privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திதெலுங்கானா - கர்நாடகா - ஒடிசா : தினம் சாகும் விவசாயிகள் !

தெலுங்கானா – கர்நாடகா – ஒடிசா : தினம் சாகும் விவசாயிகள் !

-

கடந்த வார இறுதியில் மட்டும் இந்தியாவில் ஒடிசா, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவில், தலா ஒவ்வொரு விவசாயி தற்கொலை செய்திருக்கும் செய்தி பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன.

சம்பவம் 1 : 18.11.2017 (சனிக்கிழமை)

ழுப்பு நிற வெட்டுக்கிளிகளின் தாக்கத்தால் நெற்பயிர்கள் முழுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில். மனமுடைந்த சிறு விவசாயி கூசா சுரேஷ் பயிர்களுக்குத் தெளிக்க வைத்திருந்த மருந்தைக் குடித்து விவசாய நிலத்திலேயே தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொண்ட சிறு விவசாயி சுரேஷின் குடும்பத்தினர்.

35 வயதான விவசாயி சுரேஷ், தெலுங்கானா மாநிலத்தின் சித்திபேட்டை மண்டலத்தில் உள்ள சிண்டமடக்கா கிராமத்தைச் சேர்ந்தவர். தனக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்வதற்காக மூன்று இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைத்தும், அது பொய்த்துப் போன நிலையில் சோர்ந்து போகாமல் நான்காவதாகக் கிணறு வெட்டி இறுதியில் அந்தக் கிணற்றில் தண்ணீர் கிடைக்கவே, இந்த வருடம் நெற்பயிரை விளைவித்து வாங்கிய கடனை அடைத்து விடலாம் என்றிருந்தார்.

நீர் இருந்தும் என்ன பயன் என்பதைப் போல பழுப்பு நிற வெட்டுக்கிளிகளின் தாக்கத்தினால் மொத்த நெற்பயிரும் சிதைந்து போகவே மன அழுத்தம் அதிகரித்து பயிருக்குத் தெளிக்க வைத்திருந்த மருந்தைக் குடித்து விட்டார். இத்தனைக்கும் இவரது மனைவி இவருக்குச் சில அடிகள் தூரத்திலேயே வேலை பார்த்துக்கொண்டிருந்தார். கணவன் மயங்கி விழுந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறவினர்களை உதவிக்கு அழைத்து 15 கிமீ தூரத்திற்கப்பால் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் 2 : 18.11.2017 (சனிக்கிழமை)

ர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் சொலாபுரா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சித்தராமப்பா, வீட்டில் யாருமில்லாத போது தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

50 வயதான சித்தராமப்பாவின் மனைவி வயல் வேலைக்குச் சென்றிருந்த போது பயிர்க்கடனை அடைக்க வழியேதுமில்லாத நிலையில் சாவதைத் தவிர தனக்கு எதுவும் வழியில்லையென்று கருதி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் 3 : 19.11.2017 (ஞாயிற்றுக்கிழமை)

டிசா மாநிலம் பலாசார் மாவட்டம் பானுப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திரா பிஸ்வால் பூச்சிமருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

2017 அக்டோபர் மாதம் தொடங்கி இதுவரை 10 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பருவமழை பொய்த்துப்போய், காலம் தவறிய கன மழையாலும், பூச்சிகளின் தாக்குதலாலும் பயிர்கள் நாசமடைந்ததைக் கண்டு மனமுடைந்த விவசாயி வேறு வழியின்றி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பரவலாக நெல் பயிரிடப்பட்ட இந்தப் பகுதி முழுவதுமுள்ள மற்ற விவசாயிகளுக்கும் ஏறக்குறைய இதே நிலைதான்.

மேலே நடந்த மூன்று சம்பவங்கள் வெவ்வேறு மாநிலங்களில் நடந்திருந்தாலும் விவசாயி என்ற வர்க்கத்தைப் பொறுத்தவரையில் அனைவருக்கும் ஒரே பிரச்சினை தான். இந்த மூன்று சாவுகளைத் தவிர செய்தித்தாள்களில் வெளிவராத பலப்பல விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் நாடெங்கும் தினம் தினம் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளைத் தேசிய முக்கியத்துவம் வாந்த பிரச்சினையாகக் கருதாத மத்திய மாநில அரசுகள், விவசாயத்தை விவசாயிகளிடமிருந்து ஒழித்து அதை கார்ப்பரேட் விவசாயமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசின் ‘வளர்ச்சிப் பாதையில்’ நாடு முன்னேறிக் கொண்டிருக்கின்றது.

மேலும் :

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க