privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி - எடப்பாடி அரசுகள் !

மாணவி அனிதாவைப் படுகொலை செய்த மோடி – எடப்பாடி அரசுகள் !

-

னிதா, அரியலூர் மாவட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவி. இவரது தந்தை, சுமை தூக்கும் கூலித் தொழிலாளி . பத்தாண்டுகளுக்கு முன்னரே தனது தாயை இழந்த அனிதா, மருத்துவப் படிப்பையே தனது கனவாகக் கொண்டிருந்தார். மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசும், அடிமை எடப்பாடி கும்பலும், உச்சநீதிமன்றமும் இணைந்து அனிதாவின் கனவில் ’நீட்’ என்னும் கொள்ளி வைத்து கனவைக் கருக்கி விட்டனர்.

நம் மீது நம்பிக்கை இழந்த அந்தத் தருணத்தில் தான் அனிதா பாசிஸ்டுகளால் ‘கொல்லப்பட்டார்’. என்ன செய்யப் போகிறோம்?

தனது மருத்துவராகும் கனவைச் சுமந்தபடி, அதற்கான முழு முயற்சிகளையும் செய்து படித்தார் அனிதா. அதன் விளைவாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவக் கல்விக்கான சேர்க்கைக்கு கட்- ஆஃப் மதிப்பெண்ணாக 196.75 பெற்றிருந்தார்.

இந்த ஆண்டு நீட் தேர்வு முறையின் மூலம் தான் மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவில் இருள் கவிழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பல்வேறு மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு கல்வியாளர்களும் மருத்துவர்களும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடினர்.

பணமிருக்கும் மாணவர்கள், நீட் பயிற்சிக்குச் சென்று நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் ஏழை மாணவர்களின் நிலை? சுமை தூக்கும் தொழிலாளியான அவரது தந்தையால் எங்கிருந்து ’நீட்’ பயிற்சிக்கு இலட்சங்களில் பணத்தைக் கொட்ட முடியும்?

’நீட்’ ஏழைகளுக்கு எதிரானது என்பதை உணர்ந்த அனிதா அதற்கு எதிராக நடைபெற்ற பல போராட்டங்களிலும் பங்கேற்றார். உச்சநீதிமன்றத்தில் ’நீட்’டிற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின் மூலமாக எவ்வாறு மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு துரோகமிழைப்பதாக ‘நீட்’ தேர்வு  முறை உள்ளது என்பதை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தார். ஆனால் இவ்வாதங்கள் அனைத்தையும் தூக்கிக் குப்பையில் எரிந்தது உச்சநீதிமன்றம்.

கடைசியாக ’அவசரச் சட்டம்’ என்ற பூச்சாண்டியைக் காட்டி ஏமாற்றியது மாநில அரசு. காரியம் ஆகும் வரை அதற்கு ‘ஆமாம் சாமி’ போட்டது மத்திய அரசு. தமிழகத்தில் தனது எடுபிடி கும்பல்கள் அதிமுகவில் ஐக்கியமானதும், உச்சநீதிமன்றத்தில் அவசரசட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒட்டு மொத்தத் தமிழர்களின் முதுகிலும் குத்தியது மத்திய அரசு. உச்சநீதி மன்றமும் தமிழகத்தில் நீட் அடிப்படையில் தான் சேர்க்கை நடைபெற வேண்டும் எனத் தீர்ப்பெழுதியது.

அனிதாவின் பன்னிரெண்டாம் வகுப்புச் சான்றிதழ்

அனிதாவின் மருத்துவக் கனவு சிதைந்தது. அனிதாவிற்கு நீட் தேர்வு மதிப்பெண்ணின் அடிப்படையில் சீட் கிடைக்கவில்லை. கடந்த 3 நாட்களாக யாரிடமும் அதிகமாகப் பேசாமல் சோகமாக இருந்த அனிதா இன்று பிற்பகலில் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து, அனைத்து செய்தி ஊடகங்களும், பரபரப்புச் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. மாணவர் அமைப்பைச் சேர்ந்தவரகள், பெரியாரிய அமைப்பைச் சேர்ந்தவர்கள், மற்றும் மற்ற நீட்டுக்கு எதிராகப் போராடிய அனைத்து அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களிடமும் பேட்டி எடுத்துப் போடுகின்றன. ஆனால் அனிதாவைக் கொலை செய்த எந்த ஒரு பாஜக கிரிமினலிடமும் இது குறித்து கருத்துக் கேட்க மறுக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய், நியூஸ் 18 தொலைக்காட்சி, ஒரு கேள்வியை கேட்கிறது. ”அனிதாவின் மரணத்திற்குப் பொறுப்பானவர் யார்? மாணவர் அமைப்புகளா ? அரசியல் கட்சிகளா ? அல்லது சமூக ஜனநாயக அமைப்புகளா ?” ஆனால் பெயருக்குக் கூட மத்தியில் ஆளும் கிரிமினல் கும்பலின் பெயரைக் குறிப்பிடவில்லை.  ரஜினி, கமல் போன்ற காரியவாதிகளும் பாஜகவைக் குறிப்பிடாமல் தங்களது அனுதாபங்களைப் பதிவு செய்திருக்கின்றனர்.

ஊடகங்களும், சினிமா கழிசடைகளும் மத்திய அரசின் குற்றங்களை மனதளவில் கூட கண்டிக்க மாட்டார்கள் என்பது  ஜல்லிக்கட்டு போராட்டத்திலேயே அம்பலத்திற்கு வந்த விசயம் தான். ஆனால், போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கும் நாம் என்ன செய்யப் போகிறோம் ?

சினந்தெழ வேண்டிய நேரம் இது .. வீதியில் இறங்க வேண்டிய வேளை இது ..

மீண்டும் நடத்துவோம் டெல்லிக் கட்டு..!

  1. ஹிந்துத்துவா மோடியின் வருனாசிராம நீட் வெறியாட்டத்தை தன் உயிர் ஆயுதம் கொண்டு அம்பலபடுத்தியுள்ளார் அனிதா… தமிழகம் இன்னும் தூங்குமா ? அல்லது உயிர்தெழுமா? தோழர் தீபனின் வார்த்தைகளில் சொல்வது என்றால்….

    இயல்களைத்
    தெரிந்து கொள்.
    (ஹிந்துத்துவா வருணசிரத்தை)இசங்களைப்
    புரிந்து கொள்
    பேசு!

  2. லும்பன்களின் கேலிகூத்தான ஆட்சியும் … இவர்களை அடிமைப் படுத்தி ஆட்டம் பாேடும் மதவாத கட்சியும் அனிதாவின் உயிரை திருப்பி தர முடியுமா … ! +2 தேர்வில் 98 சதவீத மதிப்பெண் பெற்றதை விட …வேறு என்ன தகுதி வேண்டும் ஒரு மருத்துவ கல்வி பயில …?அட பேமானிகளா … அநியாயமா நீட் என்பதை புகுத்தி ஒரு உயிரை பலி வாங்கிவிட்டீர்களே .. படு பாவிகளே … இனியாவது மேலும் காவு வாங்காமல் இருக்க நடவடிக்கை எடுங்க …கரை மற்றும் கலர் வேட்டி கூட்டங்களே …!

  3. மிக வருத்தமாகவும் கோபமாகவும் உள்ளது, எதிரியை ஒன்றும் செய்யாமல் மடிவது எமக்கு தோல்வியே. இது தவிர்க்கப்படவேண்டும். இதில் பாருங்கள் எச்சரிக்கையாக மெரீனாவில் குவியும் எச்சை பொருக்கி போலீசு. கைப்புள்ள கமலாவது பெயருக்கு மத்திய மாநில அரசுகளை குறிப்பிட்டு போரடவேண்டுமேன்றாவது சொல்லி உள்ளார், ரசினி என்னும் கயவனின் கருத்தை பாருங்கள், சம்பவம் ‘துரதிஸ்டவச’ மானதாம்.

    இந்த மரணம் ஒரு மாபெரும் எழுச்சியை தோற்றுவிக்க வில்லை எனில், நாம் போதுமானளவு காயடிக்க பட்டுவிட்டோம் என்றே அர்த்தம்.

  4. இதுவும் மறந்து போகும் விரைவில் மக்களுக்கு,
    நாம்தான் நினைவுப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும்

  5. It is very sad that Anitha has taken this step.

    Marks are considered important during the schooling only. Later in life, they are not relevant.
    Applying the knowledge, Communication skills, people skills and grit ( which is mental strength) to try again in spite of setbacks are very important.Parents and teachers do not bother about our students building their mental strength to face failure. Mostly they talk about studies and marks only.

    Most of us go thru failures / some pain sometime or other, in our life. It is very wrong to take the extreme step of committing suicide.

    Our Central and State government gave false hope. To this extent, they did wrong. Finally our central government had to say NO to give exemption for our State as denying medical seats to NEET qualified students / scorers would have been more untenable.

  6. So DMK and Congress which actually came with the idea has no blame to take and only BJP must take as out fits your anti Hindu agenda?

    Be fair and criticize all the politicians for this mess.

    • you call this a ‘mess’?
      it is a f*ng murder alright, you dare to take usual ‘blame others’ tactic here? don’t you know all other parties opposed NEET? it is because you’r crooked rotten aryan brain (you know and I know who you are) just can’t bear these people getting higher education. all you cunning foxes will answer for this. and yes, as you keep doing this atrocities , they will accumulate as the fire which will burn all of you cunning aryan ***.

    • Right now only BJP govt is ruling.And after giving false hope thro’ unrelated union minister about one year exemption,after Solicitor General vetted the TN govt’s ordinance,how come himself and the Central Govt advocate give an entirely different statement in the SC?It seems you have soft corner for BJP and we are having natural soft corner for the affected girl.

  7. [9/2, 1:19 AM] velakandasamy1: நீட்டை விரட்டு

    மேற்குலகிலிருந்து வந்த
    ப்ளூவேளும்
    வடக்கிலிருந்து வந்த
    ஆரிய நீட்டும்
    எம்மாணவர்களைப் பலி கேட்கிறது

    தினம் தோறும்
    தேர்வு வைத்து
    உயிரைக் காவு கேட்கிறது
    திமிங்கல விளையாட்டு

    ஏழை எளிய மாணவர்களின்
    மருத்துவக் கல்வியோடு விளையாடி
    உயிர்ப் பலி கேட்கிறது
    நீட் எனும் தேர்வு …
    [9/2, 1:19 AM] velakandasamy1: அறிவுச் செல்வம்
    அனைவருக்கும் பொது
    என்பதை மறுக்கும்
    ஆரிய நரி
    சமூக நீதிக்கு எதிராக
    தனது தந்திர வாலை
    நீட்டு’கிறது…

    காலம் காலமாக
    கல்வியை மறுத்து வந்த
    துரோணாச்சாரியார்கள்
    முயன்று கற்று
    முன்னேறத் துடிக்கும்
    ஏகலைவன்களிடம் கட்டை விரலைக் காணிக்கையாகக் கேட்கிறார்கள்

    ஏர் பிடித்தவனின் வாரிசு
    ஸ்டெத்தாஸ்கோப்பைத்
    தொட்டுப் பார்ப்பதை
    சகிக்க முடியாத
    ஆரிய அதிகார வர்க்கம்
    நீட , தகுதி எனும் பெயரில் மாய்மாலம் செய்கிறது

    வடக்கின் சூழ்ச்சிக்கும்,
    வாய்ப்பொத்திக் கிடக்கும்
    ,அடிமைகளின்
    கையாலாகத் தனத்திற்கும் பரிதாபமாக
    பலியாகிப் போன
    அனிதாவின் ஆவி
    நம்மை மன்னிப்பதாக

    இனி..
    போதும் பொறுத்தது
    களம் காணுவோம்

    நீலத்திமிங்கலத்தின்
    வாயைக் கிழித்து
    உடலைப் பிளப்போம்

    நீட் எனும் நரியின் வாலை ஒட்ட நறுக்கி
    டெல்லிக்கு துரத்துவோம்

    சாரதாமைந்தன்

    • கந்தசாமி ஐயா அவர்களே, உங்களின் நீட் தொடர்பான கோபங்கள் சரியே, ஆனால் இதற்குள் நீலதிமிங்கிலத்தை கொண்டுவரவேண்டாமே, இந்த விளையாட்டே பொதுவாக கொழுப்பு மிஞ்சிய மேட்டுக்குடி மற்றும் உயர் நடுத்தரவர்க்க கொழுந்துகள் வேலை வெட்டி இல்லாமல் அடுத்தடுத்து விறுவிறுப்பு என அலைவதால் வரும் வினை, என்ன விரல் சூப்பும் பாப்பாகளா சொன்னவுடன் போய் மாடியிலிருந்து குதிக்க? இப்படியான இளசுகள் அப்படி செத்து தொலைவதே மேல் என்பதே என் கருத்து.

      சிறுவயதில் இருந்து ஆசை ஆசையாய் கட்டிகாத்த அதற்கு உழைத்த கனவு நிறைவேறாமல் அதிலும் நீதிமன்றில்போ ராடி போராடி எல்லாம் தோற்ற விரக்தியில் தன்னை மாய்த்த அந்த பெண் எங்கே? ப்ளுவேல் விளையாடி சாகும் குரங்குகள் எங்கே?

  8. இந்த மாதிரி ஒரு நிலை வருவதற்கு தமிழகத்தின் திராவிட அரசியல் தான் காரணம். இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் கல்வி தரம் உயர்த்தப்பட்ட போது, தமிழகத்தில் மட்டும் சமூக நீதி என்ற பெயரில் கல்வித்தரம் குறைக்கப்பட்டது. அனிதா பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 நல்ல மதிப்பெண்கள் தான். ஆனால் தேசியளவில் அறிவை சோதிக்கும் ஒரு நுழைவு தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு வெறும் 86 மதிப்பெண்கள் தான் வாங்கி இருக்கிறார். இது அண்ணா பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்கள் பலருக்கும் இருக்கும் சிக்கல்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் பலரும் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் முதலாம் ஆண்டு படிப்பில் அரியர் வைக்கிறார்கள்.

    சிக்கல் தமிழக அரசின் கல்வித்தரத்தில் இருக்கிறது… தமிழக மாணவர்களால் தேசியளவிலும் வெற்றி பெற முடியவில்லை, மாநிலஅளவிலும் வெற்றி பெற முடியவில்லை, அந்தளவுக்கு மோசமான கல்வித்தரம் அதை உயர்த்த வேண்டும் என்றால் உடனே போராட்டம், அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கூடாது என்று போராட்டம், ஹிந்தி கூடாது என்று போராட்டம் (ஆனால் இதே அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கு ஹிந்து டியூசன் வைத்து எல்லாம் ஹிந்தி சொல்லி கொடுக்கிறார்கள்)…

    இப்படி ஒவ்வொரு நிலையிலும் போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தை தொடர்ந்து அழிவில் தள்ளிய திராவிட அரசியல்வாதிகள் அனைத்திற்கும் காரணம்.

    • @Manikandan

      /இந்த மாதிரி ஒரு நிலை வருவதற்கு தமிழகத்தின் திராவிட அரசியல் தான் காரணம்.//

      இந்த நிலை வருவதற்கு காவிக்கட்சியும், தற்போதைய புரோக்கர் கட்சியான அதிமுகவும்தான் காரணம்.

      //இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் கல்வி தரம் உயர்த்தப்பட்ட போது, தமிழகத்தில் மட்டும் சமூக நீதி என்ற பெயரில் கல்வித்தரம் குறைக்கப்பட்டது.//

      மற்ற மாநிலங்களில் கல்வியின்தரம் எந்த நிலையிலுள்ளது என்பது தெரியாமல் பிதற்றக்கூடாது.

      //அனிதா பன்னிரெண்டாம் வகுப்பில் 1176 நல்ல மதிப்பெண்கள் தான். ஆனால் தேசியளவில் அறிவை சோதிக்கும் ஒரு நுழைவு தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு வெறும் 86 மதிப்பெண்கள் தான் வாங்கி இருக்கிறார்.//

      புதுசா ஏதாவது கண்டுபிடிச்சிட்டீங்களா? வருடம்முழுவதும் நீட் வராதுன்னு உறுதி குடுத்துவிட்டு, கடைசியில காலைவாரிவிட்டா அதுக்கு அர்த்தம் என்ன?

      //இது அண்ணா பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர்கள் பலருக்கும் இருக்கும் சிக்கல்கள். பன்னிரெண்டாம் வகுப்பில் பலரும் மிக அதிக மதிப்பெண்கள் வாங்கினாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் முதலாம் ஆண்டு படிப்பில் அரியர் வைக்கிறார்கள்.//

      இது வேறமாதிரியான பிரச்சணை. எதுக்கு திசை திருப்புறீங்க?

      //சிக்கல் தமிழக அரசின் கல்வித்தரத்தில் இருக்கிறது… தமிழக மாணவர்களால் தேசியளவிலும் வெற்றி பெற முடியவில்லை, மாநிலஅளவிலும் வெற்றி பெற முடியவில்லை, அந்தளவுக்கு மோசமான கல்வித்தரம//

      இது ஒரு அயோக்கியத்தனமான வாதம். தமிழக கல்வித்தரம் நீங்கசொல்லுற மாதிரி மட்டமா இருந்தே எவ்வளவு அதிகமான இளைஞர்கள் பல்வேறு துறைகளில், பல மாநிலங்களில், பல வெளிநாடுகளில் அதிக எண்ணிக்கையில் பிரகாசிக்கிறார்கள்? (கரெக்ட் – பார்ப்பனர்கலல்லாதோர்)

      //அதை உயர்த்த வேண்டும் என்றால் உடனே போராட்டம், அரசு பள்ளிகளில் ஆங்கிலம் கூடாது என்று போராட்டம், ஹிந்தி கூடாது என்று போராட்டம் (ஆனால் இதே அரசியல்வாதிகளின் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கு ஹிந்து டியூசன் வைத்து எல்லாம் ஹிந்தி சொல்லி கொடுக்கிறார்கள்)…//

      இதுக்கும், நீட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்?

      //இப்படி ஒவ்வொரு நிலையிலும் போராட்டம் என்ற பெயரில் தமிழகத்தை தொடர்ந்து அழிவில் தள்ளிய திராவிட அரசியல்வாதிகள் அனைத்திற்கும் காரணம்.//

      திராவிட அரசியல்வாதிகளால்தான் ஏதோ கொஞ்சம் சமூகநீதி தொங்கிகிட்டு இருக்கு. அதையும் வேறறுக்கத்துடிக்கிறது பார்ப்பன பாசிஸ்ட்-புரோக்கர் கள்ளக்கூட்டு. இதை தெளிவா வெளிச்ச்ம்போட்டுக்காட்டுது இந்தப் பதிவு.

  9. மற்றுமொன்றை இங்கு நோக்க வேண்டும், சன் செய்தில் சொன்னார்கள், ‘திரையுலகமே’ இரங்கல் தெரிவித்துள்ளதாம். போங்கடா பன்னாடைகளா உங்கள் இரங்கலை வைத்து மயித்த புடுங்க…ஒரு பயலாவது கொலைகாரர்களான மோடி அரசையோ உள்ளூர் பொம்மைகளையோ தப்பி தவறி கூட சொல்லவில்லை…அது பெரிய நரி ரசினி ஆகட்டும் சின்ன நரி லாரன்சு ஆகட்டும், ஏதோ அந்த பெண் இவர்கள் தூக்கி தூக்கி காட்டும் காதல் கத்திரிக்காய் தோல்வியில் செத்தது போல..பண்ணாடைகளே நடந்தது உயர்கல்வி மறுப்பால் நீதியும் கைவிட்ட ஒரு பெண்ணின் கொலை, கொலைக்கு இரங்கல் தெரிவிக்கிறீர்கள். விவசாயி பாலன் பிரச்சினையில் விசாலு நாசூக்காக சில லட்சங்களை விட்டெறிந்து அயோக்கியர்களை காப்பற்றியது போல் இப்படியான சம்பவங்கள் நடக்கும் பொது ஏதோ தாங்கள் அக்கறை உள்ளவர்கள் போல் காட்டிகொண்டு, மக்களை காரணமானவர்கல் பக்கம் திரும்பாமல் இருக்க கருத்துகள் இரங்கல்கள் புடுங்கல்கள் சொல்வது, மக்கள் இதை கவனிக்க வேண்டும்.

  10. //இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய், நியூஸ் 18 தொலைக்காட்சி, ஒரு கேள்வியை கேட்கிறது. ”அனிதாவின் மரணத்திற்குப் பொறுப்பானவர் யார்? மாணவர் அமைப்புகளா ? அரசியல் கட்சிகளா ? அல்லது சமூக ஜனநாயக அமைப்புகளா ?” ஆனால் பெயருக்குக் கூட மத்தியில் ஆளும் கிரிமினல் கும்பலின் பெயரைக் குறிப்பிடவில்லை.//
    Dear Vinavu,

    In the discussion that took place at 9PM on 01 Sep 2017 and conducted by News 18 Tamilnadu, the organiser Mr. Gunasekaran had clearly and openly pointed out during the heated discussion, the real culprits are Central, State Govts and Supreme court also.

  11. உலகின் எந்த ஒரு இடத்தில் அநியாயங்கள் நடந்தாலும் கொதிப்பவன் எவனோ?… அவனே போராளி! என்ற சேகுவேராவின் வரிகளுக்கு உயிர் கொடுக்க அனிதாவின் ரூபத்தில் வாய்ப்பு வந்திருக்கின்றது.புரட்சியாளர்களே புறப்படுங்கள். வாய்ப்புகளைத் தவற விடுபவன் புரட்சியாளனாக இருக்க மாட்டான்.
    இறந்த நம் தங்கை அனிதாவிற்காக இதை நாம் செய்ய வேண்டாம்…இன்னொரு தங்கையும், தம்பியும் உருவாகக் கூடாது நம் மண்ணில்…போராட்ட குணமுள்ளவர்களே இணயுங்கள்.

  12. ஊழல் வாதிகளிடம் கடந்த 50 ஆண்டுக் காலமாக நாட்டை ஆளும் பொறுப்பைக் கொடுத்ததால் இந்தக் கொடுமைகளை எல்லாம் பார்க்க வேண்டி வந்தது? இனியாகிலும் கொள்ளைக் காரர்களை விரட்டி விட்டு கொள்கை வாதிகளை நாட்டை ஆள வைப்போம.

  13. Our state government , our legislators ,political parties wanted medical admission to be done based on +2 marks.

    None of them bothered about the students who had already appeared for NEET exam and qualified / scored well.To deny them admission would be more unfair. It would be untenable before the court. How we / Anitha expected the supreme court to come to her rescue? All of us got emotional and did not think through the issues.

    Though our governments made the mistake of giving false hope, is it correct to blame them for her death. No,We have again become emotional!

    During the schooling the students should understand the subjects and study, play games / participate in sports and other extra curricular activities. Knowledge, Physical wellness and mental strength are to be developed. What is the use of scoring only marks. Life is more important than getting admission to some course.

    In this time of grief, it would be cruel on my part to write about Anitha’s weakness.

    • சிதம்பர நாதன்,

      ஆம். மாணவர்கள் எழுதினார்கள். வேறு வழியில்லை என்பதால் எழுதினார்கள். ஆமாம் உங்களை போன்ற ஆட்கள் எல்லாம் சோறு தின்னுட்டு வந்து தானே பேசுவீர்கள். நீட் அல்லாமல் மாநில கல்வி மதிப்பெண் அடிப்படையில் சென்ற முறை கிடைத்த மறுத்து சீட்டுகளின் எண்ணிக்கையும் இப்போது கிடைத்த எண்ணிக்கையும் பார்க்க வேண்டும்.

      சரி.இப்போ நீட் என்பது தரமானது. மாநில கல்வி என்பது தரமற்றது அல்லது தரம் உயர்த்தபடாதது என்றால் உம்மிடம் ஒரு கேள்வி….

      நீட் இல்லாத தமிழகத்தின் சுகாதார துறை எப்படி இந்தியாவிலேயே சிறந்ததாக இருக்கிறது? எப்படி தமிழகம் பிறப்பு/இறப்பு விகிதம், ஆண்-பெண் பிறப்பு விகிதம், மக்கள்/மருத்துவர் விகிதாரம், பள்ளி/கல்லூரி முடிப்பவர் விழுக்காடுகள்…உள்ளிட்டவைகளில் இந்தியாவிலேயே முதன்மையாக எப்படி இருக்கிறது?

      உலக சுகாதார நிலையம் தமிழகத்து சுகாதார கட்டமைப்பு உலகின் வளரும் நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருக்கிறது என்று எப்படி கூறுகிறது?

      தனியார் கல்லூரிகளை நாடெங்கும் திறக்கக ஒப்புதல் வழங்கிவிட்டு இப்போது தனியார் கொள்ளை என்று நீலிகண்ணீர் வடிப்பது எதற்க்காக? தனியார் கல்லோரிகளை மூட வேண்டியது தானே?

      உண்மையில் ஏற்கனவே எல்லாவற்றிலும் ஒப்பீட்டளவில் சிறப்பானதாக இருக்கும் தமிழகத்திற்கு இந்த நீட் தேவையில்லாதது. இதன் மூலம் சி.பி.எஸ்.சி திட்டத்தையும் அதன் பின்னணியில் இந்தியையும் அதன் பின்னர் சமஸ்கிருதத்தையும் இங்கே கொல்லைப்புறமாக திணிக்கலாம் என்று பகல் கனவு காணும் வேலையை இங்கே காணாதீர்கள்.

      அதனால் இதுபோன்ற வெட்ககேடான பலவீனமான குற்றசாட்டுகளை அடுத்தமுறை வைக்காதீர்கள்.

  14. இப்போ எங்கடா போனீங்க..**********?????(மோடி&எடப்பாடி)..இன்னும் இந்த மாதிரி எத்துணை உயிர் குடிக்க போறீங்க..ஓட்டுக்காக டீ கிளாஸ் கழுவுனவனுக்கும்..மக்களோட வரி பணத்துல
    ஊர ஏமாத்துறனுக்கும் எப்படி தெரியும் ????!!நாங்க படிக்குற மருத்துவ படிப்பை பற்றி..ஓட்டு பொறுக்கி ******!!! அனிதாவின் மரணத்திற்கு எவ்வளவு டா விலை வைக்க போறீங்க.???இவனுங்க முகத்திரையை கிழித்தெறிய வேண்டும். மனித இனம் இன்னொரு மனித இனத்தை அழிக்க கூடிய நிலை உள்ளது..தோழர்களே!!! புரட்சி மட்டுமே தீர்வு..புரட்சி ஓங்குக..நக்சல் பாரி பாதையே புரட்சி பாதை.

Leave a Reply to Selvarajan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க