privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமணல் குவாரியை மூடு ! வெள்ளாற்றில் விவசாயிகள் போர்க்கோலம் !!

மணல் குவாரியை மூடு ! வெள்ளாற்றில் விவசாயிகள் போர்க்கோலம் !!

-

விவசாயியை வாழவிடு ! கூடலையாத்தூர் மணல் குவாரியை மூடு !! வெள்ளாற்றில் விவசாயிகளின் போர்க்கோலம் !!!

மிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சிக்கு வந்தவுடன் வெளியிட்ட செய்தி விரைவில் மணல் பற்றாக்குறை தீரும் என்பதுதான். இந்த அறிவிப்பிற்கேற்ப கடலூர் மாவட்ட ஆறுகள் சூறையாடப்பட்டு வருகிறது.  வேறு எந்த மாவட்டத்திற்கும் இல்லாத சிறப்பு கடலூர் மாவட்டத்திற்கு உண்டு.  அதாவது தென்பெண்ணையாறு, கெடிலம், பரவனாறு, மணிமுத்தாறு, வெள்ளாறு மற்றும் கொள்ளிடம்  6 ஆறுகளில் மணல் கொள்ளையர்களில் பசிக்கு தீனியாய் இருந்தது தான். வெள்ளாறு சேலம் மாவட்டத்தில் தொடங்கி கடலூர் பரங்கிப்பேட்டையில் முடிகிறது.

வெள்ளாற்றின் கரையோரம் உள்ள கூடலையாத்தூர், காவாலகுடி, சாந்திநகர், அகரஆலம்பாடி, ஓட்டி மேடு, பெருந்துறை பவழங்குடி, காணூர், பேருர், ஆகிய கிராம மக்களும், விவசாயிகளும் வெள்ளாற்றில் மணல் எடுக்க கூடாது என நீண்ட நாட்களாக போராடி வருகிறார்கள்.  ஆர்ப்பாட்டம், சென்னை பத்திரிக்கையாளர் சந்திப்பு, மணல் கொள்ளைக்கு விசாரணை வேண்டி ஆதாரங்களுடன் உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பியது பல வகைகளில் முயற்சித்து போராடி வருகின்றனர்.

இதற்கு முன் 2015 –ல் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம் சார்பில் கார்மாங்குடி மணல்குவாரி மற்றும் முடிகண்டநல்லூர் மணல்குவாரிகளை பல்வேறு கிராம மக்கள் பங்கேற்புடன் போராடி மூடப்பட்டது. அதே போல் இம்முறையும் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மக்கள் அதிகாரம் பங்கேற்புடன், மதகளிர் மாணிக்கம், கூடலையாத்தூர் மணல் குவாரிகளை மூட தொடர்ந்து போராடி வருகிறது.

வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், காவாலகுடி செங்குட்டுவன், சிவக்குமார், ரவீந்திரன், கூடலையாத்தூர், ஆசைதம்பி, இன்னம் பலர் இந்த போராட்டத்தில் எறும்பை போல் சுறுசுறுப்பாக சுவரொட்டி ஓட்டியது, பிரசுரம் விநியோகித்தது என பம்பரமாக பணியாற்றினர். உளவுத்துறை நேரடியாக பல கிராமங்களுக்கு சென்று மக்களை அச்சுறுத்தியது.

இந்நிலையில், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குறைஞர் ராஜு ஒருங்கிணைப்பில் வெள்ளாற்று பாதுாப்பு இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் மற்றும் முற்றுகை நடந்தது.  இளைஞர்களும், மாணவர்களும், பெண்களும் மணல் குவாரியை விடக்கூடாது என ஆத்திரத்தில் கொதித்தெழுந்தார்கள்.

24 மணிநேரமும் கிராமத்தின் அமைதியை குலைத்த லாரிகளின் சத்தம் தூக்கம் இல்லை. வீடுகளில் அதிர்வு, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியவில்லை, சிறுவர்களால் வெளியில் விளையாட முடியவில்லை, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் இல்லாமல் போனதால் விவசாயம் இல்லை என்று சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தார்கள் விவசாயிகள்.  இந்த வேதனையை விளக்கி வருவாய் துறை, பொதுப்பணித்துறை, முதலமைச்சர், தலைமைச்செயலர், மாவட்ட ஆட்சியர் என எல்லோருக்கும் மனுக்கள் அனுப்பியும், யாரும் திரும்பி பாரக்க வில்லை.

வேறு வழியில்லை போராட்டமே தீர்வு என்று மக்கள் அதிகாரத்தோடு இணைந்தார்கள் விவசாயிகள். 26.08.2017 அன்று காலையில் டெம்போ, டிராக்டர்களில் மக்கள் சாரைசாரையாக கிளம்பினார்கள்.  எல்லா வழித்தடங்களிலும் போலீசை குவித்து வாகனங்களை மறித்தார்கள். கருங்காலிகளை வைத்து சீர்குலைவு வேலைகளை செய்தார்கள்.  இத்தனை தடைகளையும் மீறி 700-க்கும் மேற்பட்ட மக்கள் குறுக்கு வழியாக சென்று ஆற்றில் இறங்கி குவாரியை முற்றுகையிட்டார்கள் மக்கள்.

“வெள்ளாறு எங்கள் ஆறு, மணல் கொள்ளையனே வெளியேறு” என மக்கள் கோசமிட்டனர்.  கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள், மாணவர்கள், விவசாயிகள் என ஒவ்வொருவரும் தண்ணீர், பிஸ்கட் உணவு இவற்றை கையோடு எடுத்துக் கொண்டு போராட வந்தனர்.  திட்டகுடி டி.எஸ்.பி பாண்டியன் தலைமையில் (கவிஞர் வைரமுத்துவின் தம்பி) 300 -க்கு மேற்பட்ட போலிசை குவித்து வைத்துக் கொண்டு மக்களை ஆபாசமாக பேசி மிரட்டினார்.

போலீசார் போராட்டம் துவக்கம் முதலே எப்படியாவது கலவரத்தை ஏற்படுத்தி விட வேண்டும் என மெகா போனை பயன்படுத்த கூடாது. தண்ணீர் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம்­; மயங்கி சாவுங்கள் என சாமியானவை (பந்தல்) பறிப்பது என ஈவிரக்கமற்ற வகையில் நடந்து கொண்டனர்.

போராட்டப் பந்தலை அகற்றும் போலீசு

வழக்கறிஞர் ராஜு அவனை பேசவிடக்கூடாது என திட்டக்குடி டி.எஸ்.பி. பாண்டியன் போலீசாருக்கு வலியுறுத்தி கொண்டிருந்தார்.

தோழர் ராஜூவோ மணல் குவாரியை மூடு! கோரிக்கையை பிறகு பேசலாம். அதற்கு மக்களிடம் மெகா போனில் பேச வேண்டும்; அந்த கோரிக்கைக்கு பிறகுதான் மற்றது என திட்டவட்டமாக அறிவிக்கவே, 10 நிமிடம் அனுமதித்தார்கள். போலீசாரின் லஞ்ச ஊழல்களை அம்பலப்படுத்தி; லாரிக்கு ரூ.500 டிராக்கடருக்கு ரூ.200 அ.திமுக மூலம் மாமுல் வசூலிக்கப்படுகிறது. போலீசாருக்கு பங்கு போகிறது. இது எந்த சட்டத்தில் உள்ளது. 3 அடியை மீறி 30 அடி அள்ளுகிறார்கள் இது எந்த சட்டம் தடுத்தது? 1,080 ரூ மணல் 40,000 ரூ விற்கபடுகிறது.

கொள்ளை பணம் யாருக்கு போகிறது என வெயிலின் வெம்மையை தாண்டி வார்த்தை சுட்டெரித்தது. போலீசார் பாய்ந்து வந்து மெகா போனை பறிக்க முயன்றனர். மக்கள் வழக்கறிஞர் ராஜுவை சுற்றி அரணாக நின்று போலீசாரை நெருங்க விடாமல் தடுத்தனர். என்ன நடக்குமோ என்ற பதட்டத்திலேயே முடிந்தது. மேலும் சாமியானாவை தருகிறேன் என எடுத்து சென்று தற்போது வழக்கு போட்டு விட்டோம் தரமுடியாது என திருமுட்டம் போலீசார் மறுத்து விட்டனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கம் நிலத்தடி நீரை உறிஞ்சுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல பல இடங்களில் ஆழ்துளை போர் போடபட்டுள்ளது. தற்போது 300 அடி நிலத்தடி நீர் மட்டம் சென்று விட்டது. அருகில் கடல் நீர் உள்ளே புகும் அபாயம் உள்ளது. கடலூர் ரசாயன ஆலைகள் ஒரு புறம் நீரை நஞ்சாக்கி கொண்டு உள்ளது. காவிரி நீர் பொய்த்து போனதால் வீராணம் கொள்ளிடம் வறண்டு விட்டது. பெய்யும் மழை நீரை தேக்க ஒரே வழி ஆற்று மணலை பாதுகாப்பதுதான் என வாதங்களை அடுக்கியதும், மக்கள் மணல் கொள்ளையனை விட மாட்டோம் என ஆர்ப்பரித்தனர். ஏற்கனவே பல ஆண்டுகள் பல இடங்களில் வரை மறையற்று வெள்ளாற்றில் மணல் அள்ளப்பட்டு விட்டது. எனவே நிறுத்துங்கள் என போராடுகிறோம் எனப் பேசினார்.

மக்கள் கடும் வெய்யிலிலும், போலீசின் மிரட்டலுக்கும் கொஞ்சம்கூட அசரவில்லை. யாரும் போக மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்ட போலிசும், வருவாய்துறையும் நடு ஆற்றில் பேச்சுவார்த்தைக்கு வந்தது. சிதம்பரம் ஆர்.டி-ஒ வரவழைக்கப்பட்டார்.  முடிவில் குவாரியை தற்காலிகமாக மூடுகிறோம்.  மற்ற விவரங்களை மனுவாக கொடுங்கள், நானும் விவசாய வீட்டு பிள்ளைதான் என்ன செய்வது மேலிட உத்தரவு என்று சொல்லி முடித்துக்கொண்டார்.

ஊர்  முக்கியஸ்தர்களும், போராட்ட குழுவினரும் அனைத்து மக்களுக்கும் நன்றி கூறி முடித்தார்கள்.  தற்காலிகமாக அல்ல, நிரந்தரமாக மூடும்வரை விடமாட்டோம் என மக்கள் எச்சரித்தார்கள். ஏனென்றால், வெள்ளாறு எங்கள் ஆறு!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்,
தொடர்புக்கு : 81108 15963 .
_____________

இந்த போராட்ட செய்தி உங்களுக்கு பயனளித்ததா?

விவசாயிகளின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க