கூறினேன்.

        தங்களுக்கு இன்னும் ஒரு கூடுதல் தகவல்

        ஹோமியோபதியின் ஆரம்ப காலகட்டத்தில் ஹோமியோபதியின் வளர்ச்சி ஆங்கில மருத்துவர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது..அப்போது அதை போலி அறிவியல் வெறும் கட்டுக்கதை என நிரூபிக்கும் விதத்தில் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுத வேண்டும் என Leipzig மருத்துவ இதழின் நிறுவனரான பாம்கார்ட்னர்(Baumgartner), தீவிர ஹோமியோபதி எதிர்ப்பாளரான டாக்டர் ஹென்ரிச் ராபியை கேட்டுக்கொண்டார்,ஆனால்
        டாக்டர் ராபி தனக்கு இப்போது ஆய்வு செய்ய நேரமில்லை எனக்கூறி தன்னுடைய மாணவரான பல தங்கப்பதக்கங்களை வாங்கிய மிகச்சிறந்த அறிவாளி டாக்டர் ஹெர்ரிங் அவர்களிடம் ஹோமியோபதியை பொய்யான முறை என நிரூபிக்கும் படி கேட்டுக்கொண்டார்.அதற்கு டாக்டர் ஹெர்ரிங் ஒரு வருடம் அவகாசம் கேட்டு முதலில் ஹோமியோபதி புத்தகங்களை(மெட்டீரியா மெடிக்கா ப்யூரா மற்றும் ஆர்கனான் ஆப் மெடிசன் மற்றும் தி கிரானிக் டிஸ்சீசஸ்) முழுதும் படித்தார், முதலில் டாக்டர் ஹானிமன் எழுதிய மெட்டீரியா மெடிக்கா ப்யூரா நூலை படித்தார்,அதில் முதலில் ஹானிமன் எச்சரிக்கை விடுக்கிறார் என்னவென்று,

        “The doctrine appeals not only chiefly, but solely to the verdict of experience – ‘repeat the experiments’, repeat them carefully and accurately and you will find the doctrine confirmed at every step’ – and it does what no medical doctrine, no system of physic, no so-called therapeutics ever did or could do, it insists upon being judged by the result.”

        ஹெரிங் ஹானிமனின் சவாலை ஏற்று ஹானிமன் முதன்முதலில் நிரூபணம் செய்த மருந்தான சின்கோனாவை உட்கொண்டு விளைவுகளை குறிக்கிறார்.ஆனால் விளைவுகள் ஹானிமன் நிரூபித்ததாகவே இருக்கிறது. பின்னர் டாக்டர் ஹெர்ர்ங் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பிக்கிறார்
        ஹோமியோபதி மட்டுமே எதிர்காலத்திற்கான மருத்துவம் என்று “De Medicine Future” (The Medicine of Future).அதற்கு பின் டாக்டர் ஹெர்ரிங் அலோபதி பட்டம் துறந்து முழுமையான ஹோமியோபதி மருத்துவராக மாறி ஹோமியோபதியின் கிரீடங்களில் ஒருவராக மாறினார்..
        இது நடந்தது 1825களில்..

        ஆனால் வெற்று விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன..

        ..

      • If these scientific idiots are really dare enough, take homoeopathy medicines internally for a considerable period to see the action of homoeopathy medicines. Homoeo medicines are proved in humans not in animals. We are using only repeatedly proved medicines.

        • Are you saying that the way to prove it works is for a normal person to consume it and see the consequences? Are you serious?

          “Homoeo medicines are proved in humans not in animals. We are using only repeatedly proved medicines.”

          Where is the evidence for it? Care to share it?

  5. யார் இந்த நாசர் ?
    எந்த அடிப்படையில இந்த கட்டுரையை எழுதினார் ?
    வினவு இந்த கட்டுரையையும் அதன் முடிவுகளையும் ஏற்றுக்கொள்கின்றதா ?
    எனில் நமது தோழர்களே சிலர் ஹோமியோபதி மருத்துவர்களாகவும் செயல்படுகிறார்கள் எப்படி ?
    தோழர்களில் பெரும்பான்மையினர் ஹோமியோபதி மருத்துவத்தை ஏற்றுக்கொண்டு மற்றவர்களுக்கு பரிந்துரைகளும் செய்திருக்கிறோம் அது தவறா ?
    ஏற்கனவே பல்வேறு நோயாளிகளை குணப்படுத்திய ஆதாரங்களும் நடைமுறையில் இருக்கும்போது இந்த கட்டுரையை எப்படிப் புரிந்து கொள்வது ?

    • இந்த கட்டுரை எங்கும் ஹோமியோபதி மருத்துவத்தால் நோய் குணமாகவில்லை என்று சொல்லவில்லை. அப்படி கட்டுரை கூறியிருந்தால் எடுத்துக் காட்டவும்.
      இது உண்மையில் ஹோமியோபதி அறிவியலா அல்லது நம்பிக்கையா என்பதை ஆய்வுக்குட்படுத்திப் பார்க்க வேண்டும் என்பதையும். அனுபவ வாதமாக மட்டும் இல்லாமல் அறிவியல் முறையில் விளக்கப்பட வேண்டும் என்று தான் சொல்லுகிறது.
      ஹோமியோபதி மருத்துவத்தை அலோபதிக்கு மாற்றாகப் பரிந்துறைக்கும் அதே நேரத்தில் அதன் அறிவிலலையும் பார்க்க வேண்டியது அவசியம் தானே.
      ஹோமியோபதி நோய்களை குணப்படுத்தியுள்ளது என்பதை நானும் அனுபவமாக உணர்ந்து இருக்கிறேன். ஆனால் அதனை செறிவூட்டல் (நீர்மமாக்கள்) என்பதன் மூலம் எப்படி விளக்குவது.
      உதாரணமாக பாம்பின் விஷமுறிவு மருந்து எப்படி வேலை செய்கிறது என்பதை அலோபதி மருத்துவம் விளக்குகிறது அது ஆய்வகத்தில் நிரூபிக்கப்படவும் செய்கிறது.
      ஆனால் ஹோமியோ மருந்து ஆய்வகத்தில் வெற்று நீராக மட்டும் உள்ளதே அது எப்படி என்பதற்கான விளக்கம் விஞ்ஞான ரீதியில் விளக்கப்படாமல் உள்ளது புதிராக உள்ளதே. அதை விளக்குவது ஹோமியோபதி எதிர்ப்பாளர்களை விடவும் ஆதரவாளர்களின் கடமை அல்லவா?
      தர்க்கப்பூர்வமான கேள்விகளுக்கு தர்க்கபூர்வமான பதிலளிப்பது தானே அறிவியல்.

      • ஓமியோ மருந்தில் மருந்தேய இல்லை என்று சொல்லி விட்டு….என்ன சப்பை கட்டு…

        • முரண்பாட்டை விளக்க வேண்டிய பொறுப்பும், ஹோமியோபதிக்கு நிரூபணம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் அறிவியலுக்கு (அறிவியலாளர்களுக்கு) பொறுப்பு இருக்கதான் செய்கிறது. அந்த பொறுப்பில் தான் அறிவியல் ஹோமியோபதியையும் ஆய்வு செய்கிறது, செய்துள்ளது.

          இன்று வரை விடை கிடைக்கவில்லை என்றும் நிரூபணம் கிடைக்கவில்லை என்றும் கிடைக்காத வரை சொல்லத்தானே செய்வார்கள்? அதற்கு பதட்டப்பட வேண்டிய அவசியம் என்ன?

    • நாசர் யாராக இருந்தால் என்ன? சொல்லப்பட்டுள்ள செய்திதானே முக்கியம். கட்டுரைக்கான அடிப்படை கட்டுரையிலேயெ குறிப்பிடப்பட்டுள்ளது. வினவில் கட்டுரை வந்துவிட்டதாலேயே வினவு அதை ஏற்றுக்கொண்டதாகி விடுமா? தோழர்கள் மருந்து கொடுப்பதாலோ, பெரும்பான்மையான தோழர்கள் ஏற்றுக்கொண்டு அதை பரிந்துரைப்பதாலோ கேள்வி எழுப்பக்கூடாதா? குணப்படுத்தும் ஆதாரங்கள் இருந்தாலும் கட்டுரையாளர் எழுப்பியுள்ள கேள்விகள் ஹோமியோபதிகள் மத்தியிலேயே விவாதிகப்ப்பட்டுதான் வருகிறது. அவ்வப்போது இது போன்ற கட்டுரைகளும் வரத்தான் செய்கின்றன. எனவே பதட்டப்பட வேண்டியதில்லை. ஹோமியொபதி மருத்துவம் பலருக்கு பலன் அளிப்பதை யாரும் மறுக்கவில்லை. இந்த மருத்துவத்தை நாட வேண்டாம் எனவும் யாரும் சொல்லவில்லை.

  6. “அலோபதியினர் கூறுவது போல இதை இன்னொரு எதிர்த்தரப்பிற்கு கொண்டு போவதால் பாரம்பரிய அனுபவத்தின் நேர்மறை பலன்களை மறுப்பதாகிவிடும். மாறாக அதை அறிவியல் ரீதியாக வளர்ப்பதே சரியானது. கீழா நெல்லி இன்று அலோபதி மருத்துவர்களாலேயே பரிந்துரைக்கப்படுகிறது.

    எனினும் ஹோமியோபதி மருந்துத் துறையினர் அறிவியல் சோதனையில் தேர்வு பெறுவது என்பது ஏதோ மற்றவர்கள் அங்கீகாரம் கொடுக்கும் பிரச்சினையல்ல. சரியாகச் சொன்னால் அறிவியலின் கேள்விகளுக்கு ஹோமியோபதி விடையளிக்கும் போது மட்டுமே ஹோமியோபதியை நன்றாக புரிந்து கொள்ள முடியும்.”

    கட்டுரையாளர் மிகச் சரியாகவே ஹோமியோபதி மருத்துவத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளார். ஹோமியோபதி மருத்துவத்தின் பலன்களை நாம் புறந்தள்ளிவிட முடியாது. அதே வேளையில் கட்டுரையாளர் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை காண வேண்டியது அவசியமானதே. இல்லையேல் இத்தகைய கேள்விகள் தொடர்ந்து எழுவது இயல்பானதே!

    ஹோமியோபதியில் தூய ஹோமியோபதி-சிங்கில் டோஸ்-கலப்பு மருந்து-ஆர்.ஓ.எச்-சென்சேசன்-எனெர்ஜி லெவல் என பல்வேறு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. இவற்றிற்கிடையிலான விவாதங்களும் ஹோமியோபதிகள் மத்தியில் நடந்து கொண்டுதான் உள்ளன. ஹோமியோபதி குறித்த சரியான புரிதலை வந்தடைவதற்கு இத்தகைய விவாதங்கள் தேயானதே.

    மேலும் ஹோமியோபதியில் சொல்லப்படும் மிக முக்கியமான உயிராற்றல் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். ஹோமியோதியை இயங்கியலோடு இணைத்து பேசப்படுவதும் நடக்கிறது. ஹோமியோபதி நீண்ட நெடிய விவாதற்குரியது. அதை இணையத்தில் மட்டுமே விவாதித்து முடிவு காண முடியாது என நினைக்கிறேன். இணைய விவாதம் ஒரு தொடக்கமாகவே இருக்க முடியும். இது குறித்து துறைசார் வல்லுநர்கள் கூடி விவாதிக்க வேண்டும். எழுப்பப்படும் கேள்விகளுக்கு அறிவியல் பூர்வமான விடையைக் காண முயல வேண்டும். அதை விடுத்து நான் நம்புவதாலேயே அல்லது அது என்னை குணப்படுத்தி விட்டதாலேயே கேள்விகள் எழுப்பக்கூடாது என்பதெல்லாம் ஹோமியொபதியை வலுப்படுத்த உதவாது.

  7. If we add a sugar cube on water and do ultra-dilution definitely it’s not ordinary water how much it’s diluted. Definitely it must differ from ordinary water. Sugar particles must be there in that water however it’s diluted and in any fraction.

    Science is now working more towards technology now. But only technology is not science.

    We’ve known very limited things through science. Still we’ve a lot to be discovered. I mean science is very limited.

    And things apart from science are there.

    1. Finding action of Allopathic medicines is done through molecular studies. But this is not only the way to find More of action of remedies. To prove Homeopathic medicines indigenous method to be discovered. It’s the duty of scientists not of Homeopaths.

    2. Apart from all these facts,. Homeopathy sustains since 200 years. If it is nothing in that, how can it be sustained?
    And Homeopathy is the world’s 2nd most used system of medicine. Patients are getting cured in cases that are not possible in so called proven Allopathic system. If Homeopathy is none other than Placebo, how can it sustain for 200 years?

    And if it’s placebo, how it could work in patients who don’t have belief in medicines? Because placebo effect is related to mind.
    There are materials and immaterials in universe. But science believes only materials as it sees through technology.

    If science accept only what it sees, it doesn’t accept immaterials. As science doesn’t accept immaterials, it doesn’t mean immaterials are not existing.

    • “Sugar particles must be there in that water however it’s diluted and in any fraction.”

      Did you read the article? If you dilute a substance more than 12 serial 100-fold dilutions (12C), the solution is unlikely to have even a single molecule of the starting substance. Some homeopathic medicine so dilute 30C. You have to rewrite the Chemistry laws if you think there might be still active substance present in a solution that’s diluted so much.

      “extra-ordinary claims needs extra-ordinary evidence” – No one has the evidence that homeopathy works.

      “If Homeopathy is none other than Placebo, how can it sustain for 200 years?”
      Religion and praying has survived thousands of years – does that mean they work too?

      • ///You have to rewrite the Chemistry laws if you think there might be still active substance present in a solution that’s diluted so much. ///

        இதைத் தான் நானும் சொல்லிக் கொண்டிருக்கிறேன்..

        சோதனை முறைகள், ஆய்வகக் கருவிகள் பற்றிய தொழில்நுட்ப பிரச்சினையாக நீங்கள் முன்வைக்கிறீர்கள். ஆனால், இது அடிப்படை வழிகாட்டும் நெறிமுறைகள், கோட்பாடுகள் பற்றிய பிரச்சினை.

        செறிவுக்குறைக்க குறைக்க வீரியம் அதிகரிக்கும் என்ற ஹோமியோதியின் அடிப்படை வழிகாட்டும் கோட்பாட்டுக்கும் அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடு தான் விவாதத்திற்குரிய பொருள்.

        அறுதியற்று, எல்லையற்று செறிவைக் குறைத்தாலும் அதில் மூல மூலக்கூறு இருக்கும், அது சாதாரண தண்ணீர் இல்லை என்ற ஹோமியோபதியின் கோட்பாடு அவகட்ரோ எண் / விகிதம் என்ற வேதிஅறிவியலின் அடிப்படை கோட்பாட்டுடன் முரண்படுகிறது. இந்த முரணுக்கு தான் விளக்கம் தேவை.

        300 ஆண்டுகளுக்கும் முன்னர் நிறுவப்பெற்ற வேதியல் கோட்பாடு தவறு என்கிறீர்களா? அப்படி தவறென்றால், அதை அடிப்படையாகக் கொண்டும், தொடர்ந்தும் வந்த பல அறிவியல் வளர்ச்சிகளும் தவறு என்றாகிவிடும்.

        • அறுதியற்று, எல்லையற்று செறிவைக் குறைத்தாலும் அதில் மூல மூலக்கூறு இருக்கும், அது சாதாரண தண்ணீர் இல்லை என்ற ஹோமியோபதியின் கோட்பாடு அவகட்ரோ எண் / விகிதம் என்ற வேதிஅறிவியலின் அடிப்படை கோட்பாட்டுடன் முரண்படுகிறது. இந்த முரணுக்கு தான் விளக்கம் தேவை.

          விளக்கத்திற்கு முன் ஹோமியோபதியின் கோட்பாடு சரியென்பதற்கு ஆதரங்கள் உண்டா?

          300 ஆண்டுகளுக்கும் முன்னர் நிறுவப்பெற்ற வேதியல் கோட்பாடு தவறு என்கிறீர்களா?

          இல்லை. ஹோனியோபத்ய்யின் “கோட்பாடுகள்” தவறு என்கிறேன். ஆனால் அதற்குக் காரணம் வேதியியல் கோட்பாடு 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்பதல்ல. அக்கோட்பாடு சரியென்பதற்கு இதுவரை செய்யப்பட்ட/செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் எத்தனையோ ஆய்வுகள்/ அதன் முடிவுகளின் படி கொடுக்கப்படும் மருந்துகள் மட்டுமல்ல வேறு எத்தனையோ வகையில் ஆதாரங்கள் உள்ளன. ஹோமியோபதி சொல்வது சரியென்பதற்கு ஆதாரமில்லை. As simple as that.

          • அன்னா,

            மன்னிக்கவும். உங்களுடைய கூற்றை மேற்கோள் காட்டி ஹோமியோபதிகளிடம் தான் விளக்கம் கேட்டேன். நீங்கள் விளக்கமளித்துவிட்டீர்கள்.. நன்றி.

            //அப்படி தவறென்றால், அதை அடிப்படையாகக் கொண்டும், தொடர்ந்தும் வந்த பல அறிவியல் வளர்ச்சிகளும் தவறு என்றாகிவிடும்.//

            ஹோமியோபதிகளின் முன் சில Options உள்ளன,

            1) ஒட்டுமொத்த வேதிஅறிவியலையும், அதன் பரிணாமத்தையும் தவறு என்று மறுக்க வேண்டும்.
            அல்லது
            2) ஹோமியோபதியை ஆய்வு செய்ய புதிய ஆய்வுமுறையை உருவாக்க வேண்டும்.
            அல்லது
            3) ஹோமியோபதியின் அடிப்படை கோட்பாட்டில் முரண்கள் இருப்பதை ஏற்றுக் கொண்டு அதை சீர்செய்ய வேண்டும்.
            இதில் எதையுமே செய்யவில்லை என்றால்,
            4) ஹோமியோபதிக்கு அறிவியல் அடிப்படை இல்லை என்று அறிவியலாளர் சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

            • 🙂 என்னிடம் தான் கேட்கிறீர்கள் என நினைத்து பதிலளித்தமைக்கு மன்னிக்கவும் ஆணி.

              அறிவியலை சும்மா மறுப்பது இலகுவான வேலையாச்சே. வேதி அறிவியலின் கொள்கைகள் சரியென்பதற்கான ஆதரங்கள் நிறைய உள்ளனவே. அதனால் ஆதார பூர்வமாக மறுப்பது கடினமே. ஆனால் தற்சமயம் வேதியல் கோட்பாடுகள் பிழை என அறிய வந்தாலும், அவை பிழை என்பதற்காக ஹோமியோபதிக் கொள்கைகள் அதற்கான எந்தவித ஆதாரங்களும் இல்லாமல் சரியென்றாகி விடாதே? 🙂

              ஒன்று வேலை செய்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வழிகள் ஏற்கனவே உள்ளன. ஹோமியோபதி நோய்களைக் குணமாக்கும் என்பதற்கான ஆதாரங்கள் எதுமே இல்லை. ஆனால் வேலை செய்யாது என்பதற்கான ஆதாரங்கள் நிறைய உள்ளன. இதெல்லாம் சாமி, பிரார்த்தனைகள், சாமியார், சாஸ்திரிகளின் ‘நேர்மறையான’ விளைவுகளை மக்கள் சொல்வது போலத்தான். மனிதரின் limitations, biases, பயங்களைப் பயன் படுத்தும் ஏமாற்று வேலை.

  8. சில சந்தேகங்கள்..

    செவ்வியல் (classical) ஹோமியோபதியில் நோய் மட்டுமின்றி நோயாளியின் மன இயல்பு, சூழல் போன்றவற்றையும் கணக்கில் கொண்டு மருந்து கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

    Classical ஹோமியோபதியின் படி ஒரு நோய்க்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மருந்துகள் கொடுக்கப்படும் என்பது உண்மையா? உண்மை தான் எனில், ஒருவருக்கு தனது நோய்க்குறிகளை சரியாக மருத்துவரிடம் சொல்லத்தெரியாவிட்டாலோ அல்லது ஒரு மருத்துவர் சரியாக நோய்குறியை Diagnose செய்யாவிட்டாலோ தவறான மருந்தைக் கொடுக்கும் வாய்ப்புள்ளதே?

    ஒரு மருந்து அது உண்டாகும் அறிகுறிகளை ஒத்த நோய்குறிகளை கொண்டவரை குணப்படுத்தும் என்றால், அந்த அறிகுறிகள் இல்லாதவருக்கு தவறாக அம்மருந்தைக் கொடுத்தால் என்ன விளைவை ஏற்படுத்தும்?

    நோயை குணமாகுவதும், குணமாகாமல் நோய் முற்றுவதும் நோயாளி விளக்குவதையும் மருத்துவர் புரிந்துகொள்வதையும் சார்ந்தது! மருந்தைச் சார்ந்ததல்ல எனப் புரிந்துகொள்ளலாமா?

    ஒரு மருந்து அது உண்டாகும் அறிகுறிகளை ஒத்த நோய்குறிகள் இல்லாதவருக்கு தவறாக கொடுக்கப்பட்டால், நோயாளியின் மீது அம்மருந்திற்கான அறிகுறிகள் உருவாகுமா? உருவாகாதா? உருவாகும் என்றால், பக்கவிளைவுகள் அற்றது என்று அறுதியாக எப்படி சொல்வது?

    உருவாகாது என்றால் ஏன் உருவாகாது, அது தான் வீரியம் அதிகரிக்கப்பட்டுள்ளதே? மருந்தின் நேர்மறை குணப்படுத்தும் ஆற்றல், சக்தி மட்டும் வீரியமாக்கப்பட்டுள்ளது. எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் பண்புகள் அறவே நீக்கப்பட்டுள்ளன எனக்கொள்ளலாமா? இது எப்படி நடக்கிறது? இப்படிக் கொண்டால், ஒத்தது ஒத்ததை குணமாக்கும் எனும் கூற்று எப்படி சரி?

    அலோபதியில் ஒரு மருந்து Clinical trails மூலம் சோதிக்கப்பட்டு, அதன் பக்கவிளைவுகளும் கூட பதிவு செய்யப்பட்டுள்ளன (its well documented). ஹோமியோபதியில் அப்படி Clinical trails நடத்தப்பட்டுள்ளனவா? அதில் தவறான மருந்து கொடுத்தும் சோதிக்கப்பட்டுள்ளதா, ஏனெனில் மருந்து தவறாக கொடுப்பதற்கும் வாய்ப்புள்ளது அல்லவா?

    ஹோமியோபதியை ஆராய மிகச்சரியான ஆய்வகம் நீங்கள் தான் என்றால், ஹோமியோ மருந்துவம் எடுத்தும் எனக்கு குணமாகவில்லை என்றால் என்ன காரணம்? ஆய்வகம் நீங்கள் தான் என்றால் Clinical Trails-ம் நாங்கள் தானா?

    மருந்துகள், ஹானிமேனில் ஆரம்பித்து பல மருத்துவர்கள் தங்கள் மீதும், தங்கள் நோயாளிகள் மீதும் சோதித்தறிந்தவை என்கிறார்கள். நோய் மட்டுமின்றி நோயாளியின் மன இயல்பு, சூழல் போன்றவற்றையும் கணக்கில் கொண்டு மருந்து கொடுப்பதாக இருந்தால், எனக்கு கொடுக்க வேண்டிய மருந்து என்பதை எப்படி தீர்மானிக்கிறார்கள். எனக்கு கொடுக்கும் Combination என்னுடைய மனஇயல்பும், சூழலும் உள்ள மனிதர் யாருக்கு கொடுத்து சோதித்துப் பார்க்கப்பட்டது? Trial Record இருக்கிறதா?

    அந்த Trial-ஆய்வகமே நீங்கள் தான் என்றால், ஹோமியோ புத்தகத்திலிருக்கும் combinations of symptoms அறுதி இறுதியானவை. மருத்துவர் அதை படித்தும் நம்பியும் கொடுக்கிறார், நீங்களும் நம்புங்கள் என்று சொல்லலாமா?

    ***

    கட்டுரையின் கட்டமைப்பு ஹோமியோபதியை விமரிசித்து எதிர்மறையில் அதிகமாகவும், நேர்மறையில் மிக மிகக் குறைவாகவுமே உள்ளது. எப்படியிருந்தாலும், கட்டுரை விவாதத்தை கிளப்பியுள்ளது. ஆனால் இங்கு பின்னூட்டத்தில் விவாதிப்பதற்கு பதில் Conclusive statement-கள் வைக்கப்படுகின்றன.

    எனது சந்தேகங்களுக்கு யாரேனும் ஹோமியோ மருத்துவர் அல்லது ஆதரவாளர் விளக்கமளித்தால், ஹோமியோபதியை புரிந்துகொள்ள உதவும்.

    நீங்கள் புரிந்து கொள்ளவே வேண்டாம், ஆணியே புடுங்க வேண்டாம் என்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை. நன்றி!

    • ‘ஒத்தது ஒத்ததை குணமாக்கும்’ என்பது ஹோமியோபதியின் அடிப்படைகளில் ஒன்று.
      துயரரின்(Patient) நோய்க்குறிகள்(Symptoms), ஏற்கனவே ஆரோக்கியமான ஒரு மனிதனில் கொடுக்கப்பட்டு நிருபிக்கப்பட்ட மருந்துகள் உருவாக்கிய குறிகளுடன் ஒத்துப்போகும்போது நோய்கள் குணமாகின்றன. கொடுக்கப்படும் மருந்துகள் துயரரின் நோயைவிட வலிமையானது மற்றும் தற்காலிகமானது. ஆதலால் வலிமையான மருந்துகள் கொடுக்கப்படும்போது அது ஏற்கனவே துயரிரிடம் உள்ள வலிமை குறைந்த நோயை வெளியேற்றுகிறது. பிறகு மருந்தின் ஆற்றல் அதாவது மருந்து உருவாக்கிய செயற்கையான மற்றும் தற்காலிகமான நோய் விரைவில் உடலைவிட்டு வெளியேறிவிடுகிறது.

      When a Homeopathic medicine is given to a patient and if the symptoms of patient and symptoms of medicines matche i.e being similar disease is extinguished. Natural disease is weaker than medicinal disease (caused by giving artificial but temporary disease). So it eliminates natural disease of the patient and the medicinal disease goes out spontaneously. It can be modified in giving exact dose and potency if the medicine.

      ஒருவேளை துயரரின் நோய்க்குறிகளும், மருந்தின் குறிகளும் ஒத்துப்போகவில்லை என்றால் மருந்து வேலை செய்யாது. ஒத்துப்போனால் மட்டுமே வேலை செய்யும். ஏற்கனவே கூறியது போல மருந்தின் செயல்பாடு தற்காலிகமானது என்பதால் அது விரைவில் உடலைவிட்டு வெளியேறும்.

      ஹோமியோபதி மருந்துகள் மிக மிகக் குறைந்த அளவிலான பக்கவிளைவுகளைக் கொண்டவை. அவை பெரும்பாலும் நோயாளிகளால் உணரப்படுவதில்லை அதாவது அந்த அளவுக்கு தீங்கு விளைவிப்பது இல்லை.

      ஒரு முக்கியமான விடயம். ஹோமியோபதியின் அடிப்படையும் அலோபதியின் அடிப்படையும் வெவ்வேறானவை. மருந்துகளின் தன்மையும் வெவ்வேறானவை. ஆனால் அவை இரண்டையும் ஒரேவிதமான பரிசோதனைக்குக் கீழ் கொண்டுவர முயற்சிப்பது எவ்வாறு அறிவியல் ஆகும்? ஹோமியோபதியின் மருந்தின் செயல்பாட்டை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமானால் வேறொரு அறிவியல் சோதனை முறையைக் கண்டுபிடித்து சோதியுங்கள். அதைவிடுத்து அனைத்திற்கும் ஒரே சோதனை முறையை கடைபிடிப்பது சரியானதல்ல.

      அறிவியல் என்பது தொழிநுட்பத்தை மட்டும் வைத்துக்கொண்டு அறிவது அல்ல.

      Science (from Latin scientia, meaning “knowledge”) is a systematic enterprise that builds and organizes knowledge in the form of testable explanations and predictions about the universe.

      மேலும் அறிவியல் என்பது ஒரு விடயத்தை எளிய மனிதனும் விளங்கிக்கொள்ளும்படி எடுத்துரைக்கும் ஒரு வழியே ஆகும். அது மட்டும் வழியல்ல (Only science is not an authority). தற்போதைய அறிவியலால் விளக்க முடியவில்லை என்ற காரணத்தால் அது அறிவியல் இல்லை என்று கூறுவது அறிவியலின் இயலாமையே ஆகும்.

      ஹோமியோபதி ஏறக்குறைய 200 வருடங்களுக்கு மேலாக மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.

      • வீரியம் அதிகரிக்கப்பட்ட மருந்து அது ஏற்படுத்தும் விளைவுகளை நோயாளிகளால் உணரமுடியாது என்கிறீர்கள். விளவுகள் தற்காலிகமானவை, குறைந்த அளவிலானவை அதை யாராலும் எதனாலும் – அறிவியலாலும் கூட அறியமுடியாது என்கிறீர்களா? உணரப்படாததை உணரமுடியாததை யார் எப்படி உணர்ந்து நோய்க்குறியாக குறித்து வைத்தார்கள்?

        மூல மருந்தை கொடுத்து அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்துக் கொள்ளப்பட்டனவா? அல்லது தொடர் செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கப்பட்ட (Serial Dilution) வீரிய மருந்தைக் கொடுத்து அது ஏற்படுத்தும் விளைவுகள் குறித்துக் கொள்ளப்பட்டனவா? மூலமருந்து ஏற்படுத்தும் விளைவை செறிவுக் குறைத்தலுக்குள்ளாக்கப்பட்ட மருந்து தற்காலிகமாக குறைந்த அளவில் ஏற்படுத்தும் என்பதை எப்படி குறித்துக் கொண்டார்கள்? இது உள்முரண்பாடில்லையா?

        சோதனை முறைகள், ஆய்வகக் கருவிகள் பற்றிய தொழில்நுட்ப பிரச்சினையாக நீங்கள் முன்வைக்கிறீர்கள். ஆனால், இது அடிப்படை வழிகாட்டும் நெறிமுறைகள், கோட்பாடுகள் பற்றிய பிரச்சினை.

        அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளை நிறுவுவதற்கு தான் சோதனை முறைகள், ஆய்வகக் கருவிகள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. அறிவியலின் கோட்பாடுகளை நிறுவுவதற்கு முரணில்லாத சோதனை முறைகளை அறிவியல் உலகம் அங்கீகரித்து ஏற்றுக்கொண்டுள்ளது.

        ஒத்தது ஒத்ததைக் குணப்படுத்தும், செறிவுக்குறைக்க குறைக்க வீரியம் அதிகரிக்கும் என்பவை ஹோமியோதியின் அடிப்படை வழிகாட்டும் கோட்பாடுகள். இவற்றுக்கும் அறிவியலின் அடிப்படை கோட்பாடுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் தான் விவாதத்திற்குரிய பொருள்.

        உதாரணமாக, அறுதியற்ற, எல்லையற்ற செறிவுக் குறைத்தாலும் அதில் மூல மூலக்கூறு இருக்கும், அது சாதாரண தண்ணீர் இல்லை என்ற ஹோமியோபதியின் கோட்பாடு அவகட்ரோ எண் / விகிதம் என்ற அறிவியலின் அடிப்படை கோட்பாட்டுடன் முரண்படுகிறது. இந்த முரணுக்கு தான் விளக்கம் தேவை.

        இப்படி சில முரண்கள். இந்த முரண்களைப் புரிந்து கொள்ள அல்லது சரிசெய்ய தான் ஏற்கனவே நிறுவப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சோதனை முறைகளைக் கொண்டு சோதிக்கப்படுகிறது.

        நீங்களோ அந்தச் சோதனை முறைகளில் குறைகள் இருப்பதாக கூறுகிறீர்கள். (இதன் மூலம் அடிப்படைக் கோட்பாட்டிலேயே குறைகள் இருப்பதாக மறைமுகமாக கூறுகிறீர்கள்).
        சரி, நீங்கள் சொல்லுவது போல சோதனை முறைகளில் குறைகள் இருப்பதாக ஏற்றுக் கொண்டாலும் கூட இந்த முரண்பாடுகளை ஹோமியோபதிகள் விளக்க வேண்டும். அல்லது அறிவியலின் அடிப்படை கோட்பாடுகள் தவறு என்று விளக்கி வாதிட வேண்டும்.

        முரண்பாட்டை விளக்க வேண்டிய பொறுப்பும், ஹோமியோபதிக்கு நிரூபணம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் அறிவியலுக்கு (அறிவியலாளர்களுக்கு) தான் இருக்கிறது என்கிறீர்கள். உண்மை தான் அறிவியலுக்கு பொறுப்பு இருக்கதான் செய்கிறது. அந்த பொறுப்பில் தான் அறிவியல் ஹோமியோபதியையும் ஆய்வு செய்கிறது, செய்துள்ளது.

        இன்று வரை விடை கிடைக்கவில்லை என்றும் நிரூபணம் கிடைக்கவில்லை என்றும் கிடைக்காத வரை சொல்லத்தானே செய்வார்கள்? அதற்கு பதட்டப்பட வேண்டிய அவசியம் என்ன?

        நீங்கள் அடையும் பதட்டமானது “தற்போதைய அறிவியலால் விளக்க முடியவில்லை என்ற காரணத்தால் அது அறிவியல் இல்லை என்று கூறுவது அறிவியலின் இயலாமை” என்று வாதிடுவதன் மூலம் ஹோமியோபதிக்கு Cult Status-ஐக் கொடுக்கிறது.

  9. நல்ல கட்டுரை.ஹோமியோபதி மருத்துவ முறையை சிறப்பாக அலசுகிறது கட்டுரை.நன்றியும் வாழ்த்துக்களும்..

    இந்த மருத்துவ முறையின் இன்னொரு முதன்மையான அம்சத்தை கட்டுரை பரிசீலிக்கவில்லை. ”ஒத்தது ஒத்தது குணப்படுத்தும் ”என்ற அடிப்படையில்தான் ஹோமியோபதி மருத்துவ முறை இயங்குகிறது.நோயற்ற ஒருவருக்கு ஒரு மருந்தை சாப்பிடக்கொடுத்து அது அவரது உடலில் எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதை அவரது உடலில் தென்படும் அறிகுறிகளை கொண்டு அறிவதும்,அது போன்ற அறிகுறிகளுடன் வரும் நோயாளிக்கு அந்த மருந்தை கொடுத்தால் அவருக்கு வந்த நோய் குணமாகி விடும் என்பதும்தான் ஹோமியோபதி மருத்துவ முறை.

    அதனால்தான் உங்கள் உடம்புதான் எங்கள் ஆய்வகம் என்கிறார்கள்.இது என்ன வகை நேர்மை.நோயென்று வந்தவனுக்கு உரிய மருத்துவம் அளிக்க வேண்டுமே அன்றி அவனையே சோதனைச்சாலை எலியாக்குவது என்ன நியாயம்.வெவ்வேறு நோய்கள் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகினறன.காட்டாக தலைவலி நோயல்ல,அது ஒரு நோயின் அறிகுறி.கண் பார்வை கோளாறு,தொண்டையில் நோய்த்தொற்று,நுரையீரலில் சளி போன்ற பல காரணங்களால் தலைவலி வரலாம்.இது எளிமையான எடுத்துக்காட்டு.இதை விட சிக்கலான நோய்க்குறிகளில் நோயை கணிப்பதில் தவறு ஏற்பட்டு மருந்தை மாற்றிக்கொடுத்து விட்டால் அவனுக்கு புதிதாக இன்னொரு நோயுமல்லவா வந்து சேரும்.

    இம்மருத்துவ முறையை சிறுமைப்படுத்த வேண்டும் என்று இவற்றை சொல்லவில்லை.சில ஐயங்கள் ,அவ்வளவே.விளக்கம் தெரிந்து கொள்வதற்க்காக நண்பர்கள்,தோழர்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

  10. அனுபவ வைத்தியம் என்று நமது வீட்டில் சிலவற்றை செய்து வருவோம். அதற்கெல்லாம் ‘அறிவியல்’ விளக்கம் கொடுத்து நம்மால் நிரூபித்து விட முடியாது.நெம்புகோலின் தத்துவத்தைப் பற்றி எதுவுமே தெரியாத தொழிலாளர்கள் மிக கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் பெரும் எடை கொண்ட பாறைகளை புரட்டி செல்வதையும் பார்க்கிறோம்.அப்படிபட்ட ஒரு வைத்தியம் தான் ஹோமியோவும்.ஒவ்வொரு மனிதனுக்குமே நோயைக் குணப்படுத்திக் கொள்ளக் கூடிய self-healing ஆற்றல் தனக்கு உள்ளேயே இருக்கிறது. சில நேரங்களில் உடலால் முடியாதபோதுதான் நோய் வருகிறது. அப்போது உடலுக்கு உதவி செய்யும் வகையில் மருந்துகள் கொடுத்து அதன் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறோம். உடலின் சக்தியைத் தூண்டும் அளவு குறைவாகக் கொடுத்தாலே போதும். அதிகமாகக் கொடுக்க வேண்டியது இல்லை. உண்மையில் சித்தா, யுனானி, ஆயுர்வேதம் போன்றே ஹோமியோவும் ஒரு அனுபவ முறை வைத்தியமுறையே.அதற்கு எல்லைகள் இருக்கின்றன என்பதும் உண்மையே.அதே போன்று அலோபதி மருத்துவத்திற்கும் எல்லைகள் இருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.
    ஹோமியோபதி மருந்துகள் தயாரிப்பு என்பது மிகவும் வெளிப்படையானது. ரகசியம் எதுவும் இதில் இல்லை. உப்பையே மருந்தாகத் தயாரிக்கிறார்கள். ஒரு கிராம் உப்பை எடுத்து, ஒரு கோடி பேருக்கு தயாரிக்கிறார்கள். இப்படி ஒரு கிராம் உப்பை, ஒரு கோடி டோஸ்களாக பிரிக்கும்போது எப்படி குணப்படுத்தும் என்று கேட்கிறார்கள்.பிரிக்கிற முறை என என்று ஹோமியோபதி மருத்துவத்தில் இருக்கிறது. ஒரு பொருளின் அளவு குறையக் குறைய அதன் வீரியம் அதிகரிக்கும் என்பதுதான் ஹோமியோபதி மருத்துவத்தின் முக்கியத் தத்துவம். எந்த அளவு பிரிக்க வேண்டும், எப்படி தயாரிக்க வேண்டும் என்பது சர்வதேச அளவில் முறைப்படுத்தப்பட்டிருக்கிறது. இது யாரோ ஒருவர் பேடன்ட் உரிமை வாங்கி வைத்துக் கொண்டு ரகசியமாகத் தயாரிக்க முடியாது. உலக அளவில் பொதுவானது. இந்த மருந்துகளின் பெயர், அது என்னென்ன செய்யும், எந்த சூழலில் கொடுக்க வேண்டும் என்பதும் புத்தகங்களில் பதிவுகள் இருக்கிறது. இதுவும் ஒரு தனிப்பட்ட மருத்துவருக்கான ரகசியம் இல்லை.ஹோமியோபதியை பெரிய அளவில் வியாபாரமாகப் பண்ண முடியாது. குறைந்த செலவில் மக்களைச் சென்றடைகிற மருத்துவம் இது. அதனால் பெரிய நிறுவனங்கள் இந்த மருத்துவத்தை விரும்பாமல் இருக்கலாம்.
    உலகமயமாக்கலின் விளைவாக அலோபதி மருத்துவத்துறை ஒரு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை இந்த பரந்த உலகில் நிலை நாட்டி வருகிறது.அவர்களின் ‘கண்டுபிடிப்புகள்’ என்று சொல்லுவது மருந்தியல் எனப்படும் pharmacology நிரூபணம் பெற்றவை.அதாவது உலகின் தனிமங்கள் தாவரங்கள், நுண்ணுயிர்கள்,உலோகங்கள் என அனைத்திற்கும் இருக்கிற மருத்துவ குணம் மற்றும் அது மனித உடலில் எத்தகைய வேதி உயிரியல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தொடர்பு படுத்தி நிரூபிக்கும் ஒரு அறிவியல். இந்த அறிவியல் அலோபதி மருத்துவத்தின் கூறுகளை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப தகவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் (இது குற்றசாட்டு அல்ல-அதன் தோற்றம் மற்றும் இயல்பு என்கிற யதார்த்தம் அவ்வளவுதான்)இந்த அறிவியல் மேடையில் கொண்டு வந்து நிறுத்தி உலக நாடுகளின் அத்துணை உள்ளூர் மருத்துவ முறைகளையும் ஒன்றுமில்லை என்று சொல்வதற்கு அலோபதி அறிவியலாளர்களுக்கு ஒரு ‘நியாயம்’ இருக்கிறது.அந்த நியாயம் வினவில் அறிவியல் அடிப்படையில்லை என ஏளன தொனியில் விமர்சிக்கப்படும் போது உண்மையில் வருத்தமாக இருக்கிறது. ஒரு நோயை குணமாக்க ஹோமியோபதி மருத்துவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால், அது எப்படி என்பதை விளக்கத் தெரியவில்லை. இது ஹோமியோபதி மருத்துவர்களின் பிரச்னை இல்லை. விஞ்ஞானிகளின் பிரச்னை. அவர்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த விஞ்ஞானி ஜாக்ஸ் பென்வெனிஸ்டே தோல்வியை வெற்றியாக்க வேறொருவர் வந்து தொடர வெண்டும், அவர் விட்ட இடத்தில் இருந்தோ வேறொரு புதிய புள்ளியிலிருந்தோ.
    ஆக “ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும்” (Similia Simibilus Curantur) என்ற வேறொரு தத்துவத்தில் உருவாக்கிய மருந்தை அலோபதியின் இணையாக நிற்கிற pharmacology ஒருநாளும் ஒப்புக் கொள்ளாது. நீட்டில் தேர்ச்சி பெற்று தகுதி திறமையை நிரூபித்து விட்டு வந்து மருத்துவ கல்லூரி சீட்டை வாங்கிக் கொள்வது தானே என்று டாகடர் கிருஷ்ணசாமி வாதிடுவதற்கும் pharmacology அறிவியல் பரிசோதனையில் ஹோமியோ மருந்துகளை ஆய்ந்து அதில் எத்தனை மில்லி கிராம் மருந்து இருக்கிறது என்று சொல் என்று வினவு சொல்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் என என்னால் சொல்ல இயலவில்லை, கணக்கு துல்லியமாக தெரியாததால்.

    (இந்த பதிவில் டாக்டர் பி.வி.வெங்கட்ராமனின் கருத்துக்கள் எடுத்தாளப்பட்டிருக்கிறது)

  11. விடை கிடைக்காமல் இருக்கும் இரண்டு பிரச்சனைகள். ஒன்று வீரியப்படுத்தும் போது என்ன நடக்கிறது. இரண்டு வீரியப்படுத்தப்பட்ட மருந்தை உட்கொள்ளும் போது அது உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது? வீரியப்டுத்தும் போது ஆற்றல் கூடுகிறது மற்றும் உட்கொள்ளும் போது நோயைக் குணப்படுத்துகிறது என்கிற பதிலைத் தவிர ஹோமியோபதிகளிடம் வேறு பதில் இல்லை. இதற்கு இதுவரை விடை காணமுடியவில்லை என்றால் விடை கிடைக்கும் வரை இந்தக் கேள்விகள் எழுந்து கொண்டேதான் இருக்கும். விடை கிடைப்பதற்கு நேற்மறையில் அணுகுவதே ஹோமியோபதியை வளர்த்தெடுக்க உதவும். அதை விடுத்து வினவின் மீது குறைபட்டுக் கொள்வதால் பயனேதும் இல்லை. அறிவியல் தெரியாமல் – புரியாமல் ஒருவர் வேலை செய்யலாம். அதற்காக அதில் அறிவியல் இல்லை சொல்ல முடியுமா?

    • உண்மையில் இந்த கேள்விக்கான பதிலை அலோபதியில் ஒவ்வொரு மாத்திரையாக நம் விழுங்கும் முன்பு தெரிந்து கொள்கிறோமா?

      • மருந்து உட்கொள்ளும் நாம் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை என்றாலும் பதில் இருக்கத்தானே வேண்டும்.

      • “உண்மையில் இந்த கேள்விக்கான பதிலை அலோபதியில் ஒவ்வொரு மாத்திரையாக நம் விழுங்கும் முன்பு தெரிந்து கொள்கிறோமா?”

        நீங்கள் தெரிந்து கொள்கிறிர்ர்களோ இல்லையோ அந்த மாத்திரை உடலில் என்ன மாற்றத்தைச் செய்யுது/ அதை வேறு எந்த மாத்திரையுடன் எடுக்கலாம் அல்லது எடுக்கக் கூடாது/ மாத்திரை எடுத்தால் உடலால் எவ்வளவு உள்ளெடுக்கப்படும் + எவ்வளவு வெளியேறும்/ என்னும் எவ்வளவோ விடயங்கள் அறியப்பட்டிருக்கும். நீங்களும் அறியலாம். Pharmacist க்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

  12. இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் சொல்லப்பட்ட மருந்தான அல்லியம் சீபா தான் எனக்கு ஹோமியோபதியை அறிமுகப்படுத்தியது.அதன் பின் ஹோமியோ பற்றிய சில நூல்களையும் படித்திருக்கிறேன்.நான் எந்த மருந்தையும் பரிந்துரைப்பதில்லை.அதன் ஆழம் புரியாததால்.பல சமயங்களில் ஹோமியோ பலனளித்திருக்கிறது.ஆனால் முழுவதும் நான் அதே மருந்தை எடுத்துக் கொள்பவனுமல்ல.ஏனெனில் மனக்குறிகளை அவ்வப்போது குறித்துக் கொண்டு அதற்கேற்ப மருந்தை தேர்ந்தெடுப்பது சாதாரண காரியமில்லை.அதே தான் ஒரு மருத்துவரின் நிலையும்.அவர் நாம் சொல்வதையெல்லாம் உள்வாங்கிக்கொண்டு அதனை திறம் பட செய்வதும் கடினமே.ஆகவே தான் நல்ல ஹோமியோ மருத்துவர்கள் ஓர் மருந்தில் குணப்படுத்த முடிவதில்லை.தவிரவும் ஹோமியோவுக்கு எல்லைகள் இருக்கின்றது.எனவே ஹோமியோவின் எல்லைக்கு அப்பால் இருப்பதாக நான் கருதும் போது அலோபதியோ சித்தாவோ எது அந்த நேரத்திற்கு உகந்ததோ அதனை தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்.இதையே தான் இந்த நாட்டில் பலரும் செய்து வருகின்றனர்.பலர் அலோபதியில் குணமாகாத நிலையில் இத்தகைய மருந்துகளை முயற்சிப்பதும் நடக்கிறது. ஹோமியோ மருந்துகள் குணப்படுத்த தவறுமானாலும் பக்க விளைவு ஏற்படுத்தாது என சொல்வதை அவர்களின் நீர்த்து போகச்செய்து வேதியல் தன்மையை மாற்றுகின்ற முறை நம்ப வைக்கிறது.(கட்டுரையாளர் சொல்வதின்படி பார்த்தால் எதுவுமே செய்யாது) அலோபதி மருத்துவத்திலோ நோய்க்காக சாப்பிடும் மருந்தினால் ஏற்படப்போகும் பாதிப்பை குறைப்பதற்கான இன்னொரு மருந்தையும் சேர்த்தே நாம் விழுங்க வேண்டியிருக்கும்.கொலஸ்திரோலை குறைப்பதற்காக சாப்பிடும் அவாஸ்டின் மருந்துகளை 3 மாதம் சாப்பிட்ட பின் நமது கிட்னி எந்தளவில் இருக்கிறது என்று பாதிப்பை எதிர்பார்த்து பயந்து கொண்டே சோதனை செய்து கொண்டுதான் திரும்பவும் தொடரவேண்டியுள்ளது.

    ஹோமியோ எல்லாவற்றுக்கும் தீர்வல்ல தான் .அதனை கொச்சைப்படுத்தாமல் அணுக முயற்சித்தால் பலன் இருக்கும்.தவிர அலோபதி மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்த pharmacology யின் மேடையில் வைத்து சோதிக்கும் எந்த “மாற்று” மருத்துவமும் நிச்சயமாக ‘தோற்று’ப்போகும்.

    • முதல் பாராவில் உள்ள கருத்துக்களை நானும் முழுமையாக ஏற்கிறேன். ஹோமியோபதியை யாரும் கொச்சைப்படுத்துவதாக எனக்குத் தோன்றவில்லை.கேள்வி கேட்பதே கொச்சைப்படுத்துவதாகாது. கேள்விகளுக்கான விடையை அலோபதி மருத்துவத்தின் அடிப்படையில் அமைந்த pharmacology யின் மேடையில் வைத்து சோதிக்கவேண்டிய அவசியமில்லை. மாற்று அறிவியில் முறைகளில் முயற்சிக்கலாம் என்பதே எனது கோரிக்கை.

  13. learned people…. any new discovery is not the end. the smallest particle as described as of now need not be the smallest till the discovery of the next minute st subunit is proved. waiting for an accepted discovery or lack of evidence fitting the current science scale does not prove that the homeopathic medicines are plain. there are confirmed researches that medicine act on genetic level ….but mode of action …pharmacodynamics and pharmacokinetics still remain unexplored…wait for new hypothesis and conclusion…while the results are already in public, gaining popularity is its strength.Public needs health …. let’s all stand together for the benefit of public.

  14. அறிவியல் உலகம் ஒருபோதும் ஹோமியோபதியை ஏற்றுக்கொள்ளாது.ஏனென்றால் அது கார்ப்ரேட்களின் பிடியில் உள்ளது.பத்து ரூபாய் செலவில் புற்றுநோயைக்கூட குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது ஹோமியோபதி மருத்துவம்.சர்வதேச மருந்து வணிகர்கள் விடுவார்களா?கமிசனுக்கு ஆசைப்பட்டு தேவையற்ற பரிசோசனைகளை பரிந்துரைக்கும் உள்ளூர் மருத்துவர்கள்தான் விடுவார்களா?
    ஹோமியோபதியில் சிற்றறிவு கொண்டவன் நான்.நோய்வாய்ப்பட்ட எங்கள் வீட்டுக்கோழியைப் பரிசோதித்துவிட்டு இனி பிழைக்காது அறுத்துச்சாப்பிடுங்கள் என்று கால்நடை மருத்துவர் சொன்னபின்பு ஹோமியோமருந்து கொடுத்து காப்பாற்றினேன்.
    பூரண நலம் வேண்டும் என்போர் ஹோமியோபதியைநாடுங்கள்.அறிவியிலாளர்கள் ஏற்றபின்புதான் என்போர் தாராளமாக அலோபதியில் தோடருங்கள்.
    இன்னொன்று மனிமதேயமும் ஆன்மபலமும் இல்லாமல் ஒரு ஹோமியோபதி மருத்துவர் வெற்றியடையடைய முடியாது.

    • ”அறிவியல் உலகம் ஒருபோதும் ஹோமியோபதியை ஏற்றுக்கொள்ளாது.ஏனென்றால் அது கார்ப்ரேட்களின் பிடியில் உள்ளது.பத்து ரூபாய் செலவில் புற்றுநோயைக்கூட குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது ஹோமியோபதி மருத்துவம்.சர்வதேச மருந்து வணிகர்கள் விடுவார்களா?கமிசனுக்கு ஆசைப்பட்டு தேவையற்ற பரிசோசனைகளை பரிந்துரைக்கும் உள்ளூர் மருத்துவர்கள்தான் விடுவார்களா?” இந்தக் காரணங்களுக்காக எழுப்பப்படும் கேள்விகளில் பொருளில்லை என்று தள்ளி விட முடியுமா?

      • மாற்று மருத்துவர்கள் எல்லோரும் இலவசமாகத்தான் மருந்தும் சிகிச்சையும் அளிக்கிறார்களா? எந்தக் கோளில் இது நடக்குது? பூமியிலா? எனக்கு இதுவரை நாளும் தெரியவில்லையே?

      • “பத்து ரூபாய் செலவில் புற்றுநோயைக்கூட குணப்படுத்தக்கூடிய ஆற்றல் உள்ளது ஹோமியோபதி மருத்துவம்.”

        அப்பிடியா? இதுக்கு ஆதாரம் என்னவாவது இருக்கா?

  15. அறிவியல் என்றால் என்ன? அதை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் உள்ளதாகவே தோன்றுகிறது. Absolute science or pure Science யாகவே அறிவியல் புரிய வைக்கப்பட்டுள்ளது. கணிதவியல் தவிர எந்த அறிவியலும் pure Science கிடையாது. இதிலும் எல்லையற்றது , பின்னங்கள் வரும் பொழுது pure Science என்பது கேள்விக்கு உள்ளாகி விடுகிறது அலோபதி மருத்துவம், இயற்பியல், வேதியில், வானவியல்…. இதில் எதுவும் pure Science கிடையாது.. மாற்றத்திற்கு உட்பட்டது.. இன்று அது அறிவியல்..நாளை அது அறிவியலா என்பது எதிர்காலமும், அறிவியல் வளர்ச்சியும் தான் தீர்க்க முடியும்.. இன்றைய அறிவியல் தரவுகளால் ஹோமியோபதி அறிவியல் இல்லை ..எண்று கூறலாம். அனுபவ அறிவியல் அதை பொய்யாக்குகிறது.. பல நோய்கள் குணாமாகிறது. ராஜன் கருத்துடன் ஒத்து போகிறேன்.. ஹோமியோவை கொச்சப்படுத்தவும், அதே சமயம் Cult Status-க்கு உயர்த்த வேண்டாம்..எல்லாவற்றையும் சந்தேகி -காரல் மார்க்ஸ்

  16. ஹோமியோபதியை நன்றாக அலசியுள்ளீர்கள். சில இடங்களில் உங்கள் கருத்துகளை ஏற்க முடியவில்லை.

    “அறிவியல் ரீதியாக ஹோமியோபதி ஒரு அபத்தம் என்றால், அதனால் பலர் எப்படி குணமடைகின்றனர்?”/ஆனால், ஹோமியோ மருந்துகள் குழந்தைகள் மற்றும் விலங்குகளின் நோயையும் குணப்படுத்துகின்றன என்கின்றனர் அதன் ஆதரவாளர்கள்.”

    யாரும் ஹோமியோபதியால் குணமடைந்ததாகவோ அல்லது இம்’மருந்துகள்’ விலங்குகளின் நோய்களைக் குணப்படுத்துகின்றன என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் உள்ளனவா? பல நூற்றாண்டுகளாக எத்தனையோ மில்லியன் மக்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது தமக்கு நோய்களைக் குணப்படுத்தி எத்தனையோ நன்மை செய்வதாக நினைக்கிறார்கள். அதற்கு ஆதாரம் எதுவும் இல்லையே? அது மாதிரித்தான் இதுவும்.

    • ஒவ்வொருத்தரும் குடித்துப் பார்த்தால் தான் ஹோமியோபதியின் விளைவுகள் தெரியும்/இதெல்லாம் அனுபவத்தால் தெரிவது என்பதெல்லாம் ஆதாரமாகாது. வேறு எந்தக் காரணியினது தாக்கமும் (பார்க்கும் மருத்துவரோ/ஒருவரின் மனதோ/ வேறு சூழலோ) ஒரு மருந்தால் மட்டுமே ஒரு நோய் குணமடைந்ததென்பதை அறிவதற்கு ஒரே வழி double-blined randomised controlled trial செய்வதே. அதன் முக்கியத்துவத்தைப் பற்றி சில‌ வருடங்களுக்கு முன் நான் எழுதிய கட்டுரையை இந்த லிங்கில் பார்க்கலாம்.

      http://annatheanalyst.blogspot.co.nz/2017/07/blog-post.html

      வேறு தளங்களுக்குச் சுட்டிகள் கொடுப்பதைத் தவிர்க்கச் சொன்னதை அறிவேன். இக்கட்டுரைக்கும் அதன் தொடர்பாக விவாதிக்கும் கருத்துகளுக்கும் மிகஹ்ட் தொடர்புடையதென்பதால் பகிர்கிறேன்.

      • Anna,

        Thanks for excellent analogy.

        By the way, i read your piece மரபியலுக்கு அப்பால்.. its excellent.

        i trust that you would be the right person to and can explain about ‘epigenetics’ and PBS documentary ghost in your genes.
        can you please enlighten us on epigenetics with comparing that to Lamarck – Darwin – Mendel – Modern genetics?

  17. கேரளாவில் பிறந்து இலங்கையில் கூட பல வருடங்கள் வசித்த பகுத்தறிவுவாதி ஆபிரகாம் கோவூர். அவர் படித்தது கல்கத்தா பல்கலைக் கழகத்தில். இவ்வொரு முறையும் அவர்கள் பல்கலைக் கழகத்திலிருந்து வீடு திரும்பும் போது அவரின் ஊர் மக்கள் தமக்கு கங்கை நதியிலிருந்து ‘புனித’ நீர் எடுத்து வரச் சொல்வார்களாம். கோவூர் கங்கை நதிக்குச் சென்று பார்த்து, அங்கிருந்த மிகவும் மாசுபட்ட நீரை எடுத்துக் கொண்டு போகப் பிடிக்காமல் வெறெங்கோ இருந்து மிகவும் சுத்தமான நீர் எடுத்து இரு போத்தல்களில் இட்டு, அதுவே கங்கை நதியின் நீர் எனக் கொண்டு சென்று தமது ஊர் மக்களுக்குக் கொடுத்தாராம். அந்த நீர் பெற்ற மக்கள் பலர் கோவூரிற்கு அந்த நீர் எப்படித் தமது பல நோய்களைத் தீர்க்க உதவின என்றும் கங்கை நீரே இப்போ வருத்தங்களைக் குணப்படுத்துவதால் மருத்துவரிடமே போக வேண்டிய அவசியமில்லை என்றார்களாம் .

    source: http://www.staff.uni-giessen.de/~gk1415/ganga-water.htm

    இதனால் தான், யாராவது தனக்கு நோய் குணப்பட்டது தனக்குத் தெரிந்தவருக்குக் குணப்பட்டது/இதெல்லாம் அனுபவத்தால் கண்டவை என்று சொல்பவைகளை ஆதாரமாக எடுக்க முடியாது.

    இதையும் மேற்சொன்ன லிங்கில் கொடுத்துள்ளேன்.

    • அது placebo effect என்று சொல்லக்கூடிய ஒன்று. ஹோமியோபதி placebo effect இல்லை.

      https://www.ncbi.nlm.nih.gov/pubmed/20043074

      சர்வதேச புற்றுநோய் இதழில் 2010 ஆம் ஆண்டு வெளியான கட்டுரை இது.

      ஹோமியோபதி மருந்துகள் புற்றுநோய்களில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டுள்ளது என்பதை விளக்கும் சிறிய ஆராய்ச்சிக் கட்டுரை மேலே உள்ள சுட்டியில் உள்ளது.

      கல்கத்தாவில் உள்ள Dr. Prasanta Banerji Homeopathic Research Foundation ஹோமியோபதி மருந்துகளைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சை அளிக்கிறார்கள். அவர்கள் அதை மூலக்கூறு அளவிலான (Molecular level) ஆராய்ச்சியில் விளக்க முயலுகிறார்கள்.

      அங்கு, ஒரு நாளைக்கு 120-150 புற்றுநோய் துயரர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

      இன்னும் சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை அடுத்தடுத்த மறுமொழிகளில்
      குறிப்பிடுகிறேன்.

      • ஹோமியோபதி placebo effect இல்லை என்பதற்கு ஆதாரமாக நீங்கள் கொடுத்த article ஜ நீங்கள் வாசித்தீர்களா? அதில் பல பிரச்சனைகள் உண்டு.

        அந்த ஆய்வு செல்களில் (immortalised breast cancer and normal breast cell lines) இல் செய்யப்பட்டது. மனிதர்களில் அல்ல. செல்களுக்கு எங்கிருந்து placebo effect வரும்?

        செய்யப்பட்ட ஆய்வில் பல பிரச்சனைகளை அவதானித்தீர்களா?

        1. அவர்களுடைய ‘மருந்தை’ ஜதாக்க பாவித்த 87% “extra neutral alcohol ஜ மட்டும் அதே செல்களுக்குக் கொடுத்தபோது செல்கள் கணிசமானளாவு இறந்துள்ளன. தனிய 87% “extra neutral alcohol ஆல் இறந்த செல்களை விடக் கூடுதலாக அவர்களது ஜதாக்கப்பட்ட ‘மருந்து’ கொடுத செல்கள் இறந்தனவா என அவர்கள் கொடுத்த வரைபுகளை வைத்து சொல்ல முடியாது. அவர்கள் என்ன satistical analysis பாவித்தார்கள் எனக் கூறவில்லை. இந்த முடிவுகள் எதுவும் statistically significant ஆ என அவர்கள் கூறவேயில்லை. இந்த பரிசோதனைகள் எத்தனை தடவைகள் செய்தார்கள் என்றும் சரியாகத் தெரியவில்லை. இன்னுமொரு விடயம் எத்தனையோ மூலக்கூறுகள் தண்ணீரில் கரையாது. அதனால் alcohol இல் கரைத்து ஆய்வுகூடத்தில் செல்களுக்குக் கொடுக்கும் போது அநேகமாக இவ்வளவு இறப்பு வீதம் இருப்பதில்லை. இந்தப் பரிசோதனையில் ஏன் இவ்வளாவு இறப்பு வீதம் அவர்களின் “மருந்துகள்” இல்லாமலே நடக்குது?

        2. அவர்கள் கொடுத்த histology படங்களிலும் மிகக் குறைவான செல்களாஇக் காட்டி அதற்கான quantification எதுவும் கொடுக்கவில்லை.

        3. HPLC chromatograms எல்லா “மருந்து”களிலும் ஒரே மாதிரி இருந்ததாம். ஆனால் solvent (87% “extra neutral alcohol) chromatogram இல் இருந்த peak, “மருந்து” களில் இருக்கவில்லையாம். ஏன்? அப்படி என்றால் “மருந்து”களில் solvent க்கு என்ன நடந்தது? HPLC chromatograms ஜக் கொடுக்கவுமில்லை.

        4. அவர்களின் western blotting தரவுகளில் control உம் “மருந்துகளினதும்” விளைவுகள் காடியிருக்கிறார்காள் ஆனால் “மருந்துகளை” ஜதாக்கிய 87% “extra neutral alcohol இன் தனி விளைவைக் காட்டவில்லை. முதல் தரவுகளைல் 87% “extra neutral alcohol ஏ குறிப்பிட்டளவு செல்களை இறக்கச் செய்திருப்பதாகக் காட்டிவிட்டு, பின் அதன் விளைவுகளைப் பஉரதங்களில் காட்டவில்லை. அப்ப எப்பிடி அவர்கள் முடிவு செய்வார்கள் அல்லது எப்படி யாரும் முடிவு செய்யலாம் 87% “extra neutral alcohol க்கும் மேலாக “மருந்துகள்” விளாஇவுகளை ஏற்படுத்தின என்று?

        இப்படி அவர்களின் பரிசோதனைகளிலும் அவற்றை ஆராய்ந்த முறைகளிலும் பல பிரச்சனைகள். அதோடு இது அவர்களின் “மருந்தை” அல்லது “மருந்து” கொடுக்கும் முறையை அவர்களே “ஆராய்ந்து” எழுதப்பட்ட கட்டுரை. THe last authors are people from that institute, experimenting whether their own protocol/”medicine” work. That is a huge conflict of interest. ஆனால் அதை எங்கேயும் சொல்லவில்லை. இதுவே ஒரு குறிப்பிட்ட மருந்தை உற்பத்தி செய்யும் pharmaceutical company இன் director அந்த மருந்து எவ்வளவு மேலானது என்று சொல்வதார்குச் சமனானது. அதை வேளிப்படையாகச் சொல்ல வேண்டும். இதே மாதிரி ஒரு அறிவியலாளர் பிரசுரித்திருந்தால் அதை அநேகமான‌ அறிவியலாளார்கள் கணக்கெடுக்க மாட்டார்கள். ஆனால் எத்தனையோ homeopathy தளங்களில் இது அவர்களுக்கு நேர்மறையான முடிவென எழுதித் தள்ளியுள்ளார்கள்.

        இந்த ஆய்வின் முடிவுகளை நான் மேற்சொன்ன காரணங்களுக்காக ஏற்கமுடியாது. Independent ஆக வேறு பலர் இந்த முடிவுகளை எடுக்க வேண்டும்.

        அதோடு முதலில் பல, பல‌ ஆய்வுகள் (தனிய செல்களில் மட்டுமல்ல) செய்து சிகிச்சை வேலை செய்கின்றது என தெரிந்தபின்பே, நோயாளர்களுக்கு சிகிச்சை அளிக்கவேண்டும். Not the other way round. That is absolutely unethical practice.

  18. /அறிவியல் என்றால் என்ன? அதை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் உள்ளதாகவே தோன்றுகிறது./

    என்ன சிக்கல்கள் எனக் கூற முடியுமா?

    /Absolute science or pure Science யாகவே அறிவியல் புரிய வைக்கப்பட்டுள்ளது. கணிதவியல் தவிர எந்த அறிவியலும் pure Science கிடையாது. இதிலும் எல்லையற்றது , பின்னங்கள் வரும் பொழுது pure Science என்பது கேள்விக்கு உள்ளாகி விடுகிறது அலோபதி மருத்துவம், இயற்பியல், வேதியில், வானவியல்…. இதில் எதுவும் pure Science கிடையாது.. மாற்றத்திற்கு உட்பட்டது.. இன்று அது அறிவியல்..நாளை அது அறிவியலா என்பது எதிர்காலமும், அறிவியல் வளர்ச்சியும் தான் தீர்க்க முடியும்.. இன்றைய அறிவியல் தரவுகளால் ஹோமியோபதி அறிவியல் இல்லை ..எண்று கூறலாம். /

    அது சரி. அதற்காக இப்ப இருக்கும் சூழலில் வேதியியல் கோட்பாடுகளின் படி நாம் ஒரு இரசாயனத்திரவத்தை ஜதாக்கினால் அதன் தாக்கமும் ஜதாகுமென்பதை நாம் பல திரவங்களை ஜதாக்கிக் காட்டலாம். அது நாளை இதே சூழலில் பிழையாகச் சந்தர்ப்பங்கள் மிகக் குறைவு.

    வெறும் வேதியல் அறிவியல் தரவுகளால் மட்டுமல்ல அதற்கு நோயைக் குணப்படுத்தும் சக்தி கூட இருக்கென்பதற்க்கு ஆதாரங்கள் இல்லை. அதனால் அதை மக்கள் பயன் படுத்துவதால் அவர்களின் நோய்களுக்கு உண்மையான சிகிச்சை எடுக்காமல் அவதிப்படுவார்கள். அதற்கும் ஆதாரங்கள் உண்டு. அதோடு வீண் பண விரயமும் கூட.

    அறிவியல் முறை என்றால் என்ன என்பதற்கு Isaac Asimov கொடுத்த விளக்கம் நன்று. அதைச் சார்ந்த எனது விளக்கம் இது.

    ஒரு உதாரணத்திற்கு, நான் கீழிருந்து ஒரு பொருளை எடுத்து மேலே எறிந்தால் அது அநேகமாகக் கீழே விழும். அதே போல் பின்பும் மேலே எறியும் பொருட்கள் கீழே விழுவதை அவதானித்ததால், எனது கடந்த கால அவதானிப்புகளின் படி, நான் இனி எதிர்காலத்தில் ஏதாவது பொருள் மேலே எறிந்தாலும் அது கீழே வந்து விழும் என அவ்வாறு நடக்க முன்னே கூறலாம். ஆனால் நான் அடுத்த முறை எறியும் போது அப்பொருள் கீழே விழாமல் போகலாம்/மேலே கூடப் போகலாம். ஆனால் பொது அறிவுள்ள யாரும் அவ்வாறு சொல்லமாட்டார்கள். எமது சாதாரண வழக்கமான வாழ்விற்கு ‘மேலே எறியும் பொருட்கள் கீழே விழும்’ எனும் கோட்பாடு (theory) ஒரு உண்மை (fact).

    கோட்பாடுகள் ஒரு நிச்சயத்தன்மை/உண்மை அளவிகோலில் (நிச்சயமாக உண்மையிலிருந்து, நிச்சயமாகப் பொய் வரை) இருப்பதாக நினைத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு, பூமி தட்டையானது என்னும் கோட்பாடு இப்போதுள்ள சான்றுகளின் படி, அளவுகோலின் அடி நிலையில் (நிச்சயமாகப் பொய்க்குக் கிட்ட) இருக்கும் (ஆனால் பூமியின் வளைந்த தன்மை ஒவ்வொரு மைல் தூரத்திற்கும் பார்த்தால் கிட்டத்தட்ட பூச்சியம் அதனால் மிகப் பழைய காலத்தில் அப்போதிருந்த தொழில்நுட்பம், அறிவின் படி அது ஒரளவிற்கு சரியான கணிப்பே). பூமி ஒரு உருண்டையானது எனும் கோட்பாடு இந்த உண்மை அளவிகோலில் பூமி தட்டையானது எனும் கோட்பாட்டிற்கும் சில படிகள் மேலே இருக்கும். ஆனால் பூமி oblate spheroid வடிவமானது (துருவங்களில் கொஞ்சம் தட்டையானது) இந்தக் கோட்பாட்டை உண்மை அளவிகோலில் கிட்டத்தட்ட சரி மேல்மட்டத்தில் (நிச்சயமாக உண்மை) வைக்கலாம். ‘மேலே எறியும் பொருட்கள் கீழே விழும்’ எனும் கோட்பாட்டையும் அதே இடத்தில் வைக்கலாம்.

    பூமி தட்டையானது என்ற கோட்பாட்டை விட பூமி உருண்டையானது எனும் கோட்பாடு சரியானது. அதையும் விட பூமி oblate spheroid வடிவமானது என்பது மிகச்சரியானது.
    அதனால், அறிவியல் ஒரு பழைய கோட்பாட்டைக் கண்மூடித்தனமாக தூக்கி எறிந்து விட்டு இன்னொரு புதிய கோட்பாட்டை உண்மை என்று நம்புவதில்லை. It’s more like புதிய கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பங்களால் அறியப்படும் புதிய தகவல்களைக் கொண்டு அறிவியல் கோட்பாடுகளைத் திருத்துவது/விஸ்தரிப்பது.

    நீங்கள் கொஞ்சம் மாற்றி யோசித்தால் இது இலகுவாக விளங்கும்.

    சுருக்கமாகச் சொன்னால் எமது வாழ்க்கையைப் பற்றி, பூமியைப் பற்றி, வானத்தைப் பற்றி, பிரபஞ்சத்தைப் பற்றி மனிதருக்கு அவர்கள் வாழும் காலகட்டங்களில் இருக்கும் அறிவிற்கும், தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப தான் அவதானிக்கும் நிகழ்வுகளிற்கு ஒரு விளக்கத்தை/கோட்பாட்டைக் கொடுப்பர். அவ்விளக்கத்திற்கு எற்ப எதிர்காலங்களில் நடக்க இருக்கும் நிகழ்வுகளை அவை நடக்கு முன்னரே உணர்ந்து சொல்வர். பின் அவ்வாறு சொன்னதை பிற்பாடு நடக்கும் செயல்களை/அவதானிப்புகளைக் கொண்டு பரிசோதிப்பர். அதன் படி கண்டுபிடிக்கப்பட்ட முடிபுகளைக் கொண்டு முதல் தன் அந்த நிகழ்விற்கு கொடுத்த விளக்கத்தை/கோட்பாட்டை விரிவிப்பர்/திருத்துவர். இது தொடரும். இதுவே அறிவியல் மூலம் உலகத்தை, பிரபஞ்சத்தை கற்கும் முறை. இது தான் உலகப் பற்றி அறிய எம்மிடம் இருக்கும் ஒரே வழி.

    அறிவியல் என்பது ஒரு செயலுக்கு நாம் கொடுக்கும் விளக்கங்களை மீண்டும் மீண்டும் பரிசோதித்து அவற்றிற்குறிய ஆதாரங்களைச் சேகரித்து, கடைசியாக எவ்விளக்கதை எம்மிடம் உள்ள ஆதாரங்கள் சரி என்று காட்டுகின்றனவோ அவ்விளக்கத்தை எற்றுக்கொள்வது தான். அவ்விளக்கத்தை மேலும் விஸ்தரிப்பது தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கும். அவ்விளக்கம்/கோட்பாடு எவ்வளவு தான் சான்றுகளின் ஊடாக சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக் கொள்ளப்படக்கூடியதாக இருப்பினும் எமக்கு பரீட்சியமில்லாத வேரொரு சந்தர்ப்பத்தில்/வேறு நிபந்தனைகளின் கீழ் அக்கோட்பாடு செல்லுபடியாகாமல் போகலாம் என்பதால் in a literal sense 100% நிரூபிக்கப் படுவதில்லை. 100% நிரூபிக்கப் படாததால் அதில் உண்மையில்லை என்று சொல்ல ஏலாது. நான் முதல் சொன்ன மாதிரி, நான் எதிர்காலத்தில் மேலே எறியும் பொருட்கள் கீழே தான் விழும் என என்னால் 100% நிரூபிக்க முடியாது. ஆனால் அதற்காக மெலே எறியும் பொருட்கள் வேறு எவ்வித வெளித்தாக்கங்களும் இல்லாதிருப்பின் ஈர்ப்பு விசையால் கீழே விழும் எனும் கோட்பாட்டை நம்பவில்லை என எவரும் சொல்லமாட்டார்கள்.

    அறிவியல் கோட்பாடுகள் என்றால் என்ன என்பதன் விளக்கத்தை இங்கு காணலாம். https://annatheanalyst.blogspot.co.nz/2012/10/theory.html

    /அனுபவ அறிவியல் அதை பொய்யாக்குகிறது.. பல நோய்கள் குணாமாகிறது. ராஜன் கருத்துடன் ஒத்து போகிறேன்.. ஹோமியோவை கொச்சப்படுத்தவும், அதே சமயம் Cult Status-க்கு உயர்த்த வேண்டாம்./

    அனுபவ அறிவியல் என்றால் என்ன? ஒரு நோயும் கோமியோபதியால் குணமாக்க்கப்பட்டதென்பதற்கு ஆதரங்கள் கிடையாது.

    இன்னுமொன்று இரண்டு எதிர்மாறான கருத்துகள் இருக்குதென்பதற்காக அவை இரண்டும் சமமான, ஒரே தளத்தில் இருக்குதென்று அர்த்தமல்ல. காலநிலை மாற்றம் மனிதரால் நடக்கிறது, அதன் மூலம் பாரதூரமான விளவுகளைச் சந்த்திக்கப் போகிறோம் என்பதற்கான ஆதாரங்கள் எத்தனையோ ஆயிரம் உண்டு. 97% ஆன காலநிலையை ஆராயும் அறிவியலாளர்கள் ஆமோதிக்கிறார்கள். ஆனால் இவை எதையும் ஏற்றுக்கொள்ளாமல் காலநிலை எம்மால் மாறவில்லை, அது இயர்கையாக நடக்குது என ஒரு கூட்டம் சொல்லுது என்பதற்காக அவர்களின் கருத்தும் காலநிலை எம்மால் தான் இவ்வளவு மோசமாகுது எனும் கருத்தும் அலவுகோளின் சமநிலையில் இல்லை என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா? ஒரு கருத்துக்கு மலையளவு ஆதாரம் உண்டு; மற்றைய கருத்துக்கு இல்லை. அதே போலவே தடுப்பூசிகள் அவசியம் /அவசியமில்லை அவற்றால் தீமையே அதிகம் என்னும் கருத்து வேறுபாடுகள், உயிரினங்கள் பரிணாமத்தால் பூமியில் விருத்தியடைந்தன/கடவுளால் படைக்கப்ப்ட்டன எனும் கருத்து வேறுபாடுகள் எல்லாவற்றிலும் ஒரு கருத்து சரியென்பதற்கும் மற்றைய சரியல்ல என்பதற்கும் பல்லாயிரக்கணக்கில் ஆதாரங்கள் உண்டு. இரண்டு கருத்துக்களையும் விவாதிக்க சம தளம் கொடுக்க முடியாது. அதற்கும் மேலாக அப்படிக் கொடுப்பதால் எவ்வளவோ மனிதர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

    /எல்லாவற்றையும் சந்தேகி -காரல் மார்க்ஸ்/

    எல்லாவற்றையும் கேள்விக்குட்படுத்துதல் மிக அவசியம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் as someone said, “It pays to keep an open mind, but not so open your brains fall out.”

  19. ஓமியோபதி குறித்து விமர்சிக்க வேண்டும் என்றால் அதை குறித்து ஆழமாக அனுபவபூர்வமாக தெறிந்திருக்க வேண்டும்,கட்டுரைகளை படித்து கட்டுரை வடிப்பது அரசியலுக்கு ஒத்துவரும், கார்பரேட் கொள்ளைக்கு சரிவராத ஒரு மருத்துவம் ககண்டிப்பாக அறிவியல்பூர்வமற்றதாகவே இருக்கவேண்டும் என்பதில் கார்ப்பரேட் விஞ்ஞானிகள் மிக உறுதியாக இருப்பார்கள்,இதில் நான் மிகவும் மதிக்கும் வினவிர்க்கு என்ன ஆர்வம் ? அறிவியல் தொடர்ந்து தன்னை மேம்படுத்துகொண்டே வரும் அதேவேளை அந்த மேம்படுத்தல் உண்மைக்கானதா அல்லது இலாபத்திறக்கானதா என்பதே கேள்வி.பலசிபோ விளைவு என்றால் என் குடும்பத்தினர் அனைவருமே ஓமியோபதி பயனாளர்களே எங்க வீட்டு நாய் கோழி ஆடு முதற்கொண்டு அனைத்திற்க்கும் நாங்கள் பயன்படுத்துவது ஓமியோ மருந்துகளே கடந்த ஆண்டு என் 5வயது மகளுக்கு கடும் காய்ச்சல் 104டிகிரி அந்த கடும் காச்சலை குணப்படுத்தியது ஓமியோபதி மருந்துகளே இது போன்ற பல்வேறு தருணங்களை என்னால் குறுப்பிட முடியும்.

    • சென்னையில் உள்ள பட்டம் பெற்ற ஓமியோபதி மருத்துவர்களை எப்படி தெரிந்து கொள்வது ?

    • விஜய் வின்செண்ட்,
      ஹோமியோபதி, காய்ச்சலைக் குணப்படுத்துகிறது. சரி தான். அது எந்த அடிப்படையில் என்பதை விளக்க முடியவில்லையே ஏன் ?. என்பது தான் கட்டுரை எழுப்பும் கேள்வி.

      ஹோமியோபதி எதையும் குணப்படுத்தாது என்பது இங்கு முன் வைக்கப்படும் வாதப்பொருள் இல்லையே ?.

  20. வினவின்கட்டுரை ஹோமியோமருத்துவத்தின்வீரியத்தை கூட்டுவதாகவேஅறிகிறேன்.உண்மைக்குநெருக்கமாக, அறிவியலோடுஇனைந்துமுன்னேறவழிகாட்டுகிறது! உங்கள் கோபம் கட்டுரைமீதுஇருப்பதுநியாயமல்ல மாறாக ஆதாரபூர்வமாகநிருபிக்கும்காரியத்தில்கவனம்செலுத்துவதேவளர்ச்சிக்குஅறிகுறி! மருத்துவம் வியாக்கியானம் செய்யக்கூடாது விடையளிக்கவேண்டும்! ஹோமியோபதி விரும்பி

  21. i am basically allopathy doctor practicing allopathy for 25 years. i am giving homeo guidance for 10 years.in my experience with the help of homeo, i have cured more than 1000 dengue cases in less no of days and fewer side effects.

    • In you experience Dr Saravanan? Have you summarised those case studies and presented somewhere? Could you please share it here? I am sure many who is interested in this topic would find it valuable.

      Thank you.

      • டெங்குவை ஹோமியோபதியால் மாற்றலாமா என்பதற்கு ஒரே ஒரு சிறியளவு randomised control trial தான் இது வரை செய்யப்பட்டிருக்கிறது (https://www.ncbi.nlm.nih.gov/pubmed/17227744)போலுள்ளது. அதில் ஹோமியோபதியால் எந்தவொரு நன்மையும் பதிவுசெய்யப்படவில்லை.

        முன்னர் ஹோமியோபதி தனது வைத்தியத்தில் பயன்படுத்திப் பின் ஆதரங்கள் எல்லாமே எதிராக இருந்ததால் இப்போது விட்டு விட்ட வைத்தியரான Ernst Edzrad சொல்வதன் படி,

        “The bottom line is simple and depressing: the totality of the best available evidence fails to show that homeopathy is efficacious for Dengue fever (or any other infectious disease). It is irresponsible to claim otherwise.”

        http://edzardernst.com/2017/01/homeopathy-for-infectious-diseases-it-is-time-for-homeopaths-to-stop-lying/

        However, I would still like to here your randomised control trial, Dr. Saravanan. By the way, you were taught at medical school about the unreliability of one person’s personal experience and the dangers of trusting it with out proper investigation, right? There are many cases in conventional medicine where trusting experience over evidence has gone spectacularly wrong in the past.

    • Funny guy… Dengue is a self limiting infection. Only severe dengue causes blood clotting problems and needs intensive care. Are you MBBS?

      There are many MBBS doctors who believe in astrology, kundalini etc. So you being an “Allopathy” doctor and believing in homeopathy in no way proves that homeopathy is valid. If we have to accept this logic, we have to accept astrology, kundalini, pachakavya etc etc.

      • Homeopathy. 2010 Jul;99(3):156-66. doi: 10.1016/j.homp.2010.05.009.
        Large-scale application of highly-diluted bacteria for Leptospirosis epidemic control.

        Bracho G1, Varela E, Fernández R, Ordaz B, Marzoa N, Menéndez J, García L, Gilling E, Leyva R, Rufín R, de la Torre R, Solis RL, Batista N, Borrero R, Campa C.

        • இது சுயமுரண்பாடுள்ள நாலுவரி ஆய்வு முடிவு..

          //This formulation was administered orally to 2.3 million persons at high risk in an epidemic in a region affected by natural disasters. //

          1) ஹோமியோபதியில் நோய் தடுப்புமருந்து இருக்கிறதா? ஹோமியோவில் நோய்க்குறிகளைக் கொண்டு தானே மருந்து கொடுப்பதாக சொல்கிறீர்கள்? இந்த ஆய்வு ஹோமியோவின் அடிப்படை கோட்பாட்டை மீறவில்லையா?

          2) high risk உள்ளவர்கள் என்று எப்படி முடிவு செய்தார்கள் ? அதற்கான தரவுகள் ஆய்வுகள் என்னென்ன?

          3) high risk உள்ளவர்களில் எத்தனை பேருக்கு ஹோமியோ மருந்தும், எத்தனை பேருக்கு மருந்து கொடுக்காமலும் சோதித்தார்கள்?

          4) மருந்து கொடுக்கப்படதோர் எத்தனை பேருக்கு நோய் தொற்று வந்தது? ஹோமியோ மருந்து கொடுக்கப்பட்டவர்களில் எத்தனை பேருக்கு நோய் தொற்று வரவில்லை? Ratio/Percentage கணக்குகள் என்ன?

          இப்படி பல கேள்விகளுக்கு விடையோ தரவுகளோ இல்லாத நாலுவரியில் உள்ள வெற்று ஆய்வு இது.. இதற்கும் ஹோமியோ மருந்து எனக்கு வேலை செய்தது என்று நாலுவரியில் சொல்வதற்கும் வேறுபாடு இல்லை.

  22. learned people, any study research study or an review paper is not an complete study with its own scope and limitations throwing confirmations and evidence to some aspects and all limitations of the study queries will be subjected to further analysis and study. not a placebo is one answer as the mortality /incidence/ complications comparitively reduced. There is no single study which might answer all statistical analysis. the statistical components vary according to the nature of study. Expecting answer for favourite statistical study is not the end of the study. the outcomes focussed decide the statistical trial subjected. A single research study when subjected to different statistical trials will give variable results on the different statistical methods applied. Any research study will have some conclusions based on the inclusion and exclusion criterias. Going behind one favourite statistical methodology universally accepted by favouritism need not exclude any study done on some strict methodology. highlighting only limitations as queries need not contradict the ideology of learned people.

  23. கல்பாக்கம் அலோபதி டாக்டர் புகழேந்தி அவர்கள் தேவை படுபடுபவர்களுக்கு ஹோமியோ மருத்துக்களை கொடுக்கிறார். 20 ஆண்டுகளாக எனது குடும்பம் அவரிடம் ஹோமியோ மருத்துகள் எடுக்கிறோம்.. குணமாகிறது

    • ஹோமியோபதி குணப்படுத்துகிறது என்பதை யாரும் மறுக்கவில்லை. விடை கிடைக்காமல் இருக்கும் இரண்டு பிரச்சனைகள். ஒன்று வீரியப்படுத்தும் போது என்ன நடக்கிறது. இரண்டு வீரியப்படுத்தப்பட்ட மருந்தை உட்கொள்ளும் போது அது உடலில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது? ஹோமியோபதி நோயை எவ்வாறு குணப்படுத்துகிறது என்பதை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ளவே பலரும் விரும்புகின்றனர். இந்த விவாதத்தின் மையப் புள்ளியே அதுதான். அதை நோக்கி சிந்திக்கலாமே!

  24. INT. J. BIOL. BIOTECH., 12 (1): 97-105, 2015.
    FUNGICIDAL EFFECTS OF HOMEOPATHIC DRUGS IN THE CONTROL OF ROOT
    ROT FUNGI AND GROWTH OF LEGUMINOUS AND NON LEGUMINOUS CROPS
    Asma Hanif and Shahnaz Dawar
    Department of Botany, University of Karachi, Karachi-75270, Pakistan
    E-mail: shahnaz_dawar@yahoo.com
    ABSTRACT
    Homeopathic drugs due to fungicidal potential are used as substitute technique in reducing the incidence of root rot
    fungi like Rhizoctonia solani, Fusarium spp and Macrophomina phaseolina. Homeopathic drugs such as Arnica
    montana and Thuja occidentalis with 100, 75 and 50% v/v concentrations were used to investigate growth parameters
    and for the control of root rot fungi by using soil drenching and seed treatment methods.
    Results showed that pure
    homeopathic concentration (100% v/v) not only enhanced plant growth but also completely inhibited the incidence of
    root rot fungi followed by 75 and 50% v/v concentrations which also improved plant growth and showed maximum
    inhibition in root colonization of both leguminous viz., mung (Vigna radiata (L.) R.Wilczek) and mash (Vigna mungo
    (L.) Hepper) and non-leguminous viz., sunflower (Helianthus annuus L.) and okra (Abelmoschus esculentus (L.)
    Moench) plants.
    Keywords: Homeopathic drugs, Control, Root rot fungi, Leguminous and non-leguminous crops.

  25. Deep Condolence:
    Renowned scientist Pushpa Mitra Bhargava passes away on Aug 01, 2017.

    // In 1994, he had resigned from the fellowship of the science academies of India for their lack of opposition to governmental plans to introduce astrology into university curricula.//

    //In 2015, he returned his Padma Bhushan (awarded to him in 1986) to the Government of India as a protest against the government’s attack on rationalism, reasoning and science. //

    //He had opposed the approval of GM in India and called for a moratorium of at least 15 years on genetically modified crops in the country//

  26. Enhanced dielectric properties and conductivity of
    triturated copper and cobalt nanoparticles-doped
    PVDF-HFP film and their possible use in electronic
    industry
    A. L. Gayen, B. K. Paul, D. Roy, S. Kar, P. Bandyopadhyay, R. Basu, S. Das, D. S.
    Bhar, R. K. Manchanda, A. K. Khurana, D. Nayak & P. Nandy
    To cite this article: A. L. Gayen, B. K. Paul, D. Roy, S. Kar, P. Bandyopadhyay, R. Basu, S. Das,
    D. S. Bhar, R. K. Manchanda, A. K. Khurana, D. Nayak & P. Nandy (2016): Enhanced dielectric
    properties and conductivity of triturated copper and cobalt nanoparticles-doped PVDF-
    HFP film and their possible use in electronic industry, Materials Research Innovations, DOI:
    10.1080/14328917.2016.1196563
    To link to this article: http://dx.doi.org/10.1080/14328917.2016.1196563

    • இப்ப எதுக்குங்க சம்பந்த சம்பந்தமில்லாம லிங்க் போட்டிருக்கீங்க?

  27. நண்பர்களே, கோமியோபதி டாக்டர் சென்னையில் முகவரி கேட்டேனே ? யாரும் சொல்லவில்லை ?

    மடிப்பாக்கம், வேளச்சேரி ஏரியாவில்.

Leave a Reply to அன்னா பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க