privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதயாராகும் தஞ்சை : விவசாயம் இல்லையென்றால் பெரிய கோவிலும் இல்லை !

தயாராகும் தஞ்சை : விவசாயம் இல்லையென்றால் பெரிய கோவிலும் இல்லை !

-

ஞ்சையில் ஆகஸ்ட் – 5, 2017 அன்று நடைபெறவுள்ள விவசாயியை வாழவிடு ! மாநாட்டையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தஞ்சையிலிருந்து வினவு செய்தியாளர்கள் திரட்டிய செய்திக்குறிப்புகள் – படங்கள்…..

தஞ்சை மாநாட்டு திடலுக்கு செல்லும் வழியெங்கும் மக்கள் அதிகாரத்தின் வரவேற்பு சுவரெழுத்துக்கள்.

சாலையின் இருமருங்கும் பறக்கும் மக்கள் அதிகாரத்தின் கொடிகள்.

மாநாட்டில் பங்கேற்க அறைகூவல் விடுக்கும் வரவேற்பு பதாகைகள்

மாநாட்டுக்கான அனுமதியானது ஆகஸ்ட் 2, 2017 -அன்று தான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது. அப்போது மாநாட்டுக்கு அனுமதி மறுக்க வேண்டும் என வழக்காடிய அரசு வழக்கறிஞர் “மாநாட்டுக்கு வரும் கூட்டத்தால் தஞ்சைப் பெரிய கோவில் என்ற கலைப் பொக்கிஷத்துக்கு ஆபத்து” என்ற பிரம்மாஸ்திரத்தை கடைசியாக ஏவினார்.

அரசு வழக்கறிஞரின் வாதத்தைப் பற்றி தஞ்சை மக்களின் கருத்து.

தஞ்சை பெரிய கோவிலை கடந்த இருபது ஆண்டுகளாக சுத்தம் செய்யம் தொழிலாளி தனலட்சுமி.  இவர்களுடன் சரோஜா,கோபிகா, இன்னும் பதினோரு துப்புரவு தொழிலாளிகள் கோவில் முழுவதும் சுத்தம் செய்கிறார்கள்.  மக்கள் அதிகாரம் மாநாட்டிற்கு வருபவர்களால்  கோவிலுக்கு ஆபத்து என்று அரசு சொல்கிறதே என்று கேட்டதற்கு, என்ன பாதிப்பு வரப்போகுது… விவசாயம் நடந்தால்  தானே கோவிலுக்கு வருவாய் கிடைக்கும். அவர்களே இல்லை என்றால் கோவில் எப்படி நடக்கும். கோயில் நெலத்துல விவசாயம் செய்யிறது விவசாயிங்க தானே. அவர்கள் நல்லா இருந்தா தானே கோயில் நல்லா இருக்கும்.

பெரிய கோவில் வாயிலில் சிறு வயதில் இருந்து பூ வியாபரம் செய்யும் சரவணகுமார். ஏற்கனவே வியாபாரம் மந்தமா இருக்கு. GST அது இதுன்னு சொல்லி இருக்கிறதும் போச்சு. ஏற்கனவே கோவிலுக்கு வரவங்களை குண்டு சோதனை செயுறோம்னு சொல்லி ஆளுங்க வர்ரதையே குறைச்சிட்டானுவோ.  இப்ப மாநாட்டு வரவங்களால தான் கோவில் கலையிழக்க போகுதாமாம்? என்று கேள்வி எழுப்புகிறார்.

செய்தி, படங்கள்  – வினவு செய்தியாளர் குழு.

_____________

விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க