privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்மக்கள் அதிகாரம் தோழர் ராஜுவிடம் ‘செருப்படி’ பட்ட அர்ஜூன் சம்பத் !

மக்கள் அதிகாரம் தோழர் ராஜுவிடம் ‘செருப்படி’ பட்ட அர்ஜூன் சம்பத் !

-

ந்தியாவின் விண்வெளித் துறை நிறுவனமான “இஸ்ரோ” நிலவுக்கு செயற்கைக் கோள் அனுப்பும் சாதனையை விட பெருஞ்சாதனை அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்குவது! இந்த வேதனைக்காக இந்தியாவிலேயே குரல் கொடுத்து மக்கள் இயக்கமாக்கியது தமிழ்நாடும், தந்தை பெரியாரும்தான். அதை சத்தமின்றி நிறைவேற்றியிருக்கிறது பினராயி விஜயன் தலைமையில் இயங்கும் கேரள சி.பி.எம் கூட்டணி அரசு! அதை தமிழக முற்போக்கு அமைப்புக்கள் அனைத்தும் ஒருங்கே வரவேற்று கொண்டாடி வருகின்றனர். ஆயினும் இந்துமதவெறி அமைப்புக்களோ “இந்துக்களை” ஒற்றுமையாக்கும் இப்பணியினை வேண்டா வெறுப்பாக பார்ப்பதோடு உள்ளுக்குள்ளே குமுறியும் வருகின்றனர்.

கேரள மாநில அரசின் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில், திருக்கோயில் அர்ச்சகர்களாக முறைப்படி பயிற்சி பெற்றவர்களில் 62 பேரை திருவிதாங்கூர் தேவசம் போர்டு தேர்வு செய்து இருக்கிறது. இதில் 32 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு, 26 பேர் பார்ப்பனர்கள், 36 பேர் பார்ப்பனரல்லாதோடு நியமனம் பெற்றுள்ளனர். இதில் தலித் பிரிவைச்ச் சேர்ந்தோர் 6 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவில் அமித்ஷா வகையறாக்கள் இடதுசாரி அரசுக்கு எதிராக பாதயாத்திரை, பஞ்சாமிர்த யாத்திரை என்று சீன் போடும் போதும் காலத்தில் அவர்கள் முகத்தில் கரிபூசும் விதமாக இந்த சமத்துவ நடவடிக்கை விளங்குகிறது.

ஒடுக்கப்பட்ட மக்கள் கோயில் தெருக்களில் நடக்க முடியாது என்று இருந்த தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க தந்தை பெரியார் வைக்கத்தில் போராட்டம் நடத்தி வெற்றி கண்டார். அதே மண்ணில் கேரள இடது ஜனநாயக முன்னணி அரசின் முதல்வர் பினராயி விஜயன் தற்போது அனைத்து சாதியினரையும் அர்ச்சகர் ஆக்கி, சமூக நீதியை நிலைநாட்டி இருக்கிறார்.

தமிழகத்தை விட கேரள சமூகத்தில் ஆச்சாரம், சனாதனம், சடங்குகள், சமஸ்கிருத மயமாக்கம் அனைத்தும் அதிகமாகும். சிபிஎம் கட்சி கூட அங்கே பகுத்தறிவு பிரச்சாரத்தை ஒரு சமூக இயக்கமாக செய்வதில்லை. பாஜக – ஆர்.எஸ்.எஸ் கூட்டம் அங்கே சித்தாந்த ரீதியாக மக்களை இந்துமதவெறியின் பெயரில் அணிதிரட்டும் போது அதை எதிர்த்து கட்சி ரீதியாக போராடினாலும் கருத்து ரீதியான போராட்டங்களை சிபிஎம் கட்சி செய்வதில்லை. அப்படிப்பட்ட சூழலில் இந்த அனைத்து சாதியனர் அர்ச்சகராகும் நடவடிக்கை ஆச்சரியமூட்டுவதோடு மனதார பாரட்ட வேண்டிய ஒன்று.

இந்நிலையில் இத்தகைய பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக குறிப்பான பங்கினை செய்துள்ள தமிழகத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியவில்லை என்பது பெரும் மானக்கேடாகும். இதை ஒட்டி நியூஸ் 18 தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் மக்கள் அதிகாரம் தோழர் ராஜுவும், சிபிஎம் சார்பில் தோழர் கனகராஜும், இந்து மக்கள் கட்சி சார்பில் அர்ஜுன் சம்பத்தும், இந்து பக்தர்கள் சார்பில் யாரோ ரமேஷ் என்பவரும் கலந்து கொண்டனர். நெறியாளர் ஜென்ராம் இந்த விவாதத்தை ஒருங்கிணைத்தார்.

ஆகமத்தின் பெயரில் சட்டமும், தீர்ப்புகளும் அனைத்து சாதியினரை அர்ச்சகராக்குவதை தடுக்கின்றன என்பதை தோழர் ராஜு விரிவாக வரலாறு மற்றும் சான்றுகள், வழக்குகளை வைத்து விவரித்தார். ஆகமம் என்பதே ஒரு மோசடி என்பதை அவர் நிறுவினார். கருவறைக்குள் மின் விளக்குகள், ஏ.சி எந்திரங்கள், போன்றவை ஆகமத்தை மீறி நுழையும் போது ஒடுக்கப்பட்ட சாதியினரை தடுப்பது அயோக்கியத்தனமில்லையா என்று அவர் கேட்டார். அதே போன்று சிதம்பரம் நடராஜர் கோவில் இந்து அறநிலையத்துறையின் கையில் வந்த போது ஒரு வருடத்தில் இரண்டு கோடி ரூபாய் காணிக்கை வந்ததும், அதே காலத்தில் முன்னர் வெறும் இரண்டாயிரம் ரூபாய் மட்டுமே தீட்சிதர்களால் கணக்கு காண்பிக்கப் பட்டதையும் தோலுரித்தார்.

இதற்கெல்லாம் பதில் சொல்லத் துப்பற்ற அர்ஜுன் சம்பத் ஆங்காங்கே ஒரு ‘மாமா’-வைப் போல சிரித்துக் கொண்டு அவதூறுகளையும், பொய்களையும் கொட்டினார். தமிழகத்தில் அனைத்து சாதியனரும் ஏற்கனவே அர்ச்சகராகத்தான் இருக்கிறார்கள் என்று ஒரு முழுப் பொய்யை கூசாமல் சொன்னார். கேட்டால் அது சுடலை, இசக்கி, அய்யனார் போன்ற நாட்டுப்புற தெய்வங்களின் கோவில் என்று பட்டியல் வாசித்தார். பிறகு 90-களில் திருவரங்கம் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்திய மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் உள்ளே செருப்புடன் சென்று அரங்கநாதன் சிலையில் ஏறியதாக மற்றுமொரு பொய்யை கூசாமல் சொன்னார். அதை பொய் என்று தோழர் ராஜு கூறிய போது தன்னிடம் ஆதாரம் இருப்பதாகவும் வெட்கமே இல்லாமல் அடித்து விட்டார்.

அந்த போராட்டத்தில் தலித் மக்கள், பிற்படுத்தப்பட்டோர், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 32 தோழர்கள் பெரியார், அம்பேத்கார் படங்களுடன் உள்ளே நுழைந்தனர். இவர்களைத்தான் ஒரு குறியீடு போல செருப்பு என்று கூறுகிறார் போலும்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்தது போன்று ஒரு பெரும் போராட்டம் வந்தால் ஒழிய இங்கிருக்கும் அரசு அனைத்து சாதியனரையும் அர்ச்சகராக்காது என்றார் தோழர் ராஜு. வீடியோவைப் பாருங்கள்!

___________________

அனைத்து சாதி அர்ச்சகர் உரிமை, தில்லை கோவிலில் தமிழ் பாடும் போராட்டம் ஆகியவற்றில் மக்கள் அரங்கிலும், நீதிமன்றத்திலும் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புக்கள் தீவிரமாக போராடியிருக்கின்றன. அவை குறித்து வினவு தளத்தில் முன்னர் வெளியிட்ட வீடியோக்களை இங்கே இணைத்திருக்கிறோம்.

1. அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு – பாகம் 1

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கும் வகையில் 2006-ல் திமுக அரசு பிறப்பித்த அரசாணைக்கு எதிராக, மதுரை மீனாட்சி கோயிலின் பார்ப்பன அர்ச்சகர்கள் தொடுத்த வழக்கில், தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, பார்ப்பன ஆதிக்கத்தையும் தீண்டாமையையும் பாதுகாக்கும் வகையில் மிகவும் தந்திரமான சொற்றொடர்களில் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருக்கிறது. இது குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றம் மக்கள் உரிமைப் பாதகாப்பு மையம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பு – முதல் பாகம் (டிசம்பர் 2015)

2. அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு – பாகம் 2

கோயிலில் நுழையக்கூடாது, தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்தவர்’ என்று நந்தனாருக்கு மரண தண்டனை தீர்ப்பு அன்று வழங்கப்பட்டது. அர்ச்சகர் மாணவர்களை அர்ச்சகராவதற்குத் தகுதியற்றவர்கள் என்று வெளியேற்றும் வாய்ப்பை இத்தீர்ப்பு இன்று வழங்கியுள்ளது. (டிசம்பர் 2015)

3.  அர்ச்சகர் வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு – பாகம் 3

இந்த தீர்ப்பு திமுக அரசு கொண்டு வந்த அரசாணையை ரத்து செய்வதாகக் கூறவில்லை என்பது வெற்றி அல்ல. நடைமுறையில் அதனை ரத்து செய்து விட்டது என்பதே உண்மை. “ஆகம விதி, சம்பிரதாயம், மரபு ஆகியவற்றுக்கு இணங்கவே அர்ச்சகர் நியமனங்கள் அமைய வேண்டும். அதே நேரத்தில் அந்த சம்பிரதாயங்கள் அரசியல் சட்ட உரிமைகளுக்கு முரணானதாக இருக்கக் கூடாது. இது பற்றி ஒட்டு மொத்தமாக அனைவருக்கும் பொருந்தும்படியன ஒரு உத்தரவைப் பிறப்பிக்க இயலாது. ஒவ்வொரு அர்ச்சகர் நியமனத்தையும் தனித்தனியே பரிசீலித்துப் பார்த்துத்தான் முடிவு செய்ய இயலும்” என்கிறது இத்தீர்ப்பு. ம.க.இ.க – ம.உ.பா.மை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் இறுதி பாகம் (டிசம்பர் 2015)

4. அர்ச்சகர் அடையாளத்தை துறந்தார் ரங்கநாதன் – ஆர்ப்பாட்டம்

சென்னையில் பயிற்சி பெற்ற அர்ச்சக மாணவர் சங்கத் தலைவர் ரங்கநாதனுடன், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் மற்றும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் வழக்கறிஞர்களும் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை அருகே உச்சிக் குடுமி நீதிமன்றத்தை கண்டித்தும், பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்தும், அதற்கு துணை போகும் பாசிச ஜெயா அரசைக் கண்டித்தும் விண்ணதிர முழக்கங்கள் முழங்கின. ஆர்ப்பாட்டத்தின் முத்தாய்ப்பாக அர்ச்சக மாணவர் ரங்கநாதன் பெரியார் சாலைக்கு மாலை அணிவித்து பின்னர் தனது உருத்ராட்சக் கொட்டை மாலை, தீட்சை ஆகியவற்றை துறந்து இனி பார்ப்பன ஆதிக்கத்தை முறியடிக்கும் சுயமரியாதை போராட்டங்களில் ஈடுபடுவதாக உரையாற்றினார். அதன் பிறகு தோழர் ராஜூ உச்சநீதிமன்றத்தின் அயோக்கியத் தீர்ப்பை விளக்கி உரையாற்றினார். அனவரையும் கைது செய்து கொண்டு சென்ற போலீசு மாலையில் விடுவித்தது.

5. சென்னையில் 30-11-2013 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய அரங்குக் கூட்டத்தில் தில்லை கோயிலை பாதுகாப்போம் ! சங்கராச்சாரியை கூண்டில் ஏற்றுவோம் – என்ற தலைப்பில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் மருதையன் நிகழ்த்திய உரை.

6. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வழக்கு குறித்து மக்கள் தொலைக் காட்சியில் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு கலந்து கொண்ட விவாதம். – ஜூலை 2013

7. அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை தொடர்பாக மதுரையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தின் தொகுப்பு – அக்டோபர் 2013


__________________
இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

  1. ///தமிழகத்தில் அனைத்து சாதியனரும் ஏற்கனவே அர்ச்சகராகத்தான் இருக்கிறார்கள் என்று ஒரு முழுப் பொய்யை கூசாமல் சொன்னார். கேட்டால் அது சுடலை, இசக்கி, அய்யனார் போன்ற நாட்டுப்புற தெய்வங்களின் கோவில் என்று பட்டியல் வாசித்தார்//

    Yes,in other temples if you appoint Dalits as archagar No dalit wiil go to temples,
    specially the RICH daliths will never go to temple,they (DALITS) get pride once they receive PRASADAM from Bramina archagars.
    Not only daliths most of the other caste and entire Brahmins also do the same by boycott the temples.

  2. துணிவான முடிவெடுத்த பினராயி விஜயன் அவர்களை பாராட்டுவதா அல்லது எப்போதும் மந்தையை விட மூன்றுபடி முன்னோகியே சிந்திப்பதாக இறுமாப்புடன் இருக்கும் பார்ப்பன அதிகார வர்க்கம் மற்றும் கூட்டளிகளான முதலாளிகளின் நினைப்பை உறுதிப்படுத்துகிறோமோ எனும் சந்தேகமும் எழுகிறதுதான்.

    மணியாட்டுவது என்பதே மக்களை எம்மாற்றி தின்ற பார்ப்பன கேவலமாக இருக்கும் போது அதை இப்போது மற்றவர்களும் செய்யலாம் என்பதை ஒரு கொண்டாடதக்கதகவோ விரும்பகூடியதாகவோ இல்லை என்னை பொறுத்தவரை. பொய்யிலும் புரட்டிலும் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் மதத்தையும் அதன் கடவுளையும் சீராட்டுவதட்கு என்னங்க ‘முறையான அர்ச்சகர்’ பயர்ச்சி?
    உண்மையில் மதம் தடை செய்யப்பட்டு கோவில் சொத்துகள் அரசுடமை ஆக்கப்பட்டு மக்கள் நல திட்டங்களுக்கு செலவழிக்க படவேண்டும் என்பதே உண்மையான முட்போக்குசக்திகளின் கொள்கையாக இருக்க முடியும்.

    மு.துவத்தின் இலட்சனைகலான கோட்டு சூட்டு கார் பற்றி கபாலியில் நானும் போடுவண்டா நானும் போவண்டா என சொல்லி அதையே பிட்படுத்தபட்டவர் முன்னேற்றம் என குறுக்குவதட்கும்இதற்கும் என்ன வித்தியாசம், பார்ப்பன மற்றும் மு.துவத்தின் மக்களை உறியும் வழிகளில் கொஞ்சம் பங்கு கிடைத்ததை போலவே இவையெல்லாம். எனக்கென்னமோ அவர்கள் தாம் நினைத்த வழியிலேயே எப்போதும் இவர்களை செலுத்துவிக்க முடியும் என உள்ளுக்குள் நமட்டு சிரிப்பு சிரிப்பதாக படுகிறது. அண்மையில் இதற்கு வாழ்த்து தெரிவித்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் உட்பட.

  3. கிடைக்கப்பெற்ற சொற்ப நேரத்தில் தோழர் ராஜீ மிகச்சிறப்பாக தன் கருத்துக்களை பதிவு செய்துள்ளார்.தோழர் கனகராஜின் r.s.s பற்றிய கேள்விக்கு எதிராக அர்ஜீனரின் அம்பு ஒடிந்து போனது. கேரள முதல்வரை ஆச்சரியத்தோடு பாராட்டவே தோன்றுகிறது.பாராட்டுக்கள் தோழர் பினரவ் அவர்களே.இருப்பினும் இந்த சாதனையான சீர்திருத்தத்தை முன் வைத்தே பாராளுமன்ற செக்குமாட்டுப்பாதையில் மீண்டும் மக்களை தொடர்ச்சியாக மூழ்கடித்துவிடுவார்களே என்ற கவலையும் எழத்தான் செய்கிறது.”வைக்கம்”வெல்லட்டும் நாடெங்கும்.

  4. பார்ப்பனர் அல்லாதார் மீது சாதி இழிவும் உரிமை மறுப்பும் நிகழ்கிறது என்பதே பிரச்சினைக்கு அடிப்ப-டை.கருவறையில் மட்டும் அல்ல சமூகத்தில் நிலவும் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியே அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் உரிமைப் போராட்டம்.சின்னா அவர்கள் சொல்லுகிற சமூக நிலையை அடைவதற்கு ஒடுக்கப்படும் மக்களின் மீதான இம்மாதிரியான உரிமைமறுப்புகளுக்கு எதிராகப் போராடி மக்களை விடுவிக்க வேண்டும் என்பது முன் நிபந்தனையாக உள்ளது.

  5. கடவுள் உன்னை பொறுத்தவரை
    இல்லை அப்புறம் எதற்கு பூஜை புனஸ்காரங்களுக்குள் உன் பிரவேசம்?

    கடவுளே இல்லை என்று சொல்பவா்களுக்கு யார் அர்ச்சகர்கள் ஆனால்
    என்ன? முரண்பாடு

    My humble request to all dalits in tamilnadu: Please get converted to Buddhism.As per thirumavalavan , that is the only religion with out caste issue. Please don’t come to hindu temples even for worship

  6. நிலபிரபுத்துவ சமுகத்தில் அடிமைகளாக இருந்த மக்கா , முதலாளித்துவ சமுகத்தில் கோட்டு சூட்டு போடுறாங்க என்றால் அது ஒப்பீட்டு அளவில் முதலாளித்துவ சமுகங்களின் வளர்சியை தான் குறிகின்றது… இன்னும் தெளிவா சொல்லணும் என்றால் நிலபிரபுத்துவ சமுகத்தை விட முதலாளித்துவ சமுகம் முற்போக்கானது தான் ஒப்பிட்டு அளவில்.(relatively) . மக்களின் உடை சார்ந்த நாகரிகமும் அந்த அந்த சமுகம் கோரும் விதத்தில் மாறிக்கொண்டு தான் இருக்கும் என்பதனையும் நாம் தவிர்க்க இயலாது என்பதனையும் நாம் உணரனும்…

    குறிப்பு: முதலாளித்துவ சமுகம் சிறந்தது என்று நான் கூறியதாக யாராவது ஒரு வெண்ணை வினவில் வந்து புரிதல் இல்லாமல் மொக்க போடும் பாருங்க!

    அந்த கபாலி படத்தில் உள்ள வசனம் உண்மை தான்… காந்தி சட்டப்போடாம இருக்கவும் அதில் அரசியல் இருக்கு! அம்பேத்கர் கோர்ட் சூட் போட்டுகிடதுக்கும் பின்னால அரசியல் இருக்கு…டாகடர் அம்பேதகர் கோர்ட் சூட் போட்டதால இங்க விவாதிக்கும் ஒருத்தருக்கு எரியுது என்றால் அப்படி தான் உமக்கு எறியணும்… உன் வயிறு எறியணும்…. ஆமாம் நாங்களும் கோர்ட் சூட்டு போடுவோம்… எங்க குழந்தைளுக்கும் கோர்ட் சூட்டு தான் போடுவோம்… கால் மேல கால் போட்டு உட்காரத்தான் பழகபடுத்துவோம்…

    எங்க தலித் மக்களின் மருத்துவ மாணவர் சீட்டை திருடிய சாதி வெறியன் ராமதாஸ் வந்தது எதிர்த்தாலும் சரி வேற எந்த முற்போக்காக இங்கே நடிக்கும் “சின்னா” ராமதாஸ் வந்து சொன்னாலும் சரி… ஆம் அப்படிதான் கால் மேல கால் போட்டு உட்காருவோம்…. கோர்ட் சூட்டு தான் போடுவோம்….

    முடிந்ததை பாத்துக்க நீயி…

    • குமார்,

      தலித்துகள் கோட் சூட் அணிவதோ கால் மேல் கால் போட்டு உட்காருவதோ சின்னாவிற்கு நிச்சயம் மகிழ்ச்சியைத்தான் அளிக்கும். ஆனால் அவரின் கவலை அவர்களின் சமூக விடுதலையைப் பற்றிதான் என எண்ணுகிறேன்.

      • //ஆனால் அவரின் கவலை அவர்களின் சமூக விடுதலையைப் பற்றிதான் என எண்ணுகிறேன்//
        ஆனால் அவரின் கவலை அதைவிட அவர்களின் சமூக விடுதலையைப் பற்றிதான் என எண்ணுகிறேன்

      • நிச்சயமாக, குமாருக்கும் அது தெரியும் ஆனால் அவருக்கு தேவை புரிதல் அல்ல குழப்பமே. பாருங்கள் இப்போது என்னை தலித் விரோதியாக்கி ராமதாசியோடெல்லாம் ஒப்பிடுகிறார். வினவு பின்னூட்டம் வெளியிடவில்லை, அது விடுபட்டதா இல்லை வேறு ஏதும் காரணமா?

  7. குமார் உங்கள் சமுதாய மாற்றம் குறித்த பார்வை சரிதான்.கபாலி ” வஜனம்” பற்றி சிலிர்த்துக்கொள்வதுதான் சகிக்க முடியவில்லை.முதலில் ரசினி என்கிற காவி காரியக்கிறுக்கனைப்பற்றி உங்கள் கருத்தென்ன?படையப்பா என்ற மாபெரும் காவியத்தில் போதையை போட்டு “நம் தெருவுக்குள் சாதிச்சண்டை மதச்சண்டை வம்பெதுக்குன்னு”கூவிய பொழுது நீங்கள் ஏன் அவரை சாதி ஒழிப்பாளராக தூக்கிச்சும்க்கவில்லை?கபாலி படத்தை நீங்கள் சொல்லும் பிம்பத்தை rss “சோ”வை அழைத்து வந்து சிறப்புகாட்சியாக காண்பித்து கேவலப்படுத்தியவர்தானே உங்கள் கபாலி?லிங்கா “காவியம்”தந்த அதீர்ச்சியில் விழைந்த குப்பைதானே கபாலி? ஆறு மாதமாக சேர்ந்தாற்போல் செளந்தர்யா மேடத்திடம் காத்துக்கிடந்து பா.ரஞ்சித் அவர்களால் படைக்கப்பட்ட இந்த ஆதிகாலத்து எம்ஜிஆர் குப்பைக்கு கபாலி என்று பெத்த பேரு.தருமபுரியில் இளவரசன் கொலையைத் தொடர்ந்து நீங்களும் உங்கள் கபாலிகளும் முடிந்ததைப் “பார்த்துக்கொண்டு”தானே இருந்தீர்கள்?விவிமு என்ற “சாதாரண”மானவர்கள்தானே வன்னீய தலித் சாதிமறுப்புத் திருமணத்தை வீதியில் நடத்தி “முடிஞ்சதைப்பார்த்தோம்”.ரஞ்சித் ஒரு சினிமா இயக்குனராக யாரை ழேண்டுமானாலும் வைத்து படம் எடுக்கட்டும் அது அவரது உரீமை.ஆனால் அதற்கெல்லாம் வீரப்பொழிப்புரை வழங்குவதையெல்லாம் தயவுெசெய்து நிறுத்துங்கள்.ஏனெனில் இதெல்லாம் பல்லாண்டு வாழ்க படத்திலேயே பார்த்தாச்சு பார்த்தாச்சு.

    • நெப்போலியன் ,இந்த எம் ஜி ஆர் மற்றும் ரஜினி குப்பை காவியத்தை நீரே பாடிகிட்டு இருங்க… எனக்கு வேற வேலை இருக்கு…! சகோதரன் இளவரசன் மீதான உங்க பார்வையை மட்டும் இப்ப விவாதிக்கிறேன்.. சாத்திய அடக்குமுறை என்பது தடுக்கபடவேண்டும் என்றால் அது தனித்து விவிமு அமைப்பால் மட்டும் இயலாது..முற்போக்கு சகதிகள் அனைவரும் சேர்த்து குரல் கொடுக்கணும்… தனித்து நாங்க சாதிச்சிட்டோம் என்று பீற்றிகொள்வதில் என்ன பயன் இருக்கு சொல்லுங்க?

      அது சரி ரஞ்சித் படத்தில் நடிக்கும் ஒரு கேரக்டர் ரஞ்சித் எழுதிய வசனத்தை பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? யார் மீது உங்களுக்கு பயம்? ரஞ்சித் மீதா அல்லது ரஞ்சித் எழுதிய வசனத்தை பேசிய அந்த கேரக்டர் மீதா?

  8. சின்னா,

    வினவு சார்ந்த மக்கள் கலை இலக்கிய கழகம் அனைவரும் அர்சகரகனும் என்று போராட்டங்களை மக்கள் மத்தியிலும், சட்ட ரீதியாகவும் நடத்தி இருக்கு…மேலும் அனைவரும் கோவில் கருவறைக்குள் நுழைய சட்ட ரீதியாக , சமுக ரீதியாக அனுமதி வேண்டும் என்று 1990களின் தொடக்திலேயே பெரியாரின் கொள்கை படி போராடியிருக்கு…. இவற்றின் தேவை எல்லாம் என்னவென்று உணர நாம் நம்ம அறிவை பயன்படுத்தி தான் சிந்திக்கணும்…கம்ம்யுனிடுகள் சாமி இல்ல என்று தன்னளவில் கொள்கை பிடிப்புடன் இருந்தாலும் , அவர்கள் யாருக்காக போராடுகிறார்களே அந்த மக்களுக்கு சமுகத்தில், மத விசயங்களில் சம அந்தஸ்து மரியாதை இல்லை என்றால் அதுக்கும் கம்ம்யுநிடுகள் தான் போராடவேண்டியிருக்கு… அது தான் சரியான செயலும் கூட…

    மேல் உள்ள விவாதத்தின் அடிப்படையில் எனது கேள்வி:

    1.ஹிந்து மதத்துக்குள் பார்பனர் அல்லாதோருக்கு கருவறையில் நுழைய அனுமதி இல்ல…, ஆகம கோவில்களில் அர்ச்சகர் ஆக அனுமதி இல்ல என்ற நிலையில் முதலில் அந்த கட்டுப்பாடுகளை உடைக்க ,உடைத்து எரிய கம்ம்யுநிடுகள் போராடுவதில் உங்களுக்கு எங்கே வலிக்கின்றது?

    அடுத்ததாக தலித் மக்கள் கோர்ட் , சூட்டு போடுவதனை கூட சாதிவெறியன் ராமதாஸ் அளவுக்கு கேலி செய்து இருக்கீங்க…! இந்த விசயம் தொடர்பாக பொதுவாக ஒரு பின்னுட்டத்தை (என் :6 )அளித்து இருக்கேன்.. அது பொதுவான பின்னுட்டமாக இருந்தாலும் உங்களுக்கு தான் அது மிக சரியாக பொருந்தும். அந்த விவாதம் தொடர்பாக எனது கேள்வி:

    2.தலித் மக்கள் தங்கள் சமுக,பொருளாதார,கல்வி நிலை உயரும் போது பிறரை போன்ற அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற கவுரமான உடையை அணிகிறார்கள்.. அப்படி தான் டாக்டர் அம்பேத்கரும் கோர்ட் ,சூட்டு அணிந்தார்..அதில் என்ன விதமான குற்றத்தை கண்டீர்கள்? அணியும் உடை எனக்கு கவுரவத்தையும், மரியாதையையும் கொடுக்குது என்றால் அப்படி அணிவதில் என்ன தவறு இருக்கு? நீங்க என்ன சொல்ல வரீங்க என்றால்….காந்தியை மாதிரியே சட்டப்போடாமல் அதன் மூலம் அவர் தலித் மக்களுக்கு கொடுக்கும் உள்ளார்ந்த விளக்கமான “நானும் சட்டப்போடல நீங்களும் போடாம இருபதில் தம்பு இல்ல” என்ற விளக்கத்தை ஏற்க சொல்லுவீர் போல?

  9. குமார் மூச்சை ஆழமாக இழுத்து விட்டு நிதானியுங்கள்.

    //நிலபிரபுத்துவ சமுகத்தில் அடிமைகளாக இருந்த மக்கா , முதலாளித்துவ சமுகத்தில் கோட்டு சூட்டு போடுறாங்க என்றால் அது ஒப்பீட்டு அளவில் முதலாளித்துவ சமுகங்களின் வளர்சியை தான் குறிகின்றது//

    அதென்னங்க ‘முதலாளித்துவ சமுகங்களின் வளர்சி’? சாதிய சமூகங்கள் என்று சொல்லவந்து மாட்டிவிடுவோமென நினைத்து வேறுவார்த்தை தேடி அலுத்து இறுதியில் முதலாளித்துவ சமூகங்களின் வளர்ச்சியாம். இல்ல தெரியாம கேக்கிறேன் நிலபிரபுதுவதிலாவது ஒடுக்குபவர் ஒடுக்கபடுபவர் என இரண்டு வர்க்கங்களே இருந்ததே, புரட்சிகூட எளிதாயிருந்திருக்குமே? அனால் உங்கள் ‘ஒப்பீட்டளவில்’ முற்போக்கான மு.துவம் இன்று நடுத்தரவர்க்கம் என்றொரு மகா சுயநல buffer ஐ உருவாக்கிக்கொண்டு கீழ்தட்டு வர்க்கத்தை அதிகமாக சுரண்டுகிறதே? ஒப்பிட்டால் எது அதிக விஷம்? உங்கள் அடிப்படை புரிதலே தவறாக உள்ளதே, இதில் அது நடுத்தரவர்க்கம் என்ற ஒன்றை உருவாகியதட்காக அது முற்போக்கானது (relatively என்னங்க வழமையான உங்கள் failsafe ஆ? பிறகு குறிப்பு பலித்து விட்டதாக சொல்வதற்கு..இதற்குத்தானே பொறி வைத்தாய் பாலகுமாரா) என சொல்லி உங்கள் மூளையை கேவலபடுத்த வேண்டாம்.

    //காந்தி சட்டப்போடாம இருக்கவும் அதில் அரசியல் இருக்கு! அம்பேத்கர் கோர்ட் சூட் போட்டுகிடதுக்கும் பின்னால அரசியல் இருக்கு//
    இல்ல தெரியாம கேக்கிறேன் அது ‘அரசியலுங்க’? அவனுங்களே பாபா மாரி படங்கள்ல பழைய புரியாத மொக்கை டயலாக்கெல்லாம் இனி எடுபடாதுன்னு இப்போ நல்ல தலித் உரிமைகளை கையில் எடுக்குறானுங்க அந்த அரசியல் விளக்கத்தை தான் கொஞ்சம் சொல்லுங்கலேப்பா?

    குமார் கபாலி எனும் குழு தலைவன் (அது எப்படிங்க ஒரு ‘நல்ல’ கேங்கு இயங்கமுடியும்)ஒருவன் கோட்டுசூட்டு போட்டு காரில் போவதால் மற்றைய எண்ணுக்கணக்கற்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்க்கை பொட்டலவேனும் முன்னேறுமா? கபாலி படம்தான் நைச்சியமாக வெறும் குழுச்சண்டையை வைத்து உண்மையான குற்றவாளிகளை விடுத்து ஒரு பொறாமை அரசியல் செய்கிறது. அப்படம் தனிநபர் வழிபாடு மற்றும் தலித் குரல் என்ற போர்வையில் முற்போக்கு சக்திகளிடமிருந்து அன்னியபடுத்துகிறது என்பதே என் குட்ட்ரசாடு. கபாலி படத்தை வைத்து தலித் முன்னேற்றத்தை பீற்றுபவர்கள் விளக்கை தேடி போகும் விட்டில் பூச்சி போன்றவர்கள். இத புரிந்து கொள்ளாமல் ஏனையா என்மேல் எரிந்து விழுகிறீர்?

    என்னங்க இது நீங்க சாதி பேச்சை தொடங்க வேண்டுமேன்பதட்கு என்னை அநியாயத்துக்கு மட்டை ராமதாசி ஆக்கி விட்டீரே XDD முன்பும் என்னை அக்காகி அது இது என்றீர், குமாருக்கு சின்னாமேனியா புடிச்சுட்டு போல.

    • சின்னா,

      1.ஒப்பீட்டு அளவில் நிலபிரபுத்துவம் , முத்லளித்துவத்தை விட முற்போக்கானது என்று கூற வரீங்க நீங்க என்றால் உங்களுக்கு உள்ள மார்சிய லெனினிய கல்வி அறிவின் குறைபாட்டை சந்தேகிக்க த்தான் செய்யணும் வினவு வாசகர்கள்..! உலக வரலாற்றை உழைப்பு வேலை பிரிவினை , உற்பத்தி அடிப்டையில் பிரித்து பார்த்த தோழன் காரல் மர்ர்க்ஸ் அவர்கள் எந்த இடத்திலும் நீங்க சொன்னது போன்று ஒப்பிட்டு அளவில் நிலபிரபுத்துவம் , முதலாளித்துவத்தை விட சிறந்தது என்று கூறவில்லை…யாராவது இவருக்கு மார்சிய கல்வியை கலப்படம் இல்லாமல் அளித்தால் நலம் பயக்கும்.//இல்ல தெரியாம கேக்கிறேன் நிலபிரபுதுவதிலாவது ஒடுக்குபவர் ஒடுக்கபடுபவர் என இரண்டு வர்க்கங்களே இருந்ததே, புரட்சிகூட எளிதாயிருந்திருக்குமே? அனால் உங்கள் ‘ஒப்பீட்டளவில்’ முற்போக்கான மு.துவம் இன்று நடுத்தரவர்க்கம் என்றொரு மகா சுயநல buffer ஐ உருவாக்கிக்கொண்டு கீழ்தட்டு வர்க்கத்தை அதிகமாக சுரண்டுகிறதே?//

      ௨. என்னுடைய கேள்வி என்ன ? அதுக்கு நேரடியா பதில் சொல்லுங்க..2.தலித் மக்கள் தங்கள் சமுக,பொருளாதார,கல்வி நிலை உயரும் போது பிறரை போன்ற அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற கவுரமான உடையை அணிகிறார்கள்.. அப்படி தான் டாக்டர் அம்பேத்கரும் கோர்ட் ,சூட்டு அணிந்தார்..அதில் என்ன விதமான குற்றத்தை கண்டீர்கள்? அணியும் உடை எனக்கு கவுரவத்தையும், மரியாதையையும் கொடுக்குது என்றால் அப்படி அணிவதில் என்ன தவறு இருக்கு? நீங்க என்ன சொல்ல வரீங்க என்றால்….காந்தியை மாதிரியே சட்டப்போடாமல் அதன் மூலம் அவர் தலித் மக்களுக்கு கொடுக்கும் உள்ளார்ந்த விளக்கமான “நானும் சட்டப்போடல நீங்களும் போடாம இருபதில் தம்பு இல்ல” என்ற விளக்கத்தை ஏற்க சொல்லுவீர் போல?

    • சின்னா உங்க மார்சிய அறிவு மார்சியத்துக்கே எதிராக திரிவு நிலையில் இருக்கு என்று தோழன் காரல் மார்க்ஸ் அவர்களின் கம்யுனிஸ்டு கட்சி அறிக்கை நூல் வாயிலாக நிருபிக்க போறேன்…

      நன்றி : நூல் கம்யுனிஸ்டு கட்சி அறிக்கை-கீழைக் காற்று பதிப்பகம் பக்கம் 47

      “””பிரபுத்துவ சமுதாயத்தின் இடிபாடுகளிருந்து முளைத்தெழுந்துள்ள தற்கால முதலாளித்துவ சமுதாயம் வர்க்கப் பகைமைகளுக்கு முடிவுகட்டி விடவில்லை; பழையவற்றின் இடத்தில் புதிய வர்க்கங்களையும், புதிய ஒடுக்குமுறை நிலைமைகளையும், புதிய போரட்ட வடிவங்களையும் நிலைநாட்டியிருக்கிறதே அன்றி வேறில்லை.

      ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்க சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் -முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய்- பிளவுண்டு வருகின்றது.

      மத்திய காலத்துப் பண்ணையடிமைகளிடமிருந்து ஆதி நகரங்களின் சுதந்திர நகரத்தார் உதித்தெழுந்தார்கள். இந்த நகரத்தாரிடமிருந்து முதலாளித்துவ வர்க்கத்தின் ஆரம்பக் கூறுகள் வளரலாயின.

      அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டதாலும், ஆபிரிக்க நன்னம்பிக்கை முனையைச் சுற்றிச் செல்லும் கடல்வழி கண்டறியப்பட்டதாலும், தலைதூக்கி வந்த முதலாளித்துவ வர்க்கத்துக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்தன. கிழக்கு இந்திய, சீனச் சந்தைகள், அமெரிக்காவில் குடியேற்றம், காலனிகளுடனான வாணிபம், பரிவர்த்தனைச் சாதனங்களிலும் பொதுவாய் பரிவர்த்தனைப் பண்டங்களிலும் எற்பட்ட பெருக்கம் ஆகிய இவை எல்லாம் வாணிபத்துக்கும் கப்பல் போக்குவரத்துக்கும் தொழில்துறைக்கும் இதன் முன் என்றும் கண்டிராத அளவுக்கு ஊக்கமூட்டின; ஆட்டம் கண்டுவிட்ட பிரபுத்துவ சமுதாயத்தில் புரட்சிகரக் கூறு வேகமாய் வளர்வதற்கு இவ்விதம் இவை தூண்டுதல் அளித்தன.

      பிரபுத்துவ முறையில் அமைந்த தொழில் அமைப்பில் தொழிற் பண்டங்களது உற்பத்தியானது தனியுரிமை பெற்ற கைவினைச் சங்கங்களின் ஏகபோகமாய் இருந்தது. இப்போது இந்தப் பிரபுத்துவத் தொழில் அமைப்பு புதிய சந்தைகளின் வளர்ந்து பெருகும் தேவைகளுக்கு ஒவ்வாததாகியது. இதன் இடத்தில் பட்டறைத் தொழில்முறை வளரலாயிற்று. கைவினைச் சங்க ஆண்டான்களை பட்டறைத் தொழில் மத்தியதர வர்க்கத்தார் அப்புறப்படுத்தினர். பல்வேறு கூட்டிணைவுகளாய் அமைந்த கைவினைச் சங்கங்களுக்கு இடையிலான உழைப்புப் பிரிவினை தனித்தனி தொழிலகத்திலுமான உழைப்புப் பிரிவினையின் முன்னால் நிற்க முடியாமல் மறைந்தொழிந்தது.””””

      இப்ப சின்னா பதில் சொல்லவேண்டியது யாருக்கு என்றால் எனக்கு அல்ல.. இந்த விவாதத்தில் எனக்கு உதவும் தோழன் மார்க்ஸ் அவர்களுக்கு தான் சின்னா பதில் சொல்லணும்!

      //அதென்னங்க ‘முதலாளித்துவ சமுகங்களின் வளர்சி’? சாதிய சமூகங்கள் என்று சொல்லவந்து மாட்டிவிடுவோமென நினைத்து வேறுவார்த்தை தேடி அலுத்து இறுதியில் முதலாளித்துவ சமூகங்களின் வளர்ச்சியாம். இல்ல தெரியாம கேக்கிறேன் நிலபிரபுதுவதிலாவது ஒடுக்குபவர் ஒடுக்கபடுபவர் என இரண்டு வர்க்கங்களே இருந்ததே, புரட்சிகூட எளிதாயிருந்திருக்குமே? அனால் உங்கள் ‘ஒப்பீட்டளவில்’ முற்போக்கான மு.துவம் இன்று நடுத்தரவர்க்கம் என்றொரு மகா சுயநல buffer ஐ உருவாக்கிக்கொண்டு கீழ்தட்டு வர்க்கத்தை அதிகமாக சுரண்டுகிறதே? ஒப்பிட்டால் எது அதிக விஷம்? உங்கள் அடிப்படை புரிதலே தவறாக உள்ளதே, இதில் அது நடுத்தரவர்க்கம் என்ற ஒன்றை உருவாகியதட்காக அது முற்போக்கானது (relatively என்னங்க வழமையான உங்கள் failsafe ஆ? பிறகு குறிப்பு பலித்து விட்டதாக சொல்வதற்கு..இதற்குத்தானே பொறி வைத்தாய் பாலகுமாரா) என சொல்லி உங்கள் மூளையை கேவலபடுத்த வேண்டாம்.//

      • தோழர் சின்னா , குறிப்பாக நீங்க தோழன் மார்க்ஸ் உடன் எங்கே வேறுபடுகின்றீகள் என்றால்…

        1. நீங்க சொல்வது….:
        —————————-
        நிலபிரபுதுவதிலாவது ஒடுக்குபவர் ஒடுக்கபடுபவர் என இரண்டு வர்க்கங்களே இருந்ததே, புரட்சிகூட எளிதாயிருந்திருக்குமே?

        எங்க தோழர் பெரியண்ணன் அண்ணன் ஆசிரியர் மார்க்ஸ் என்ன சொல்றார் என்றால்…..:
        —————————————————————————–

        ஆயினும் நமது சகாப்தமாகிய இந்த முதலாளித்துவ வர்க்க சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் -முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய்- பிளவுண்டு வருகின்றது.

        என்னுடைய புரிதல் என்னவென்றால் :
        —————————————-
        தொழிலாளர் வர்க்கமும், முதலாளித்துவமும் நேர் எதிரா நிற்பதாக நிற்பதாக அதனால் வர்க்க பகைமைகள் சுருக்கி எளிமையாகபட்டு உள்ளதாக சொல்லுகின்றார் மார்க்ஸ்… நீங்க என்ன சொல்ல வாறீங்க என்றால் நிலபிரபுதுவதிலாவது ஒடுக்குபவர் ஒடுக்கபடுபவர் என இரண்டு வர்க்கங்களே இருந்ததே, புரட்சிகூட எளிதாயிருந்திருக்குமே என்று மார்க்ஸ் அவர்களிடம் நேர் எதிராக கேள்வி எழுப்புகிண்றீகள்… மார்க்ஸ் கிட்ட கேள்வி கேட்பது தப்பு இல்ல… எதனையும் அறிவின் கண் கொண்டு பாரு என்று தான் பெரியாரும் சொல்லியிருக்காரு… ஆனால் பாருங்க தோழன் மார்க்ஸ் இப்ப உயிருடன் இல்லாததால் நீங்க இந்த விசயத்தில் நீங்க சார்ந்து இருக்கும் அமைப்பில் தான் விவாதித்து முடிவுக்கு வர முடியும்.

        நடுத்தர வர்க்கம் தான் உங்களுக்கு புரட்சிக்கு பிரச்னை என்றால் அவர்களை வர்க்க புரசியின் எதிர்பாலார்களாக கருதிக்கொண்டு நீங்க நேசகர பெரும்பான்மை உழைக்கும் மக்களை தொழிலாளர்களை, விவசாய கூலி தொழிலாளர்களை அணி திரட்டுங்க தோழர்… நீங்க வலிமையாக மாறும் போது நடுத்தர வர்க்கம் தன்னால உங்க பின்னால் கதறிக்கிட்டு ஊட்ஒடி வரும்….

    • சின்னா ,மார்க்ஸ் அவர்கள் முதலாளித்துவத்தை , நிலபிரபுதுவதுடன் ஒப்பீடு செய்யும் போது என்ன கூறுகின்றார் என்று படித்து உணர்ந்து கொள்ளுங்க!

      வரலாற்று அரங்கில் முதலாளித்துவ வர்க்கம் மிகவும் புரட்சிகரமான பங்கு ஆற்றியிருக்கிறது.

      எங்கெல்லாம் முதலளித்துவ வர்க்கம் ஆதிக்க நிலை பெற்றதோ, அங்கெல்லாம் அது எல்லா பிரபுத்துவ உறவுகளுக்கும், தந்தைவழிச் சமுதாய உறவுகளுக்கும், கிராமாந்திரப் பாரம்பரிய உறவுகளுக்கும் முடிவு கட்டியது. மனிதனை ”இயற்க்கையாகவே மேலானேருக்கு” கீழ்படுத்தி கட்டிப் போட்ட பல்வேறு வகையான பிரபுத்துவ பந்தங்களையும் ஈவிரக்கமின்றி அறுத்தெறிந்துவிட்டு, மனிதனுக்கும் மனிதனுக்கும் அப்பட்டமான தன்னலத்தைத் தவிர, பரிவு உணர்ச்சியில்லா ”பணப் பட்டுவாட” வைத் தவிர வேறு ஒட்டுமில்லை உறவுமில்லை என்றாக்கிற்று. சமயத் துறை பக்திப் பரவசம், பேராண்மையின் வீராவேசம், சிறு மதியோரது உணர்ச்சிப் பசப்பு ஆகிய புனித பேரானந்தங்களை எல்லாம் தன்னலக் கணிப்பெனும் உறைபனிக் குளிர் நீரில் மூழ்க்கடித்துள்ளது. மனிதனது மாண்பினை பரிவர்த்தனை மதிப்பாய் மாற்றியிருக்கின்றது. சாசனங்களில் பிரகடனம் செய்யப்பட்ட விலக்கவோ துறக்கவோ முடியாத எண்ணிடங்கா சுதந்திரங்களுக்குப் பதிலாய், வெட்கங்கெட்ட வாணிபச் சுதந்திரமெனும் ஒரேயொரு சுதந்திரத்தை ஆசனத்தில் அமர்த்தி வைத்திருக்கிறது. சுருங்கச் சொல்வதெனில் சமயத் துறை பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது.

      இதுகாறும் போற்றிப் பாராட்டப்படும், பணிவுக்கும் பக்திக்குமுரியதாய் கருதப்பட்ட ஒவ்வொரு பணித்துறையும் முதலாளித்துவ வர்க்கம் மகிமை இழக்கச் செய்துள்ளது. மருத்துவரையும் வழக்கறிஞரையும் சமய குருவையும் கவிஞரையும் விஞ்ஞானியையும் அது தனது கூலியுழைப்பாளர்கள் ஆக்கிவிட்டது.

      குடும்பத்திடமிருந்து முதலாளித்துவ வர்க்கம் அதன் உணர்ச்சி நய முகத்திரையைக் கிழித்தெறிந்து, குடும்ப உறவை வெறும் காசு பண உறவாய் சிறுமையுறச் செய்து விட்டது.

      நன்றி கம்ம்யுநிடு கட்சி அறிக்கை நூல்….

      குறிப்பு: இது ஒப்பீடு தான்… உடனே மார்க்ஸ் அவர்கள் முத்லளிதுவ்த்தை தூக்கி பிடிக்கின்றார் என்று அவரிடம் சண்ண்டைக்கு போயிடாதீங்க சின்னா!

  10. ராஜ் அவர்களே கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக கடவுள் நம்பிக்கை உள்ள ஒருவரை “கடிக்க”வருகிறது என்றால்
    அது சிவன் கழுத்து பாம்பே என்றாலும் அடித்துக்கொல்வதுதானே மனிதம்.?இல்லை அவரை அவர் நம்பும் நமாநாராயணன் காப்பாற்றிக்கொள்வார் என கடவுள் நம்பிக்கையற்றவரானவர் விலகிச்செல்வது மனிதமா?அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கு என போராடுவதும் பார்ப்பனியத்துக்கெதிரான ஆலயத்தீண்டாமைக்கெதிரான அரசியல் போராட்டமே.

  11. சின்னா சகோவின் கருத்துக்களுக்கு மறுப்பு எனும் பெயரில் குமார் அவர்கள் வெறுப்பையும் அவதூறுகளையுமே பதிவீடுகிறார். ஆவணப்பட இயக்குனர் திவ்யா அவர்களை குறீப்பிடும் போது கக்கூஸ் திவ்யா என்பது சின்னாவை “ராமதாஸ்”என்பது இது போன்றவை மிகவும் கண்டிக்கத்தக்கது.சமூக நலன் சார்ந்து விவாதிக்கும் போது அதில் சமூக நலனே வெளிப்படல் வேண்டும்.நாம் என்ற அகந்தை கூடவே கூடாது.சின்னாவை ராமதாசோடு ஒப்பிட என்ன அடிப்படை உள்ளதூ குமாரிடம்?தலித் இளைஞர்கள் ஜீன்ஸ் போட்டு வன்னிய பெண்களை மயக்குகிறார்கள் என்ற ராமதாசின் சாதிவெறியையும் கபாலிக்குப்பையில் வரும் கோட்டுசூட்டு “வஜனத்தை” பேசுவதாலேயே ரசினி எனும் காரியக்கிறுக்கனை தூக்கிச்சுமக்கும் கேவலத்தை விமர்சிக்கும் சின்னாவையும் ஒரே தட்டில் வைத்துப்பார்க்கும் செயலை என்னவென்பது? காந்தியஅம்பேத்கராக எப்படி குமார் இருக்கமுடியும்?ரஜினி ஒரு காரீயக் கிறுக்க காந்திய(வியாதி)வாதியா இல்லையா?காந்தியின் கோமணமா அம்பேத்கரின் கோட்டா என்று வரும்போது காந்தியின் கோமணம்தான் ரசினியின் கோட்டாக மாறிவிடும் என்ற புரிதல் கூடவா இல்லை?rss காலிகள் கூடத்தான் அம்பேத்கர் அவர்களை பூஜிக்கும் அயோக்கியத்தனத்தை செய்கிறார்கள்.அதன் பின் உள்ள ஆபத்தான அரசியல்தான் கபாலியின் “மூலம்” என்பதை உணருங்கள்.படம் எடுத்தவர் தலித் என்பதனாலேயே எதையும் ஆதரீத்துவிடமுடீயாது புரியுங்கள்.இனீமேலும் கண்ணீயமாக தொடருங்கள் விவாதத்தை.மருத்துவர் அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் இயக்குனர் அமீரை பேசவிடாமல் தடுத்து அடாவடி செய்த இயக்குனர் ரஞ்சித்துதான் ஞாபகத்தில் வருகிறார்.”மகிழ்ச்சி”

    • நெப்போலியன், இங்கே அடாவடித்தனமும் , ஆர்ப்பாட்டமும் , அவதூரும் குழுவா சேர்த்து பண்ணிகிட்டு இருபது நீங்களும் , சின்னாவும், அனானியனும், அக்ககியும் தான்…. திவியாவை குறிபிட்ட சாதி ஆவண பட இயக்குனர் திவியா என்று தான் கூறியுள்ளேனே தவிர நீங்க பொய்யாக கூறுவது போன்று கக்கூஸ் திவ்யாஎன்று அழைத்து இல்ல…சின்னா வை சின்ன ராமதாஸ் என்று அழைக்க காரணம் அவர் இந்த கட்டுரையின் பின்னுட்டத்தில் இந்த கட்டுரைக்கு தொடர்பின்றி

      “””மு.துவத்தின் இலட்சனைகலான கோட்டு சூட்டு கார் பற்றி கபாலியில் நானும் போடுவண்டா நானும் போவண்டா என சொல்லி அதையே பிட்படுத்தபட்டவர் முன்னேற்றம் என குறுக்குவதட்கும்இதற்கும் என்ன வித்தியாசம், பார்ப்பன மற்றும் மு.துவத்தின் மக்களை உறியும் வழிகளில் கொஞ்சம் பங்கு கிடைத்ததை போலவே இவையெல்லாம். எனக்கென்னமோ அவர்கள் தாம் நினைத்த வழியிலேயே எப்போதும் இவர்களை செலுத்துவிக்க முடியும் என உள்ளுக்குள் நமட்டு சிரிப்பு சிரிப்பதாக படுகிறது. அண்மையில் இதற்கு வாழ்த்து தெரிவித்த ஆழ்வார்பேட்டை ஆண்டவர் உட்பட.””” என்று கூறுவது தான்…

      அவர் கருத்துப்படி பார்த்தல் தலித் மக்கள் கோட் சூட் போடகூடாது என்று சொல்ல வருகின்றார் என்பது கூட உமக்கு புரியவில்லையா? முற்போக்கா பேசி இவர் தலித் மக்களை மட்டம் தடுக்கின்றார். அந்த சாதிவெறி ராம்தாஸ் நேரடியாகவே தன் வெறியை காட்டுகின்றார்… இதுக்கு தான் என்னுடைய கேள்வியை எழுப்பினேன்…பின்வரும்மாறு….. அதுக்கு பதில் உங்க கிட்ட இருந்து இல்லையே!

      2.தலித் மக்கள் தங்கள் சமுக,பொருளாதார,கல்வி நிலை உயரும் போது பிறரை போன்ற அவர்கள் செய்யும் வேலைக்கு ஏற்ற கவுரமான உடையை அணிகிறார்கள்.. அப்படி தான் டாக்டர் அம்பேத்கரும் கோர்ட் ,சூட்டு அணிந்தார்..அதில் என்ன விதமான குற்றத்தை கண்டீர்கள்? அணியும் உடை எனக்கு கவுரவத்தையும், மரியாதையையும் கொடுக்குது என்றால் அப்படி அணிவதில் என்ன தவறு இருக்கு? நீங்க என்ன சொல்ல வரீங்க என்றால்….காந்தியை மாதிரியே சட்டப்போடாமல் அதன் மூலம் அவர் தலித் மக்களுக்கு கொடுக்கும் உள்ளார்ந்த விளக்கமான “நானும் சட்டப்போடல நீங்களும் போடாம இருபதில் தம்பு இல்ல” என்ற விளக்கத்தை ஏற்க சொல்லுவீர் போல?

      மோடிய கொண்டாடுவது, ரஜினிய பார்த்து புல்லரிப்பது இவை எல்லாம் வேற எங்கேயாவது நடக்கலாம்… அவற்றை என்னத்துக்கு என்னுடன் தொடர்பு படுத்தனும் நீர்?:

  12. //ஒப்பீட்டு அளவில் நிலபிரபுத்துவம் , முத்லளித்துவத்தை விட முற்போக்கானது என்று கூற வரீங்க நீங்க ..//
    தொடங்கிட்டிங்களா வழமையான திரித்தலை..ஆம் நீங்க கூறிய மு.துவம் ஆற்றிய புரட்சிகரமான பங்கு என்பது இதுதான் “சுருங்கச் சொல்வதெனில் சமயத் துறை பிரமைகளாலும் அரசியல் பிரமைகளாலும் திரையிட்டு மறைக்கப்பட்ட சுரண்டலுக்குப் பதிலாய், முதலாளித்துவ வர்க்கம் வெட்க உணர்ச்சியற்ற அம்மணமான, நேரடியான, மிருகத்தனமான சுரண்டலை நிலைநாட்டியிருக்கிறது” நீங்கள் வாந்திஎடுப்பதட்கு தேவையான வசனங்களை மட்டும் மேற்கோள் கட்டவேண்டாம். நேரடியான சுரண்டலே அதன் புரட்சிகர பங்கு. நீங்க தான் குமார் ‘ஒப்பீட்டளவில்’ ‘முற்போக்கானது’ என மார்க்சின் கருத்தை தவறாக புரிந்து வைத்துள்ளீர். வெறுமனே சில
    வசனத்தை மட்டும் படித்தால் முழு கருத்தும் துலங்காது.

    //அவர் கருத்துப்படி பார்த்தல் தலித் மக்கள் கோட் சூட் போடகூடாது என்று சொல்ல வருகின்றார் என்பது கூட உமக்கு புரியவில்லையா? முற்போக்கா பேசி இவர் தலித் மக்களை மட்டம் தடுக்கின்றார்.//
    உங்களுக்கு என்ன முயற்சி செய்தும் என்னை தலித் விரோதியாக கட்ட வேண்டிய அவசியம் என்ன?
    வெறுமனே நுனிப்புல் மேய்ந்தது போல் எனது கருத்தை ஆழமாக விளங்கி கொள்ளாமல் (அல்லது விளங்காத மாரி நடித்து) பேசுகிறீர். நான் என்ன கூறினேன்? கபாலி படத்தில் அடிநாதமே ‘வெறும் கோட்டு போடுவண்டடா கார்ல போவண்டா’ எனும் அதார் உதார் வைத்து மக்களை மு.துவம் ஏதோ வாய்ப்பளிப்பது போல உண்மையாந முற்போக்கு சக்திகளை அன்னியமக்குக்ம் வேலையையே செய்கிறது. இதற்கு படத்திலும் எக்கசக்க குறிப்புகள் உள்ளன, உதா – ரஜினி இறுதியில் கோபுர உச்சியில் அமர்வது, பங்குச்சந்தை விளையாட்டுகள், நண்டுக்கதை, நல்ல கேங்கு…என
    இதை ஆழமாக புரிந்து கொள்ளவும். அதை விடுத்து வெறுமனே கோட்டு சூடு போட்டால் சின்னாவுக்கு எரியுது என கீழாக யோசிக்க வேண்டாம். சரி உங்களுக்கு புரியும்படி சொல்வதென்றால்
    கபாலி போல் எல்லாரும் கோட்டு சூட்டு போடவோ காரில் போகவோ கபாலி மறைமுகமாக போக சொல்லும் வழி அனுமதிக்காது, அது ஒரு bait , அவ்ளோ தாங்க. அதாவது தலித் மக்களுக்கு சகல ‘வாய்ப்புகளும்’ , இருப்பதாக ஒரு மாயை காட்டபடுகிறது.

    இந்த கபாலி மேட்டர் கூட மணியாட்டும் பிரச்சினை பற்றிய என் கருத்தில் உதாரணமாக குறிப்பிட்டேன், அதற்கு செங்கதிர்செல்வன்
    “சின்னா அவர்கள் சொல்லுகிற சமூக நிலையை அடைவதற்கு ஒடுக்கப்படும் மக்களின் மீதான இம்மாதிரியான உரிமைமறுப்புகளுக்கு எதிராகப் போராடி மக்களை விடுவிக்க வேண்டும் என்பது முன் நிபந்தனையாக உள்ளது” என என்ன கருத்து செறிவோடு மறுப்புரைத்துள்ளார், ஆம் நான் ஒத்து கொள்கிறேன் இந்த உரிமைகளை முதலில் பெறத்தான் வேண்டும்.

    s.s கார்த்திகேயன்,
    //ஆனால் அவரின் கவலை அவர்களின் சமூக விடுதலையைப் பற்றிதான் என எண்ணுகிறேன்.//

    எப்படி முதலில் கருத்துகளை சரியாக புரிந்து கொண்டு ஆரோக்கியமாக மறுமொழி இடுவது என்பதை அவர்களை பார்த்து பழகவும். வெறுமனே தலித் விரோதி போர்னோ ஆதரவாளர் அது இது என வாந்தி எடுக்க வேண்டாம், இனிமே என்னால் கழுவ முடியாது.

    • சின்னாவின் குதர்க்கமான மேல் உள்ள பின்னுட்டத்துக்கு மார்சியம் அறிந்த அவரின் கூட்டாளிகள் யாரும் பதில் சொல்ல வரமாட்டாங்க என்று நினைகின்றேன்..அக்காகி மற்றும் அனானியன் ஏன் வினவு கூட மறுப்பு தெரிவிக்காது என்ற நிலையில் நானே மறுப்பு தெரிவித்து எடுத்த வேண்டியதாகிறது… சரி நாம் நம்ம கடமையை செய்வோம்… மனசாட்சி உள்ள கம்ம்யுநிடுகள் இந்த விவாதத்துக்கு வராங்களா என்றும் பார்க்கலாம்!

      முதல் விஷயம் இங்கே மார்க்ஸ் அவர்கள் செய்தது ஒப்பீடு தானே தவிர அது சிறந்தது அல்லது இது சிறந்தது என்ற முடிவுக்கு எல்லாம் அவர் வரவே இல்ல… அடுத்த அடுத்த கட்ட சமுகங்கலான பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ சமுகங்களின் தொடர்சியை பற்றி பேசும் மார்க்ஸ் அவர்கள் நிலபிரபுத்துவ சமுகத்தை விட எப்படி எல்லாம் முதலாளித்துவம் சிறந்தது அது நிலபிரபுத்துவ சமுகத்தின் பிற்போக்கு தனங்களை எப்படி எல்லாம் எதனை எல்லாம் நீக்கி யுள்ளது என்று கூறியுள்ளளார்… அதே நேரத்தில் அந்த முதலாளித்துவ சமுகம் ஏன் உடைத்து எறியப்ப்டனும் என்றும் அடுத்த அடுத்த கட்டுரைகளில் விளக்கமாகவே கூறியுள்ளார்.. நான் முன்பே கூறியது போல இப்ப சின்னா அவர்கள் மார்சுடன் அவர் எழுதிய கம்ம்யுநிடு கட்சி அறிக்கை நூலுடன் சண்டையிட்டுகொண்டு உள்ளார்…

      முதலில் சின்னா ஒன்றை கத்துக்கனும்…. விவாதிக்கும் போது தொடர்சி இருக்கனும் என்றால் அந்த பின்னுட்டங்க்களின் கீழ் தான் பேசணுமே தவிர தனியா பின்னுட்டம் போடுவது என்பது படிப்வர்களை குழப்பும் வேலை தானே ?

      • //அக்காகி மற்றும் அனானியன் ஏன் வினவு கூட மறுப்பு தெரிவிக்காது///

        ஐயா,

        வினவில் ஒருவர் தெரிவிக்கும் கருத்துக்கு அவரே பொறுப்பு. அந்தக் கருத்து தவறாக இருப்பினும் அவரே பொறுப்பு! தவறானதை மறுக்கவில்லை என்பதற்காக வினவு அதை ஏற்றுக்கொள்கிறது என்றோ மற்ற தோழர்கள் அக்கருத்துடன் உடன்படுகிறார்கள் என்றோ நீங்கள் மீண்டும் முன் அனுமானிக்கிறீர்கள். எல்லாவற்றிற்கும் எல்லோரும் எதாவது சொல்லியே ஆகவேண்டும் என்று நிர்பந்திக்கிறீர்கள்.

        நீங்கள் சொல்லும் கருத்துக்களை மறுத்து உங்களுடன் விவாதிக்காத காரணத்தால் மற்றவர் அனைவரும் அவற்றுடன் உடன்படுகிறார்கள் என்று பொருள் கொள்ள முடியுமா? நான் கூட நீங்கள் மற்றவருடன் புரியும் விவாதத்தில் இடையில் குறுக்கிட்டதற்கு காரணம் உங்களுடைய அவதூறு, பொய், முன்அனுமானம், முன்முடிவுகளுக்காக தான். உங்களுடன் விவாதிக்காத கருத்துக்கள் குறுக்கிடாதவை எல்லாவற்றுடனும் நான் உடன்படுகிறேன் என்று பொருள் இல்லை.

        மற்றவர்களை கருத்து சொல்ல கோரிக்கை வைக்கலாம், தவறில்லை. ஆனால் குற்றம் சாட்டக்கூடாது.

        நான் இங்கு பெரிய சூத்திரத்தை எழுதிவிடவில்லை.. இதற்கும் மாங்கு மாங்கு என்று பதில் போட்டு நேரத்தையும், ஆற்றலையும் வீணாக்காதீர்கள். புரிதலுக்கு நன்றி.

        (குறிப்பு – 2011-ம் ஆண்டிலிருந்து எனக்கு ஒரே பொம்மை தான் வருகிறது.)

        • அப்படி என்றால் சின்னாவின் தவறான, திரிபுவாத மார்சிய கருத்தாக்கங்களுக்கு மறுப்பு தெரிவிப்பது உங்களின் கடமை அல்ல என்ற எளிய முடிவுக்கு தான் நான் வரவேண்டியுள்ளது அக்காகி.. அவரின் திரிபுவாத மார்சிய கருதக்கங்க்களை நானே எதிர்கொள்கின்றேன்… நன்றி…

          • உங்களைப் போன்று நான் மார்க்சிய மேதாவி அல்ல என்றும் பொருள் கொள்ளலாம்.
            பதிலளிக்க வேண்டியது அவருக்கு மட்டுமல்ல உங்களுக்கும் சேர்த்துதான்… வேலைப் பளு மற்றும் உங்களுக்கு பதிலளிக்கும் அயற்சி போன்றவற்றையும் காரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

            • அக்காகி, சின்னாவுக்கும் சரி ,எனக்கு சரி நீங்கள் உங்களுக்கு நேரமிருக்கும்போது, உங்களுக்கு பதில் அளிக்க அயற்சியிசி இன்றி ஆர்வமிருக்கும்போது தயங்காமல் பதில் அளியுங்கள்… மார்சியம்-லெனினியம் என்பது மேதாவிளாசத்துக்குக்கான தத்துவம் அல்லவென்றும் அது மேதாவிகளுக்கான தத்துவம் அல்லவென்றும் ,ஆனால் அது தொழிலாலகளின் வர்க்கபோருக்கான சிறந்த வழிகாட்டி நெறிமுறை என்பதனையும் தாங்கள் அறிந்தே இருப்பீர்கள் என்று உணருகின்றேன். இதன் அடிபடையில் உங்கள் முந்தைய கருத்துகளை மறுபரிசிலனை செய்வீர்கள் அல்லவா? நன்றி…

    • சின்னா, கோர்ட் சூட் போடும் வசனத்தை எழுதனவர் இயக்குனர் ரஞ்சித் அம்பேத்கரை நினைவில் வைத்து தான் அந்த வசனத்தை எழுதியுள்ளாரே தவிர ரஜினியை நினைவில் வைத்து அல்ல… தலித் மக்கள் நல்ல உடை அணிவது பற்றிய நான் பின்னுட்டம் 11.1ல் நான் எழ்ப்பிய என்னுடைய என்னுடைய கேள்விகள் இன்னும் அப்படியே தான் இருக்கு…! முடிந்தால் உமக்கு மனசாட்சி இருந்தால் அவற்றுக்கு பதில் அளிக்கவும். நேரடியாக பதில் சொன்னால் அந்த விசத்தில் விவாதம் முடியும் அல்லவா? அடுத்ததாக உங்க முட்டாள் தனத்தை மற்றவர்கள் மென்மையாக கையாள்கின்றார்கள் என்பதர்க்கா நானும் அப்படியே மென்மையாக கையாளவேண்டும் என்று எந்த தேவையும் என்க்கு இல்ல…//எப்படி முதலில் கருத்துகளை சரியாக புரிந்து கொ…………….//

    • திருத்தல்வாதத்தின் உச்சத்தில் உள்ள உங்களுக்கு நான் சொல்லும் கருத்துக்கள் எப்படி விளங்கும் சினன்னா? முதலில் முதலாளித்துவ சமுகம் அமைந்தால் மட்டுமே பாட்டாளிவர்க்கம் என்ற வர்க்கம் சமுகத்தில் உருவாகும் அது உருவானால் தான் அந்த பாட்டாளிவர்க்கம் முதலாளித்துவத்துக்கு எதிராக வர்க்க போரை நிகழ்த்த இயலும் என்ற அடிப்டையாவது தெரிந்து தான் கீழ் உள்ள கருத்தை வினவில் பகிர்ந்தீர்க்ளால இல்ல சும்மா எனக்கு எதிராக பேச வேண்டி அடிச்சி விட்டீர்களா சின்னா?

      நிலபிரபுத்துவ சமுகத்தை அடித்து நொறுக்க வேணும் என்றால் அது விவசாய கூலி தொழிலாளர்களால் மட்டும் ஆகின்ற காரியமா சொல்லுக…? மார்க்ஸ் என்ன சொல்றார் என்றால் “”இந்த முதலாளித்துவ வர்க்க சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் -முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய்- பிளவுண்டு வருகின்றது.”” என்று சொல்கின்றார்.

      நீங்க என்ன சொல்கிண்றீகள் என்றால் நிலபிரபுதுவதிலாவது ஒடுக்குபவர் ஒடுக்கபடுபவர் என இரண்டு வர்க்கங்களே இருந்ததே, புரட்சிகூட எளிதாயிருந்திருக்குமே? என்று குதர்க்கமாக பேசுறீங்க? என்னமோ போங்க இம்மா நாளும் எனக்கு எதிரா பேசிகிட்டு இருந்தவர் இப்ப இருந்து மார்க்ஸ் அவர்களின் கொளகைகளையே சிறுமை படுத்தி அவருக்கு நேர் எதிராக பேசிக்கிட்டு இருக்கீங்க…

      குறிப்பு: வினவு, இந்த விவாதத்தியவது கருத்து கத்தரிப்புகள் ஏதும் இல்லாம சின்னாவுடன் முழுமையாக நடத்த என்னைய விடுவிங்க என்று நம்புகிறேன்…

      //இல்ல தெரியாம கேக்கிறேன் நிலபிரபுதுவதிலாவது ஒடுக்குபவர் ஒடுக்கபடுபவர் என இரண்டு வர்க்கங்களே இருந்ததே, புரட்சிகூட எளிதாயிருந்திருக்குமே? அனால் உங்கள் ‘ஒப்பீட்டளவில்’ முற்போக்கான மு.துவம் இன்று நடுத்தரவர்க்கம் என்றொரு மகா சுயநல buffer ஐ உருவாக்கிக்கொண்டு கீழ்தட்டு வர்க்கத்தை அதிகமாக சுரண்டுகிறதே? ஒப்பிட்டால் எது அதிக விஷம்? உங்கள் அடிப்படை புரிதலே தவறாக உள்ளதே, //

  13. குமார் அவர்களே சாதிமறுப்பு திருமணம் என்ற அரசியல் போராட்டத்தை சாதி ஒழிப்பு நடவடிக்கையை சமூக கடமையை “பீற்றிக்கொள்ளுதல்”என்ற மிக “நாகரீகமான”வார்த்தையின் மூலமாக மேற்சொன்ன திருமணத்தையும் சாதி ஒழிப்பிற்காக கடும் சவால்களை எதிர்கொண்டு களத்தில் போராடிவரும் புரட்சிகர இயக்கங்கள் கம்யூனிச இயக்கந்கள் அனைத்து முற்போக்கு அம்பேத்கர் பெரியார் ஜனநாயக உணர்வாளர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்தமானவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியிருக்கீறீர்கள்.சினிமா என்ற அறீவியல் கலையின் மூலமாக சமூக நலன்களுக்கான அனைத்து விஷயங்களையும் நாம் சிறப்பாக பயன்படுத்த முடியும்.அது மொத்தமாக மக்களின் கட்டுப்பாட்டில் வரும்பொழுது.தற்போதுள்ள சூழலிலும் வழக்குஎண் விசாரணை வானம் போன்ற திரைப்படங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.ஒரு இயக்குனராக பா.ரஞ்சித் அவர்களும் சாதி ஒழிப்பு உள்ளிட்ட சமூக பிரச்சினைகளை திரைப்படமாக தரட்டுமே என்ன தடை?அதை விடுத்து “காவி”ய சிந்தையாளரான ரசினியின் வாயால் கோட்டு சூட்டு வஜனம் பேச வைத்ததையே பெருமையாக பிம்பமாக்கினால் அது அந்த காந்தி சீடரின் சம்பளத்தை இன்னும் ஒரு சில கோடிகளாக உயர்ந்து போவதில்தானை போய்நிற்கும்.தொடர்ந்து இட்லியில் கம்யூனிசம் பேசிய வருங்கால முதல்வர் தொ(த)ளபதிக்கும் ரஞ்சித் அவர்கள்” புரட்சி”கர வஜனம் எழுத பேனா பிடிக்க வேண்டியிருக்கும்.முடிந்தால் தலித் விடுதலை அரசியலை ரஞ்சித் அவர்கள் காலாவிடமும் அவர் வாலான திடீர் தளபதியிடமும் பேசிப்பார்க்கச் சொல்லுங்களேன். பின்பு பாருங்கள் கபாலி எப்படீ காந்தியாக மாறுவார் என்று. மக்களை நேசிக்கும் அதன் வழி இயங்கும் அனைத்து கலையாளர்களையும் நாம் ஆதரிப்போம்.மன்னித்துக்கொள்ளுங்கள் குமார்.வரவிருக்கும் காலா படத்திற்கு பேனர் வைக்கும் தகுதியேல்லாம் எமக்கில்லை.

    • நெப்போலியன் நீங்கஇருவிதமான பித்தலாட்டங்களை செய்துகிட்டு இருக்கீங்க உங்களின் மேல் உள்ள பின்னுட்டத்தில்….

      முதலாவது பித்தலாட்டம் பின்னுட்டங்களை தொடர்சி இல்லாமல் செய்வது…உங்க பின்னுட்டம் 11 க்கு நான் 11.1ல் பதில் கொடுத்து இருக்கேன்.. அதுக்கு நீங்க 11.1.1 ல் பதில் அளிக்காமல் மொட்டையா பின்னுட்டம் 13 ல் பதில் அளித்து இருக்கீங்க… படிக்கும் வினவு வாசகர்களுக்கு தொடர்சி கிடைக்க கூடாது விவாதம்புரியக்கூடாது என்ற நோக்கத்துடன் நீங்க செய்யும் தவறான வேலை இது….

      அடுத்தது நீங்க செய்து உள்ள பித்தலாட்டம், என்னவென்றால் என்னுடைய பின்ன்ட்டத்தை முழுமையா படிக்காமல் குத்துமதிப்பாக பேசிகிட்டு இருக்கீங்க… என்னுடைய பின்னுட்டம் 7.1 ல் என்ன சொல்லியிருக்கேன்…?

      “சாதிய அடக்குமுறை என்பது தடுக்கபடவேண்டும் என்றால் அது தனித்து விவிமு அமைப்பால் மட்டும் இயலாது..முற்போக்கு சகதிகள் அனைவரும் சேர்த்து குரல் கொடுக்கணும்… தனித்து நாங்க சாதிச்சிட்டோம் என்று பீற்றிகொள்வதில் என்ன பயன் இருக்கு சொல்லுங்க? ” என்று தானே?

      இதில் முற்போக்கு சக்திகளை நான் எங்கே கொச்சைப்படுத்தியிருக்கேன்? பதில் சொல்லுங்க… முற்போக்கு சக்திகளுடன் விவிமு இணைந்து செயல்படனும் என்று பொருள் வரும் படி நான் கூறினால் கூட அது பெரியாரிய மற்றும் அம்பேத்காரிய இயக்கங்களை இழிவுசெய்வதாக நீங்க என் மீது குற்றம் சாட்டுவது உள்நோக்கம் உடையது மட்டும் அல்ல முட்டாள் தனமானதும் கூட…ஒரு வேலை கவன குறைவாக மேல் உள்ள பின்னுட்டத்தை எழுதி இருந்தால் இனி கவனமாக பின்னுட்டம் எழுதுங்க…

      அடுத்து ரஞ்சித் எழுதிய வசனம் அம்பேத்காரை மனதில் வைத்து என்று தெளிவாகவே நான் விளக்கிய பின்னும் பத்தி பதியா நீங்க இங்க வசனம் எழுதுவது யாருக்காக? வேனடுமானால் உங்க ஊரில் உள்ள ரஜினியின் விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு வேண்டுமானால் போய் தனியாக வகுப்பு எடுத்து அவிங்கள திருத்துங்க…

      அப்புறம் நான் திவியாவை கக்கூஸ் திவியா என்று அழைத்ததாக அவதூரூ செய்து இருந்தீங்க.. அதுக்கும் மறுப்பு தெரிவித்து இருந்தேன்…உங்க கிட்ட இருந்து பதில் தான் இல்ல…

    • நெப்போலியன் அடுத்து இந்த வசனம் விசயத்தில் நேரடியாகவே நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.. என்ன வென்றால்…………”அது சரி ரஞ்சித் படத்தில் நடிக்கும் ஒரு கேரக்டர் ரஞ்சித் எழுதிய வசனத்தை பேசுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை? யார் மீது உங்களுக்கு பயம்? ரஞ்சித் மீதா அல்லது ரஞ்சித் எழுதிய வசனத்தை பேசிய அந்த கேரக்டர் மீதா?” என்று?

      பதிலையே அளிக்காமல் நான் கூறும் கருத்துக்கும்,கேள்விக்கும் தொடர்பின்றி மொக்க போட்டால் எப்படிங்க.. உங்க மொக்க சகிக்கலைங்க…கபாலி படம் தொடர்பாக தினமணி நாளிதழ் ரஞ்சித்தை விமர்சிப்பதாக நினைத்துகொண்டு அவரை கொச்சை செய்த செய்தி உங்களுக்கு தெரிந்து இருக்கும் என்று நினைகின்றேன்..அதற்கும் ரஞ்சித் மீதான உங்க விமர்சனத்துக்கும் என்ன ஆறு வித்தியாசம் என்று கூறமுடியுமா?

      அடுத்ததாக வானம் படத்தில் நடித்த அந்த வெண்ண சிம்பு அப்புறமாக பாடிய சமுக விரோத பெண்கள் விரோத பீப் சாங்க கூட நீங்க ரசிக்கின்ற மனநிலையில் இருப்பீரோ என்று நான் சந்தேகப்பட வேண்டியுள்ளது.. ! கபாளியில் ரஞ்சித் எழுதிய வசனங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படி நீங்க கூறினால் தலித் விரோதியாக ஆகிடுவீங்க என்ற காரணத்தால் உங்க கருத்துகளை மறைத்துகொண்டு அத பேசிய ரஜினி ஹிந்துத்துவா என்பதால ரஜினி மேல் குற்றம் சுமத்தி பேசிகிட்டு இருக்கீங்க…! அதே அளவு கோல் படி(பீப் சிம்பு அதில் நடித்ததால்) ஹிந்துத்துவாவை எதிர்க்கும் வானம் படத்தையும் தவறான படம் என்று சொல்லிடுவீங்களா ? சொல்ல முடியுமா?

      யோசித்து பதில் சொல்லுங்க என்ன?

  14. சின்னா சகோ,ஆதிகால பொதுஉடமைச்சமுதாயம் மன்னராட்சி
    நிலபிரபுத்துவம் முதலாளித்துவம் சோசலிசம் என்ற ஒவ்வொரு சமுதாய அமைப்பும் முந்தைய சமுதாய அமைப்பின் காரணிகளை உள்வாங்கிக்கொண்டும் அதன் சாதகமான அம்சங்களை பயன்படுத்திக்கொண்டும் புதிய சமுதாய அமைப்பை ஒரு மக்கள் புரட்சியின் மூலமாக அமைத்துக்கொள்ளும் என்பதாக நான் புரிந்திருக்கிறேன்.இது குறித்து மிகவும் ஆழமாக நான் கற்றுணர வேண்டிய அவசியம் உள்ளதூ.சமுதாய மாற்றம் குறித்த இதன் அடிப்படையில்தான் நிலப்பிரபுத்துவத்தைக்காட்டிலும் முதலாளித்துவம் சிறந்தது எனும் பொருளில் குமார் அவர்கள் விவாதித்து வருகிறார் என்று எனது புரிதலின் படி கருதுகிறேன்.முதலாளித்துவத்துனுடைய சில சொற்ப அளவிலான முன்னேற்றக்கூறுகளை “சிறந்தது”எனப்பொருள்படும்படி அவரின் விவாதம் தொடர்வதால் நீங்கள் சமூக அமைப்புகளுக்கிடையிலான முரண்பாடுகளை பட்டியலிட்டு முதலாளித்துவம் ஆக பயங்கரமானது என்ற அடிப்படையில் விவாதித்து வருகிறீர்கள் என்றே எண்ணுகின்றேன்.முடிந்தவரை என் புரீதலுக்கேற்ப உங்களுக்கு தெரிவிக்க முயன்றுள்ளேன்.மற்றபடி கும்மார் அவர்கள் கபாலி கோட்டு சூட்டு பற்றி சிறப்பான வாக்குமூலமே தந்துவிட்டார்.அதாவது ரஞ்சித் அவர்கள் டாக்டர்
    அம்ப்பேத்கர் அவர்களை மனதில் வைத்தே அந்த வஜனம் எழுதினாராம்.இதை விட அண்ணலை சிறூமைப்படுத்த யாராலும் முடியாதூ.படத்தில் ரசினி “ஜி” ஒரு ரெளடீ என்பதை குமார் அவர்களுக்கு நினைவூட்டுவோம்.

    • நெப்போலியன் சார், இங்கே நான் ஒன்றும் முதலாளித்துவ சமுகத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு இல்ல…தோழர் மார்க்ஸ் அவர்களின் நூலான கம்யு னிஸ்டு கட்சி அறிக்கையை அடிப்படையாக வைத்துகொண்டு அவர் செய்த ஒப்பாய்வைதான் (நிலபுரபுதுவம் மற்றும் முதலாளித்துவ ஒப்பாய்வு) மேற்கோள் காட்டி பேசிகிட்டு இருக்கேன்.மார்க்ஸ் அவர்கள் சமுதாயத்தின் வளர்சிகட்டங்க்களில் ஏன் நிலபிரபுத்துவத்தை விட முதலாளித்துவம் மேம்பட்டது என்பதற்கு பல்வேறு காரணிகளை மேற்கோள் காட்டி தான் அந்த நூலில் பேசியுள்ளார். அந்த நூலில் அவரே அடுத்த கட்டுரைகளில் அதே முதலாளித்துவம் ஏன் உடைத்து எறியப்ப்டனும் என்றும் விளக்கமாகவே பேசியுள்ளார்.அதனையும் என்னுடைய பின்னுட்டங்களில்(12.1) மேற்கோள் காட்டியே பேசியிருக்கேன்.

      இவ்வளவு தெளிவாக நான் பேசிய பின்பும் நீங்க “””முதலாளித்துவத்துனுடைய சில சொற்ப அளவிலான முன்னேற்றக்கூறுகளை “சிறந்தது”எனப்பொருள்படும்படி அவரின் விவாதம் தொடர்வதால் “”” என்று கூறுவது முற்றிலும் மோசடியான வாதம் என்றே ஆணித்தரமாக கருதுகின்றேன். பதில் வருமா உங்களிடம் இருந்து….

      அடுத்து அந்த வசனத்தை ரசினி “ஜி” ஒரு ரெளடீயா இருந்து பேசுவதால் அது அம்பேத்கரை சிருமைப்டுத்துவதாக கூருகிண்றீகள்…சரி நேரடியாகவே விவாதிப்போம். ஒரு திரைபடத்தில் வரும் ஒரு கேரக்டர் அதன் வளர்சி போக்கில் (நேர்மறையான அல்லது எதிர்மறையான)மாற்றங்களை பெற்றுகொண்டே வரும் வரனும் என்பது தான் திரைகதை இலக்கண மொழி…அதன் அடிப்டையில் பார்த்தோம் என்றால் முதலில் தோட்டதொழிலாளர்களுக்காக பேசும் அந்த கபாலி கேரக்டரில் அது போன்ற கோர்ட் சூட் வசனங்களை பேசுகின்றது அல்லவா? அதில் என்ன தவறு இருக்கு சொல்லுங்க? அதற்கு பின் அந்த படத்தில் அந்த கேரக்டர் தன்னையும் தன்னை சார்தவ்ர்களையும் பாதுகாத்துக்கொள்ள ரவுடியாக மாற்றபடுகிறது என்பது எதிர்மறையான திரைகதை மாற்றம் தான்.. அப்ப கூட அது முதலாளித்துவத்தின் சுரண்டல்களால் முழக்கி திளைக்கும் முதலாளிகளுக்கு எதிராக தானே அது போன்ற வசங்களை பேசுது…? அந்த வசங்களை மலேசிய சமுகத்தில் வாழம் கபாலி என்ற கேரக்டர் பேசுது என்றால் அது ஒரு தமிழகதுக்கான குறியீடு தான்.. இங்கே சாதிவெறி ராம்தாஸ் பேசும் “தலித் இளைஞர்கள் ஜீஸ் பேன்ட் போடறாங்க…, கூலிங் கிளாஸ் போடறாங்க” வசங்களை கண்டு ரசித்து இருப்பீங்க என்றே நினைகின்றேன்.அத்தகைய சாதிவெறி வசனங்களுக்கு எதிராக ரஞ்சத் போன்ற தலித் இளைஞர்கள் பதில் அடி கொடுத்து தான் ஆகனும். அதில் ஒன்றும் தவறு இல்ல…

      மேலும் திண்டிவனத்தை சேர்ந்த சாதிவெறி ராமதாஸ் தலித் மக்களுக்கு எதிராக உடை விசயத்தில் பேசும் போது சினிமாவில் வரும் ஒரு கேரக்டர் முலமாக அதே திண்டிவனத்தை சேர்ந்த தலித் இளைஞ்சன் தன் சினிமா மூலமாக எதிர் தாக்குதல் கொடுக்கும் போது உங்களுக்கும் வினவு போன்றகம்யுனிச அமைப்புகளுக்கும் அது சாதகமான விஷயம் தான். ஆனாலும் புரிதலில் உள்ள குறைபாடு காரணமாக தான் நீங்க எல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுத்துகிட்டு ரஞ்சித்த்துக்கு எதிராக பேசிக்கிட்டு இருக்கீங்க….!

      தேவை பட்டால் வானம் படத்தில் வரும் முதன்மை கேரக்டர் எப்படி முதலில் இருந்து இறுதியில் எப்படி மாறியது என்றும் விவாதிக்லாம்..

      //சமுதாய மாற்றம் குறித்த இதன் அடிப்படையில்தான் நிலப்பிரபுத்துவத்தைக்காட்டிலும் முதலாளித்துவம் சிறந்தது எனும் பொருளில் குமார் அவர்கள் விவாதித்து வருகிறார் என்று எனது புரிதலின் படி கருதுகிறேன்.//

  15. குமார் அவர்களே என்னுடைய முன் பதிவுகளிலேயே சமுதாய மாற்றம் குறித்த உங்கள் பார்வை சரிதான் என்று சமுதாய அமைப்பின் மாற்றம் குறித்து என் புரிதலின் அடிப்படையில் ஏற்கனவே உங்களுக்கு பதில் அளித்துள்ளேன்.சின்னா அவர்கள் இதன் அடிப்படையில் விவாதித்துக் கொண்டுள்ளாரா அல்லது என் புரிதலில் தவறா என்ற அடிப்படையில் சின்னா சகோ அவர்களுக்காகவே என் முந்தைய பதிவு.உங்களுக்கில்லை.நாம் விவாதித்து வருவது கபாலியில் நீங்கள் கவிழ்ந்து போனதைப்பற்றித்தான்.திண்டிவனம் ராமதாசையும் தினமணி வைத்தி “மாமா”வையும் எதிர்கொண்டு முறியடிக்கத் தேவையானவை நேர்மயான சமரசமில்லாத அரசியல் போராட்டங்கள்தான்.இதை வெளிப்படுத்தும் விதமாக சினிமா உள்ளிட்ட கலை வடிவங்களையும் பயன் படுத்திக்கொள்ளலாம்.இதன் அடிப்படையில் கபாலி திரைப்படம் சமூக நலன் சார்ந்து என்ன கருத்துக்களை பதிவு செய்துள்ளது?.நான் இயக்குனரான ரஞ்சித் அவர்களை தொடர்ந்து விமர்சிப்பது ஒரு கலைஞனாக அவர் எடுத்த திரைப்படங்கள் மூலமாக அப்படி என்ன சமூக விடுதலைக்கான கருத்துக்களை பதிவூ செய்துள்ளார்? என்ற இதன் அடிப்படையில்தான்.வழமையான உங்களின் அவதூறான அர்த்தத்தில் அல்ல.தினமணீயின் சமூக விரோத செயல்களையும் ரஞ்சித் அவர்களை விமர்சித்த பார்ப்பன கண்ணோட்டத்தையும் நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.கபாலி ரசினி “ஜி” நேரிலோ அல்லது கால் மேல் கால் போட்டோ தினமணி மாமாவைக் கண்டீத்தாரா என எனக்குத் தெரியவில்லை.நிஜத்தில் களத்தில் தன்னலம் பாராமல் சாதிஒழிப்பு உள்ளிட்ட சமூக நலன்களுக்காக உழைத்துக் கொண்டீருக்கும் சமூகப் போராளீகளான தன்னலமற்ற போராளிகளுக்கு துணை நிற்போம்.இதன் திசை வழி இயங்கும் அனைத்து கலை வடிவ போராளிகளையும் ஆதரிப்போம்.அப்படி இயங்கும்படியான அனைத்துூ கலை வடிவங்களும் மக்கள் வசம் வர போராடுவோம்.குமார் அவர்களோடு மீண்டும் விவாதிக்க காலா எனும் “காவியம்” வரும் வரும்வரை காத்திருப்போம்.நன்றீ குமாருக்கு.

    • சாதிவெறி ராமதாஸ் ஒரு அரசியல் வியாதியாக ,சாதிகட்சி தலைவனாக இருந்து “தலித் இளைஞர்கள் ஜீஸ் பேன்ட் போடறாங்க…, கூலிங் கிளாஸ் போடறாங்க” என்று ஈனத்தனமாக குரல் கொடுக்கும்போது அதுக்கு எதிராக ஒரு திரைக்கலைஞ்னாக ரஞ்சித் ஆமாண்டா அப்படி தான் கோட் சூட் போடுவோம் என்று அவன் படத்தின் மூலமாக அவனின் வசனம் மூலமாக குரல் கொடுப்பதில் உங்களுக்கு என்ன பிரச்சனை நெப்போலியன்? அதில் என்ன தவறு இருக்கு நெப்போலியன்? நீங்க ரஞ்சித்தை இந்த உடை வசனம் விசயத்தில் விமர்சிப்பது கூட அதே தினமணி மாமா பார்பன வகையறாக்கள் விமர்சிப்பது போன்று தான்! என்ன நீங்க உங்களை முற்போக்கா காட்டிக்கிட்டு முற்போக்கு முகமூடிக்குள்ள இருந்து கிட்டு ரஞ்சித்தை குற்றம் சொல்றீங்க… அவிங்க-தினமணி மாமா நேரடியாகவே எந்த வித முகமூடியும் இல்லமால் ரஞ்சித்தை அசிங்க படுத்த நினைகின்றார்… அவ்வளவு தான் வித்தியாசம்… ஆறு வித்த்யாசம் எல்லாம் கூட இல்ல… இது மட்டும் தான் அதாங்க முகமூடி மட்டும் தான் வித்தியாசம்…

      என்னுடைய பல கேள்விகளை கண்டுகாமல் கடந்து செல்வது தான் விவாத தர்மமா நெப்போலியன்? மீண்டும் பதிவு செய்கின்றேன் என் கேள்விகளை….

      1.மேலும் திண்டிவனத்தை சேர்ந்த சாதிவெறி ராமதாஸ் தலித் மக்களுக்கு எதிராக உடை விசயத்தில் பேசும் போது சினிமாவில் வரும் ஒரு கேரக்டர் முலமாக அதே திண்டிவனத்தை சேர்ந்த தலித் இளைஞ்சன் தன் சினிமா மூலமாக எதிர் தாக்குதல் கொடுக்கும் போது உங்களுக்கும் வினவு போன்றகம்யுனிச அமைப்புகளுக்கும் அது சாதகமான விஷயம் தான். ஆனாலும் புரிதலில் உள்ள குறைபாடு காரணமாக தான் நீங்க எல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுத்துகிட்டு ரஞ்சித்த்துக்கு எதிராக பேசிக்கிட்டு இருக்கீங்க….! இதுக்கு என்ன பதில் உங்க கிட்ட இருந்து?

      ௨.கபாளியில் ரஞ்சித் எழுதிய வசனங்கள் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அப்படி நீங்க கூறினால் தலித் விரோதியாக ஆகிடுவீங்க என்ற காரணத்தால் உங்க கருத்துகளை மறைத்துகொண்டு அத பேசிய ரஜினி ஹிந்துத்துவா என்பதால ரஜினி மேல் குற்றம் சுமத்தி பேசிகிட்டு இருக்கீங்க…! அதே அளவு கோல் படி(பீப் சிம்பு அதில் நடித்ததால்) ஹிந்துத்துவாவை எதிர்க்கும் வானம் படத்தையும் தவறான படம் என்று சொல்லிடுவீங்களா ? சொல்ல முடியுமா?

      3.முதலாவது பித்தலாட்டம் பின்னுட்டங்களை தொடர்சி இல்லாமல் செய்வது…உங்க பின்னுட்டம் 11 க்கு நான் 11.1ல் பதில் கொடுத்து இருக்கேன்.. அதுக்கு நீங்க 11.1.1 ல் பதில் அளிக்காமல் மொட்டையா பின்னுட்டம் 13 ல் பதில் அளித்து இருக்கீங்க… படிக்கும் வினவு வாசகர்களுக்கு தொடர்சி கிடைக்க கூடாது விவாதம்புரியக்கூடாது என்ற நோக்கத்துடன் நீங்க செய்யும் தவறான வேலை தானே இது?

      4.முற்போக்கு சக்திகளை நான் எங்கே கொச்சைப்படுத்தியிருக்கேன்? பதில் சொல்லுங்க… முற்போக்கு சக்திகளுடன் விவிமு இணைந்து செயல்படனும் என்று பொருள் வரும் படி நான் கூறினால் கூட அது பெரியாரிய மற்றும் அம்பேத்காரிய இயக்கங்களை இழிவுசெய்வதாக நீங்க என் மீது குற்றம் சாட்டுவது உள்நோக்கம் உடையது மட்டும் அல்ல முட்டாள் தனமானதும் கூட…ஒரு வேலை கவன குறைவாக மேல் உள்ள பின்னுட்டத்தை எழுதி இருந்தால் இனி கவனமாக பின்னுட்டம் எழுதுங்க… இதுக்கும் பதில் இல்ல….

      5.அப்புறம் நான் திவியாவை கக்கூஸ் திவியா என்று அழைத்ததாக அவதூரூ செய்து இருந்தீங்க.. அதுக்கும் மறுப்பு தெரிவித்து இருந்தேன்…உங்க கிட்ட இருந்து பதில் தான் இல்ல…

      ஒரு கம்யுனிஸ்டா உங்களை நீங்க போலியா அடையாளம் காட்டிகிட்டு அடுத்தவங்க மேலே அவதூரா கருத்துகளை கொட்டிகிட்டு அதுக்கு பதில் நான் கேட்டாலும் பதில் சொல்லாமல் அறிவு நாணையம் இல்லாமல் வினவில் சுத்திகிட்டு இருபது தான் உங்க வேலையா? முறையான பதில் வராது என்று தெரிந்தும் தான் இந்த கேள்விகளை உங்ககிட்டவைகின்றேன்… உங்களை பற்றி வினவு வாசகர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன்… நன்றி….

  16. குமார் வேகம் குறைத்து சிந்திக்கவும்.
    முதலில் உங்கள் முதலாளித்துவ – நிலபிரபுத்துவ மார்க்ஸ் ஒப்பீடு மேற்கோள் பற்றி,
    ஆமாம் மார்க்ஸ் ‘முற்போக்கானது’ என குறிப்பிட்டுள்ளார், யாருக்கு முற்போக்கானது என்பது அவரின் கருத்துக்களை முழுதாக உள்வாங்கினால் மட்டுமே துலங்கும், அது போக கணினி மற்றும் தொழிநுட்பம் மற்றும் இணையம் கோலோச்சிய மூன்றாம் தொழிற்புரட்சி மற்றும் தானியங்கியாக்க்கம் கோலோச்சும் தற்போதைய நான்காம் தொழிற்புரட்சி யை மார்க்ஸ் கண்டிருந்தால் மு/துவம் வர்க்க பகமை/புரட்சிகளை எளிதாக்கியுள்ளது’ என்ற கூற்றை மறுபரிசீலனை செய்திருப்பார் என்பதே என் பார்வை.மார்க்ஸின் கூற்று என்றாலும் காலத்துக்கு ஏற்ப கேள்வி கேட்டு சீரமைப்பதே மார்க்சியம். உண்மையில் கேட்கிறேன் தற்போது ஒரு மக்களாட்சி அமைப்பதற்கு எந்த சமூக அமைப்பு இருந்தால் எளிதாக இருக்கும்? மூன்றாம் மற்றும் நான்காம் ‘தொழிற்புரட்சி’ யின் விளைச்சலான இணையம் மற்றும் தானியங்கியாக்கம் மூலம் மீளவே முடியாத அடிமை யுகத்தில் நம்மை நுழைவிக்கும் மு.துவமா? பழைய நிலபிரபுத்துவமா?
    பழைய பேயா? புதிய பிசாசா? இதில் எங்கெங்க நாம் ‘ஒப்பீட்டலவிலாவது’ முற்போக்கு’ பற்றி கருதுவது. எனது இந்த கருத்து குமார் மட்டுமில்லை மற்ற பதிலிட்ட தோழர்களுக்கும் தான்.
    விவாதிப்போம்.

    மற்றைய படி உங்கள் கபாலி பற்றிய பார்வையை நினைத்து அழுவாத சிரிப்பதா என தெரியவில்லை.ஐ டி கம்பெனிகள் தாமாகவே டிக்கெட் லீவு கொடுத்து பார்க்க சொன்ன சூக்குமத்தை கூட புரியாமல் இங்கு தலித் இளைஜன் சினிமா மூலம் சொல்கிறான் என கும்மியடிக்கும் உம்மிடம் என்னத்தை விவாதிப்பது? தயவுசெய்து மீண்டும் கேள்விக்கு பதில் என புலம்ப வேண்டாம்.

    • சின்னா , உம்மிடம் காணும் இந்த படு கேவலமான விவாத முறையை நான் எங்குமே கண்டது இல்ல… விவாதத்தின் பாதியில் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிட்டு திரும்ப வந்தால் இப்படி தான் விவாதம் தொடர்சியின்றி இருக்கும்.! உம்முடைய பின்னுட்டம் 16க்கு நான் பதில் அளிப்பத்ர்ற்கு முன்னாள் நீர் என்னுடைய முந்தைய பின்னுட்டங்களை படித்து புரிந்துகொண்டு பதில் அள்ளிக்க முயலவும்… சும்மா வினவில் வந்து கதையலப்பதில் யாதொரு பயனும் இல்ல…

      ரஞ்சித் எழுதும் வசனங்கள் ராமதாசுக்கு வேண்டுமானால் சுருக்கு என்று குத்தலாம்! ஆனால் உமக்கு எதுக்கு குத்துது குடையுது சின்னா? தனக்கு பிடித்த இயக்குனர்களை மட்டும் தூக்கி பிடிக்கும் வேலையை செய்யும் முற்போக்கு பாவனை இணைய ஊடகங்களுக்கும் சேர்த்து தான் இந்த கேள்வி…!

    • சின்னா , உங்களை விட மோசமாக யாருமே மார்சியத்தை உள்வாங்கிக்கொண்டு இப்படி அயோக்கியத்தனமாக திருத்தல் வாதத்துடன் பேசவே முடியாது.! நீங்க மார்க்ஸின் கருத்தாக்கம் தவறு என்று கூருகிண்றீர்குள் அல்லவா? அதுக்கு நீங்க தான் முறையான விளக்கம் கொடுக்கணும்… மார்க்ஸ் என்ன சொல்றார் என்றால்…..

      “”””இந்த முதலாளித்துவ வர்க்க சகாப்தத்தின் ஒரு தனி இயல்பு என்னவெனில், வர்க்கப் பகைமைகளை இது சுருக்கி எளிமையாக்கியுள்ளது: சமுதாயம் மேலும் மேலும் இரு பெரும் பகை முகாம்களாய், எதிரும் புதிருமான இரு பெரும் வர்க்கங்களாய் -முதலாளித்துவ வர்க்கமும் பாட்டாளி வர்க்கமுமாய்- பிளவுண்டு வருகின்றது.””-மார்க்ஸ்

      இந்த மார்க்ஸின் முடிவுகள் தவறு என்றால் அதற்கு நீங்க மூன்றாம் தொழிற்புரட்சி மற்றும் தானியங்கியாக்க்கம் கோலோச்சும் தற்போதைய நான்காம் தொழிற்புரட்சிகளை காரணம் காட்டினால் அது எப்படி என்றும் விளக்கவேண்டிய கடமை உம்முடையதே தவிர நானோ அல்லது மார்க்ஸ் அவர்களோ அல்ல…சும்மா குருட்டாம் போக்கில் மூன்றாம் மற்றும் நான்காம் தொழில் புரட்சிகள் தான் காரணம் என்று சொல்லிட்டு போவதில் என்ன பயன் இருக்கு…? வர்க்க புரட்சியை முடக்கும் செயலை தவற? வேற என்ன நோக்கம் உமக்கு ? சொல்லுங்க பார்கலாம்…..

      இன்றைய இந்திய தொழிலாளர் வர்க்கம் போலி கம்யுனிடுகளின் கீழ் முடங்கி கிடப்பது காரணமா? இல்ல இயந்திரமயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் மயமாக்கல் ஆகியவை தான் காரணமா? சும்மா அடிச்சி விடக்கூடாது சின்னா! உங்க நான்காம் தொழில் புரட்சி கூர்மை அடைந்து தானியங்கி தொழில்நுட்ட்பம் மூலம் தொழிலாளர் வேலையிழப்பார்கள் என்றால் அது முதலாளிதுவத்துக்கும் ,தொழிலாளர்களுக்கும் இடையேயான முரண்பாட்டை இன்னும் இன்னும் கூர்மை அடைய செய்யுமே தவிர , புரட்சிக்கான சாதகமான புற சூழலை உருவாகுமே தவிர வேற எந்த விளைவுகளையும் ஏற்படுத்தாது. இதனை புரிந்து கொள்ள கூட உங்களுக்கு போதிய அறிவு, சிந்தனை திறன் இல்லை என்றால் அதுக்கு நான் என்ன செய்ய?

      மேலும் பார்த்தால் நீங்க முன்பு கூறியது போல “””இன்று நடுத்தரவர்க்கம் என்றொரு மகா சுயநல buffer ஐ உருவாக்கிக்கொண்டு கீழ்தட்டு வர்க்கத்தை அதிகமாக சுரண்டுகிறதே? “”” இதுக்கும் இகங்கே பதில் இருக்கு! நான்காம் தொழில் புரட்சி தானியங்கியாகத்தால் வேலை இழப்பது தொழிலாளர்கள் மட்டும் அல்ல….நீங்க கூறும் நடுத்தரவ்ர்கமும் தான்!அப்ப நடுத்தர வர்க்கம் முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு இலக்காகி நெருகடியில் சிக்கும் போது அவர்கள் இனி யார்பக்கம் சாய்வது என்று அவர்கள் முடிவு செய்தே ஆகவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள்…!

      வேற வழியே இல்ல அவர்களுக்கு….! தொழிலாளர்கள் பக்கம் தான் வந்தாகணும் அவர்கள்…

      இன்னும் ஒரு பக்கம் சிறு முதலாளிகள்… அவர்களும் இந்த பெருமுதலாளித்துவ சார்பு பிஜேபி அரசின் தவறான கொள்கை முடிவுகளால் (பணமதிபிழப்பு மற்றும் GST) மிகவும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துக்கொண்டு இருக்காங்க…!

      இப்ப தவறு கம்ம்யுநிடுகளாகிய நம்ம பக்கம் தான் இருக்கு! இந்த தொழிலாளர்களை, வேலை இழப்பு நெருக்டியில் சிக்கும் நடுத்தர வர்கத்தை, அரசின் தவறான கொள்கை முடிவுகளால் பொருளாதார நெருக்டியில் சிக்கும் சிறு முதலாளிகளை ஒருங்கிணைக்கும் வேலைய காம்யுநிடுகள் தான் செய்ய தவறிக்கிட்டு இருக்கோம்…

      புரட்சிக்கான அக மற்றும் புற சூழல் கொந்தளிப்பாக இருந்தாலும் நாம் தான் புரட்சிக்கு தயாராக இல்ல…

      மார்சியத்தை உள்வாங்கி கொள்வதில் உள்ள அடிபடை பிரச்னை காரணமாக நான்காம் தொழில் புரட்சி என்று பிதற்றிக்கொண்டு இருக்கீங்க நீங்க!

Leave a Reply to c.neppolian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க