privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திசுகாதாரம் - குடும்ப நலம் : மோடி சொல்ல மறந்த கதை !

சுகாதாரம் – குடும்ப நலம் : மோடி சொல்ல மறந்த கதை !

-

த்தியில் ஆளும் பா.ஜ.க. அரசு தனது மூன்றாண்டு ஆட்சியின் சாதனைகளைக் கொண்டாடும் விதமாக ’ஊழலற்ற ஆட்சி’, ’பொற்கால ஆட்சி’ எனத் திரும்பும் திசையெங்கும் செய்தித்தாள் விளம்பரங்கள் தொடங்கி பேனர்கள் வரை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

அவர்கள் விளம்பரப்படுத்த  மறந்த சில முக்கியச் சாதனைகளை சமீபத்தில் ’இந்தியா-ஸ்பெண்ட்’ (www.indiaspend.com) என்ற இணையதளப் பத்திரிக்கை, தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் துறை அறிக்கை மற்றும் மத்திய, மாநில நிதிநிலை அறிக்கைகள் ஆகிய ஆவணங்களிலிருந்து பல்வேறு தகவல்களைத் தொகுத்து, புள்ளி விவரத் தரவுகளை சமீபத்தில் வெளியிட்டது.

மோடியின் மூன்றாண்டு பாசிச ஆட்சியில் நாட்டின் பெரும்பான்மை ஏழை மக்களின் நிலை என்ன என்பதை இந்த புள்ளி விவரங்கள் நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

அரசு மருத்துவமனை – நன்றி: ராய்ட்டர்ஸ்

மத்திய பிரதேசம், இராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட், உத்தரகாண்ட், பீஹார், சட்டீஸ்கர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய ஒன்பது மாநிலங்களும், இந்தியாவில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைகளில் மிகவும் பின் தங்கிய மாநிலங்களாகும். இந்த ஒன்பது மாநிலங்களிலும் உள்ள மொத்த மக்கள் தொகை, சுமார் 58 கோடியாகும். இது இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் சுமார் 48% ஆகும்.

இந்த ஒன்பது மாநிலங்களும், சுகாதாரத் துறைக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில்  சராசரியாக 4.7% மட்டுமே செலவிடுகின்றன. இது நாடு முழுமைக்கும் சுகாதாரத்துறைக்கென்று செலவிடப்படும் சராசரியை விடக் குறைவானதாகும். சுகாதாரத்துறை என்பதில், சுத்தமான குடிநீர், சுகாதாரம், வீடு, நகர மேம்பாடு ஆகிய அனைத்தும் அடங்கும்.

உதாரணத்திற்கு கடந்த 2014-15 ம் ஆண்டுக்கான மாநில பட்ஜெட்டில் சுகாதார மற்றும் குடும்ப நலத்திட்டங்களுக்கு இராஜஸ்தான், ம.பி மற்றும் பீஹார் ஆகிய மாநிலங்களால் ஒதுக்கப்பட்டதும் செலவளிக்கப்பட்டதும், சதவீதங்களில் :

  • மத்தியபிரதேசம் – ஒதுக்கப்பட்டது – 5% ******* செலவழித்தது – 4.3%
  • இராஜஸ்தான் – ஒதுக்கப்பட்டது – 6.6% ******* செலவழித்தது – 5.6%
  • பீஹார் – ஒதுக்கப்பட்டது – 4.1% ******* செலவழித்தது – 3.8%

இதைப் போன்றே மற்ற ஆறு மாநிலங்களும் சுகாதார மற்றும் குடும்ப நலத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட மிகக் குறைவாகவே செலவளித்துள்ளன.

இந்த ஒன்பது மாநிலங்களிலும் சுமார் 73% மக்கள் அரசின் சுகாதார நிலையங்களை முழுமையாகச் சார்ந்துள்ளனர். இந்தியா முழுவதுமென எடுத்துக் கொண்டால் சுமார் 79% மக்கள் அரசு சுகாதார நிலையங்களையே சார்ந்திருக்கின்றனர். இத்தகவலை தேசிய குடும்பம் மற்றும் சுகாதாரச் சுற்றாய்வு(NFHS) தனது 2015-16ம் ஆண்டுக்கான அறிக்கையில் கொடுத்துள்ளது. ஆகவே மாநில பட்ஜெட்டில் சுகாதாரத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதி குறைவாக இருக்கும் நிலையில், அப்படி ஒதுக்கப்பட்ட தொகையையும் முழுமையாக செலவளிக்காததன் காரணமாக மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

ஒட்டு மொத்த நாட்டின் குழந்தைகள் இறப்பில் 70% இறப்புகள் இந்த ஒன்பது மாநிலங்களில் தான் நிகழ்கின்றன. மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பில் 75%, பிரசவத்தின் போது ஏற்படும் இறப்பில் 62%  இந்த  மாநிலங்களில் தான் நிகழ்கின்றன.

ஊட்டச்சத்து குறைபாட்டால், இந்தியாவில் சுமார் 36% குழந்தைகள் வயதுக்குறிய எடையை விடக் குறைவாகவும், 38% குழந்தைகள் வயதிற்குரிய உயரத்தை விட உயரம் குறைவாகவும் உள்ளனர். ஆனால் இந்த ஒன்பது மாநிலங்களில் மட்டும் இவற்றின் சாராசரி, தேசிய சராசரியை விட 2% அதிகமாக உள்ளன. எண்ணிக்கை  ஒட்டு மொத்த இந்தியாவை விட 2%  கூடுதலாக உள்ளது.

உத்தரபிரதேசம், பீஹார், மத்திய பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய நான்கு மாநிலங்களில் மட்டும் 37.2 கோடி மக்கள் வசிக்கிறார்கள். ஆனால் 120 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் ஒட்டு மொத்த குழந்தை இறப்பில் 58% இந்த நான்கு மாநிலங்களில் தான் நிகழ்கின்றன.

இது ஏதோ தனிப்பட்ட மாநிலங்களின் பிரச்சினை அல்ல. மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் மாநிலங்களுக்காக சுகாதாரத் துறைக்கென ஒதுக்கும் நிதியைக் குறைத்து வருவதே இதற்கான முக்கியக் காரணமாகும். பிரிக்ஸ் நாடுகளிலேயே (BRICS- Brazil, Russia, India,  China, South Africa), தமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்கு மிகக் குறைவாக ஒதுக்கும் நாடு இந்தியா தான்.

பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் தான், குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவிலேயே மிக மிக அதிகம். அதாவது 1000 குழந்தைகளுக்கு 51 பேர் என்ற விகிதத்தில் குழந்தை இறப்பு நிகழ்கிறது. இது உலகின் மிகவும் பின் தங்கிய ஏழை நாடுகளான காம்பியா மற்றும் எத்தியோப்பியாவை விடவும் மிகவும் மோசமான நிலைமை என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத்திற்கான தொடர் வளர்ச்சி இலக்கு வரிசையில், உலக அளவில் சுமார் 188 நாடுகளில் இலங்கை 83-ம் இடத்தில் இருக்கிறது. வல்லரசான இந்தியா 143வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் தான் நிதி ஆயோக் தனது சமீபத்திய அறிக்கையில், அரசு மருத்துவமனைகளை தனியார்மயமாக்கப் பரிந்துரைத்துள்ளது. இந்நாட்டின் 70%-க்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவமனைகளைத் தனியார்மயப்படுத்துவது தான் மோடி அரசின் நோக்கமாக உள்ளது. சொந்த நாட்டு மக்களைப் பட்டினி போட்டுக் கொன்றது போதாமல், நோயோடு அழுகச் செய்து சாகடிக்கத் துடிக்கும் பாசிச கும்பலின் பிடியில்  இருந்து இந்த நாட்டைக் காக்க இப்போதே விழித்துக் கொள்ளாவிட்டால், இக்கும்பலின் பிடியிலிருந்து இனி எப்போதும் தப்ப முடியாது.

செய்தி ஆதாரம்:

இந்தச் செய்திக் கட்டுரை உங்களுக்குப் பயனளித்ததா ?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க