privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகளச்செய்திகள்மக்கள் அதிகாரம்கிருஷ்ணம்மாள் சாகும் போது ஒரு மருத்துவர் கூட இல்லை !

கிருஷ்ணம்மாள் சாகும் போது ஒரு மருத்துவர் கூட இல்லை !

-

ருத்துவம் என்பது நமது பிறப்புரிமை ஆனால் அரசோ நமக்கு இறப்பை மட்டுமே கொடுக்கிறது! தருமபுரி மாவட்டத்தின் தலைமை அரசு மருத்துவமனையாக பென்னாகரம் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் 800 -க்கும் அதிகமான மக்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கிறார்கள்.

கடந்த 15.10.2017 அன்று காலை பிரசவத்திற்காக கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்த அன்பரசு அவர்களின் மனைவி கிருஷ்ணம்மாள் (25 வயது) மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.  10.30 -க்கு சுகபிரசவமாக பெண் குழந்தை பிறந்தது அவருக்கு இது இரண்டாவது குழந்தை என்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கலேதும் இல்லை. தாயும் சேயும் நலமுடனே இருந்தனர்.

திடீரென கிருஷ்ணம்மாளுக்கு ரத்தபோக்கு ஏற்றபட்டுள்ளது. இந்த பிரச்சினையை மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் முறையாக கவனிக்காமல் இருந்துள்ளனர். ரத்தபோக்கு அதிகமானவுடனே கிருஷ்ணம்மாள் ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளார்.

இதில் ஆகக்கொடுமையான விசயம் என்னவெனில் கிருஷ்ணம்மாள் நிலை மோசமாக இருக்கும் போது மருத்துவமனையில் மருத்துவர்களே இல்லை என்பதுதான். இவ்வாறு முறையான மருத்துவமின்றி அநியாயமாக உயிரிழந்தார் கிருஷ்ணம்மாள்.

அவரின் மரணத்திற்கு நீதி கேட்டு உறவினர்கள் சாலை மறியல் செய்தனர். இதனை அறிந்த மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் அவரது உறவினர்களோடு இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 3 மணிநேரம் மறியல் போராட்டம் நடந்தது. அப்போது அங்கு வந்த மருத்துவமனை அதிகாரி போராடி கொண்டிருக்கும் மக்களை சந்திப்பதற்கு பதில் மருத்துவ மனையில் முறையாக மருத்துவம் பார்க்காத மருத்துவர்களை காப்பற்றுவதிலேயே குறியாக இருந்தனர். அதற்குப் பிறகுதான் அதிகாரிகள் பேச வந்தனர்.

கிருஷ்ணம்மாள் இறப்பு குறித்து உறவினர்களை அழைத்து பேசும்போது மருத்துவம் பார்க்க தவறிய மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போறீங்க என்பதை குறித்து மேலிடத்திற்கு அனுப்பிய புகாரை படித்துக்காட்டுங்கள் என உறவினர்கள் கேட்டனர். அப்போது மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள் கிருஷ்ணம்மாளுக்கு மருத்துவம் பார்த்தனர் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர்.

பேச்சுவார்த்தை என்ற பெயரில் குற்றவாளிகளை தப்ப வைக்கின்றனர் என்பதை புரிந்து கொண்டு மீண்டும் சாலை மறியல் செய்த பிறகே மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறி உறுதி அளித்தனர். இப்படி மருத்துவம் முறையாக பார்க்காமல் இறப்பது ஏதோ ஒரு சம்பவம் என்று ஒதுக்கிவிட முடியாது. மொத்த அரசு மருத்துவமனையின் நிலைமையும் இதுதான். மாவட்ட தலைமை மருத்துவமனையில் 40 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் ஒருவர் கூட இல்லாமல் கிருஷ்ணம்மாள் இறந்து போயுள்ளார்.

மாவட்ட தலைமை மருத்துவமனையே இப்படி என்றால் இதற்கு கீழ் இருக்கும் மருத்துவமனைகளின் நிலை என்னவாக இருக்கும். ஏழை மக்கள் அரசு மருத்துவமனைக்கு சென்றால் மரணம் தான் என்பது இன்றைய அரசு மருத்துவமனையின் நிலை. மக்கள் இன்று அரசு மருத்துவமனை என்றலே அச்சப்படுகிற நிலைதான் இருக்கிறது. தங்கள் உயிரைப் பாதுகாத்து கொள்ள சொத்துக்களை விற்றோ, கடன் வாங்கியோ தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்கின்றனர் மக்கள்.

விஞ்ஞானம் வாளர்ந்து விட்டது ‘நிலவில் தண்ணீர்’ இருப்பதை கண்டு பிடித்து விட்டோம். உலக அரங்கில் தனி இடத்தை பிடித்துவிட்டோம் என மார்தட்டி பேசி கொள்ளும் ஆட்சியாளர்கள். இன்னும் அடிப்படை மருத்துவம் கூட இல்லாமல் மக்கள் தினந்தோறும் அரசு மருத்துவமனைகளில் செத்து மடிகிறார்கள்.

டெங்கு வந்து நாடு முழுவதும் மக்கள் செத்துக்கொண்டு இருக்கும் போது அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் டெங்குவால் ஒருவர் கூட தமிழ்நாட்டில் இறக்கவில்லை என்று பேசுகிறார். நாடு முழுவதும் 30 ஆயிரத்திற்கு மேலானவர்களுக்கு டெங்கு பாதித்துள்ள நிலையில் ‘சாணத்தை வீட்டு முன்னால் தெளியுங்கள்’ டெங்கு வராது என்று பேசுகிறார்கள் அமைச்சார்கள். மற்றொரு அமைச்சர் மாட்டு மூத்திரத்தை பயன்படுத்த சொல்கிறார்.

மக்கள் நோய் வந்து சாகும்போது மருத்துவர்களை நியமிப்பது, மருந்துகளை தரமாக கொடுப்பது, சுகாதாரத்தை தரப்படுத்துவது, என்ற அடிப்படை வேலையை கூட அரசு செய்வதற்கு துப்பபற்று கிடக்கிறது. மக்கள் கொத்து கொத்தாய் சாகும்போது மக்களை பாதுக்காப்பதை விட்டு டெங்கு மரணங்களை மூடி மறைக்கும் வேலையைதான் அரசும், அதிகாரிகளும் திட்டமிட்டு செய்கின்றனர்.

மக்களுக்கு முறையான மருத்துவம் கிடைக்காத அவலநிலையை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் தங்கள் கொள்ளையையால் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டுகின்றனர். அரசு மருத்துவமனையில் வேலை பார்க்கும் மருத்துவர்கள் நோயாளிகளை தொட்டுகூட பார்பதில்லை, நோயாளிகளை பார்த்தவுடன் மருத்துவ சீட்டில் மாத்திரைகளை எழுதி கொடுக்கின்றர்.

என்ன பிரச்சனை என்றுகூட கேட்பதில்லை, ஆனால் இவர்கள்  வெளியில் நடத்தும் மருத்துவமனையில் இரவு 12 மணி என்றால் கூட வந்து பார்க்கின்றர். அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு 2 மாத்திரைகளை கொடுத்தனுப்பும் மருத்துவர்கள், தனியாக நடத்தும் கிளினிக்குகளில் குறைந்த பட்சம் 500 ரூபாய் மருந்து எழுதி கொடுக்கின்றனர்.

மக்களுக்கு கொடுக்க வேண்டிய மருத்துவத்தை மறுத்து, சட்டபூர்வ கொள்ளைக்கு வழி வகுப்பதே அரசின் தற்போதைய கொள்கையாக உள்ளது. நீட் வருவதால் தரமான மருத்துவமோ அல்லது அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவம் கிடைப்பதையோ உறுதிசெய்ய முடியாது.

மோடி அமுல்படுத்தி வரும் நிதி ஆயோக் திட்டம் அரசு மருத்துவமனையை தனியாருக்கு தரைவார்க்க சொல்கிறது. மருத்துவம் என்பது நமது பிறப்புரிமை, நமது உரிமையை மருத்துவத்தை சேவையாக, இலவசமாக பெற போராடுவதே நமக்கு தற்போது தேவையாக இருக்கின்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
பென்னாகரம், தொடர்புக்கு – 81485 73417.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி