privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஅனிதா - நீட் : நீதி கேட்டுத் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

அனிதா – நீட் : நீதி கேட்டுத் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

-

சென்னை கோவூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று (08.09.17) பள்ளி மாணவிகள் நீட் தேர்வை எதிர்த்தும், மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கமிட்டுக் கொண்டே சாலையில் கூடினர். இதனைப் பார்த்து  அப்பகுதியைச் சேர்ந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களும் அங்கு திரள ஆரம்பித்தனர்.
இதனைக் கண்டு பதறியடித்து ஓடி வந்த போலீசு,  அங்கிருந்து மாணவ மாணவிகளை கலைக்க ஆரம்பித்தது. எனினும் மாணவிகள் கலையாமல் தங்களின் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதனால் போலீசு அப்பள்ளியின் தலைமை ஆசிரியரை தந்திரமாக வரவழைத்து, அவர் மூலமாக மாணவிகளை மிரட்டிக் கலையச் செய்தது.
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

***

ர்மபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் இன்றும் (08.09.2017) வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கு இப்போராட்டம் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி.

***

டுதுறையில் உள்ள அஸ்-சலாம் பொறியியல் கல்லூரி மாணவர்கள் இன்று (08.09.2017) நீட்டுக்கு எதிராகவும், மாணவி அனிதாவின் மரணத்திற்கு நியாயம் கேட்டும் பு.மா.இ.மு தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தஞ்சை.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி