privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்ஆகஸ்டு 5 மாநாடு : திருச்சி புள்ளம்பாடியில் திரண்ட விவசாயிகள் !

ஆகஸ்டு 5 மாநாடு : திருச்சி புள்ளம்பாடியில் திரண்ட விவசாயிகள் !

-

திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியில் ஜூலை 5, 2017  அன்று விவசாயியை வாழவிடு! மாநாட்டு விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது. அதற்கு அனுமதி கோரி கடந்த ஜூன் 26, 2017 அன்று காவல் துறையிடம் அனுமதிக் கடிதம் வழங்கினாலும் ஜூலை05, 2017 அன்று காலை 7:45 மணிக்குத்தான்  அனுமதி வழங்கியது போலீசு.

இருப்பினும் குறைவான நேரத்தில் தோழர்கள் சுறுசுறுப்பாக தயாரிப்பு வேலைகள் செய்து முடிக்க பொதுக்கூட்டம் மாலை 6.45 மணிக்கு துவங்கியது.

கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் செழியன் தலைமை வகித்தார்.

மக்கள் அதிகாரத்தின் தோழர் ஓவியா பேசுகையில் “ ONGC நிர்வாகமும் அரசும் இணைந்து கதிராமங்கலம் மற்றும் அதன் சுற்று பகுதிகள், தஞ்சை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் மீத்தேன் எடுக்கவும் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

எங்கயோ நடக்குது, யாரவது போராடுவாங்கன்னு. நாம சும்மா வேடிக்கை பார்த்தால் என்னாவது?  நமது பகுதியில் உள்ள கொஞ்சம் நஞ்சம் இருக்குற நீர் வளத்தை காக்க விவசாயிகள், மாணவர்கள், வியாபாரிகள் ஒன்றிணைந்து விவசாயியை வாழவிடு! என்று ஒருமித்த குரலில் களம் இறங்குவோம்”. என போராட மக்களை அழைத்தார்.

அடுத்த கண்டன உரை ஆற்றிய குளகுடி தோழர் ரவி அவர்கள் பேசுகையில் “ நான் ஒரு எலுமிச்சை விவசாயி, விளைந்த பழத்தினை விற்றதன் வரவு 1600, பழத்தினை பாதுகாத்து பறித்ததுக்கான செலவு 1000, மீதம் 600 உழைப்புக்கான வருமானம்  கைக்கு நிற்கவில்லை, இதுதான் இன்று ஒருவிவசாயியின் நிலைமை. தான் விளைவித்த பொருளுக்கு விலை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை. ஒரு விவசாய கடன் வாங்கணும் என்றால் தாசில்தார் முதல் தலையாரி வரை லஞ்சம் தர வேண்டும். அப்படியே கடன் வாங்கினாலும் வட்டி 13.5% ஆனால் காருக்கு 0% வட்டி, இந்தனையும் தாங்கிக்கொண்டு விவசாயம் செய்தால்  உரிய விலை இல்ல கொள்முதல் நிலையங்கள் திறப்பதில்லை. நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு, இப்படியாக விவசாயிகளின் வயிற்றில் அடித்து வருகிறது அரசு.  எப்படி டாஸ்மாக்கு எதிராக நாம் போராடுகிறோமோ அதேபோல் நமது வாழ்வாதாரத்துக்கும் போராட வேண்டும்”. என போராட்டத்தின் அவசியத்தை விளக்கி பேசினார்.

அடுத்த கண்டன உரையாக பேசிய புள்ளம்பாடி பாசன வாய்கால் சங்க தலைவர் திரு நடராஜன் பேசுகையில் “புள்ளம்பாடி வாய்கால் பல உயிர் இழப்புகளை சந்தித்து உள்ளது. இந்த அரசு எதையும் கண்டுகொள்வதில்லை நாம் அனைவரும் மக்கள் அதிகாரமாய் ஒன்றுதிரண்டு நமக்கான உரிமைக்க போராட வேண்டும். அதற்கு நாங்கள் எல்லா வகையிலும் துணை நிற்போம்”. என்று விவசாயிகளுக்கு ஆதரவை தெரிவித்தார்.

அடுத்த கண்டன உரையாற்றிய தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் திரு எஸ்.ஆர். கண்ணன் பேசுகையில் “காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து வருடாந்திர நீர் வரத்தை உறுதிசெய்து தரவேண்டும், நாம் விதைத்த விளைச்சலுக்கான உரிய  விலையை நிர்ணயம் செய்து தரவேண்டும் நாங்கள் டெல்லி போராட்டத்திற்கு சென்றபோது பஞ்சாப், ஹரியானா மக்கள் 3000 பேர் ஆதரவு கொடுத்தனர், நீங்கள் போராடுவது உங்களுக்காக மட்டும் இல்லை நாங்களும் இதே நிலையில்தான் உள்ளோம் என்று தங்களின் ஆதங்கத்தை வெளியிட்டனர் அந்த வகையில் தமிழகம் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் விடிவுக்கு ஆதாரமாக மாற்றப்பட வேண்டும் அத்தகைய போராட்டத்துக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம்”. என்று கூறினார்.

அடுத்ததாக கொள்ளிடம் ஆற்று மணல் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக திரு அறிவழகன் அவர்கள் பேசுகையில் “எங்களுடன் அன்பில் பகுதியில் ஆற்று மணல் கொள்ளையை தடுத்து நிறுத்தி போராடி வெற்றி கொண்டதையும், மக்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்திய டாஸ்மாக் கடையை மூடி காட்டியதிலும் மக்கள் அதிகாரம் அமைப்பின் பங்கை பெருமிதத்துடன் கூறினார்.

அடுத்ததாக சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் மாநில பொருளாளர்  தோழர் காளியப்பன் அவர்கள் பேசுகையில் விவசாயியை வாழவிடு எனும் தலைப்பு நாங்களாக தேர்வு செய்தது அல்ல ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளின் முழக்கக்கமாக உள்ளது.

“ஒவ்வொரு பகுதியிலும் விவசாயிகள் தனி தனியாக போராடுகிறார்கள் கதிராமங்கலம், நெடுவாசல், தஞ்சை இப்படி பல இடங்களில் போராட்டம் வலுக்கிறது வடமாநிலங்களில் கடந்த ஜூலை மாதம் 5 -ம் தேதி மிக பெரிய போராட்டம் நடந்தது. அதனை கலைக்க அரசு துப்பாக்கி சூடு நடத்தி விவசாயிகளை கொன்றது. இறந்தோர் குடும்பத்துக்கு ஒரு லட்சம் தருவதாக அறிவித்தது. ஆனால் விவசாயிகள் அதை பொருட்படுத்தவில்லை,  நாங்கள் விளைவித்த பொருளுக்கு உரிய விலைகொடு என்கின்றனர். தங்கள் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாத பட்சத்தில் குறைந்த விலைக்கு பொருள்களை விற்கின்றனர். அதை வாங்க கூட மக்களுக்கு வழியில்லாமல் இருக்கிறது.

தமிழக விவசாய சங்கத்தினர் ஒன்றுசேர்ந்து மோடியின் தரிசனத்துக்காக காத்து கிடந்தனர் கடைசியாக ஒன்றும் பலனில்லாமல் வந்துவிட்டனர். நமது உரிமைக்காக ஏன் கெஞ்ச வேண்டும் நமது உரிமையை மீட்டெடுக்க களம் இறங்கி போராடினால் தான் வெற்றியடைய முடியும். அரசு பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியாவை சந்தையாக மாற்ற ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டு வருகிறது. மல்லையாவின் கடனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தால் இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என்கிறது. இது முதலாளிகளுக்கான அரசு என்பதை நிருபித்து கொண்டே இருக்கிறது.

இந்த விவசாய அழிவை தடுக்க நாம் ஒருகிணைய வேண்டிய சமயம் இது,  அனைவரும் ஒன்றிணைய மக்கள் அதிகாரம் அழைக்கிறது ஆகஸ்ட் 5 தஞ்சையில் ‘விவசாயியை வாழவிடு!’ என்ற தலைப்பில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைவரும் வர வேண்டும்” என விளக்கி பேசினார்.

இறுதியாக மக்கள் கலை இலக்கிய கழகம் கலைக்குழு தோழர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது கலைநிகழ்ச்சியில் “மண்ணை பிளந்துடுறான் எங்கள் நெஞ்ச பிளந்துடுறான்” பாடல் “உரே காஞ்சிடுச்சி உயிர்மூச்சி ஒஞ்சிடுச்சி” “தலை வணங்கா தமிழ்நாடு இது எங்கள் விவசாயியை வாழவிடு” பாடல்கள் மக்களிடையே சிறந்த வரவேற்பு பெற்றது.

இறுதியாக மக்கள் அதிகாரத்தின் தோழர் மதி நன்றியுரை கூறினார்.

பொதுக்கூட்டம் நிறைவடைந்த பின்னர் அப்பகுதி மக்கள் கூறியவை:

புள்ளம்பாடி பகுதியைச் சேர்ந்த சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த ஒருவர் “நாங்க உங்க கூட்டம்னு சொன்ன தும் எல்லா வேலையையும் தள்ளி வச்சுட்டு வந்துட்டோம். இங்க இருக்குற விவசாயிங்களுக்கு ஒரு நல்ல கருத்தை அருமையா சொல்லிருகீங்க. இப்படியே இந்த மணல் குவாரிக்கும் ஒரு முடிவ கட்டிட்டா நல்லா இருக்கும்”. என தனது ஆதரவையும் மணல் கொள்ளைக்கு எதிரான ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

அப்பகுதி விவசாயி ஒருவர் “நெல்லு போட்டோம், கரும்பு போட்டோம் இன்னும் என்ன என்னவோ செஞ்சு ஒன்னும் புண்ணியம் இல்ல. இப்போ வயல காய போட்டுருக்கோம். வறட்சி மாவட்டம்னு அறிவிச்சி இன்னும் இந்த கவர்மெண்ட்டு ஒன்னும் செய்யல. ஆனா நீங்க சொல்லும் போதுதான் புரியுது இந்த அரசாங்கம் நாம நல்லதுக்கு எதையும் செய்யல. இதெல்லாம் முதலாளிகளுக்காக தான்னு எங்க வாழ்கையில ஒரு வெளிச்சம் காட்டுற மாதிரி இந்த கூட்டம் இருந்தது. கண்டிப்பா உங்க மாநாட்டுக்கு நாங்க வரோம்” என்றார்.

பொதுக்கூட்டம் முடிந்த மறுநாள் தொலைபேசியில் தொடர்பு கொண்ட லால்குடி காவல்துறை ஆய்வாளர், அருமையா பன்னிருக்கீங்க. நான் இங்க எவ்வளவோ கூட்டம் போட்டு பாத்துருக்கோம்,  உணர்வோட இவளோபேர் நின்னு பார்த்தது இல்ல. இன்னும் கொஞ்சம் டைம் கொடுத்தா நல்லா பன்னிருப்பிங்க. நல்லா கூட்டமும் வந்துருக்கும். உங்க கூட்டத்துக்கு பர்மிஷன் கொடுக்காம விட்டு இருந்தா அது எனக்கு பெரிய பாவமா ஆகிருக்கும். நானும் ஒரு விவசாய குடும்பத்த சேர்ந்தவன் தான் என்றார்.

கூட்டம் நடந்த பகுதியில் உள்ள வியாபாரி ஒருவர் “இங்க கூட்டம்னு சொன்னா எங்களுக்கு நல்லா வியாபாரம் இருக்கும், ஆனா உங்க கூட்டத்துக்கு வந்தவுங்க அப்பிடியே உக்காந்து இருந்தாங்க நீங்க விவசாயம் அழியுது அதுக்கு இந்த அரசாங்கம் தான் காரணம்னு சொன்னிங்களே அதுக்கு தைரியம் வேணும்.

இறுதியாக நடந்த ம.க.இ.க கலை குழு தோழர்களின் கலைநிகழ்ச்சி அனைவரையும் ஈர்த்தது. சில நண்பர்கள் நமது பாடலை குறிப்பாக தலை வணங்கா நாடு இது பாடலை மொபைலில் பதிவு செய்து மீண்டும் மீண்டும் கேட்டு கொண்டிருந்தனர்.

புதிதாக வந்த பகுதி இளைஞர்கள் எங்கள் பகுதிக்கும் வாங்க என்று மக்கள் அதிகாரத்தை அழைத்தார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருச்சி.

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி