privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஓசூர் - தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினாவாக்குவோம் !

ஓசூர் – தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினாவாக்குவோம் !

-

டுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் இறப்பில், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி – அடிமை அதிமுக – உச்சிக்குடுமி நீதிமன்றம் – இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!

தமிழகத்தை ஒழித்துக்கட்டாமல் விடாது பி.ஜே.பி!
பி.ஜே.பி -யை ஒழித்துக்கட்டாமல் தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது!

தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினா ஆக்குவோம்!

ஆகிய முழக்கங்களை முன்வைத்து மக்கள் அதிகாரம் மற்றும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம், தெருமுனைப்பிரச்சாரம் போன்ற வடிவங்களின் வழியே மக்களிடையே கருத்துக்களை கொண்டு சென்றனர்.

***

ஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே 7.9.2017 அன்று வியாழன் காலை 11.30 மணியளவில் “மாணவி அனிதா படுகொலையை கண்டித்தும், நீட் தேர்வை அடியோடு ரத்து செய்யக் கோரியும்” விண்ணதிர முழக்கங்கள் முழங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அவ்வமைப்பைச் சேர்ந்த தோழர் சரவணன் , தோழர் முனியப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் ராம் நன்றியுரையாற்றினார். வறிய கிராமப்புற மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கின்ற நீட் தேர்வு முறையை அடியோடு ரத்து செய்யும் வரை மக்கள் ஒன்றிணைந்து போராட முன்வரவேண்டிய அவசியத்தை உணர்த்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் அமைந்திருந்தது. கடை வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் இந்த ஆர்ப்பாட்டத்தை பார்த்து உரையை கேட்டு ஆதரவு தெரிவித்து சென்றனர்.

அதற்கு முன்னதாக, நாட்றாம்பாளயம் கிராமத்தில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தினர். மக்கள் அதிகாரத்தை சேர்ந்த தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சார கூட்டங்களில் அவ்வமைப்பைச் சேர்ந்த தோழர் சரவணன், தோழர் செந்தில்  ஆகியோர் உரையாற்றினர். பெரும்பாலான பெண்கள், பள்ளி மாணவ மாணவிகளிடையே நீட் தேர்வால் ஏற்படும் இழப்பை பருண்மையாக விளக்கிப் பேசி அதற்கு காரணமான இந்த மத்திய, மாநில அரசுகளை அம்பலப்படுத்தி பேசியபோது அவர்களும் ஆமோதித்தனர். விடக்கூடாது போராடி முறியடித்தே தீரவேண்டும் என கூறிச் சென்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்.
தொடர்புக்கு : தோழர் சரவணன்,
நாட்றாம்பாளையம். 

***

பாகலூரில் சர்க்கிள் அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர்கள் மாணவி அணிதா படுகொலையை கண்டித்து 05.09.2017 செவ்வாய் அன்று காலை 11.30 மணியளவில் தெருமுனைப் பிரச்சாரம் செய்தனர்.  ஆர்ப்பாட்டம் போல் நடத்தப்பட்ட இந்த தெருமுனைப்பிரச்சாரத்திற்கு மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர் மஞ்சு தலைமை தாங்கினார். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சேர்ந்த தோழர் ரவி, மக்கள் அதிகாரம் அமைப்பாளர் தோழர் காந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

பாகலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களின் பிள்ளைகள் பெரும்பாலானோர் அரசுப் பள்ளியை நம்பியே உள்ளனர். நீட் இவர்களின் நம்பிக்கையை எவ்வாறெல்லாம் சீர்குலைக்கும் என்பதை அவர்களும் உணரும்படி இந்த கூட்டத்தில் பேசப்பட்ட உரை அமைந்திருந்தது.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, ஓசூர்
தொடர்பு எண் : 88830 92572

_____________

இந்த போராட்ட செய்திகள் உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி