privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்அறிவியல்-தொழில்நுட்பம்பார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு

பார்ப்பனியத்தை ஏற்காத அறிவியலாளர் புஷ்ப மித்ரா பர்கவா மறைவு

-

ந்தியாவின் புகழ்பெற்ற செல் மூலக்கூறு உயிரியல் (cellular molecular biology) விஞ்ஞானி புஷ்ப மித்ரா பர்கவா (Pushpa Mittra Bhargava) ஆகஸ்ட் 1, 2017 அன்று காலமானார்.

அறிவியல் மனப்பான்மையையும், மனித நேயத்தையும், ஆய்வுமுறை மற்றும் சீர்திருத்த சிந்தனைகளையும் வளர்த்துக் கொள்ளல் ஒவ்வொரு குடிமகனும் உள்ள அடிப்படைக் கடமையாக இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 51(அ) வரையறுத்துள்ளது. அரசியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் யதார்த்தத்தில் ஏட்டுச் சுரைக்காயாக இருக்கும் காலத்தில் இதை தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டு கடைசிவரை நேர்மையாகப் பின்பற்றியவர் பர்கவா.

1928-ம் ஆண்டு ராஜஸ்தான் அஜ்மீரில் பிறந்த பர்காவா, வாரணாசியில் உள்ள தியாசபிகல் கல்லூரியிலும், குயின்ஸ் கல்லூரியிலும் படித்தார். அங்கு 1944-ம் ஆண்டு இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் பி.எஸ்.சி. பட்டம் பெற்றார்.

1946-ம் ஆண்டில் கரிம வேதியியல் துறையில் தனது எம்.எஸ்.சி. பட்டத்தை பூர்த்தி செய்தார். தனது 21-ம் வயதில் லக்னோ பல்கலைக்கழகத்தில் செயற்கை கரிம வேதியியல் துறையில் ஆய்வுப்படிப்பை (PhD) முடித்தார்.

மைய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மையத்தின் (CSIR) ஹைதராபாத்திலுள்ள செல்லுலார் மூலக்கூறு உயிரியல் ஆய்வுமையத்தின் (CCMB) நிறுவன இயக்குனராகவும் இருந்தார். இந்த ஆய்வுமையம் இந்திய அணுசக்தியின் தந்தை என்றழைக்கப்படும் ஹோமி பாபாவால் துவங்கப்பெற்ற டாடா அடிப்படை ஆய்வுகளுக்கான நிறுவனத்துடன் (TIFR) ஒப்பிடத்தக்கது. அதனால், பர்கவா இந்திய மூலக்கூறு உயிரியல் துறையின் தந்தை என அழைக்கப்படுகிறார். பிரதமரின் அறிவியல் ஆலோசகர் உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளில் வகித்தவர் பர்கவா.

1946-களில் துவங்கப்பட்ட இந்திய அறிவியல் தொழிலாளர்கள் சங்கத்தின் (Association of Scientific Workers in india) நிறுவனர்களில் ஒருவர் பர்கவா. அறிவியலாளர்களும் கூட கூட்டு நலன்களைக் கொண்ட தொழிலாளர்களே; அவர்கள் பொது நலனுக்கான வேலைகளைத் தொடர்வதற்கு தங்களை ஒரு தொழிற்சங்கத்தில் அமைப்பாக்கிக் கொள்ளவேண்டும் என்றார் பர்கவா. மேலும், அப்போதைய பிரதமர் நேருவை தங்களது சங்கத்தின் தலைவராக இருக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்.

போபால் யூனியன் கார்பைடு ஆலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதியாக நின்றார் பர்கவா.

மற்ற முக்கிய அறிவியல் நிறுவனங்களும், விஞ்ஞானிகளும் போபால் யூனியன் கார்பைடு ஆலை விபத்தைப் பற்றி மவுனம் சாதித்தபோது பர்கவா விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் உறுதியாக நின்றார்.

1981-ம் ஆண்டு அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தை (Society for the Promotion of Scientific Temper) உருவாக்கிய விஞ்ஞானிகளில் பர்கவாவும் ஒருவர்.

1994-ம் ஆண்டு, அரசின் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் சோதிடத்தை சேர்க்கும் முடிவை இந்திய அறிவியல் கழகங்களின் கூட்டிணைவு எதிர்க்காததால் அதன் உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் பர்கவா.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களை இந்தியாவில் அனுமதித்ததை கடுமையாக எதிர்த்துவந்தார் பர்கவா.  மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அறிமுகம் செய்யப்படுவதை  குறைந்த பட்சம் 15 ஆண்டுகளுக்கு தள்ளிப்போட வேண்டும் என்று கூறிவந்தார்.

2015-ம் ஆண்டில் பகுத்தறிவாளார்கள் கல்புர்கி, பன்சாரே ஆகியோரது படுகொலைகள், மாட்டிறைச்சியின் பெயரால் தாத்ரி படுகொலை ஆகியவற்றைத் தொடர்ந்து மோடி அரசின் சகிப்பின்மைக்கு எதிராகவும், அறிவியல், பகுத்தறிவுக்கு எதிரான இந்துத்துவத்தின் தாக்குதலைக் கண்டித்தும் 1986-ல் தனக்கு வழங்கப்பட்டிருந்த பத்ம பூஷன் விருதை திருப்பிக் கொடுத்தார் பர்கவா.

“உள்ளார்ந்த நம்பிக்கையினாலும் மூடநம்பிக்கையினாலும் பெறப்பட்டதும்…
மதம், பழக்கவழக்கம் மற்றும் பாரம்பரியதால் உந்தப்பெற்றதும்…
அறிவியல் அறிவு மற்றும் திறந்த மனப்பான்மையுடன் நேரடி முரண்பாடு உடையதுமான..
பழமைவாத, உணர்ச்சிவயப்பட்ட, பகுத்தறிவற்ற அணுகுமுறைகளுக்கு மாற்றாக அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் அதை நடைமுறை செயல்படுத்துவதும் இந்தியாவில் முன்னெப்போதையும் விட இன்றைய உடனடித் தேவையாகும்”.

– அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தில் மக்கள் தங்களை இணைத்துக்கொள்ள அழைப்பு விடுத்து பர்கவா 1980-களில் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி.

மக்களிடம் அறிவியல் மனப்பான்மையையும் பகுத்தறிவையும் வளர்ப்பதற்கு பன்முகத் தன்மையுடன் பணியாற்றிய பர்கவாவின் மரணம் இந்திய மக்களுக்கும், அறிவியல் துறைக்கும் மீப்பெரும் இழப்பாகும்.

 ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த குரு கோல்வால்கரை மங்கி ஆக்கிய பர்கவா :

பர்கவாவின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து இன்றைய காலப்பொருத்தம் கருதி ஆர்.எஸ்.எஸ்-சின் சித்தாந்த தலைவர் கோல்வால்கரை மூக்குடைத்த அவரது சந்திப்பு பற்றிய சிறுபகுதியை கீழே தருகிறோம்:

கோல்வால்கர்

1966-ம் ஆண்டு பசு வதையை தடை செய்யக்கோரி ஆர்.எஸ்.எஸ் நாடு முழுவதும் பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. பூரி சங்கராச்சாரியார் பசு வதைக்கெதிராக உண்ணா விரதத்தை தொடங்கினார்.

அப்போது ஹைதரபாத் பிராந்திய ஆய்வுக் கூடத்தில் (Regional Research Laboratory) வேல இசெய்து வந்தார் பர்கவா. 1967-ம் ஆண்டு அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கான சங்கத்தின் சார்பில் பசுவதை தடை தொடர்பாக ஒரு கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து அதற்கு தலைமை தாங்கினார் பர்கவா. இக்கூட்டத்தில் உரையாற்றிய பிரபல டாக்டர் பி.ராம்சந்தர், “நாம் பசுக்களை தின்னாவிட்டால், அவை நம்மை தின்றுவிடும்” என்று குறிப்பிட்டார். இது அன்றைய பத்திரிக்கைகளில் வெளியாகி அரசின் பிராந்திய ஆய்வுக் கூடத்தில் வேலை செய்து வந்த பர்கவாவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தியது.

அரசு ஆய்வகத்தில் மேற்படி கலந்தாய்வுக் கூட்டத்தை எப்படி ஏற்பாடு செய்யலாம் என்று கேள்விகள் எழுப்பபட்டன. மத்திய அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சர்க்கார் தலைமையில் ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. அக்குகுழுவில் பூரி சங்கராச்சாரியார், ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வல்கர், அமுல் புகழ் வர்கீஸ் குரியன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

கோல்வல்கர் பர்கவாவிடம் சரமாரியாக கேள்விகள் கேட்கத் தொடங்கினார். நீங்கள் பிராமணரா? இறைச்சி சாப்பிடுவீர்களா? பிராமணராக இருந்து எப்படி சாப்பிடுகிறீர்கள்? என்று நீண்டன கேள்விகள். அத்தனைக்கும் பொறுமையாக பதிலளித்தார் பர்கவா.

ஒரு உடல் எப்படி இறைச்சியை உருவாகுகிறது?

அடிப்படை உயிர்வேதியலைக் கொண்டு இறைச்சி உடலில் எப்படி உருவாகிறது என்று விளக்கினார். நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் புரதங்கள் இரைப்பை உள்ளிட்ட செரித்தல் உருப்புகளில் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன. அவை இரத்தத்தின் மூலம் உடலின் அனைத்து பாகங்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு புரதமாக மறுகட்டமைக்கப்பட்டு திசுக்களாக மாறுகின்றன. இது தான் உடலில் இறைச்சி – திசுக்கள் உருவாகும் விதம்.

எனில் பால் எப்படி உருவாகிறது?

பாலும் இறைச்சியைப் போலவே அதே செயல் முறையில்தான் உருவாகிறது.

பாலும், இறைச்சியும் ஒரே மாதிரியாகத்தான் உருவாகின்றன என்றால் நீங்கள் ஏன் இறைச்சியை விட்டுவிட்டு பாலை உண்ணக்கூடாது – இது கோல்வால்கர்.

இதே தர்க்கத்தில் “பாலும், இறைச்சியும் ஒரே மாதிரியாகத்தான் உருவாகின்றன அப்படியிருக்க நீங்கள் ஏன் இறைச்சியை உண்ணக்கூடாது” – இது பர்கவா.

பர்கவாவின் எதிர்கேள்வி ஆர்.எஸ்.எஸ்-சின் கோல்வல்கரை மங்கியாக ஆட வைத்துவிட்டது. அவரை சமாதானப்படுத்த சங்கராச்சாரி பெருமுயற்சி எடுக்க வேண்டியிருந்தது. அன்றைய சித்தாந்தத் தலைவராக இருந்தாலும் சரி அவருடைய இன்றைய அடிபொடிகளாக இருந்தாலும் சரி லேசாக எதிர்கேள்வி கேட்டு மடக்கினாலே அவர்களுக்குள்ளிருக்கும் பாசிச மங்கியை வெளிக் கொணர்ந்துவிடலாம். பின்னர், தன்னை சந்தித்த பர்கவாவிடம் அருமையாக பதிலடி கொடுத்ததாக நீதிபதி சர்க்கார் பாராட்டியுள்ளார்.

பின் குறிப்பு: “அரசாங்கத்தை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்குவதற்காகவும், இந்துக்களை பசு என்ற குறியீட்டைக் கொண்டு ஒன்று திரட்டவுமே பசுவதை தடை அரசியலைக் கையில் எடுத்தேன்” என்று பின்னர் வர்கீஸ் குரியனை சந்தித்த கோல்வல்கர் கூறியதாக குரியன் தனது வாழ்க்கை வரலாற்றில் குறிப்பிட்டுள்ளார்.

– நாசர்

கட்டுரையை எழுத உதவிய மூலங்கள்:

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். நன்றி

  1. அறிவியலாளா் பா்கவா அவா்களுக்கு இதயம் கணத்த அஞ்சலியய் காணிக்கய் ஆக்குவோம்.நாடெங்கும் பா்கவாக்கள் உருவாவதயும் சங்கிகள் விரட்டப்படவிரப்பதயும் டீ சங்கிகழுக்கு உணா்த்துவோம்

  2. தன்னை அறியாமலேயே இயற்கையாக பொதுவுடைமை பேசியதால் பல சக்திகளால் வீழ்த்தப்பட்ட கடைசி மானத்தமிழன் பிரபாகரன். தன்னை அறியாமலேயே இயற்கையாக பொதுவுடைமை பேசியதால் பல சக்திகளால் வீழ்த்தப்பட்ட கடைசி மானத்தமிழன் பிரபாகரன்.

    இப்போதுதான் இவரை பற்றி வினவு மூலம் கேள்விபடுகிறேன். அந்த அறிஞரின் விளக்கம் அருமை. அட இவனுங்களுக்கும் அது தெரியும். ஆனா இவனுங்க நோக்கமே மக்களுக்கு கிடைக்கும் கொஞ்ச நஞ்ச புரதம் மற்றும் இன்சுலின் போன்றவற்றை தடுத்து உழைப்பை உறிஞ்ச மாச்சத்து மட்டும் தின்ன வைத்து பின்பு நீரிழிவு மருந்துகளுக்காக பன்னாட்டு மருந்து கம்பனிகளுக்கு ஒரு மார்க்கெட் உருவாக்கவே. இந்த சதியில் சங்கிகளுக்கும் பன்னாட்டு கம்பனிகளுக்கும் சம பங்குண்டு. இந்த இரண்டு பார்டிகளும் யோகாவை திணிப்பதன் காரணமும் இதே. மக்களை கொந்தளிக்க விடாமல் அமுக்க. கேள்வி கேட்கும் குணம் போராடும் குணம் எல்லாவற்றையும் காயடிக்க. மாட்டிறைச்சி சாப்பிட்டு நோயில்லாமல் உரமாக இருந்தால்தானே போராடுவீர்கள்?

    முதலில் மாடு என்பதே பரிணாமம் நமக்கு அளித்த இணையில்லா செல்வம். சொன்னால் நம்ப மாட்டீர்கள். தற்போது முதலாளித்துவம் கடத்தி வைத்துகொண்டு தனதென்று உரிமை கொண்டாடும் பல்வேறு மனித குலத்தின் சாதனைகள் அடைவுகள் மாட்டிறைச்சி இல்லாமல் சாத்திய பட்டிருக்காது.
    நம் தொடக்க கால சகோதரர்களான மாசாய் மக்களை பாருங்கள். மாடுதான் அவர்களுக்கு எல்லாமே. நம்மை போலவே மாட்டை நேசிப்பவர்கள். ஆனால் ஒரு சிறு வித்தியாசம். அவர்கள் மாட்டு மூத்திரம் குடிப்பதில்லை. சாணி தின்பதில்லை. மாட்டை கும்பிட்டு அதை அவமான படுத்துவது இல்லை. அவர்கள் உணவே பெரும்பாலும் மாடு இரத்தம் பால் கலந்த கலவை. அதனால் தன அவர்கள் சிறிதளவே உண்டாலும் கல்நார் போல் கடிமையாக இருக்கிறார்கள். நீரிழிவு எட்டியே பார்ப்பதில்லை. ஆனால் இங்கே தின்பதை கூட எதோ பரமபத நிலை போல் காட்டி (ஆம் காட்பரி மற்றும் பர்கர் விளம்பரங்களை சொல்கிறேன்) மக்களை வெறும் கொழுப்பு உருண்டைகளாக மாற்றிகொண்டிருக்கிறார்கள். மாசாய் மக்கள் மாட்டின் ஒரு பகுதியை கூட வீணாக்குவதில்லை. அதுவே நாம் மாடுக்கு தரும் உச்ச மரியாதை. இயற்கைக்கு காட்டும் acknowledgement. (மன்னிக்கவும் சரியான தமிழ் வார்த்தை அகப்படவில்லை, தேவைப்படின் கருத்தை சரியாக சொல்ல எந்த மொழியும் பாவிக்கலாம் என்பதே என்கருத்து. இதற்கு சரியான தமிழ் வார்த்தை தெரிந்தால் அறிய தரவும்).
    அதை விடுத்து வயதான மாட்டை அலையவிட்டு அது பசி பட்டினி கிடந்தது நாறி செத்து அழுகி..சேச்சே இதை விட அதற்கு துரோகம் செய்ய முடியாது.

    ஏன் இவர்களின் அமெரிக்க ட்ரம்ப் மகாவிஷ்ணுவே மாட்டுக்கறியாய் விழுங்கும் மகாவிஷ்ணு. அது ஒன்று குத்தாது இந்த பயல்களுக்கு.

  3. தன்னை அறியாமலேயே இயற்கையாக பொதுவுடைமை பேசியதால் பல சக்திகளால் வீழ்த்தப்பட்ட கடைசி மானத்தமிழன் பிரபாகரன். தன்னை அறியாமலேயே இயற்கையாக பொதுவுடைமை பேசியதால் பல சக்திகளால் வீழ்த்தப்பட்ட கடைசி மானத்தமிழன் பிரபாகரன்.

    மேலும் மாசாய் மக்களை பற்றி ஆராய்ந்த வெள்ளை டாக்டர்கள் கென்யாவிலோ தன்சனியாவிலோ நோய் என்று ஆஸ்பத்திரிக்கு ஒரு மாசாய் இனத்தவர் வருவதே அரிதிலும் அரிதாம். அதோடு அவர்களுக்கு என்பு பற்கள் போன்றவை உலகில் யாருக்கும் இல்லாதபடி பக்காவாக இருக்குமாம். என்பு தேய்வு பற்சிதைவு என்பன வெகு வெகு குறைவாம். இதற்கு காரணம் அவர்கள் எடுத்து கொள்ளும் சரி சம விகித மாட்டு இறைச்சி இரத்த பால் உணவே காரணமாம். சில மாசாய் குழுக்கள் மரக்கறிகள் செர்த்துகொண்டாலும் பெரும்பாலான குழுக்கள் மாடு மட்டுமே. இந்த அற்புத வஸ்துவை, இயற்கை தந்த கொடையை உன்ன வேண்டாம் என்று சொல்ல என்ன ஒரு நரிப்புத்தி வேண்டும். ஒரு வேடிக்கை பாருங்கள் ஆங்கில விக்கிபீடியா எல்லாவற்றையும் சொல்கிறது, ஆனால் அதன் தமிழ் பதிப்பு என்ன சொல்கிறது என்றால்,

    \\கெனியா, தான்சானியா அரசுகள், மசாய்கள் தமது அரை-நாடோடி வாழ்க்கை முறையைக் கைவிடுவதற்கான திட்டங்களைச் செயல்படுத்துகின்ற போதிலும், இவர்கள் தமது பழைய வாழ்க்கை முறையைப் பின்பற்றவே விரும்புகிறார்கள்.\\

    ஆம் அம்மக்களையும் இழுத்து கொண்டுவந்து வோட்டு போட சொல்லுங்கள், கோதுமை தின்றுவிட்டு எங்காவது வெளிநாட்டு சுரங்க கம்பணியில் அடி மாடாய் வேலை செய்ய சொல்லுங்கள், பிறகு நோயே என்னவென்று தெரியாமல் வாழ்ந்தவனுக்கு மருந்து வில்லுங்கள்.

  4. அந்த ஆங்கில வார்த்தைக்கு ஒப்புகைச்சீட்டு என பொருள் கொள்ளலாம் நண்பா

  5. ராமியா அல்லது ரம்யா,

    ‘This article explains that Bargava is against blind belief. But it DOES NOT explain that he is against Brahmins’ domination.’

    இப்படிதானே சொல்ல வந்தீர்? not ஐ விட்டுவிட்டீர் போல. பார்ப்பனியம் என்பது மூட நம்பிக்கை இல்லை. அது கடைந்தெடுத்த நரித்தனங்கள் மூலம் மக்களை கட்டுப்படுத்தி ஒரு சிறு குழு குண்டி தடிப்பதே நோக்காக கொண்ட ஒரு விஷமம். பார்கவாவின் விளக்கம் ஏன் அவர்களை இவ்வளவு கோபமூட்டியது? ஏனெனில் அவர்களுக்கும் தெரியும் இந்த உண்மைகள். உண்மையாக வாதிட்டால் பதில் வாதம் தேட முடியும், நடித்தால் இப்படித்தான் கோப படுவார்கள். இன்று பிஜேபி கலந்து கொள்ளும் விவாதங்களை போல். அதனால் இவற்றை அம்பலபடுத்துவதே பார்ப்பனியத்தின் மூச்சை நிறுத்தும். பார்கவா வேறாக மூட நம்பிக்கை என்ற ஒன்றை எதிர்க்க தேவை இல்லை. இந்த மோசடிகளே பார்பனியம். இவற்றை விட வேறாக பரிசுத்த ஆவி போல பார்ப்பனியம் என்று வேறாக ஒன்றுமில்லை.

  6. திரு.சின்னா!நீங்கள் சொல்வதில் உண்மை உள்ளது. ஆனால் முழுமை இல்லை. வர்ணத்தின் அடிப்படையில் தொழில் அமையாமல் அனைத்து சாதியினரும் அனைத்துத் தொழில்களையும் செய்தாக வேண்டியநிலையை ஏற்படுத்துவதே பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க்கும் வழியாகும். எவ்வளவு வீரம், முற்போக்கு, புரட்சி என்று பேசும் பார்ப்பனர்களும், அனைவரும் அவரவர் மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தில் அனைத்துத் தொழில்களையும் செய்ய வேண்டும் என்றநிலையை எடுக்கநேர்ந்தால் அங்கே இருந்து பார்ப்பனர்கள்நழுவி வடுகிறார்கள்.
    பார்ப்பனர்கள் கீழ்நிலை வேலைகளைச் செய்வதில் இருந்து தப்ப முடியக் கூடாது; ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர்நிலை வேலைகளுக்குச் செல்வதைத் தடுக்க முடியக் கூடாது என்பதை உண்மையாக, உறுதியாக ஒப்புக் கொள்ளும் பார்ப்பனர் ஒருவரைக் கூடநான் பார்க்கவில்லை. இந்த விவாதம் வந்தாலேயே அவாள்நழுவி விடுவார்கள்.

  7. உண்மைதான் ராமியா,கட்டுரை பார்கவா ஒரு மூட நம்பிக்கைகு எதிராக தான் பேசுகிறார். ஆனால் பிராமணர்களின் ஆதிக்கத்தை எதிர்த்தததாக கூறவில்லை என்று நீர் கூறியதை நீர் பிராமண ஆதிக்கத்தை ஆதரிப்பதாக எடுத்துக்கொண்டுவிட்டேன். ஆம் இவர் இந்த மாட்டிகறி பிரச்சனை தவிர பிராமண ஆதிக்கம் பற்றி என்ன கருத்து கொண்டிருந்தார் என்பதை அறிந்த பின்னரே உறுதியாக சொல்லமுடியும். இறைச்சியை சாப்பிட்டுக்கொண்டு தலித்துதான் பீ அள்ள வேண்டுமென்றால் அவன் சாதாரண பார்பானை விட நரியன் என்றே அர்த்தம். குழப்பத்துக்கு மன்னிக்கவும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க