privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திவாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு - 21 ஜூலை 2017

வாரக் குறுஞ்செய்திகளின் தொகுப்பு – 21 ஜூலை 2017

-

சென்ற வாரம் 17.07.2017 முதல் 21.07.2017 வரை வினவு தளத்தில் வெளியான 30 குறுஞ்செய்திகளின் இணைப்புக்கள் இந்தப் பதிவில் இடம் பெறுகின்றன. இந்தக் குறுஞ்செய்திகளில் விவசாயப் பிரச்சினைகள், ஐரோப்பா, ஆவணப்படங்கள், புகைப்படக் கட்டுரைகள், செய்தி வீடியோக்கள், பாஜக – மோடி அரசின் மீதான விமரிசனச் செய்திகள், தமிழக அரசியல் – செய்திகள் என பல வகைகள் இருக்கின்றன. இந்தக் குறுஞ்செய்திகள் குறித்து உங்கள் ஆலோசனைகள், கருத்துக்கள்,விமரிசனங்களையும் அறியத் தாருங்கள்! நன்றி
– வினவு

சேமிப்பு கிடங்குகள் விவசாயிகளுக்கு பயனளிக்குமா ?

நமது பொருளாதார மேதைகளோ, ‘‘இந்தியாவில் போதிய அளவிற்குச் சேமிப்புக் கிடங்குகள் இருந்திருந்தால், விவசாயிகளுக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்காது’’ என நீட்டி முழங்கி வருகிறார்கள்.

குமரியில் தொடர் வெற்றி ! குருந்தன் கோடு டாஸ்மாக்கை மூடிய மக்கள் !

மீண்டும் இதே கடைகள் திறக்கப்பட்டாலோ அல்லது இதே பகுதியில் புதிதாக சாராயக்கடைகள் திறக்கப்பட்டாலோ உடனடியாக முற்றுகையிட்டு போராடுவோம் என்று அறிவித்துச் சென்றனர்.

போலி பாஸ்போர்ட்டுக்கு உதவிய போலீசு !

இங்கே திருடர்களும் போலீசும் தனித்தனியாக இல்லை. திருட்டுப் போலீசும் அவர்களுக்கு கீழ் காக்கி உடை அணியாத அடிமைகளும் தான் இருக்கிறார்கள்.

ஆசாத் நகரின் கொத்தடிமைகள் – படக் கட்டுரை

“குழந்தைகள் உருவாக்கிய செங்கற்களால் கட்டப்பட்ட இந்த பள்ளியிலும் கூட இந்த ஏழை மக்களுக்கு கல்வி கிடைக்கவில்லை.

மோடி மீதான நம்பிக்கை வெறும் 730 பேர்களிடம் மட்டும்தான் !

மோடிக்கு ஜால்ரா அடிக்க வேண்டுமென்கிற அவசரத்தில் தரவுகளை முழுமையாக சரிபார்க்க வேண்டும் என்கிற அடிப்படையான ஊடக அறத்தைக் கூட முதலாளித்துவ பத்திரிகைகள் காற்றில் பறக்க விட்டுள்ளன.

மத்திய பிரதேசம் – உழைக்கும் மாடாய் பெண்கள் !

இரண்டு வருடங்களாக எட்டிக் கூடப் பார்க்காத அதிகார வர்க்கம், இணையத்தில் இது குறித்த வீடியோ வைரலாகப் பரவிய நிலையில் தாசில்தாரே அவருடைய ஊருக்கு விரைந்து சென்று உதவிகள் அளிப்போம் என்று உறுதியளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

சசிகால சிறை ஊழலை அம்பலப்படுத்திய டிஐஜி ரூபா பணிமாற்றம் !

சசிகலா & கோ-விற்கு என்னன்ன வசதிகள் சிறையில் கிடைத்தன என்பது அம்பானியின் ஆன்டிலியா மாளிகையின் மலைப்புக்கு நிகரானது.

மோடியின் டீக்கடை சுற்றுலாத் தலம் ! வாடிய பயிருடன் உழவரின் சவம் !

பயிர், பச்சை இன்றி உயிர் பிச்சை கேட்கும் கால்நடைகள். கழுநீர் நனைய வழியின்றி உலர்ந்த மோவாயை நாவால் வருடி காம்பு காயும் பசுக்கள். இலை தழை தேடி ஏமாந்து தன்நிழல் மேயும் ஆடுகள். இறுகி, இறுகி ஈரப்பசையற்றுப் போன நிலம் இறுதியில் விவசாயியின் நெஞ்சில் வெடிக்கிறது.

உலகிற்கு அச்சுறுத்தல் வட கொரியாவா இல்லை அமெரிக்காவா ?

இன்று உலகம் முழுவதும் 138 நாடுகளில் கிட்டத்தட்ட 800 இடங்களில் அமெரிக்காவிற்கு இராணுவ தளங்கள் இருக்கின்றன. அதாவது உலகில் கிட்டத்தட்ட 70 விழுக்காடு நாடுகளில் அமெரிக்காவின் ஆக்டோபஸ் கரங்கள் சூழ்ந்துள்ளன.

வெங்கய்யா நாயுடு ஏன் ? கருத்துக் கணிப்பு

மேலவையில் பா.ஜ.கவிற்கு போதுமான ஆட்கள் இல்லை என்பதால் கத்தல் கூச்சல்கள் மறியல்களை திறம்பட சமாளிக்கும் ஒரு பெரிய ஸ்பீக்கர் தேவையாக இருக்கிறது.

மோடி புகழ் பாடும் தில்லியில் நான்கு துப்புரவு தொழிலாளிகள் பலி !

மேட்டுக்குடியினரின் வசதிக்காகவும், முதலாளிகளின் லாபத்துக்காகவும் திறன் நகரங்களையும், புல்லட் இரயில்களையும் கனவில் கண்டு கொண்டிருக்கும் மோடி அரசு எளிய மக்களை எந்தளவுக்கு கிள்ளுக்கீரையாக நினைக்கிறது என்பதற்கு இந்தச் சாவுகளே சான்று

கத்தோலிக்க திருச்சபையால் நடத்தப்படும் விபச்சார விடுதி !

“கத்தோலிக்க திருச்சபை அதிக தீமை பயக்கும் தோற்று நோயை எதிர்கொள்வதை விட, விபச்சார விடுதி பரவாயில்லை.” என்று கருதியதாக இந்த தகவலை வெளிக் கொணர்ந்த Coks van Eysden எழுதியுள்ளார்.

எடப்பாடி ஆட்சியில் கொசுக்களின் ராஜ்ஜியம் ! தமிழகத்தில் பரவும் டெங்கு !

தமிழகத்தில் கடந்த ஆண்டு 2,531 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். நடப்பாண்டில் மே 31-ம் தேதி வரை 3,251 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வு உயர்நீதிமன்றத் தீர்ப்பு – தமிழக மாணவர்களுக்கு இடமில்லை

தனது தீர்ப்பில், தமிழக அரசின் அரசாணை “சமதளம் என்ற போர்வையில் சமமானவர்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்துவதாகக்” குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி இரவிச்சந்திரபாபு.

பறக்கும் விமானத்திலும் பெண் பயணிகளுக்கு நிம்மதி இல்லை !

பெண்களைத் தாயாக, நதியாக, தாய் மண்ணாக பார்க்கும் பாரத கலாச்சாரத்திற்கு ஈடு இணையேயில்லை என்று சங்க பரிவாரங்களால் விதந்தோதப்படுகிறது. அனால் அதே பாரதத்தில் தான் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

மாட்டிறைச்சி தடையால் காலாண்டில் இறைச்சி விலை 45% உயர்வு !

ஏற்கனவே பணமதிப்பழிப்பு காலத்தில் விற்பனை பாதிக்கப்பட்டது, தற்போது மாட்டிறைச்சி ரூபத்தில் வர்த்தகம் அடி வாங்கியது. இறுதியில் ஜி.எஸ்.டி ரூபத்தில் மூன்றாவது அடி தற்போது ஓடிக் கொண்டிருக்கிறது.

வல்லரசு இந்தியாவின் சாதனை : உலகளவில் புதிய தொழு நோயாளிகளில் 60% இந்தியர்கள் !

தொழுநோய், மலேரியா, அம்மை போன்ற மருந்து கண்டுபிடிக்கப்பட்டு குணப்படுத்த வாய்ப்புள்ள நோய்களையே கூட கட்டுப்படுத்த வக்கற்ற அரசு தான் வல்லரசு கனவில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

EPW : ஊடகங்களை அச்சுறுத்தும் மோடி – அதானி கூட்டணி

அதானி குழுமத்தின் இந்த வக்கீல் நோட்டீஸ், பத்திரிக்கைகள் மற்றும் பொதுத்தளத்தில் இயங்குபவர்களை மிரட்டுவதற்கான யுக்தியாகும்.

குண்டர் சட்டம் : போராடுபவர்களை ஒடுக்கும் மாஃபியா அரசு !

சராசரியாக ஆண்டுக்கு 2,200 பேர் என்ற அளவில் கேள்விக்கிடமற்ற முறையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

நான் ஒரு நக்சலைட்- மனுஷ்ய புத்திரன்

கையில் பதாகையுடன் நின்றிருந்தஒரு இளம்பெண்ணை
ஒரு போலீஸ்காரன் தலைமுடியையைப் பிடித்து கீழே தள்ளுகிறான் பிறகு அவள் நக்சலைட் என்று அழைக்கப்படுகிறாள்

கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி

சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்களின் படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த வாராக்கடன்களில் 25% தொகையை 12 நிறுவனங்கள் செலுத்தாமல் ஏமாற்றியிருக்கின்றன.

உங்களை இனி இயக்கப் போவது சமூகவலைத்தளங்களே ! மின்னூல் – வீடியோ

நான்காம் தொழிற்புரட்சி என்றழைக்கப்படும் புதிய அடிமை யுகம் பற்றிய எளிய அறிமுகம் அல்லது எச்சரிக்கையே இந்த மின்னூல். விலை ரூ.20 வாங்கிப் படியுங்கள், பரப்புங்கள்!

தொடரும் நேபாளப் பெண்களின் மாதவிடாய் அவலம்

“எங்களது ஜனாதிபதியும் ஒரு பெண். மக்களவைத் தலைவரும் ஒரு பெண். எங்களது தலைமை நீதிபதியும் ஒரு பெண்ணே. இருந்தும் கொட்டடியில் விலங்குகள் போல அடைபட்டு பெண்கள் இறந்து போகிறார்கள். இது வெட்கக்கேடானது”

PRPC : ராவ் – ரெட்டி – விஜயபாஸ்கரை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது ஏன் ?

ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது அதிமுகவினர் செய்த அட்டூழியங்களை விடவா வளர்மதியும், திருமுருகனும் செய்து விட்டார்கள்?

NLC தொழிலாளிகளின் வாழ்வை அழிக்கும் மோடி அரசு

ஆட்குறைப்பு, சம்பள வெட்டு, வேலை நாட்கள் குறைப்பு என்று தொடர்ந்து தொழிலாளர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.

பிரபலமான குசு – மனுஷ்ய புத்திரன்

அவர்களின் குரல் இந்த நகரத்தில் யாருக்கும் கேட்பதில்லை, ஆனால் ஒரு பிரபலமான குசுவின் சப்தம்
நம் காதையே செவிடாக்குகிறது.

அரட்டை மட ஆண்டிகளுக்கு சம்பளம் ஒரு லட்சம்

சட்ட மன்றத்தை தங்களின் பொழுதுபோக்கு இடமாக தான் இவர்கள் அனுதினமும் அணுகுகிறார்கள் என்பது பத்திரிகைகளில் வந்து சந்தி சிரிக்கின்றது. இந்த கேலிக்கூத்திற்கு இவர்களுக்கு வழங்கப்பட்டவிருக்கும் மாதசம்பளம் ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய்

கேரளா : மருத்துவக் கல்லூரி கொள்ளைக்கு அணுகவேண்டிய தரகன் பாஜக !

பாஜக-வின் உட்கட்சி விசாரணை அறிக்கையில் வினோத்தைக் குற்றவாளி எனக் குறிப்பிடும் பாஜகவினர். தகுதி இல்லாத மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் வழங்க இலஞ்சம் கொடுக்க முயன்றதைக் குற்றமாக நினைத்துக் கூட பார்க்கவில்லை.

பாகிஸ்தான் என்றால் பொங்கும் தேசபக்தி சீனாவிடம் பம்முவது ஏன் ?

கட்டதுரை சீனாவிடம் பம்மும் இந்திய கைப்பிள்ளை, பூச்சிப்பாண்டி பாகிஸ்தானிடம் விரைத்துக் கொண்டு நிற்கிறது.

_____________

இந்தப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க