இதுதான்டா தமிழ்நாடு !

போராடு!
இது தமிழ்நாடு..
அனிதாவின் உயிர் நம்மோடு
அடங்காதே மாணவனே, போராடு!

நோட்டைத் திணித்தவன்தான்
நீட்டைத் திணிப்பதும்
மாட்டைப் பறித்தவன்தான்
நம் ஏட்டைப் பறிப்பதும்…
மண்டியிட்டு வாழ்வது அவமானம்
மாணவர் போராட்டம் தன்மானம்

குடிப்பதற்கு டாஸ்மாக்கு
அடிப்பதற்கு போலீசு
தில்லிக்கு அடிபணிய
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்.
திரும்பிய பக்கமெல்லாம்
பொய் வழக்கு, கேசு..

போராடும் மாணவர்கள் கண்ணியம் !
புடிக்க வந்த பெண் போலீசின் மேல்
ஆண் உதவி கமிசனரின் பிராக்டீசு !

அருவருப்பில் அடங்கிக்கிடக்க
அவர்களா நாம்?
அடிமைக் கருவறுக்க
களம் புகுந்த,
பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்
மருது, குயிலி, ஜான்சிராணி வாரிசு!

கல்புர்கி, தபோல்கர் வரிசையில்
கவுரி லங்கேஷ் படுகொலை …
சம்புகன், ஏகலைவன் வரிசையில்
அனிதாவும் படுகொலை…

பசுவுக்கு கோசாலை
பஞ்சமருக்கு சிறைச்சாலை
கொலைகார ஆர்.எஸ்.எஸ்.-க்கு
தேசிய நெடுஞ்சாலை…

துப்பாக்கியுடன் சங்கப் பரிவாரம்
துப்பட்டாவுடன் போராடும்
நம்மிடம் வந்து அரசு அதிகாரம்!

ராம ராஜியத்திற்கு எதிரான
ராவண காவியம் படைப்போம்!

எத்தனை படைகளைக் குவித்தாலும்
மெரினாவின் அலைகள் ஓயாது!
தமுக்கத்தின் ஈரம் காயாது!
வ.உ.சி. திடல் சாயாது!
உரிமையின் மூச்சு அடங்காது!

-துரை. சண்முகம்
_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி