privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபோராடாம விட்டோம்னா நாம போய்ச் சேர வேண்டியதுதான் !

போராடாம விட்டோம்னா நாம போய்ச் சேர வேண்டியதுதான் !

-

ஞ்சையில் ஆகஸ்ட் – 5, 2017 அன்று நடைபெற இருக்கும் “விவசாயியை வாழவிடு” மக்கள் அதிகாரத்தின் மாநாட்டை ஒட்டி வினவு செய்தியாளர்கள் தஞ்சையில் திரட்டிய மக்கள் கருத்துக்கள் படங்களுடன்…..
பொன்னுசாமி, ஊர்: செவ்வையார் குடிக்காடு

பகுதி நேர வேலையாக வாழை இலை விற்பனையில் ஈடுபடுகிறார். டைல்ஸ் ஒட்டும் வேலையை பிரதானமான வேலையாகச் செய்கிறார்.  “அடிப்படையில் நானும் விவசாயப் பின்னணியில இருந்து வந்தவன் தான்.  விவசாயம் பண்றதுக்கு தண்ணி இல்லை. நிலத்தடி நீர் 200 அடிக்கும் கீழே போயிடுச்சி..

சமயன், ஆட்டோ- டிரைவர். அண்ணா தொழிற்சங்கத்தில் இருக்கிறார்.

“ நெடுவாசல் போராட்டத்துல ஒரு வாரம் கலந்துக்கிட்டேன் சார்.. விவசாயிகள் தான் தெய்வங்கள்.. போராடாம விட்டோம்னா நாமெல்லாம் போய் சேர வேண்டியது தான் ..”

மாரியம்மாள், தரைக் கடை வியாபாரம்

மாநாட்டுக்குக் கண்டிப்பா வருவேன். இந்த டாஸ்மாக் கடைய வச்சி நடத்துறவங்கள வெளுக்கனும்யா.. மழை இல்லாம என்னப்பா வாழ்க்கை. விலைவாசி ரொம்ப ஏறிப் போச்சு.. அடுத்து கேஸ் விலைய ஏத்துறாங்களாம்.. நாங்களெல்லாம் சாக வேண்டியது தான்னு நினைக்கிறேன்..

தேவராஜ்,பால் வியாபாரி

மத்திய அரசு கொண்டு வர்ற திட்டத்துனால யாராச்சும் நல்லா இருக்காங்களா ? இல்லை எதாவது பலன் தான் இருக்கா ?. வச்சிருக்க மாட்ட காப்பாத்தறதுக்காக நாங்க எவ்ளோ சிரமப் படுறோம் தெரியுமா ? 40, 50 ரூபாய்க்கு வித்த வைக்கோலு இப்போ 200 ரூபாய்க்கு விக்கிது.. இதுக்கு நாங்களா காரணம் ? வயசான மாட்ட கை மாத்தி விட்டா தானே நாலு காசு பாக்க முடியும்? தமிழ்நாடு கவர்மெண்ட்டும் சரி இல்லை, மத்திய அரசும் சரியில்லை.

 கேட்டா மிலிட்டரிக்காரனெல்லாம் நாட்டுக்காக தியாகம் பண்றதா சொல்றாங்க .. அவங்க பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் பத்திரமா தானே இருக்காங்க.. கூடவே கவர்மெண்டும் காசு கொடுக்குது .. ஆனா எங்க குடும்பத்தக் காப்பாத்த யாரு இருக்காங்க .. சொல்லுங்க பாப்போம்..
செய்தி, படங்கள்  – வினவு செய்தியாளர் குழு.

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க