privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகளச்செய்தி : தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி விழா !

களச்செய்தி : தமிழகமெங்கும் நவம்பர் புரட்சி விழா !

-

வம்பர் 7 – உலகின் முதல் சோசலிச குடியரசானது பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் தலைமையில் நிறுவப்பட்ட நாள்!

ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, கமாஸ்வெக்ட்ரா ஆலையின் வாயிலில் நவம்பர் 7 -ன் முக்கியத்துவம் சாதனைகளை விளக்கியும் “மூலதனம் வெளியிடப்பட்டதன் 150 ம் ஆண்டு மற்றும் ரசியப் புரட்சியின் 100  ஆம் ஆண்டு நிறைவையொட்டி” அதனை நினைவுகூரும் விதமாக 07.11.2017, அன்று கூட்டம் நடத்தியது.

இந்த கூட்டத்தில் கமாஸ்வெக்ட்ரா கிளையின் சிறப்புத்தலைவரும், புஜதொமு மாநில துணைத் தலைவருமான தோழர் பரசுராமன் கலந்து கொண்டு உரையாற்றினார், இறுதியில் தொழிலாளர்கள் இனிப்பு வழங்கி இந்நிகழ்ச்சியைக் கொண்டாடினர்.

மாலையில் டி.வி.எஸ் குழும நிறுவனங்களில் வேலை செய்யும் பலதரப்பட்ட தொழிலாளர்கள் திரளாக வசித்துவரும் குடியிருப்புப் பகுதிகள் நிறைந்த, கொத்தக்கொண்டப்பள்ளி கிராமத்தில் இரண்டு இடங்களில் மழையையும் பொருட்படுத்தாமல் தெருமுனைக்கூட்டம் நடத்தப்பட்டது.

பு.ஜ.தொ.மு- வின் தோழர் ரவியின் தலைமையில் நடைபெற்ற இந்த தெருமுனைக்கூட்டத்தில்  தோழர் பரசுராமன், தோழர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

தோழர்கள் உரையாற்றுகையில், “புரட்சிக்குப் பிந்தைய ரசியாவில் இலவச கல்வி, மருத்துவம் உள்ளிட்ட மக்களின் அனைத்து தேவைகளையும் அரசே பொறுப்பெடுத்து உத்திரவாதப்படுத்தியது. கூட்டுப்பண்ணைகள் அமைத்து சாதாரண விவசாயிகளை நிர்வாகிகளாக அமர்த்தியது. குறிப்பாக, நம்மூர் பால்காரம்மாக்களைப் போல் உள்ள சாதாரண பெண்கள் அங்கே ஆட்சி நிர்வாகங்களில் சிறப்பாக பங்களிப்பு செலுத்தினர்”  என முதலாளித்துவம் நூற்றாண்டுகளாக சாதிக்காததை பத்தே ஆண்டுகளில் சோசலிசம் சாதித்ததைப் பட்டியலிட்டு விளக்கிப்பேசியது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது.

பாகலூரில் சிறு பட்டறை ஒன்றில் தொழிலாளர்களை திரட்டி தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் அறைக்கூட்டம் நடத்தி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
ஓசூர். தொடர்புக்கு – 97880 11784.

***

வம்பர் 7 ரஷ்ய புரட்சி நூற்றாண்டு விழாவையொட்டி தருமபுரியில், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக தோழர் அன்பு தலைமையில் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது.  நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர்.

இந்த நிகழ்வின் போது “ரஷ்யாவை போல் இந்தியாவிலும் ஒரு புரட்சியை உருவாக்க போராடுவோம்” என்று அறைகூவல் விடுக்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தருமபுரி.

***

ம்யூனிச ஆசான் தோழர் காரல் மார்க்சின் மூலதனம் நூல் வெளியாகி 150 வது ஆண்டு மற்றும் ரசிய புரட்சி நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி ம.க.இ.க  சென்னை தோழர்கள் கொடியேற்றும் நிகழ்ச்சி நேரு பூங்கா மற்றும் சேத்துப்பட்டில் நடைபெற்றது .

நேரு பூங்கா பகுதியில் ம.க.இ.க உறுப்பினர் தோழர் நீலாவதி தலைமை தாங்கினார் . முதல் நிகழ்ச்சியாக செங்கதிர், இளஞ்சித்திரன், தீபன் ஆகிய இளம் தோழர்கள் பறை இசை முழங்கினர். பின்னர் தோழர்கள்  முழக்கமிட்டனர் .

அதைத் தொடர்ந்து ம.க.இ.க பொதுக்குழு  உறுப்பினர்  தோழர் இளவரசி கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். தோழரின் உரையில், ரசியாவில் புரட்சிக்கு முன் மக்கள் எப்படிபட்ட கொடுமைகளை அனுபவித்தனர் என்பதையும், புரட்சிக்கு பின் எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும், கல்வி, மருத்துவம் என அனைத்தையும் அடிப்படை உரிமையாகப் பெற்று வாழ்ந்தார்கள் என்பதையும், இங்கு ஏன் புரட்சி வேண்டும் என்பதையும் ஒப்பிட்டு பேசினார். ”புரட்சி தான்  தீர்வு, தேர்தல் பாதை தீர்வல்ல” என்று பேசி முடித்தார். இறுதி நிகழ்ச்சியாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்.

சேத்துபட்டு பகுதியில் மகஇக தோழர் ஜெ.காமராஜர் தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கே இளந்தோழர்கள் பறை இசை முழங்கினர். அதனைத் தொடர்ந்து தோழர்கள் முழக்கமிட்டனர்.

பிறகு மகஇக சென்னை பொதுக்குழு உறுப்பினர் தோழர் அனந்தப்பராஜா கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவரது உரையில் “இதுநாள் வரையிலுமான சமுதாயத்தின் வரலாறு அனைத்தும் வர்க்கப்போராட்டங்களது வரலாறேயாகும். ஆண்டாண்டு காலமாய் ஆளும் வர்க்கம் மக்களை ஒடுக்கிக்கொண்டு வந்தது. அரசு என்பது ஒடுக்கும் வர்க்கத்தின் கருவியாக இருந்தது. இன்று இந்தியாவிலும் அப்படித்தான் இருக்கிறது பேச்சுரிமை, கருத்துரிமை எல்லாம் பறித்து பாசிச அரசுக்கான முன்னோட்டமாக உள்ளது என்பதையும், இந்த நிலைமை மாற தேர்தல் பாதை தீர்வு இல்லை புரட்சிதான் தீர்வு” என்பதை விளக்கிப்பேசினார். அதன் பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை.


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க