ண்பர்களே

சென்னையில் நாளை நடைபெறவிருக்கும் மூலதனம் 150-ம்  ஆண்டு நிறைவு மற்றும் நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு நிகழ்ச்சியை, 19-11-2017 ஞாயிற்றுக் கிழமை மாலை 3.30 மணி முதல் வினவு நேரடி ஒளிபரப்பு செய்கிறது. வினவு தளத்தின்  யூடியூப், முகநூல், மற்றும் டிவிட்டர் பக்கங்களில் இந்நிகழ்வை நீங்கள் நேரலையாக பார்க்கலாம்.

நிகழ்ச்சியின் உரைகள், கலை நிகழ்ச்சிகள், வினவு வழங்கும் ஆவணப்படங்கள் அனைத்தும் நேரலையில் இடம்பெறும்.

 

இந்த நேரலைக்காக சில ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். சென்னை நண்பர்கள் அவசியம் வாருங்கள்! வர இயலாதவர்கள், வெளிமாநில, வெளிநாடு நண்பர்கள் நேரலையில் பாருங்கள் – செய்தியினை நண்பர்களிடம் பகிருங்கள்!

எதிர்பாராத தொழில்நுட்ப பிரச்சணை காரணமாக நேரலை ரத்து செய்யப்படுகிறது. வாசகர்களின் சிரமத்திற்கு வருந்துகிறோம்.

நன்றி

வினவின் பக்கம்
யூடியூப்
டிவிட்டர்

கார்ல் மார்க்சின் மூலதனம் நூல் – 150 வது ஆண்டு ! ரசியப் புரட்சி – 100 வது ஆண்டு

19 நவம்பர், 2017 மாலை 4:00 மணி,
ஒய்.எம்.சி.ஏ அரங்கம், நந்தனம்.
சென்னை – 600 035.

நிகழ்ச்சி நிரல்:

நேரம்: மாலை 4.00 மணி

புரட்சியின் தருணங்கள் – வினவு வழங்கும் இசைச்சித்திரம்.

தலைமை :

  • தோழர் அ. முகுந்தன், தலைவர், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.

உரையாற்றுவோர் :

  • தோழர் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்,
    மூலதனம் தமிழ்ப்பதிப்பின் மொழிபெயர்பாளர்.
  • தோழர் எஸ். பாலன், வழக்கறிஞர், பெங்களூரு உயர் நீதிமன்றம்.
  • தோழர் மருதையன், பொதுச்செயலாளர், மக்கள் கலை இலக்கியக் கழகம்.

கலை நிகழ்ச்சி :

  • ம.க.இ.க. கலைக்குழு
  • மார்க்ஸ் எனும் அரக்கன் – வினவு வழங்கும் இசைச்சித்திரம்.

நன்றியுரை :

தோழர் த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

அனைவரும் வருக !
பெரும் பொருட்செலவுடன் நடைபெறும் இக்கூட்டத்திற்கு நன்கொடை தாருங்கள். அனைவருக்கும் அனுமதி இலவசம்தான். இங்கே நன்கொடைக்காக டிக்கெட் வடிவத்தை வெளியிட்டிருக்கிறோம். மனித குலத்தின் உலகு தழுவிய மாற்றம்- முன்னேற்றம் – புரட்சியின் குறியீடான ரசியப் புரட்சியின் இந்நிகழ்வு நன்கொடைச் சீட்டுக்களுக்கு ஐந்து பெருங்கடல்களின் பெயர்களை வைத்திருக்கிறோம். ஆதரவு தாருங்கள்!

 

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே நன்கொடை அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி