privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபா.ஜ.க ஆளும் குஜராத்தில் 18 குழந்தைகள் மரணம் !

பா.ஜ.க ஆளும் குஜராத்தில் 18 குழந்தைகள் மரணம் !

-

குஜராத்தின் அகமதாபாத்தில் இருக்கும் அரசு பொது மருத்துவமனையில் கடந்த மூன்று நாட்களில் 18 கைக்குழந்தைகள் இறந்திருக்கின்றன. இதில் ஒன்பது குழந்தைகள் தனியார் மருத்துவமனைகளில் இருந்தும், மற்றவை நேரடியாகவும் இம்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.

இந்த துயரம் குஜராத்தில் அதிரச்சி அலைகளை ஏவி விட்டிருக்கிறது. முதலமைச்சர் விஜய் ரூபானியும், சுகாதார அமைச்சர் ஷங்கர் சௌத்ரியும் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. குஜராத் அரசோ கடந்த ஞாயிறன்று இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக மூன்று பேர் கொண்ட ஒரு விசாரணைக் கமிட்டியை அறிவித்திருக்கிறது.

அகமதாபத் சிவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் குழந்தை.

கடந்த 28.10.2017 சனிக்கிழமை காலை ஆறுமணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும் ஒன்பது குழந்தைகள் இறந்திருக்கின்றன. சனிக்கிழமை மாலை வரை குழந்தைகள் இறப்பை வம்படியாக மறுத்து வந்தார், மருத்துவமனையின் ஆணையர் டாக்டர் எம்.எம். பிரபாகர். பிறகு வேறு வழியின்றி இந்த மரணங்களை அவரால் மறைக்கவோ, மறுக்கவோ முடியவில்லை. குழந்தைகளின் எடைக்குறைவே மரணத்திற்கு காரணமென மருத்துவமனை நிர்வாகம் கூறியிருக்கிறது.

“எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, குழந்தைகள் மருத்துவ சிகிச்சை அளிப்பதில் உள்ள குறைபாடு காரணமாகவோ, மருந்து பற்றாக்குறை காரணமாகவோ இறக்கவில்லை” என்று கூறும் முதலமைச்சர் பிறகு ஏன் விசாரணையை அறிவித்திருக்கிறார்?

பிரச்சினை பெரிதான பிறகு பாஜக -வின் மாநிலத் தகவல் தொடர்பாளரான பாரத் பாண்டியா மருத்துவமனை நிர்வாகத்தின் விரிவான விளக்கத்தை வாங்கி ஊடகங்களுக்கு வழங்கியிருக்கிறார். அதில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து சேர்க்கப்பட்ட குழந்தைகள் 1.1 கிலோவிற்கும் குறைவான எடை, மற்றும் இதர பாரதூரமான பிரச்சினைகள் காரணமாக இறந்தன என்று கூறப்பட்டிருக்கிறது.

இதற்கு மேல் மருத்துவர் பிரபாகர் கூறியிருப்பதுதான் முக்கியமானது. அதாவது பிறக்கும் குழந்தைகளில் அன்றாடம் சராசரியாக ஐந்து முதல் ஆறு குழந்தைகள் இறக்குமென்றும், சனிக்கிழமை அன்று அது ஒன்பதாக சற்றே கூடியிருக்கிறது என்றும் மறைமுகமாக நியாயப்படுத்தியிருக்கிறார்.

அதன்படி மாதம் 150 முதல் 180 சிசுக்கள் இந்த மருத்துவமனையில் மட்டும் இறக்கின்றன. வருடம் 1800 முதல் 2160 குழந்தைகள் இறக்கின்றன. இதெல்லாம் ஒரு பிரச்சினையா என்கிறார் அரசு மருத்துவமனை தலைமை நிர்வாகி.

“மெர்சல்” படத்தில் இந்தியாவில் இலவச மருத்துவமனை இல்லை என பொய்யாக கூறிவிட்டார்கள், ஜி.எஸ்.டி பற்றி தவறான சித்திரத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என ஊளையிட்ட பாஜக கனவான்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்?

ஏன் இவ்வளவு குழந்தைகள் குஜராத்தில் இறக்கின்றன? ஏன் எடைக் குறைவாக பிறக்கின்றன? ஏன் தனியார் மருத்துவமனைகளில் இருந்து அரசு மருத்துவமனைகளுக்கு மாற்றுகிறார்கள்? மோடி சாதித்த குஜராத்தின் சாதனை இதுதான் என்றால் மற்ற வேதனைகளை எப்படிக் கண்டுபிடிப்பது?

செய்தி ஆதாரம் :

_____________

இந்தக் கட்டுரை உங்களுக்கு பயனளித்ததா?

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க