மின்சாரத்தில் இருந்து குடிநீர் வரைக்கும் வளர்ச்சி குறித்த எவ்வித ஒப்பீடாக இருந்தாலும், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை விட மூன்று மடங்கு அதிகமாக குஜராத் முன்னிலையில் இருக்கிறது என்று சமீபத்தில் நியூஸ் -18 தொலைகாட்சி நேர்காணல் ஒன்றில் பா.ஜ.க. -வின் தேசிய தலைவரான அமித்ஷா’ஜி’ கூறியிருந்தார்.

குஜராத்தின் ‘சாதனைகள்’ குறித்து  ஏற்கனவே பலமுறை சமூக செயற்பாட்டாளர்கள் அம்பலப்படுத்தியுள்ள போதிலும், சமீபத்தில் வெளியான 2015 – 16- ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின் அடிப்படையில் சங்கிகளின் கோவணத்தை  உருவுவதே சாலச் சிறந்தது

மின்சாரமயப்படுத்தப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கையை எடுத்துக் கொண்டால் காங்கிரசு ஆளும் இமாச்சலப் பிரதேசத்தில் 99.5 விழுக்காடாகவும் கர்நாடகாவில் 97.8 விழுக்காடாகவும் ஆந்திராவில் 98.8 விழுக்காடாகவும் பஞ்சாபில் 99.6 விழுக்காடாகவும் இருக்கிறது. உத்திரகாண்டில் கடந்த காங்கிரசு ஆட்சியில் கூட மின்சாரமயப்படுத்தப்பட்ட குடும்பங்கள் குஜராத்தை விட அதிகமாக அதாவது 97.5 விழுக்காடாக இருந்தது.  ஆனால் “துடிப்பான குஜராத்”-ல் 96 விழுக்காடு குடும்பங்களில் மட்டுமே மின்சாரம் இருக்கிறது.

மேம்பட்ட குடிநீர் கிடைக்கும் குடும்பங்களின் விழுக்காட்டை எடுத்துக் கொண்டாலும் காங்கிரசு ஆளும் இமாச்சல்பிரதேசமும் (94.9%) கர்நாடகாவும் (92.9%) குஜராத்தை (90.9%) விட மேம்பட்டே இருக்கின்றன. இப்படி பெரும்பான்மையான அளவீடுகளில் ‘குஜராத் மாடல்’ என்ற குமிழி உடைந்து நொறுங்கியிருக்கிறது.

’குஜராத் மாடல்’ என்ற பெயரில் பொய்யையும் புரட்டையும் கடந்த 2013-ம் ஆண்டிலிருந்தே திட்டமிட்டு இந்துத்துவ கும்பல் பரப்பி வந்துள்ளது. ஆயினும்  குஜராத் மாடல் என்பது எதார்த்தத்தில் குஜராத் மாடல் என்பது கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சியாகவும், மனித வள மேம்பாட்டின் வீழ்ச்சியாகவுமே இருந்தது என்பதை புள்ளிவிவரங்கள் ஆணித்தரமாக கூறுகின்றன.

பாலின விகிதம், குழந்தை இறப்பு விகிதம், சராசரி ஆயுள் மற்றும் வறுமை விகிதம் என்று எதிலும் பா.ஜ.க கும்பல் ஆளும் குஜராத் மாநிலம் ஏனைய பெரும்பாலான இந்திய மாநிலங்களை விட பின்தங்கியே இருக்கிறது என்பதையும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. குஜராத்தை 22 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் பா.ஜ.க கும்பல் உணர்ச்சி கூப்பாடு போடும் அளவிற்கு எதுவும் சாதிக்கவில்லை என்பதையே இவையாவும் கூறுகின்றன.

காங்கிரசாக இருந்தாலும் சரி, பா.ஜ.க-வாக இருந்தாலும் சரி வளர்ச்சி என்பது வெறும் மாய்மாலங்களே என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. ஆயினும் வெறும் வாயால் வடை சுட்டு, அதையே ஆண்டாண்டுக்கும் திரும்பத் திரும்பச் சொல்லி மக்களை நம்ப வைப்பது பாஜக – ஆர்.எஸ்.எஸ். கும்பலுக்கு மட்டுமே உரித்தான தனித்திறமை  !  இந்த வித்தையில் அமித்ஷா மந்திரி என்றால், மோடி தான் ராஜா !

மேலும் :


கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு !!
சென்னையில் மாபெரும் கூட்டம்

19 நவம்பர், 2017, மாலை 4:00 மணிக்கு, ஒய்.எம்.சி.அரங்கம், நந்தனம், சென்னை – 600 035.

நண்பர்களே,

ரசியப் புரட்சி 100-ம் ஆண்டு, கார்ல் மார்க்சின் மூலதனம் நூலின் 150-வது ஆண்டு விழா சிறப்புக் கூட்டம், பருவமழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டதை அறிவீர்கள். அந்நிகழ்ச்சி எதிர்வரும் நவம்பர் 19, ஞாயிறு அன்று அதே இடத்தில் நடத்தப்படவுள்ளது. அனைவரும் வருக.

பெரும் பொருட்செலவுடன் நடைபெறவிருக்கும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வுக்கான நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி