privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்வைஇணையக் கணிப்புசினிமா தொழிலாளிகள் வேலை நிறுத்தம் – கருத்துக் கணிப்பு

சினிமா தொழிலாளிகள் வேலை நிறுத்தம் – கருத்துக் கணிப்பு

-

மிழ் சினிமாவில் அடிப்படைத் தொழிலாளிகளுக்கான ஒரே அமைப்பு “தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம்”. சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற “பில்லா பாண்டி” படப்பிடிப்பில் பயணப்படி கேட்டு தொழிலாளிகள் போராட்டம் நடத்தினார்கள். தயாரிப்பாளர் தரப்பில் பயணப்படியை உயர்த்துவதற்கு மறுத்து விட்டதால் பெப்சி தொழிலாளிகள் படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தின் கூட்டம் நடிகர் விஷால் தலைமையில் நடந்தது. இதில் வேலை நிறுத்தம் செய்யும் பெப்சி தொழிலாளிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு வேறு தொழிலாளிகளை வைத்து படப்பிடிப்புகளை நடத்துவோம் எனத் தயாரிப்பாளர்கள் மிரட்டினார்கள்.

தொழிலாளர் சங்கமாக இருந்தாலும் இன்னமும் ஒரு தொழிலாளியின் சுயமரியாதையை வைத்திராத சங்கமாக இருக்கும் பெப்சி உடனே தயாரிப்பாளர் சங்க தீர்மானத்தால் பின்வாங்கியது. அதன்படி “பில்லா பாண்டி” படப்பிடிப்பை நிறுத்தியதற்காக வருத்தம் தெரிவித்தது. ஆனாலும் தயாரிப்பாளர் சங்கம் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

இதைத் தொடர்ந்து தலைவர் ஆர்.கே.செல்வமணி, பொதுச் செயலாளர் ஏ.சண்முகம், பொருளாளர் சாமிநாதன் ஆகியோர் தலைமையில் கூடிய பெப்சி தனது முடிவை அறிவித்தது. கடந்த 2, 3 மாதங்களாக இழுபறியில் இருக்கும் சம்பள பேச்சு வார்த்தைகளை பேசி முடித்து ஊதிய உயர்வு குறித்து பொது விதிகள் முடிவு செய்து புத்தகமாக அச்சிட வேண்டும் என பெப்சி தெரிவித்தது.

சமாதானமாக போக விரும்பினாலும் தயாராப்பாளர் சங்கம் அதை பொருட்படுத்தவில்லை என்பதால் ஜூலை 1, 2017 முதல் வேலை நிறுத்தம் செய்வோம், இதில் 25 ஆயிரம் தொழிலாளிகள் கலந்து கொள்வார்கள் என பெ பெப்சி அமைப்பு அறிவித்திருக்கிறது.

தற்போது ரஜினி, விஜய், விஷால் உள்ளிட்ட பலர் நடிக்கும் 35 படங்களின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இதில் பெப்சி தொழிலாளிகள் பங்கேற்க மாட்டார்கள் என ஆர்.கே.செல்வமணி கூறினார்.

தயாரிப்பாளர் சங்கத் துணை தலைவரும் நடிகருமான பிரகாஷ் ராஜ் கூறும் போது, “பெப்சி தொழிலாளர்களுடன் மட்டும்தான் வேலை பார்ப்போம்        என்பதை ஏற்க மாட்டோம். தொழிலாளிகளின் சம்பள உரிமையோடு எங்களது உரிமை குறித்துப் பேசவும் தகுதியுள்ளது” என்று தெரிவித்தார்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் கூறும் போது, “எங்கள் படப்பிடிப்பிற்கு பெப்சி உறுப்பினர்கள் தடங்கல் ஏற்படுத்தினால் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

1995-ம் ஆண்டில் இதே போன்று பெப்சி தொழிலாளிகள் வேலை நிறுத்தம் செய்த போது அதை படைப்பாளிகளின் படைப்புரிமை என்று திசை திருப்பினார்கள். தற்போதும் அதே போன்றதொரு பார்வையில் பேசுகிறார்கள். விஷால், பிரகாஷ் ராஜ் போன்ற நடிகர்கள் தயாரிப்பாளர்களாவும் இருப்பதால் ஒரு முதலாளியின் குரலில் கொக்கரிக்கிறார்கள்.

வேலை நிறுத்தம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை எந்த தொழிலாளியும் பொழுது போக்கிற்காகவோ, அடிக்கடியோ பயன்படுத்துவதில்லை. நியாயமான ஊதியம் கிடைக்காத போதே அவர் அந்த ஆயுதத்தை எடுக்கிறார். இங்கே நியாயம் பேசும் விஷால் போன்ற சண்டியர்கள் கேரளாவில் போய் இப்படி எந்த தொழிலாளியை வைத்தாவது வேலை செய்வோம் எனக் கூறி முடியுமா? பேசினால் அங்கே வாய் இருக்காது. அந்த அளவுக்கு அங்கே தொழிலாளிகளின் உரிமையும், பாதுகாப்பும் இருக்கின்றது.

தமிழப் படங்களில் வரும் பண்ணையார்களைப் போலவே இந்த நடிகர்கள் – தயாரிப்பாளர்கள் தெனவெட்டாக பேசுகிறார்கள். தமிழ் சினிமாவில் ஈழம், தமிழுரிமை, முற்போக்கு, தலித், பெண்ணுரிமை எனக் குரல் கொடுக்கும் முற்போக்கு இயக்குநர்கள் யாரும் இத்தகைய தருணங்களில் தொழிலாளிகளுக்காக குரல் கொடுப்பதில்லை. இதுதான் இவர்களது உண்மை முகம்.

தற்போது அதிமுக ஊழலை எதிர்க்கும் கமலஹாசனோ, அரசியலுக்கு வருவேன் என்று பூச்சாண்டி காட்டும் ரஜினியோ, தொழிலாளிகளுக்கு பிரியாணி போட்ட புகழ் அஜித்தோ, அடுத்த முதல்வர் ஆசையில் இருக்கும் விஜய்யோ யாரும் தொழிலாளிகளுக்காக குரல் கொடுக்க மாட்டார்கள்.

பெப்சி சம்மேளனத்தில் இருக்கும் ஒளிப்பதிவாளர் சங்கம் போன்ற ஓரிரண்டு சங்கங்களை பிரித்து இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்காமல் செய்ய முயல்கிறார்கள். எனினும் லைட்மேன், சமையல் உதவியாளர் சங்கம் போன்ற அடிப்படைத் தொழிலாளிகள் இதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இதில் நீங்கள் யாரை ஆதரிக்கிறீர்கள்?

இந்தக் கருத்துக் கணிப்பு செய்திப் பதிவு உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி