privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விநீட் தேர்வை எதிர்த்துப் போராட மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு !

நீட் தேர்வை எதிர்த்துப் போராட மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு !

-

“மாணவர்கள் உரிமையைப் பறிக்க நீட் ! விவசாயிகளை அழிக்க ஹைட்ரோகார்பன் ! எதிர்த்துப் போராடும் மாணவர்கள் மீது பொய் வழக்கு – சிறை ! என்ற தலைப்பின் கீழ் 29.08.2017 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்ததிட்டமிடப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்காக கடந்த 23, ஆகஸ்ட் 2017 அன்றே அனுமதி கேட்டு கடிதம் வழங்கியிருந்தோம். ஆனால் 28 -ம் தேதி வரை எவ்வித பதிலும் சொல்லாமல் இருந்த போலீசார், 28 -ம் தேதி இரவு அனுமதியை மறுத்துவிட்டனர். எனவே, திட்டமிடப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுகிறது. போலீசின் இந்த ஜனநாயகவிரோத நடவடிக்கைகளுக்கு அஞ்சமாட்டோம். அனைத்துக்கல்லூரி மாணவர்களை  திரட்டி மீண்டும் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம்!

னைத்துக்கல்லூரி மாணவர்களே,

நீட் தேர்வை தமிழக மாணவர்கள் மீது திணித்து ஏழை – கிராமப்புற மாணவர்களின் மருத்துவராகும் கனவை நொறுக்கிவிட்டது மோடி அரசு.  நீட் தேர்வு வேண்டாம் என்று கடந்த ஜனவரி மாதம் தமிழக சட்டமன்றத்தில் இரண்டு மசோதக்கள் நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அதை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் ஓரங்கட்டிவிட்டது மோடி அரசு. நீட் தேர்வில் இருந்து விலக்குபெற வேண்டிய எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசோ பதவியைக் காப்பாற்றிக்கொள்ள மோடி அரசின் அடிமையாகவே மாறிவிட்டது.

ஒட்டுமொத்த தமிழகமும் நீட் தேர்வை எதிர்ப்பதால் “ஓராண்டுக்கு விலக்கு” என்று அவசர சட்டம் இயற்ற மத்திய – மாநில அரசுகள் நாடகமாடின. ஆனால், இது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகத்திற்கு மட்டும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தார் மத்திய அரசு வழக்கறிஞர். மத்திய அரசின் வாதத்தை அப்படியே ஏற்றுக்கொண்டு நீட் தேர்வில் இருந்து விலக்கு எனும் தமிழகத்தின் கோரிக்கைக்கு பால் ஊற்றி கதையை முடித்துவிட்டது உச்சநீதிமன்றம்.  மாநில அரசின் உரிமை பறிபோகிறது. ஆனால், பி.ஜே.பி -யின் எச்.ராஜாவும், தமிழிசை சவுந்தரராஜனும், அதிமுக -வின் தம்பிதுரையும் நீதிமன்ற தீர்ப்பை தலைவணங்கி ஏற்பதாக கூறுகிறார்கள். மோடி – எடப்பாடி அரசுகளும், நீதிமன்றமும் தமிழக மாணவர்களின் எதிரிகள் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்.

இதுமட்டுமல்ல, தொடர்ந்து தமிழகத்தின் மீது ஓரவஞ்சனை செய்து வருகிறது மத்திய மோடி அரசு. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமை மறுப்பு, விவசாயத்தை அழிக்க மீத்தேன், ஹைட்ரோகார்பன், பெட்ரோகெமிக்கல் மண்டலம் என நாசகாரத்திட்டங்களை எல்லாம் தமிழகத்தின் மீது திணித்து வருகிறது. எதிர்த்து போராடும் விவசாயிகள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை நடத்துவது, பொய் வழக்கு போட்டு கைது செய்து சிறையிலடைப்பது, தேசவிரோதிகள் என முத்திரைக்குத்துவது என அடக்குமுறை செய்கிறது எடப்பாடி அரசு.

இதையெல்லாம் மாணவர்கள் வேடிக்கை பார்க்க முடியுமா? விவசாயம் இல்லாமல் சமூகம் ஏது? மாணவர்கள் ஏது? என சமூக அக்கறையோடு, விவசாயிகளுக்கு ஆதரவாக மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராடுகிறார்கள். இது குற்றமா? ஜல்லிக்கட்டை முடக்க முயன்றபோது அதை எதிர்த்து லட்சக்கணக்கான மாணவர்கள், அனைத்துத்தரப்பு மக்களுடன் ஒன்றிணைந்து களமிறங்கிவில்லை என்றால் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டி இருக்க முடியுமா?

அன்று காளைக்காக கூடிய மாணவர்கள் விவசாயிகளுக்காகவும், ஒட்டுமொத்த தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும் கூட வேண்டும் என்ற அடிப்படையில்தான் இன்று நாங்கள் போராடுகிறோம்.

ஆனால், பதவிக்காக – ஊழல் சொத்துக்களை பாதுகாப்பதற்காக தமிழக மக்களின் நலனை மத்திய பி.ஜே.பி அரசிடம் அடகு வைக்கும் எடப்பாடி அரசு போராடும் மாணவர்களை தொடர்ந்து ஒடுக்குகிறது. விவசாயிகளுக்காக பிரசுரம் வினியோகம் செய்த சேலம் மாணவி வளர்மதியை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து ஃபேஸ்புக்கில் பதிவு வெளியிட்ட அண்ணாமலை பல்கலைக் கழக மாணவர் குபேந்திரன் கைது செய்யப்பட்டார்.

போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வகுப்பை புறக்கணித்து போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 65 பேரை போலீசின் தூண்டுதலால் இடைநீக்கம் செய்தது கல்லூரி நிர்வாகம். அப்போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்களை பீதியூட்டும் நோக்கில்  தற்போது பு.மா.இ.மு வில் செயல்பட்டு வரும் அக்கல்லூரி மாணவரான வாசுதேவன் மீது பொய் வழக்கு ஜோடித்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளது போலீசு.

கல்வி நிலையங்கள் என்பவை தற்போது சிறைக்கூடங்களைப் போல் உள்ளன. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு எந்தவித பிரதிநிதித்துவமும் இல்லை. கல்வி வளாகங்களில் மாணவர்கள் ஜனநாயக உரிமைகள் ஏதுமற்ற கொத்தடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள். உரிமைகளுக்காக போராடும் மாணவர்கள் நிர்வாகத்தால் பழிவாங்கப்படுகிறார்கள். போலீசோ பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது.

மாணவர்கள் அரசியல் பேசக்கூடாது, அரசியலில் ஈடுபடக்கூடாது, சாதாரண வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டங்கள்கூட நடத்தக் கூடாது  என மிரட்டுகிறார்கள்.  அதையும் மீறி போராடினால் முன்னணியாளர்களை கல்லூரியைவிட்டு நீக்கி பழிவாங்குகிறார்கள். போர்க்குணமிக்க மாணவ சமூகம் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதை தடுக்கும் அரசின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியது அனைத்துக்கல்லூரி மாணவர்களின் கடமையாகும்.

இவண்

அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
சென்னை. 94451 12675

_____________

இந்த செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

போராடும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க