privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதொழிலாளிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் ஜேப்பியர் கல்லூரி நிர்வாகம் !

தொழிலாளிகளை பணி செய்யவிடாமல் தடுக்கும் ஜேப்பியர் கல்லூரி நிர்வாகம் !

-

ஜேப்பியார் கல்விக் குழுமத்தில் நடத்தப்படும் தொழிலாளர் விரோத நடவடிக்கையைக் கண்டித்து புதிய ஜனநாயக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டெக்னீசியன்கள் சங்கம் (இணைப்பு புஜதொமு) சார்பில் வழங்கப்பட்ட புகார் கடிதம்.

நாள் : 20-08-2017

ஆய்வாளர் அவர்கள்,
செம்மஞ்சேரி காவல் நிலையம்,
சோழிங்கநல்லூர், சென்னை – 600 119.

ஐயா,

பொருள் : சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சட்டம் ஒழுங்கு கெடும் விதம் நடக்கும் நிர்வாகத்தை நிறுத்தக் கோருவது சம்மந்தமாக.

வணக்கம்,

செம்மஞ்சேரி பகுதியில் ஜேப்பியார் குழும தொழிற் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் திரு. ஜேப்பியார் அவர்களின் பெயரில் செயல்படும் கல்லூரி குழுமத்தின் இயக்குநராக செயல்படும் திருமதி. ரெஜினா, த/பெ. ஜேப்பியார் அவர்கள் மூலம் நடத்தப்படுகிறது.

இவர் மூலம் நடக்கும் ஜேப்பியார் மெட்ரிகுலேஷன் பள்ளி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, எஸ்.ஆர்.ஆர்.ஜேப்பியார் பொறியியல் கல்லூரிகளில் 600 -க்கும் மேற்பட்டவர்கள் பேருந்து ஒட்டுநர்கள், டெக்னீஷியன்கள் மற்றும் பிற சேவை தொழில்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த தொழிலாளர்கள் அனைவரும் சுமார் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணி புரிந்துவரும் நிரந்தர தொழிலாளர்கள் ஆவார்கள்.

இந்த தொழிலாளர்கள் இந்த வட்டாரத்தில் வாழும் மக்கள் ஆவார்கள். பெரும்பான்மையானவர்கள் உழைக்கும் மக்கள் பிரிவைச் சேர்ந்தவர்கள். இந்த வட்டார நிலங்கள் முழுவதிலும் ஜேப்பியார் குழுமம் மற்றும் சிறுசேரி சிப்காட் மற்றும் பல தொழில்நுட்ப கல்லூரிகள், ஐ.டி துறைகள் என புதிய வரவுகளாக வந்ததால் இந்தப் பகுதியில் இயல்பான விவசாயம் மற்றும் அது சார்ந்த வேலைகள் என வாழ்ந்து வந்த மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து இந்த நிறுவனங்களில் தான் வேலை செய்து வாழ்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில் திரு. ஜேப்பியார் அவர்கள் பெயரில் திருமதி. ரெஜினா அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனத்தில் பணி புரியும் பேருந்து ஒட்டுநர்கள் தொழிற்சங்கம் துவங்கி உள்ளதை ஏற்காத நிர்வாகம் தொழிலாளரை மிரட்ட சட்டவிரோத நடவடிக்கைகளைக் கையாள்கிறது.

நிர்வாகத்திற்கும் தொழிற் சங்கத்திற்கும் இடையே சட்டப்படி இருங்காட்டுக்கோட்டை தொழிற் பேட்டையில் உள்ள உதவி தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் தொழிற்தாவா நடந்துவருகிறது. இந்தநிலையில் 18.8.2011 அன்று நிரந்தரப் பணியாளர்களைக் கொண்டு இயக்கும்பேருந்துகளை பர்வீன் டிராவல்ஸ் நிர்வாகத்தின் ஆட்களை 2 பேருந்துகளில் அழைத்து வந்து இனி இவர்கள் தான் பேருந்தை இயக்குவார்கள் என நிர்வாகம் அறிவித்தது.

மேலும் பர்வீன் டிராவல்ஸ் மேலாளர் திரு. நாவழகன் அவர்கள் எமது தொழிலாளர் மத்தியில் இனி தங்கள் நிர்வாகம் மூலம் மட்டும்தான் பேருந்துகள் இயக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் எமது நிறுவன ஒட்டுநராக சேர்ந்து கொள்ளலாம். மற்றவர்கள் நிர்வாகத்திடம் செட்டில்மெண்ட் பேசி வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. இதனால் கோபமுற்ற தொழிலாளர்கள் கூட்ட அறையை விட்டு வெளியேறினோம். இருந்தும் அன்று மாலையே பேருந்தை எடுக்க பர்வின் டிராவல்ஸ் நிர்வாக ஆட்களைக் கல்லூரிக்கு உள்ளேயே கொண்டு வந்துவிட்டனர். நிரந்தர தொழிலாளரான நாங்கள் மறுக்கவே அன்று எமக்கே பேருந்து எடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

நிர்வாகம் வரும் திங்கள் அன்று காலை எமது தொழிலாளர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்து ஒப்பந்தம்; என்ற பெயரில் நிரந்தர பணியாளர் வேலையை பர்வீன் டிராவல்ஸ் நிர்வாகத்திடம் ஒப்படைத்து. நேருக்கு நேர் போட்டியை ஏற்படுத்துவதன் மூலம் தேவையற்ற சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தும் விதமாக ஜேப்பியார் பொறியியல் கல்லூரி நிர்வாகமும், பர்வின் டிராவல்ஸ் நிர்வாகமும் செயல்படுகிறது.

இதனைத் தாங்கள் தலையிட்டு ஜேப்பியார் நிர்வாகம் மற்றும் பர்வீன் டிராவல்ஸ் நிர்வாகத்தின் சட்டவிரோத நடவடிக்கையை தடுத்து நிறுத்தவும் நிரந்தர தொழிலாளர் பணியைச் சட்டப்படி தொடரவும் தகுந்த பாதுகாப்பு வழங்க ஆவன செய்யுமாறு தாழ்மையுடன் கோருகிறோம். மேற்கண்ட இந்த முடிவு எமது சங்கத்தின் 20-8-2017 காலை நடந்த பொதுக்குழுவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.

தங்கள் உண்மையுள்ள

(கோ. பச்சையப்பன்)

நகல் :

1. மாநகர ஆணையாளர் அவர்கள், சென்னை
2. உதவி ஆணையர் அவர்கள், துரைப்பாக்கம்
3. மனித உரிமை ஆணையம், கிண்டி
4. தொழிலாளர் ஆணையர், டி.எம்.எஸ்.
5. தொழிலாளர் உதவி ஆணையர், இருங்காட்டுகோட்டை

___________

நாள் : 20-08-2017

ஆய்வாளர் அவர்கள்,
செம்மஞ்சேரி காவல் நிலையம்,
சோழிங்கநல்லூர், சென்னை – 600 119.

ஐயா,

பொருள் : ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் நிரந்தர பேருந்து ஒட்டுநர் வேலையில் சட்டவிரோதமாக தலையிடும் பர்வின் டிராவல்ஸ் மேலாளர் நாவழகன் மீது கிரிமினல் வழக்கு பதிவுசெய்யக்கோருவது சம்மந்தமாக வணக்கம்.

மேற்கண்ட எமது சங்கம் செம்மஞ்சேரிஜேப்பியார் பொறியியல் கல்லூரி பேருந்து ஒட்டுநர்களாக பணி புரியும் நிரந்தர தொழிலாளர்களின் சங்கம். எமது தொழிலாளர்கள் 10 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை பணி புரிந்து வருபவர்கள். தொழிற்சங்கம் துவங்கி சட்டப்படி தொழிலாளர் துணை ஆணையர், இருங்காட்டுகோட்டை முன்பாக தொழிற்தாவா நடந்து வருகிறது.

இந்த நிலையில் நிர்வாகம் நிரந்தர தொழிலாளர்கள் பணியினை பர்வின் டிராவல்ஸ் நிர்வாகம் மூலம் இயக்க முயற்சித்தது. இதில் பர்வீன் டிராவல்ஸ் நிர்வாக மேலாளர் நாவழகன் என்பவர், எமது தொழிலாளர்களை அவர்கள் நிறுவனத்தில் சேர்ந்து கொள்ளும்படியும் விரும்பாதவர்கள் நிர்வாகத்திடம் செட்டில்மெண்ட் வாங்கிக் கொள்ளுங்கள் என அறிவிக்கிறார்.

நாங்கள் நிரந்தர பணியாளர்கள். எமது வேலையில் ஒப்பந்தம் என்ற பெயரில் எமக்கு அறிவுரை வழங்கவோ வழி காட்டவோ இந்த நிறுவனத்திற்கு சட்டப்படியான எந்த உரிமையும் இல்லை. மேலும் இவ்வாறு செய்வது நிரந்தர பணியாளரை ஒழித்துக் கட்டும் நிர்வாகத்தின் செயலுக்குத் துணை போவதாக உள்ளது.

எமது தொழிலாளர் எதிர்ப்பையும் மீறி 18.8.2011 அன்று மாலை 2 பேருந்தில் தமது ஒட்டுநர்களைக் கூட்டிவந்து நிரந்தர ஒட்டுநர்களாகிய எங்களை வேலை செய்ய விடாமல் தடுத்து தங்கள் ஒட்டுநர்கள் மூலம் பேருந்தை எடுக்கும்படி நிரந்தரப் பணியாளர்களுக்கு எதிராக தமது ஒப்பந்த பணியாளர்களை மோத விடும்படி செயல்பட்டார்கள். இதில் எமது தொழிலாளர்கள் பொறுப்போடும் பொறுமையோடும் பெருந்தன்மையாக நடந்து கொண்டதால் சட்டம் ஒழுங்கு கெடும் எந்தவித சட்டவிரோத செயலும் நடக்காமல் செயல்பட்டுள்ளோம்.

எனவே, பர்வீன் டிராவல்ஸ் நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஜேப்பியார் பொறியியல் கல்லூரியில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைத் தடுக்குமாறு கோருகிறோம். மேற்கண்ட இந்த முடிவு எமது சங்கத்தின் 20-8-2017 காலை நடந்த பொதுக்குழுவில் எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது.

தங்கள் உண்மையுள்ள

(கோ. பச்சையப்பன்)

மாநகர ஆணையாளர் அவர்கள், |
சென்னை உதவி ஆணையர் அவர்கள்,
துரைப்பாக்கம் மனித உரிமை ஆணையம், கிண்டி
தொழிலாளர் ஆணையர், டி.எம்.எஸ்.
தொழிலாளர் உதவி ஆணையர், இருங்காட்டுகோட்டை

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை.

_____________

தொழிலாளர் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க